பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 21, 2006

பிராமணர்கள், பிராமணீய அரசியல்

உள்ளாட்சி தேர்தல் பற்றிய கூட்டத்தை பற்றி பத்ரி எழுதிய பதிவு . இதை தொடர்ந்து கலைஞர் முரசொலியில் 'பூணூல், பிராமனர்கள்' என்று சில கருத்துக்களை எழுதியிருந்தார். வைகோ இரண்டு நாட்கள் முன் அளித்த பேட்டி, மற்றும் கலைஞர் நேற்று அதற்கு அளித்த பதில்.
மினிமம் கியாரண்டி: ஜெ, சன் டிவி செய்திகள் மாதிரி இருக்கும்


19.11.06 அன்று வைகோ பேட்டியிலிருந்து..

பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நிகழ்ந்த அத்துமீறல் மற்றும் அராஜகம் குறித்து பாரதீய வித்யாபவனில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அரசியல்வாதி செழியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

அதனை தாங்கி கொள்ள முடியாமல் முதல்வர் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார். செழியன், இந்திரா காந்தி போன்ற தலைவர்கள் பாராட்டிய அரசியல்வாதி. சிறந்த நாடாளுமன்றவாதி, தனிமனித ஒழுக்கமிக்கவர். அவரை மிகவும் மோசமாக கருணாநிதி விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் வரதராஜன் கூறியதை மேற்கோள்காட்டியே செழியன் பேசியுள்ளார். ஆனால் அதனை பொறுத்து கொள்ளும் மனப்பக்குவம் கருணாநிதி யிடம் இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தபோதே ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு, சர்வாதிகாரம் வலுப்பெறும் என்று கூறியிருந்தேன். அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் இப்போது நடந்துள்ளது. சர்வாதிகாரத்தை பின்பற்றிய பலர் தூள்தூளாகியிருக்கின்றனர். மேலும், அந்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த கருணாநிதி, பிராமண சமுதாயத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு முதல்வராக இருப் பவர் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பேசியிருப்பது சரியல்ல. அண்ணா, பெரியார் போன்ற பெரியவர்களே பிராமணியத்தைதான் எதிர்த்தார்களே தவிர, பிராமணர்களை அல்ல. தேர்தலின் போதே மிருக ஜாதி சிறுத்தைகள் உலாவும் போது, சிங்கங்கள் உலாவக்கூடாதா என்றெல்லாம் பேசிய கருணாநிதி, மீண்டும் அதுபோல பேசியிருக்கிறார்.

பகுத்தறிவு பேசும் கருணாநிதி, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறியுள்ளார். வெளியே பகுத்தறிவு பேசிவிட்டு, அறையை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது. திருக்குறளுக்கு உரை எழுதிய கருணாநிதிக்கு, குறள் கூறிய கருத்துக்களில் லட்சத்தின் ஒரு பங்குகூட பின்பற்ற முடியவில்லை.

கலைஞர் (கேள்வி பதில் அறிக்கை )

கேள்வி:- நீங்கள் பிராமணர் விரோதியென்றும் அவர்களின் தமிழ்த் தொண்டினைக் கூட மதிப்பவர் இல்லையென்றும், அதனால் உங்கள் தலைமையில் உள்ள ஆட்சியை எதிர்த்து அகற்றுவதையே லட்சியமாகக் கொண்டு, தங்களுக்கு விரோதமாக ஒரு `பூனை' கத்தி னாலும், அதைப் புலியாக உருவகப்படுத்தி தங்களையும், தங்கள் தலைமையில் உள்ள தி.மு.க.வையும் ஒழித்துக் கட்டுவதென்றும் அந்த இனத் தைச் சேர்ந்த சிலரும் அவர்களுக்குத் துணையாக ஒரு சில எட்டப்பர்களும் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா?

பதில்:- இவற்றையெல்லாம் உலகப் புகழ்மிக்க உளவுத்துறை அமைத்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, அவர்களின் நெஞ்சத்தில் நிறைந்துள்ள வஞ்சத்தை அவர்கள் நடத்தும் ஏடுகளைப் படித்தாலே எளிதில் புரிந்து கொள்ள முடிகிறதே!

ஒன்றை அவர்களும் சரி அவர்களால் ஏமாற்றப்பட இருக்கிற அல்லது ஏமாற்றப் படுகிறவர்களும்பபபசரி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நானோபபஅல்லது என் தலைமையில்பபஇயங்கும் இக்கழகமோ, தமிழுக்கு, தமிழர்க்கு மக்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற எந்தபபதனிப் பட்ட பார்ப்பனரையும் வெறுத்ததுமில்லை, வெறுப்பதுமில்லை.

