பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 27, 2006

மஞ்சள் துண்டு யார் அணியலாம் - கலைஞர்

கலைஞர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மஞ்சள் துண்டு அணிவது குறித்து மீண்டும் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

"சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சள் ஆடை அணிவது பொருந்தாது என்றும், தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதாக "ஓஷோ' வின் "தம்மபதம்' எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நான் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்'

ராகு காலத்தில் திறப்பு: தாம் திரை மறைவில் கடவுளை வணங்குவதாக ஒரு பேட்டியில் வந்துள்ளதை சுட்டிக்காட்டி, தாம் பகுத்தறிவுவாதி என்பதற்கு யாரும் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்று கடுமையாக கூறியுள்ளதோடு, பலர் வேண்டாம் என்று கூறிய பிறகும் புழல் மத்திய சிறையை ராகு காலத்தில் திறந்து வைத்ததாக கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


ஞாநி ( ஜூன் மாதம் ஆனந்த விகடனில் எழுதியது )
ஜெயலலிதா ஆட்சியின்போது, கண்ணகி சிலை அங்கிருந்து காணாமல் போனது ஏன் என்பது, எவ்வளவு விமர்சனங்கள் வந்தா லும் கருணாநிதி ஏன் மஞ்சள் சால்வையை அகற்றுவதில்லை என்கிற மர்மத்துக்கு நிகரானது. இரண்டுக்கும் காரணம் வாஸ்து, மூட நம்பிக்கை, மருத்துவம் என்றெல் லாம் ஊகிக்கலாமே தவிர, புதிர் முடிச்சை அவிழ்க்கவே முடியாது.

டாப் டென்+1 விடை தெரியாத கேள்விகள் ?!

4 Comments:

Hariharan # 26491540 said...

அய்யோ அப்ப குடிதாங்கி எப்பவோ அணிவிச்சதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணிகிட்டு வர்றதா எலீக்சன் டைம்ல கருணாநிதி 107வத காரணமாச் சொன்னதும் உண்மையான காரணம் இல்லியா?

அப்போ இது கருணாநிதி குடிதாங்கி பெரிய மருந்து ராமதாசுக்கு செஞ்ச மஞ்சள் துரோகம்... மஞ்சமஞ்சளான் துரோகம் இது!

இட்லிவடை ஒரு பணிவான ரிக்வஸ்ட்.

கருணாநிதி அவர்வாயாலேயே மஞ்சள் துண்டுக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை துண்டு துண்டா சொல்லியிருக்கும் பகுத்தறிவு, தன்னாளுமை, கூட்டணி தர்ம இன்னபிற மெய்க்காரணங்களை நாமாவளியாக வெளியிட்டால் பலருக்கும் காரணத்தை கர்ணம் அடித்து காரணமாய் கயிறு திரிக்கக் கையேடு மாதிரி உபயோகமா இருக்குமே!

சிநேகிதன் said...

// ராகு காலத்தில் திறப்பு: தாம் திரை மறைவில் கடவுளை வணங்குவதாக ஒரு பேட்டியில் வந்துள்ளதை சுட்டிக்காட்டி, தாம் பகுத்தறிவுவாதி என்பதற்கு யாரும் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்று கடுமையாக கூறியுள்ளதோடு, பலர் வேண்டாம் என்று கூறிய பிறகும் புழல் மத்திய சிறையை ராகு காலத்தில் திறந்து வைத்ததாக கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.//


சிறைச்சாலையை ராகு காலத்தில் தான் திறக்கவேண்டும். யாரும் அங்கு வரக்கூடாது என்பதற்காக!.

அவர் வீட்டு கிரகப்பிரவேசத்தை ராகு காலத்தில் நடத்துவாரா?

தேர்தல் பிரச்சாரத்தை ராகுகாலத்தில் துடங்குவாரா?

சன் டிவியின் புதிய தொழில்களை ராகுகாலத்தில் தொடங்குவாரா?

பதவியேற்பு விழாவை ராகு காலத்தில் தொடங்குவாரா?

சட்டசபைக்கு ராகு காலத்தில் செல்வாரா?

தனக்கு கமிஷன் கொடுக்கும் வெளிநாட்டு கம்பனிகளின் தொழில்களை ராகு காலத்தில் தொடங்கி வைப்பாரா?

சிறியோன் said...

"அவர் வீட்டு கிரகப்பிரவேசத்தை ராகு காலத்தில் நடத்துவாரா?"
"தேர்தல் பிரச்சாரத்தை ராகுகாலத்தில் துடங்குவாரா?"
"சன் டிவியின் புதிய தொழில்களை ராகுகாலத்தில் தொடங்குவாரா?"...


ஒரு காரியத்தை செய்ய முற்படும் போது அதை எந்த காலத்தில் செய்தால் நிறைவேறும் என்பதை மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தன் வியாபாரத்தை தொடங்க கிரகநிலைகள் பார்த்து இன்று தான் நல்ல நாள் என்று சோசியன் சொல்ல கேட்டு, அடிக்கும் மழையிலும் உப்பு விற்க செல்பவன் ஒரு மூடன். தான் பகுத்தறிவாளனாய் தோன்றல் பொருட்டு, பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்ய இராகுகாலம் வரை காத்திருக்க நினைப்பவனும் மூடனேயன்றி பகுத்தறிவாளியல்ல.

Anonymous said...

//ஒரு காரியத்தை செய்ய முற்படும் போது அதை எந்த காலத்தில் செய்தால் நிறைவேறும் என்பதை மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தன் வியாபாரத்தை தொடங்க கிரகநிலைகள் பார்த்து இன்று தான் நல்ல நாள் என்று சோசியன் சொல்ல கேட்டு, அடிக்கும் மழையிலும் உப்பு விற்க செல்பவன் ஒரு மூடன். தான் பகுத்தறிவாளனாய் தோன்றல் பொருட்டு, பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்ய இராகுகாலம் வரை காத்திருக்க நினைப்பவனும் மூடனேயன்றி பகுத்தறிவாளியல்ல.
//

இந்த விசயத்தில்

கருனாநிதியை சீறியோன் என்கிறீர்களா? அல்லது சிறியோன் என்கிறீர்களா?