சென்னை வலைப்பதிவு சந்திப்பு நடந்துக்கொண்டிருக்கிறது, அதிலிருந்து சில பிரத்தியோக படங்கள் உங்கள் பார்வைக்கு.
டீ, காப்பி நன்றாக இருந்ததா ? என்ன பேசினார்கள் ?
என்று மற்றவர்கள் எழுதுவார்கள் நம்புகிறேன்.
அன்புடன்,
இட்லிவடை
நண்பர் பாலபாரதி கேட்டு கொண்டதால் படங்கள் எடுக்கப்படுகின்றன.
அவர் அனுமதி அளித்த படம் இங்கே உங்கள் பார்வைக்கு :-)
செய்திகளை முந்தி தருவது தினந்தந்தி இட்லிவடை. இன்றைய செய்தி நாளைய வரலாறு
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, November 19, 2006
சென்னை வலைப்பதிவு சந்திப்பு படங்கள்
Posted by IdlyVadai at 11/19/2006 06:00:00 PM
Labels: அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










40 Comments:
எப்டிய்யா இது ??? நீர் தான் நெஜமாவே ஜேம்ஸ்பாண்ட் 007 :)))
இன்ஸ்டண்ட் காஃபி மாதிரியா? பயங்கர வேகம்தான்..இன்னும் (மணி இப்போது மாலை 6.31) சந்திப்புகூட முடிந்திருக்காதே...!
டோண்டு சார் மட்டும் (சரிதானே) தான் தெரிகிறார் மற்றவர்கள் யார் என ஒரு பட்டியல் கொடுத்திருக்கக்கூடாதா?
நீர் தருவது உண்மையிலேயே சூடான இட்லி வடைதான்.
- சிமுலேஷன்
Good Work.
வந்தவர்கள் எனது நினைவிலிருந்து...
01. பாலபாரதி
02. மா.சிவக்குமார்
03. இராமகி
04. டி.பி.ஆர்
05. சிவஞானம்ஜி
06. எஸ்.கே
07. ஓகை.
08. வரவணையான்
09. லக்கிலுக்
10. சிமுலேஷன்
11. ப்ரியன்
12. அருள்
13. மரபூர்
14. அகிலன்
15. பொன்ஸ்
16. முத்து தமிழினி
17. ப்ரியன்
18. ஜெயசங்கர்
19. சீனு
20. விக்கி
21. வினையூக்கி
....
....
....
மற்றபடி மாறுவேடத்தில் 'இட்லி வடை'யுமென்று நினக்கின்றேன்.
- சிமுலேஷன்
ஐயா உங்க அராஜகத்துக்கு அளவே இல்லையா?!!! ;)
மீட்டிங் முடிந்துவிட்டது :)
பதிவர் எஸ்கேவின் புகைப்படம் கிடைக்கவில்லையா ?
:)
இட்லிவடை அவர்களே. அபாரம். இப்போது நான் பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் படங்களை எனது பதிவிலும் போட எண்ணியுள்ளேன். உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், அதை எனக்கு பின்னூட்டமாக இட்டால் அவற்றை எடுத்து விடுவேன்.
ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் செயல்படுகிறேன். சென்னையில் இருந்தால் என்னுடன் உடனே தொலை பேசவும். என் எண் 9884012948.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதனால் அறியப்படும் உண்மை என்னவென்றால் பாலாதான் இட்லி வடை .ஏதோ நம்மால் ஆனது, கொளுத்திப்போட்டாச்சு:-))
இந்த பதிவை பார்த்த பின் வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட அருளை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன், அப்படியே மற்ற சில வலைப்பதிவு நண்பர்களுடனும் பேசினேன்.... ஆச்சரியம் அப்போது தான் அந்த சந்திப்பே முடிந்திருந்தது.... வெகு வேகமாக செய்தி தந்த இட்லிவடைக்கு நன்றி
நன்றி
என்னுடைய பதிவில் எழுதியது ..
வெளியீடுவதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்
சந்திப்பு நடந்து கொண்டு இருக்கும்போதே இட்லிவடை பதிவில் புகைப்படங்கள் வந்த போது தமிழ் வலைப்பதிவாளர்களின் Sting Operationகள் குறித்து ஆச்சரியப்பட்டாலும் தன்னுடைய identity தெரியவேண்டாம் என்று இட்லிவடை எவ்வளவு விரும்புகிறாரோ அதுபோல தங்கள் அடையாளங்களை நேரில் பார்ப்பவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்த விரும்பாத மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
I guess, i'm not too harsh. ;)
-- Vicky
விக்கி: //தன்னுடைய identity தெரியவேண்டாம் என்று இட்லிவடை எவ்வளவு விரும்புகிறாரோ அதுபோல தங்கள் அடையாளங்களை நேரில் பார்ப்பவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்த விரும்பாத மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். //
ரிப்பீட்டே!
பல பதிவர்கள் தங்கள் முகம் காட்ட விரும்பாத நிலையில்.., அனுமதியின்றி அவர்களின் படங்களை எப்படி வலையேற்றலாம். நகைச்சுவை உணர்வு மிக்க தங்களின் இச்செயல் வருத்தத்தை அளிக்கிறது.
விரும்பாதவர்களை எந்த வித சங்கடங்களுக்குள்ளும் நாம் அட்படுத்தினால் எதிர்காலத்தில், வெறும் போண்டா சாப்பிடும் தமிழ்பதிவர்களின் கூட்டங்கள் மட்டுமே நடைபெறும்.
தயவு செய்து இந்த படங்களை பதிவில் இருந்து நீக்குங்கள்.
உஷா,
//இதனால் அறியப்படும் உண்மை என்னவென்றால் பாலா தான் இட்லி வடை. ஏதோ நம்மால் ஆனது, கொளுத்திப்போட்டாச்சு:-))
//
பாஸ்டன் பாலா இப்ப சென்னையிலா இருக்காரு ???? சொல்லவே இல்ல !!!
எ.அ.பாலா
தங்களின் கண்ணியத்திற்கு நன்றிகள்.
அனும் அனுமதியோடு எடுக்கப்பட்டப்படம் தங்களுக்கு தனி மெயிலில் வருகிறது.
அவசியம் எனில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி!!
பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள். அடுத்த சந்திப்பில் பார்க்கலாம் :-)
என்னது அடுத்த சந்திப்பிலா..?
:-(((((((((((
நீங்க வந்தா.. நாளையே அடுத்த சந்திப்பை ஏற்பாடு செய்துடலாம்.
// பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்
அந்த Listல் நானும் உண்டா ;-)
// அடுத்த சந்திப்பில் பார்க்கலாம் :-)
Thts traditional Idlyvadai punch :-)
பாலபாரதி - குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்திருப்பதால யோசிக்க வேண்டிய விஷயம் :-).
உண்மையில் மற்றவரின் அனுமதியில்லாமல் போட்டோவை போட்டது தவறுதான், முதலில் மற்றவரிடம் அனுமதியை கேட்டிருக்கவேண்டும், அல்லது கருத்தையாவது அறிந்திருக்கவேண்டும், மற்றவரின் கண்ணியத்தையும் மதிக்கப்பழகவேண்டும், அதை மதித்து ஏற்றுகொண்ட இட்லிவடையும் உயர்ந்தவர்தான்.
//விரும்பாதவர்களை எந்த வித சங்கடங்களுக்குள்ளும் நாம் அட்படுத்தினால் எதிர்காலத்தில், வெறும் போண்டா சாப்பிடும் தமிழ்பதிவர்களின் கூட்டங்கள் மட்டுமே நடைபெறும்.
//
போண்டா சாப்பிடும் கூட்டங்களில் உருப்படியாக ஒன்றும் நிகழ்வதில்லை என்ற வகையில் பேசுவது நன்றாக இல்லை ! நான் (ரோசா, பெனாத்தல், ஐகாரஸ், நாராயணன் ...) கலந்து கொண்ட ஒரு "போண்டா" சந்திப்பு, was really worthwhile !