"தமிழ் செம்மொழி'' என நூறு ஆண்டுக்கு முன்பே முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞராம் சூரியநாராயண சாஸ்திரியாரின் பிறந்த வீட்டை அரசின் நினைவுச் சின்னமாக மாற்றிட திட்டம் வகுத்திருப்பதும், அவரது உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிட முயற்சி மேற் கொண்டிருப்பதும், அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்ததும், இந்த அரசு தான்.

ஆம், என் தலைமையில் உள்ள கழக அரசுதான் அக்ர காரத்து அதிசய மனிதர் என அண்ணா புகழ்ந்த வ.ரா.வின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து சிறப்பித்ததும் இந்த அரசு தான். `கல்கி' யார் நூல் களை அரசுடைமையாக்கி, இருபது லட்ச ரூபாய் அரசு நிதி வழங்கியதும் தி.மு.க. ஆட்சியில் தான்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் அன்றொரு நாள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் கொடி மரத்தில் ஏறி தேசியக் கொடி பறக்கவிட்ட "ஆர்யா'' என்ற பார்ப்பன இளைஞனின் சிலையை அமைத்திருப்பது என் தலைமையிலான தி.மு.க. ஆட்சியல் தான். பத்தி ரிகை பிதாமகன் சாவிக்கு பெரு நிதி உதவி அளித்து பெருமைப் படுத்தியதும் தி.மு.க. அரசு தான்.

"ஆயிரம் தெய்வங்கள் உண் டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! பல்லாயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வ முண்டாமெனல் கேளீரோப'' என்று பாடிய கவி பாரதிக்கு சிலை அமைத்தது தி.மு.க. ஆட்சி தான். அந்தப் பாரதியைப் பற்றி "பைந்தமிழ் தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவி முரசு, நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா, காடு கமழும் கற்பூரச் சொற்கோ! கற்பனை ஊற்றாம் கதையின் புதையல், திறம்பாட வந்த மறவன், புதிய அறம் பாட வந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப்படைக்கு மருந்து- என்றெல்லாம் பாடி வரும் எங்கள் பாவேந்தர் பாரதிதாசன்தான்.

எனவே தி.மு.க. ஏற்க மறுப்பது "பிராமணியம்'' என்ற "பார்ப்பனீய கொள்கை'' யைத்தான்!

நான் ''பாப்பாத்தி'' தான் என்று கோட்டைக் கொலு மண்டபத்திலே கொக்கரித் தவர்கள், எனக்கும் கருணா நிதிக்கும் நடப்பது பரம்பரை யுத்தம் என்று பட்டயம் படித்து அறை கூவல் விடுத்தவர்கள், வகுப்புத் துவேஷத்தைக் தூண் டாவதர்களென்றும், இனப் பகைக்கு எடுத்துகாட்டாக விளங்காதவர்கள்களென்றும், நம்பிக் கெடுவதற்கு, இனியும் இந்த நாட்டு மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள், இருக்க வும் கூடாது!

திராவிட இயக்கமெனும் வீரிய வித்தில் விளைந்தவர்கள் என்பதும் உண்மையானால், அவர்கள் தந்தை பெரியாரின் கருத்துக்களிலும், அறிஞர் அண்ணாவின் எழுத்துக் களிலும் இழையோடுகிற உண்மைகளை உணர்ந்து எழுச்சி நடை, இலட்சியபபபநடை போடுகிறவர்களாகவே இருப் பார்கள்.

மலையாள நாட்டில் மாவலிச் சக்கரவர்த்தி என் பான், மக்கள் நல ஆட்சி நடத்தினான், தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறான் என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், "அய்யோ! இப்படி அவன் ஆட்சி தொடர்ந்து நடந்தால் பிறகு தேவாதி தேவர் களாம் பூசுரர்களின் ஆட்சி வருவதற்கே வழியில்லாமல் போய்விடுமே என்றும், சோர்ந்து போன சுரர் களாம் தேவர்கள் விஷ்ணுவைப் பிடித்து விபரீத சூழ்ச்சி செய்து மாவலி மன்னன் ஆட்சியை வீழ்த்தினார்கள் என்பது தான் "ஓணம்'' பண்டிகையின் பூர்வீகம் என்பார்களே அந்த மாவலிக் கதையின் மறு பதிப்பைத் தயாரிக்கத்தான் இங்கே மர்ம வேலைகள் மாயா ஜாலங்கள் மண் குதிரைப்பந்தய ஓட்டங்கள் மறையவர் குலதிலகங்கள் சிலரால் நடத்தப்படுகின்றன.

