பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 30, 2006

செய்தியும் படமும்.

நேற்று நடந்த முல்லை பெரியாறு பேச்சுவார்த்தையின் போது இரு மாநில முதல்வர்களும் கைகுலுக்கி போஸ் கொடுக்கும்படி கேமராமேன்கள் கேட்டனர். ஆனால், அச்சுதானந்தன் சம்மதிக்கவே இல்லை. அவர் கூட்டத்திற்கு வந்து அமர்ந்ததில் இருந்தே முகத்தை கடுகடுவென இறுக்கமாகவே வைத்திருந்தார். எந்தவொரு சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பது போல அவர் மிகவும் இறுக்கம் காட்டினார். கேமரா மேன்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக அமைச்சர் சோஸ் கூட அச்சுதானந்தனிடம் கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு அவர் இணங்கவில்லை. முதல்வர் கருணாநிதி உட்பட தமிழக தரப்பினர் அனைவரும் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். தமிழக முதல்வர் கைகுலுக்க தயாராக இருந்தும்கூட அதற்கு அச்சுதானந்தன் உடன்படாமலேயே சில நிமிடங்கள் நீடித்தன. நிலைமையை உணர்ந்த அமைச்சர் சோஸ் எழுந்து இரு மாநில முதல்வர்களின் கைகளை அவரே பிடித்து சிரித்தபடி போஸ் கொடுத்தார்.

( இப்போ நீங்க சிரிப்பா சிரிக்கலாம் )

1 Comment:

சிநேகிதன் said...

அச்சுதானந்தன், தன் சொத்து பறிபோகப்போவதை நினைத்து கடுப்பில் இருந்திருக்கலாம், நம்ம கருனாநிதிக்கு அப்படியா?

எவன் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன!. இதுதானே இன உணர்வின் அடையாளம். அதனால் தானே இதுவரை கலைஞர் இனமானத்தலைவராக உள்ளார்