பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 27, 2006

வைகோ உண்ணாவிரதம்

இலங்கை அதிபர் ராஜ பக்சே 5 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள் ( ராமதாஸ் வீட்டுக்கு முன் கருப்பு கொடி பறக்கவிட்டார்).

இன்று வைகோ தன்பங்கிற்கு டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதில்
ம.தி.மு.க. எம்.பி.க்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கிருஷ்ணன், ரவிசந்திரன் மற்றும் ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் பி.ஜி. நாராயணன், தினகரன், மலைச்சாமி ஆகியோர் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா மற்றும் அமர்சிங் ஆகியோரும் நேரில் வாழ்த்தினார்கள்.

வைகோ நிருபர்களிடம் கூறியதாவது

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அமைதி பேச்சு வார்த்தையையும் இலங்கை அரசு மீறுகிறது.

இதை மத்திய அரசு இலங்கை அதிபரிடம் எடுத்துச் சொல்லி, இலங்கை ராணுவத்தில் மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்.

1 Comment:

Hariharan # 26491540 said...

மொதல்ல தமிழீழ மக்கள் உயிர்வாழ அவசியமான பொருட்களை எடுத்துச்செல்ல ஏ-9 சாலையைத் திறக்கச் சொல்லி வலியுறுத்துங்க வைகோ மற்றும் ராமதாசு!

இலங்கையில் இன்ன பிற உரிமைகளைப் பெற முதலில் உயிரோடு இருந்தாகவேண்டும் ஐயா!

அதற்கு ஏ-9 சாலையை உடனடியாக திறக்க வற்புறுத்துங்கள். இனி இலங்கை இராணுவம்/அரசு இம்மாதிரி சாலை மூடுதல்கள் செய்யாமல் இருக்க அறிவுறுத்துங்கள் அறிவக/அறிவாலய/தாயக ஆசாமிகளா!