பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 06, 2006

அதிமுகவில் இருந்து சரத்குமார் விலகினார்

அதிமுகவில் இருந்து நடிகர் சரத்குமார் விலகினார். கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுகவில் இருந்து அதிமுகவிற்கு சென்ற நடிகர் சரத்குமார், தற்போது அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். நடிகர் சங்கத்தில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால் அதிமுகவில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார்.


அறிக்கை :

நான் என்னுடைய அரசியல் வாழ்வில் சில தேவையற்ற பிரச்னைகளின் விளைவால் கஷ்டமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். நான் திரையுலகில் இப்போதுள்ள நிலைக்கு உயர எனது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களின் தொடர் ஆதரவே காரணம். நான் எனது திரை வாழ்வில்கூட சமுதாய நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பங்களிக்கவே விரும்பினேன். வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் இருந்து நாட்டை விடுவிக்கவும், மத நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடும்படி எனது ரசிகர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது திரையுலக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் எனது மனசாட்சிப்படியே நான் முடிவுகளை எடுத்துள்ளேன். நான் கடந்த சட்டசபை தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கும், அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்தேன். நான் எனது பணிகளை நேர்மையுடனும், திருப்தியுடனும் செய்து முடித்துள்ளேன். தற்போது எனது திரைப்பணிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்கும் எனது முழுநேர உழைப்பு தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் எனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டேன்.

நான் எனது தொழிலில் முழு கவனம் செலுத்தி மேலும் முன்னேற முடிவெடுத்துள்ளேன். திரைத்துறையின் நலனுக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் உழைக்க முடிவு செய்துள்ளேன்


பிகு1: நடிகர் சரத்குமார் தற்போது ஹாங்காங்கில் உள்ளார். அங்கிருந்தபடி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வரும் 12ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்துப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வார் என்று தெரிகிறது.

பிகு2: அதிமுகவில் சேர்ந்தது: ஏப்ரல் 17, விலகியது நவம்பர் 6 ( மொத்தம் 203 நாட்கள் )

Update 7-Nov-06

அதிமுகவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர் நாடார் அமைப்பு களுடனும், முக்கிய பிரமுகர்களு டனும் கலந்து பேசி வருவதாக தெரிகிறது. விரைவில் அவர் ஒரு புதிய கட்சியை துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காமராஜருக்கென்று ஒரு தனி மரியாதை இருப்பதால் அவருடைய பெயரில் கட்சியை துவக்குவது என்றும் அவர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. வருகிற 12ந் தேதி ஹாங்காங்கில் இருந்து திரும்பியதும் ஆதரவாளர் களுடன் கலந்து பேசி இது குறித்து இறுதி முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிகிறது.

11 Comments:

Sivabalan said...

அரசியலில் இதெல்லாம்..

C.M.HANIFF said...

A I S (arasiyalil ithellam sagajamappa) :-)

IdlyVadai said...

Some more updates...

anjaanenjan said...

சித்தியோடு தொடர்பில்லாமல் சித்தப்பா எப்படி இருப்பார்...? ஆனாலும், குசும்பு தான் சித்தப்பாவுக்கு....

Johan-Paris said...

எப்போ தி மு க போறார்;
யோகன் பாரிஸ்

Anonymous said...

வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பாரா ?

தம்பி said...

நாப்பது கோடிக்கு இவ்ளோதான் கூவ முடியுமோ என்னவோ? :))

இப்ப அவருக்கு அரிப்பெடுக்கும் எந்த பக்கம் போயி சொறிஞ்சிக்கலாம்னு.

கால்கரி சிவா said...

//வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பாரா ?//

சினிமாகாரங்கெல்லாம் வாங்கினா வாங்கினதுதான். திருப்பியெல்லாம் தரமாட்டாங்க. பணம் கொடுத்ததும் சினிமா காரங்கதான். தந்திருப்பாங்களா? என்பதே டவுட்டுதான்

வானமே எல்லை said...

எனது திரையுலக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் எனது மனசாட்சிப்படியே நான் முடிவுகளை எடுத்துள்ளேன்.

அப்படின்னா என்னாங்கோ??

IdlyVadai said...

காமராஜர் பெயரில் புதிய கட்சி - See Updates

Narayanaswamy.G. said...

ஒரு செய்தி.

மதுரையில் ஒரு நாள் இரவு 11 மணிக்கு மேல் விமான சத்தம். என்னடா இந்த நேரத்தில் என்று அடுத்த நாள் விமான நிலைய நண்பரிடம் விசாரித்தேன்.

"சரத் குமாரும் ராதிகா மேடமும் சார்ட்டர்ட் பிளைட்ல வந்தாங்க, அம்மாவ பாக்க தேனி போயிருக்காங்க" அப்படின்னு சொன்னார்.

சென்னைல இருந்து மதுரைக்கு சார்ட்டர்ட் பிளைட்ல வந்தாங்கன்னா துட்டு எவ்ளோ கை மாறிருக்கும்........

நம்ம எல்லாரையும் எட்டையனாக்குறானுக.