பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 06, 2006

சதாம் உசேனுக்கு தூக்கு - கலைஞர் கண்டனம்

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்


மரண தண்டனை என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைப் புத்தகத்தில் சில பக்கங்களை நீக்குவது போலாகும். ஆனால் இதன் மூலம் திருந்திய பக்கங்களை மறு பதிப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடுகிறது.

இது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, சதாம் உசேன் போன்ற சர்வாதிகளுக்கும் கூட பொருந்தும் என்று கூறியுள்ளார்.

முன்பு, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது மரண தண்டனை மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம்


அடுத்தது யாருப்பா ?

11 Comments:

luckylook said...

மனிதநேயத்துக்கு கொடி பிடிக்கும் டாக்டர் கலைஞர் வாழ்க!!!

நாடோடி said...

//மனிதநேயத்துக்கு கொடி பிடிக்கும் டாக்டர் கலைஞர் வாழ்க//

தம்பி இது கட்சி மீட்டிங்கு இல்ல. blogger. இங்கனளாம் இப்படி கோஷம் போடக்கூடாது.

MS Ram said...

அவருடைய எதிர் காலத்தைப் பத்தி கொஞம் யோசனை பண்னி பார்த்திருப்பார். அதனால தான் இப்படி ஒரு அறிக்கை.

Boston Bala said...

Dinamani.com - TamilNadu Page:: சதாமுக்கு மரண தண்டனை: விஜயகாந்த் கண்டனம்

சென்னை, நவ. 7: சதாமுக்கு மரண தண்டனை வழங்கியது மனிதாபிமானமற்ற செயல் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் கூறினார்.


விஜய்காந்த்தை இருட்டடிப்பு செய்து விட்டீர்களே :)

அப்படியே எல்லாவற்றுக்கும் முதலாக கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்ததையும் மறைக்க இட்லி-வடையார் சதி ;-)

CPI-M denounces death sentence to Saddam - Google News

IdlyVadai said...

பாஸ்டன் பாலா - தவறுதான். சரி, அடுத்த பதிவு விஜயகாந்த் ஸ்பெஷல் :-) இன்னும் 10 நிமிடங்களில்..

Hariharan # 26491540 said...

அட அட அட!

உலக அரசியலில் "ஈ"டுபட இப்படி ஈராக் அதிபர் (சதாம் அப்படித்தான் இன்னிக்கும் நினைக்கிறார்) தூக்கு தண்டனைக்கு இப்படி தூக்கு தூக்கியாக கண்டனம் தெரிவிக்கும் தமிழகத்து உலக அரசியல்தலைவர்களைப் பின்பற்றி நானும் சதாமின் தண்டனையை "மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்"

அப்பா நானும் உலக ரேஞ்சுக்கு செல்ஃபா லாஞ்ச் ஆகியாச்சு! :-))

luckylook said...

//மதுசூதனன் ராமானுஜம் said...
அவருடைய எதிர் காலத்தைப் பத்தி கொஞம் யோசனை பண்னி பார்த்திருப்பார். அதனால தான் இப்படி ஒரு அறிக்கை.
//

இல்லே தலைவரே. அவர் சங்கராச்சாரியார் எதிர்காலத்தை யோசனை பண்ணிட்டு இப்படி ஒரு அறிக்கை விட்டாராம் :-)

Narayanaswamy.G. said...

மதுரையின் அரசு பேருந்தின் பின்புறத்தில் (No Filthy Thinking Please) ஒரு போஸ்டர்.

உலக சண்டியர் ஜார்ஜ் புஷ்சை கண்டி
இல்லையேல் ஐநா சபையை கலை.
சதாம் உசேனை தூக்கில் இடாதே!

இவண்
அண்ணா நகர் ரமேஷ்

மேற்படி பார்ட்டியை பற்றி மதுரை மக்களிடம் கேட்கவும்.

bala said...

இட்லிவடை அய்யா,

நம்ம மருத்துவர் இதுவரைக்கும் இதைப்பற்றி ஒரு அறிக்கையும் விடவில்லையா?

பாலா

Anonymous said...

இதை ஜெயலலிதா சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும், மூடிக்கேத்த ஜாடிதானே.

simharn said...

Ayo paavam luckylook. He is caught between a rock and a hardplace.