பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 13, 2006

காளிமுத்து - ஜெ அறிக்கை (அ) கலைஞருக்கு பதில்)

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து இறைவன் அடி சேர்ந்து ஐந்து நாட்களில் அவரை வைத்து அரசியல் பண்ண தொடங்கிவிட்டார்கள். நேற்று கலைஞர் அறிக்கையை தொடர்ந்து ஜெ இன்று அதற்கு பதில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
காளிமுத்து ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
ஜெ அறிக்கை ..


அரசு பேரூந்துகளில் தொன்மையும், உண்மையும் வாய்ந்த திருக்குறளை அழித்து விட்டு கருணாநிதியின் எழுத்துக்களை ஏன் பொன் மொழிகள் என்ற பெயரில் எழுதுகிறீர்கள்ப இது ஒரு வரலாற்று பிழையாக இருக்கிறதேப ஒட்டு மொத்த தமிழ்ச்சமுதாயத்தையே சிறுமைப்படுத்தும் செயலாக இருக்கிறதே என்று அறிக்கை ஒன்று நான் வெளியிட்டிருந்தேன்.

அந்த அறிக்கைக்கு பதில் தராமல் திருவள்ளூவரை விட தானே உயர்ந்தவர் என்பது போன்று இன்னொரு அறிக்கை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். திருக்குறளை விடுத்து ஏன் உங்கள் எழுத்துக்களை பேரூந்துகளில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் திசை மாற்றும் முயற்சியாக வேறு ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.

"சட்டமன்றத்திற்கு நான் போகவில்லை என்றாலும், சட்டமன்ற நடவடிக்கைகளில் அன்றாடம் சொல்லப்படுகின்ற திருக்குறளில் என்ன குறளை அவைத்தலைவர் காளிமுத்து சொல்லுகிறார் என்று பார்ப்பேன். பெரும்பாலும் குறளுக்காக உரை என்னுடைய உரையாகவே இருக்கும்'' என்றும், இது தொடர்ந்து நிகழ்ந்து வந்த ஒன்று என்றும், அது எனக்கு தெரியவந்த போது அன்புச்சகோதரர் காளிமுத்துவை நான் மிரட்டியதாகச் சொல்லி இருக்கிறார் கருணாநிதி.

காளிமுத்து தி.மு.க.விற்கு சென்ற நிலையிலும், என்னைப்பற்றியும், என் தாயாரைப்பற்றியும் இழிவுப்படுத்திப் பேசியப்போதும், பற்றும் மாறாத பாசமும் கொண்டிருந்தேன். இது என் மனச்சாட்சிக்குத்தெரியும். அந்த கடவுளுக்குத்தெரியும். என்றைக்குமே காளிமுத்து வின் அத்தகைய பேச்சுகளுக்கும், எழுத்துக்களுக்கும் நான் பதில் சொன்னதே இல்லை.

அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்து முழு மருத்துவச்செலவையும் நானே ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னர் காளிமுத்து பூரண குணம் அடைந்து பின்னர் நடைபெற்ற பொதுக்குழுவில் "என் உயிரை காப்பாற்றிய தாய்'' என்று எனக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க நிகழ்த்திய உரையை நாடு அறியும்.

காளிமுத்துவின் தமிழ்ப்பேச்சை பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் சட்டப்பேரவைத் தலைவர் ஆன பிறகு நான் கலந்து கொண்ட அரசு விழாக்களில் அவரை தலைமையேற்கச் செய்து, அவரது உரைகளைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஏன் இன்னும் ஒரு படிமேலாக அவரை என்னுடைய அண்ணனாக மதித்திருக்கிறேன்.

இந்த நிலையில் கருணாநிதி எழுதிய திருக்குறள் உரை நூலை காளிமுத்து வாசித்ததற்காக நான் அவரை மிரட்டியதாக சொல்லுவது முழு கற்பனையாக இருக்கிறது.

காளிமுத்துவின் மன அழுத்தத்திற்கு தானே காரணம் என்ற பழி தன் மீது வந்துவிடுமோ என்று பயந்து அவருடைய நட்பைப்பற்றி புகழ்ந்துரைத்திருக்கிறார். நட்பைப்பற்றிப்பெருமை பேசும் இவர், உடல் நலம்தேறி வந்த நிலையில், காளிமுத்து மீது பொய்வழக்குப்போட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். மதுரையில் இருந்த போது, அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கட்டாயமாக சென்னைக்கு வந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அலுவலகத்தில் தினசரி கையெழுத்திடச் செய்ததன் மூலம்தான் காளிமுத்து மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி மரணமடைந்தார் என்பதை நாடு அறியும்..

1 Comment:

Karthikeyan Muthurajan said...

நல்ல அரசியல் விளையாட்டுக்கள்..