//பாலபாரதி - குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்திருப்பதால யோசிக்க வேண்டிய விஷயம் :-).//
:-))))))))
எ.அ. பாலா, அவர் பாபா நீங்க பாலா :-)
திரு.விக்கி, பொன்ஸ் மற்றும் பாலபாரதிக்கு, முகம் காட்டுவதில் விருப்பம் இல்லாத பதிவர்கள் என்று ஏன் சொல்கின்றார்கள் என்று தெரியவில்லையே? எல்லாம் தான் எழுதுகின்றீர்கள்,நாம் ஒன்றும் சினிமா ஸ்டார் எல்லாம் இல்லையே? புகைப்படம் இட்டால் என்ன தவறு? பெண்கள் என்றால் கூட புகைப்படத்தினை ஏதேனும் தவறாகப்ப்பயன்படுத்துவார்கள் என்று பயப்படலாம், இப்போது அதுவும் குறைந்து வருகின்றது, முகத்தினைக்க்காட்டுவதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை இட்லி வடை...
இது என் சொந்தக்கருத்தே.
ஸ்ரீஷிவ்..
உஷா,
//எ.அ. பாலா, அவர் பாபா நீங்க பாலா :-)
//
அப்டியா சேதி ;-)
ஏதோ திட்டத்தோட இருக்கீங்கன்னு பட்சி சொல்லுது !
நுனிப்புல் மேயாதீங்க, மேடம் :)))
எ.அ.பாலா
வலைப்பதிவுக் கூட்டத்தின் மீதான பார்வையை இப்படி இட்லி-வடை மீது ஹைஜாக் செய்து கொண்டது நியாயமா?
விக்கியின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். இது உண்மையிலேயே வியப்பளிக்கக் கூடிய விரைவுச் செயல் என்றாலும் மற்றவர்களைப் போல வியக்கவும் பாராட்டவும் முடியவில்லை. தன்னுடைய அடையாளம் வெளியே தெரியக் கூடாது. ஆனால் அடுத்தவர் அடையாளங்களோடு விளையாடுவேன் என்பது நல்ல கருத்தாகத் தெரியவில்லை. இட்லி வடை, இந்தக் கருத்தோடு உங்களுக்கு ஏற்புண்டோ இல்லையோ...சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். யெஸ்பா கேட்டுக் கொண்டதற்கிணங்க புகைப்படங்களை எடுத்தமைக்கு நன்றி.
//திரு.விக்கி, பொன்ஸ் மற்றும் பாலபாரதிக்கு, முகம் காட்டுவதில் விருப்பம் இல்லாத பதிவர்கள் என்று ஏன் சொல்கின்றார்கள் என்று தெரியவில்லையே? எல்லாம் தான் எழுதுகின்றீர்கள்,நாம் ஒன்றும் சினிமா ஸ்டார் எல்லாம் இல்லையே? புகைப்படம் இட்டால் என்ன தவறு? பெண்கள் என்றால் கூட புகைப்படத்தினை ஏதேனும் தவறாகப்ப்பயன்படுத்துவார்கள் என்று பயப்படலாம், இப்போது அதுவும் குறைந்து வருகின்றது, முகத்தினைக்க்காட்டுவதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை இட்லி வடை...
இது என் சொந்தக்கருத்தே.
ஸ்ரீஷிவ்..//
ஸ்ரீஷிவ், நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை என்ற போதும், இந்தப் பிரச்சனை அதுவல்ல என்பதால் இங்கே இதை விவாதிக்க விருப்பமில்லை. தேவை எனத் தோன்றினால், தனிப் பதிவிடுங்கள். இது பற்றி அங்கு பேசுவோம்.
அனுமதியின்றி போட்டுவிட்டு, அதற்கு வோட்டளிப்பு நடத்துவதில் இருந்து தெரிகிறது உமது யோக்கியதை.
