பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 22, 2006

கூட்டணி மாறுகிறது ?

இன்று வந்த இரண்டு செய்திகள்

செய்தி 1: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பிரச்சினைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை நெருங்க அதிமுக முயல்வது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

செய்தி 2: மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், கூட்டணிக் கட்சிக் கூட்டத்திற்கும் மதிமுகவுக்கும்காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

[ பழைய செய்தி: மதிமுக கூட்டணியில் நீடித்தால் திமுக விலகும் என முன்பு கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார் ]

4 Comments:

Anonymous said...

கருணாநிதிக்கு ரோசம் பொத்துக் கொண்டு கூட்டணியை விட்டு ஓடி விடுவார் என்று நினைக்கிறீர்கள். அதெல்லாம் இருந்தா அவரு ஏன் இப்படி இருக்க போறாரு.

நாமக்கல் சிபி said...

உங்க பழைய ஃபீல்டுக்கே வந்துட்டீங்க போல!

இதிலேர்ந்தே தெரியுது ஏதோ கூட்டணி மாற்றம் நடக்கப் போகுதுன்னு?

எங்கியாச்சும் இடைத்தேர்தல் வருதோ?
இல்லாட்டி உங்க முக்கு வேர்க்காதே!

IdlyVadai said...

மாயவரத்தான் - நீங்கள் போட்ட பின்னூட்டமா என்று எனக்கு சந்தோகம் இருக்கிறது. அதனால் அதை நிறுத்திவைத்துள்ளேன்.

IdlyVadai said...

இன்றைய செய்தி: மத்தியில் தி.மு.க. அங்கம் வகிக்கும் வரையில் மத்திய அரசுக்கு அ.தி.மு.க. எந்த வகையிலும் ஆதரவு அளிக்காது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.