பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 23, 2006

சிலை அரசியல்

மூன்று சிலை, மூன்று பாடல்கள்

சிலை 1: எம்.ஜி.ஆர்: முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையை பார்லி.,யில் வைப்பதில் நீடிக்கும் காலதாமதம் குறித்து பார்லிமென்ட்டில் பிரச்னை கிளப்ப அ.தி.மு.க., திட்டமிட்டுள் ளது. இதுதொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களையும் அ.தி. மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.

சிலை 2: முரசொலி மாறன் : "பார்லிமென்ட் வளாகத்தில் மாறனுக்கு சிலை வைப்பதை நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார் கள். முரசொலி மாறனுக்கு சிலை வைத்தே தீர வேண்டும் என்று கருணாநிதிக்கு அவ்வளவு ஆசையாக இருந்தால், அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளட்டும்" - ஜெயலலிதா

"முரசொலி மாறனின் தகுதியை பற்றி யார் ஜெயலலிதாவின் சான்றிதழை கேட்டார்? முரசொலி மாறன் எத்தனை முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்? எத்தனை முறை மத்திய மந்திரியாக இருநëதுள்ளார்? எத்தனை வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவின் புகழை உயர்த்தி இருகëகிறார்? அதைப்பற்றி எல்லாம் ஜெயலலிதாவுக்கு விவரமாவது தெரியுமா? எதுவும் தெரியாமல் வெறும் காழ்ப்புணர்ச்சி ஒன்றின் காரணமாக அவருக்கு எப்படி சிலை வைக்கலாம் என்றா கேட்பது?" - டி.ஆர்.பாலு

சிலை 3: பெரியார் : ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் அருகில் பல ஆண்டுகளுக்கு முன் பெரியார் சிலை வைக்க இடம் ஒதுக்கப்பட்டது. இந்து பா.ஜ.க, முன்னணி அமைப்பு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தனர். இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருக்கிறது. அடுத்த மாதம் திறப்பு விழா நடை பெற உள்ளது.


பாடல் 1:
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
( கண்ணதாசன் )

பாடல் 2:
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
( கண்ணதாசன் )

பாடல் 2:
கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா
( படம் வா ராஜா வா )
( முழு பாடல் நினைவில் இல்லை மன்னிக்கவும் )

1 Comment:

Anonymous said...

சாதரனமாக யாரும் பார்க்க இயலாத இடத்தில் சிலையை வைத்தால் என்ன வைக்காவிட்டால் என்ன? காக்காய்களுக்கு இலவச கழிப்பிடம் கட்டிதருவதில் தான் இவர்களுக்குள் இவ்வளவு சண்டையா?

MGR பார்க்க விரும்புவர்கள் இங்கு செல்லலாம்:
http://en.wikipedia.org/wiki/M.G._Ramachandran#Photo_Gallery
ஒரு போட்டி: அந்த தளத்தில் உள்ள படங்களுக்கு பொருத்தமான(நகைச்சுவையுடன்) captions உங்களால் எழுத முடியுமா?