இட்லிவடையாரே உங்கள் அடையாளத்தை வெளிபடுத்தாமல் இருப்பது உங்கள் உரிமை, அதே உரிமை மற்றவருக்கும் உண்டு என்பதை ஏன் மறந்தீர்கள். இது உமக்கு தவறென்று புரியவில்லையா? சரி புரிந்ததோ புரியவில்லைய்யோ, எஸ் பாரதி சொன்னவுடன் போட்டோக்களை நீக்கிவிட்டீர்கள், அத்தோடு முடிந்தது பிரச்சினை.
குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள், நீங்கள் செய்தது தவிறில்லை என்றால், உங்கள் நெஞ்சில் தாழ்வமுக்கம் ஏற்பட்டிராது, அப்போதே புரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு புரியவில்லை என்பது நீங்கள் நடத்தும் வோட்டளிப்பின் மூலம் தெரிகிறது. தப்பை பத்துபேர் சரி என்று சொன்னால் தப்பு சரியாகிவிடாது.
பெண்களின் படத்தை போட்டது அதைவிட தவறானவிடயம், இந்த ஆண் ஆதிக்கசமூகத்தில் இருந்து ஒரு பெண் வலைபதிக்க வருவதே பெரியவிடயம், எந்த கருத்துக்கும் எதிர்புடையவர்கள் இருப்பார்கள், அவர்களது எதிர்கருத்துடைய அனானிகளின் கைகளில் இந்த பெண்களின் போட்டோக்கள் கிடைத்தால் அவர்களது நிலை என்ன?
எமது நடிகைகளின் போட்டோக்கள் இணையத்தில் படும்பாடுகள் நீங்கள் அறியாதது அல்ல.
இது எனது கருத்து மட்டுமே, இத ஏற்பது மறுப்பது உங்கள் பொறுப்பு.
Anonymous -
//குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள், நீங்கள் செய்தது தவிறில்லை என்றால், உங்கள் நெஞ்சில் தாழ்வமுக்கம் ஏற்பட்டிராது, அப்போதே புரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு புரியவில்லை என்பது நீங்கள் நடத்தும் வோட்டளிப்பின் மூலம் தெரிகிறது. தப்பை பத்துபேர் சரி என்று சொன்னால் தப்பு சரியாகிவிடாது.//
இந்த மாதிரி எல்லாம் நான் யோசிக்கவில்லை :-).
//பெண்களின் படத்தை போட்டது அதைவிட தவறானவிடயம், இந்த ஆண் ஆதிக்கசமூகத்தில் இருந்து ஒரு பெண் வலைபதிக்க வருவதே பெரியவிடயம், எந்த கருத்துக்கும் எதிர்புடையவர்கள் இருப்பார்கள், அவர்களது எதிர்கருத்துடைய அனானிகளின் கைகளில் இந்த பெண்களின் போட்டோக்கள் கிடைத்தால் அவர்களது நிலை என்ன?//
இந்த வளர்ச்சிக்கு காரணம் யார் ?
//இது எனது கருத்து மட்டுமே, இத ஏற்பது மறுப்பது உங்கள் பொறுப்பு.//
உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். ( நீங்கள் யாராக இருந்தாலும் )
Anonymous - I have not approved your comment as you have mentioned some people names directly. If you wish you can repost your comment without names.
anbudan,
IdlyVadai
படங்களை எடுக்க கையாண்ட முறையிலும் அதை வெளிட்டதிலும் தவறு இருப்பதாகவே எனக்குப் படுகிறது. படங்களை நீக்கியதன் மூலம் பெருமளாவுக்கு சரி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களின் இந்த செய்கை இது போன்ற நிகழ்வுகளுக்கு வருவதற்கு சிலரை யோசிக்க வைக்கும். இது தீமை. நன்மையாக எதையும் என்னால் யோசிக்க முடியவில்லை.
யெஸ்.பாலபாரதி said...
பல பதிவர்கள் தங்கள் முகம் காட்ட விரும்பாத நிலையில்.., அனுமதியின்றி அவர்களின் படங்களை எப்படி வலையேற்றலாம். நகைச்சுவை உணர்வு மிக்க தங்களின் இச்செயல் வருத்தத்தை அளிக்கிறது.
