பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 30, 2006

முல்லை பெரியாறு அரசியல்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக - கேரள முதல்வர்களிடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை. அதே நேரத்தில், இரு மாநில பொதுப்பணித்துறை அமைச்சர்கள் அடுத்த இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. - செய்தி

"முல்லை பெரியாறு விவகாரம் குறித்து பேசிய விவரங்களை சோனியாவிடம் தெரிவித்துள்ளேன். இந்த விஷயத்தில் சோனியாவின் உதவியை எதிர்பார்க்கிறேன்" - கலைஞர்

"முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பேச்சுவார்த்தை, மெகா சீரியலைப் போல நீண்டு கொண்டே போகாது என்றும் அதே நேரத்தில் சிறுகதை போல முடிந்துவிடாது" - கலைஞர்

"தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதே எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இந்த பேச்சுவார்த்தை முடியும்வரை நாங்கள் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த விட மாட்டோம்" - கேரள முதல்வர் அச்சுதானந்தன்.

"பெரியாறு அணையின் நீர் மட்டத்தை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி தே.மு.தி.க., சார்பில் தேனியில் டிச., 2ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்"

"இரு மாநில முதல்வர்களும் கைகுலுக்கி போஸ் கொடுக்கும்படி கேமராமேன்கள் கேட்டனர். ஆனால், அச்சுதானந்தன் சம்மதிக்கவே இல்லை. அவர் கூட்டத்திற்கு வந்து அமர்ந்ததில் இருந்தே முகத்தை கடுகடுவென இறுக்கமாகவே வைத்திருந்தார்" - செய்தி

"கருணாநிதி, அச்சுதானந்தன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அந்த ஹாலை விட்டு வெளியில் வந்த தமிழக முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர் அச்சுதானந்தனும் எதிரில் உள்ள அறைக்குள் சென்றனர். சற்று வேகமாக உள்ளே சென்றதை பார்த்தவுடன் அங்கு குழுமியிருந்த நிருபர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இரு மாநில முதல்வர்களும் தனிப்பட்ட முறையில் சில நிமிடங்கள் பேசுவதற்காக செல்கின்றனரோ என்று நினைத்து, கேள்வி எழுப்பினர். சில நிமிடங்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அந்த சூழ்நிலையில் கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ஹேமச்சந்திரன், "ஒன் டூ ஒன் என்றெல்லாம் இல்லை. இரண்டு முதல்வர்களுமே சிறுநீர் கழிப்பதற்காக ஒரே பாத்ரூமிற்குள் சென்றுள்ளனர்' என்று கூறியவுடன், அங்கு கூடியிருந்த அனைவர் மத்தியிலும் பலமான வெடிச்சிரிப்பு ஏற்பட்டது. - செய்தி.

முல்லை பெரியாறு பிரச்னை பற்றி முழுவதும் தெரிந்துக்கொள்ள

கலைஞர் பேட்டி முழுவதும் கீழே..


கேள்வி:- முல்லைப்பெரியாறு பேச்சுவார்த்தை எப்படி இருந்தது?

பதில்:- பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

கேள்வி:-புதிய அணை கட்டப்பட வேண்டுமென்ற கேரள அரசின் கோரிக்கை பற்றி?

பதில்:- தமிழக அரசின் சார்பில் எங்கள் கருத்துக்களை எடுத்து தெரிவித்திருக்கிறோம். கேரள அரசினர் அவர்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். விவாத முறையில் இரண்டு விதக் கருத்துக்களும் வேறுபட்டவைகளாக இருந்தாலும், நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இன்றைய விவாதம் முடிவுற்றிருக்கிறது.


கேள்வி:- பேச்சுவார்த்தை முற்றுப் பெற்றுவிட்டதா?

பதில்:- இன்னும் பத்து நாட்களில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை இரு மாநில பொதுப்பணித் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டும், பொறியாளர்கள் கலந்து கொண்டும் நடைபெற இருக்கிறது. அதற்கான தேதியை மத்திய அமைச்சர் குறிப்பிடுவார்.

கேள்வி:- இந்தப் பேச்சுவார்த்தை எங்கே நடக்கும்?

பதில்:- அநேகமாக டெல்லியில்தான் நடைபெறும்.

கேள்வி:- முதல் அமைச்சர்கள் பேசியே உடன்பாடு ஏற்படவில்லை. அமைச்சர்கள் பேசியா உடன்பாடு ஏற்பட்டு விடப் போகிறது?

பதில்:- உடன்பாடு ஏற்படவில்லை என்று ஒரேடியாக சொல்ல முடியாது. உடன்பாட்டை நோக்கிச் செல்லும்போது எந்தெந்த வழியில் செல்லலாம் என்பதை எங்களுக்கு உணர்த்துவதற்கு இந்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பயன்படும் என்று நம்புகிறேன்.

கேள்வி:- பேச்சுவார்த்தையே தொடர்கதையாக நீளுகிறதே? ஜனவரி 1ந் தேதிக்குள் அறிக்கை தர வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருக்கிறதே? ஏதாவது காலவரையறை நிர்ணயம் செய்யப்படுமா?

பதில்:- காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.


கேள்வி:- முல்லைப்பெரியாறு பிரச்சினை காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நெய்வேலிப் பிரச்சினையில் நீங்கள் மத்திய அரசுக்கு எதிராக ஒரு நிலை எடுத்ததைப் போல, இந்த பிரச்சினை காரணமாகவும் நீங்கள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவீர்களா?

பதில்:- பா.ஜ.க.வின் ஆசையை நீங்கள் வெளிப்படுத்தி இருப்பதாக நான் இந்த கேள்வியை எடுத்து கொள்கிறேன்.

கேள்வி:- பேச்சுவார்த்தைக்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென்று வற்புறுத்துவீர்களா?

பதில்:- இது மெகா சீரியலாகவும் இருக்காது. சிறுகதையாகவும் இருக்காது.

கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையே, கேரளா மதிக்க மறுப்பது, தவறான முன்மாதிரியாக ஆகி விடாதா?

பதில்:- எதற்கும் முன்மாதிரி என்று ஒன்று உண்டு. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் முன்மாதிரியாக ஆகி விடக் கூடாது.

கேள்வி:- தமிழ்நாடு பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் இடஒதுக்கீடு பிரச்சினையில் நீங்கள் சரியாக அக்கறை காட்டவில்லை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறாரே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நாங்கள் இன்னும் அதிக அக்கறை காட்ட வேண்டுமென்று எங்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார் என்று கருதுகிறேன்.

0 Comments: