சில நாட்களாக நான் இந்த பாடலை தான் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன.
படம் : தில்லானா மோகனாம்பாள்
குரல் : பி.சுசீலா ( உங்க குரலையும் பாடி பார்க்கலாம், யாரும் இல்லாத போது )
இசை :கே.வி.மஹாதேவன் ( நீங்க பாடும் போது, மனைவி பக்கத்தில் இருந்தால் நல்ல சவுண்ட் வரும் )
ராகம் : ஷண்முகப்ரியா ( இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு )
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன .. ஸ்வாமி
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
அழகர் மலை அழகா - இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
நவரசமும்... முகத்தில் நவரசமும்...
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவண்திருக்கும் இதழில் கனிரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவண்திருக்கும் இதழில் கனிரசமும் கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார்
பாவை என் பதம் காண நாணமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
மாலவா வேலவா மாயவா ஷண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்
மோகத்திலே என்னை மூழ்ஹ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல்
மாலவா வேலவா மாயவா ஷண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
மானாட மலராட மதியாட நதியாட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட
வஞ்சி இவள் கைகளாட
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை
விரைவினில் துணையாக ஓடி வருவாய்..
தூயனே மாலவா.. மாயனே வேலவா
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
தற்போது பல வலைப்பதிவாளர்கள் முனுமுனுக்கும் பாடல்
படம்: தங்கப்பதுமை ( பொன்ஸ் என்று குழப்பிக்க வேண்டாம்)
எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்! (முக)
வகுத்த கருங்குழலை மழைமுகி லெனச் சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என்முன்
வளைந்து இளந்தென்றலில் மிதந்து வரும் - கைகளில்
வளையல் இன்னிசை கேட்கலாம் - மானே உன் (முக)
இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
அகத்தினிலே அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
இளமை பொங்கும் அங்கம் சிந்தும் அழகில்
தங்கம் மங்கும் நிலையில் நின்று
தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலெனச் சோலைதனில்
பொழுதெல்லாம் மகிழலாம்;
கலையெலாம் பழகலாம் - சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும்
குறும்பு படர்ந்திடும்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, November 21, 2006
எனக்கு பிடித்த பாடல்.
Posted by IdlyVadai at 11/21/2006 06:21:00 PM
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










12 Comments:
:)))
உம்மைத் தான்யா எதிர்பார்த்தேன்..
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார்//
;-))))))))))))
2 ம் பாடல் மிக அருமை! எழுதியது யாருங்க...??
யோகன் பாரிஸ்
அப்பாடா எல்லோரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
யார் சொன்னது தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லைனு ? (பாவையும், பதிவையும் பார்த்தால் சிரிப்பார்கள். )
நேர்ல பார்த்தால் டிஸ்கஷன்
போட்டோவை பார்த்தால் டென்ஷன்
அவ்வளவுதான் :-)
johan - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அப்டேட் செய்துவிட்டேன்.
//எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார்//
;-))))))))))))
//
:-)))))))))))
http://youtube.com/watch?v=zqhyMcEbggQ
நான் இரட்டுற மொழிதல்ன்னு இந்த பாட்டை சொல்லி இருந்தேன். இதுக்கு நீங்க உங்க மூலமா 3வது டைமென்ஷன் குடுத்திருக்கீங்க... டென்சனை குறைக்கும் வழி உங்களுக்கு நல்லாவே வருது....
How is beta blogger? Can I move there? Any tech tips will be great to start...
பாட்டுக்கு ரசிகன் - நன்றி.
உதய் குமார் - பீட்டா நல்லா இருக்கு. எனக்கு டென்ஷன் இல்லை :-)
ஐஸ் நல்லா வேலை செய்யுது
அந்த இரண்டாவது 'மாலவா' வுக்கு அப்புறம் 'எனை ஆளும் ஷண்முகா வா ' னு ஒரு வரி விட்டுப் போச்சோ
Post a Comment