கயவர்கள் சூழ்ச்சிக்கு, காலம் காலமாக ஆட்பட்டு சரித்தி ரத்தில் களங்கச் சேற்றைப்பூசிக் கொண்டுள்ள தமிழினம்,

இனியாவது அவர்கள் ஏமாற்றுப் பேச்சில் வீழ்ந்து புதைந்து விடாமல் விழிப்புற்று எழுக! 1945 ஆம் ஆண்டு "குடியரசு'' அலுவலகத்தின் இருந்து நான் எழுதிய இந்தக் கவிதையைத் தக்க நேரம் இது எனக் கருதி உனக்கு நினை வூட்டுகின்றேன்.

சுண்டெலி வந்தென்று

சூரம் பூனை அடுப்பின்

அண்டையில் பதுங்க,

அரவமொன்றாடியோடக்

கண்ட கீரிப் பிள்ளை

கலங்கியே வியர்த்து நிற்க,

மண்டலத்தில் லில்லாஇம்

மாபெரும் வேடிக்கைகள்

வண்டமிழ் நாட்டில்

வந்தால்

வாகை சூடி வாழ்ந்திருந்து

சண்டைக்குச் சளைக்காத

சிங்கத் தமிழ்க்காளை யெல்லாம்

நண்டுக்குப் பயந்தொளிந்த

நரியைப் போல்-ஆரிய

வெண்டைக்காய் வீரரிடம்

வெற்றிகளைக் கொடுத்திடுவார்!

6 Comments:

Anonymous said...

Really very nice....

Anonymous said...

Kalignar has always been a moderate, unlike Periyar who was an extremist.

Kalignar is a great man.

Hariharan # 26491540 said...

அட்றா சக்கை! பேராண்டி கலாநிதியை இந்தியாவின் 20வது பணக்காரர் ஆக்கியதே இம்மாதிரி விஷ(ய)ம் கொண்ட விஷ(ம)ப் பேச்சுக்களும் அறிக்கைகளும் தானே!

கருணாநிதியால் மட்டுமே இது சாத்தியமானது! இந்தப் பகுத்தறிவுப் பேச்சைக் கேட்டுக்கொள்ள வேண்டியது வாழைமட்டை சோத்தாலடித்த பிண்டங்களான தமிழர்கள் தானே!

விதி வலியது!

murali said...

ஐயா,
உள்ளாட்சி தேர்தல்ல இவங்க செஞ்ச வன்முறைய, ஜனங்க மண்டையிலேர்ந்து மறக்க அடிக்கனும்னு கலைஞர் முடிவு பன்னிட்டார்.அதுக்கு வசதியா மக்களுக்கு
பிராமண எதிர்ப்பு போதை ஊட்டுகிறார்.

திருவாரூர்ல இருந்து ஒரு ஹார்மோனியப் பொட்டியோட மட்டும் வந்தவங்க ( நன்றி திரு எஸ் எஸ் சந்திரன்,எம்.பி )இன்னிக்கி ஆசிய பெரும் கோடீஸ்வரர்களில் ஒருத்தவங்கன்னா, சும்மாவா.ஜனங்கள போதை மருந்துக்கு அடிமை ஆக்கவில்லையென்றால் இதை சாதித்திருக்க முடியுமா என்ன?.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Anonymous said...

Lenin,


The question was set nicely (may be MK suggested) and he answered as per the plan. He is very smart politician.

Anonymous said...

ஏங்க, பதிவுலகிலேயே, இந்த கூத்துக்கள் எல்லாம் நடக்கும் போது, அரசியல் வித்தகர், 60 ஆண்டு போது வாழ்விற்க்கு சொந்தகாரர், அவர போயி சொல்லிக்கிட்டு.....

நாங்க மாநாடு நடத்துவோம், பத்திரிகை பிரசுரம் செய்வோம், அதுக்கு மேல வந்த கூட்டத்தினரை திட்டும் விதமாக சாதியம் பேசுவோம்....நன்றி, வாழ்த்தெல்லாம் எதிர்பார்ப்போம்....இதெல்லாம் இல்லை என்றால் 3% எச்சில் என்று உமிழ்வோம்....எங்க தலைவரப்பத்தி பேச நீ யார்..(note the point: ஆரம்பத்தில் மரியாதையுடன் துவங்கி, முடிவில் நீ-நான் - அவன் என்று முடியும்)....இது தானைய்யா, திராவிடமும், அதன் தலைவர்களூம், தொண்டர்களூம்...