பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 14, 2006

குழந்தைகள் தின பிராத்தனை

நேற்று நொய்டவில் 'அடோப்'(Adobe) நிறுவன இயக்குனர் நரேஷ் குப்தாவின் மூன்று வயது மகன் ஆனந்தை மர்ம நபர்கள் இருவர் கடத்திச் சென்றனர்

ஆனந்த் வீட்டுக்கு அருகில் உள்ள "லோட்டஸ் வேலி' என்ற பள்ளியில் படித்து வருகிறான். தினமும் ஆனந்தை அவர்கள் வீட்டு வேலைக்கார பெண் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.

வழக்கம் போல் நேற்றும் வேலைக்கார பெண், குழந்தை ஆனந்தை தூக்கிக் கொண்டு "15-ஏ' சாலை வழியாக பள்ளிக்கு சென்றுள்ளார் . காலை 8.50 மணியளவில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேலைக்கார பெண்ணின் குறுக்கே வேகமாக வந்து அவள் கையில் இருந்த குழந்தையை பறித்துச் சென்று கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.

பதட்டமடைந்த வேலைக்கார பெண் உடனடியாக நரேஷ் குப்தாவுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, நரேஷ் குப்தா, தனது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அமெரிக்காவில் இருந்த நரேஷ் குப்தா நேற்று ஃபிளைட் பிடித்து இன்று காலை வந்து சேர்ந்தார். மீடியாக்களை கொஞ்சம் ஒதுங்கியே இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடைசியாக கிடைத்த தகவல்: கடத்தியவர்கள் நரேஷ் குப்தாவிடம் டெலிபோனில் பேசியுள்ளார்கள். எவ்வளவு பணம் கேட்டார்கள் என்று தகவல் கிடையாது.

இன்று குழைந்தைகள் தினம், இந்த பதிவை படித்த பின் ஆனந்திற்கு பிராத்தனை செய்யுங்கள்.

2 Comments:

Karthikeyan Muthurajan said...

காசுக்காக இன்னும் இது போல குழந்தைகளை கடத்தும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது இட்லிவடையாரே..
அதுவும் குழந்தைகள் தினத்திலேயே நடந்திருப்பது மனசை கஷ்டாமாக்குகிறது..

சாத்வீகன் said...

ஆனந்த் நலமாய் திரும்பி வர பிரார்த்திக்கிறேன்