விரும்பாதவர்களை எந்த வித சங்கடங்களுக்குள்ளும் நாம் அட்படுத்தினால் எதிர்காலத்தில், வெறும் போண்டா சாப்பிடும் தமிழ்பதிவர்களின் கூட்டங்கள் மட்டுமே நடைபெறும்.
தயவு செய்து இந்த படங்களை பதிவில் இருந்து நீக்குங்கள்.
இதில் என்ன தறு இருக்கிறது ஓகை ஆவர்களே.
Flash News என்றால் இட்லிவடை. இடலிவடை என்றால் Flash News .. இது எழுதப்பாடத விதி..
அவர்தான் அந்த படங்களை எடுத்துவிட்டாரே..?!
விடுங்கப்பா அவரைப் போய் ..
- Common Man
Anonymous said...
Flash News என்றால் இட்லிவடை. இடலிவடை என்றால் Flash News .. இது எழுதப்பாடத விதி..
அவர்தான் அந்த படங்களை எடுத்துவிட்டாரே..?!
விடுங்கப்பா அவரைப் போய் ..
- Common Man
எடுத்ததோடு விட்டிருந்தால் முடிந்திருக்கும் பிரச்சினை, அவர்தான் சரியா தறா என்று வாகளிப்பு நடத்துறாரே.
ஜெயமாலினி பதிவை போட்டு தறில்லை என்று சொல்கிறாரே.
இ.வயாரே,
நீங்க பண்ணது பெரிய தப்புங்க...
உங்க பேரையே தெரியப்படுத்த விரும்பாத நீங்க அடுத்தவங்க புகைப்படத்தை வெளியிட்டது.
(சரி பேர் போட்டவங்க வெளியிடலாமானு கேட்டா அதுவும் தப்புதான்)
இனிமே சுடசுட செய்தி தரோம்னு நினைச்சிட்டு அடுத்தவங்க அந்தரங்கத்தில் தலையிட வேண்டாம்...
உங்களோட இந்த செயல் மத்த வலைப்பதிவர்கள் மேல் ஒரு நம்பிக்கையின்மையை உருவாக்கும் :-(
அடுத்த தடவை ஒருத்தர ஒருத்தர் பார்க்கும் போது இவர் தான் இட்லி வடையானு சந்தேகம் வரும்...
Please avoid these kind of activities. hope u can understand. (Hope ur next post will be a mirror :-))
*******************
//விரும்பாதவர்களை எந்த வித சங்கடங்களுக்குள்ளும் நாம் அட்படுத்தினால் எதிர்காலத்தில், வெறும் போண்டா சாப்பிடும் தமிழ்பதிவர்களின் கூட்டங்கள் மட்டுமே நடைபெறும்.
//
போண்டா சாப்பிடும் கூட்டங்களில் உருப்படியாக ஒன்றும் நிகழ்வதில்லை என்ற வகையில் பேசுவது நன்றாக இல்லை ! நான் (ரோசா, பெனாத்தல், ஐகாரஸ், நாராயணன் ...) கலந்து கொண்ட ஒரு "போண்டா" சந்திப்பு, was really worthwhile !
**************
எதற்கு இம்மாதிரி கமெண்டுக்கு எல்லாம் பதில் கொடுக்கணும் பாலா ?
இவங்க போடற 'கூட்டம்' தவிர மத்தது எல்லாம் 'போண்டா' கூட்டம் ... இதான் அவிங்க நினைப்பு போல இருக்கு ;)
// நான் (ரோசா, பெனாத்தல், ஐகாரஸ், நாராயணன் ...) கலந்து கொண்ட ஒரு "போண்டா" சந்திப்பு, was really worthwhile !
//
எ.அ. பாலா,
அதனால் தான் வழக்கமான கூட்டங்கள் போல்,வெளிப்படையாக அறிவிக்காமல், தனிமடல்/தொலைபேசிகளில் private ஆகக் வேண்டியவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து கூட்டப்பட்டதோ அந்தச் சந்திப்பு?
Post a Comment