பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 17, 2006

கேப்டன் பற்றி திருமா

திருமாவின் அறிக்கை:

* பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்பட 4 பஞ்சாயத்துகளிலும் சிக்கல் இல்லாமல் தேர்தலை நடத்தி முதல்-அமைச்சர் கருணாநிதி வெற்றி கண்டுள்ளார். அவரது மனதில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த பஞ்சாயத்துகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் காரணம். அரசு நினைத்தால் எவ்வளவு கடினமான, சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதற்கு இவைகள் சாட்சி.

* இலங்கை தமிழ் மக்களை கருணாநிதி எதிராக பார்க்கவில்லை. ஆனால் விடுதலைபுலிகளுக்கும் கருணாநிதிக்கும் இடையே ஏதோ கசப்பு இருக்கிறது என்பதை ஏடுகள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. ஈழ தமிழர்கள் விசயத்தில் கருணாநிதியிடம் எதை எதிர்பார்த்தோமோ அதை சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய அரசாங்கத்தை அவரால் நேரடியாக இயக்க முடியும். மத்திய அரசுக்கு வழிகாட்டும் வலிமையை அவர் பெற்றுள்ளார். இந்திய அரசு தலையிட்டு இலங்கை தமிழர்களை காப்பாற்ற கருணாநிதி முயற்சித்தால் நிச்சயம் நடக்கும்.

* குறிப்பிட்ட ஒரு சமுதாய கட்சி என்று தி.மு.க. மீது யாரும் முத்திரை குத்த முடியாது. குறிப்பிட்ட சாதிக்கான கட்சி அல்லது குறிப்பிட்ட சாதிக்கா ரர்கள் அதிகாரம் செலுத்தும் கட்சி என்ற பெயர் தி.மு.க. ஆட்சிக்கு ஒரு போதும் ஏற்படாது.

* கடந்த சட்டசபை தேர்தலில் எங்கள் வாக்குகள் விஜயகாந்த் கட்சிக்கு போகவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் ஓரம் கட்டப்பட்டவர்கள் அவரது கட்சியில் சேர்ந்துள்ளார்கள். பண்ருட்டி ராமச்சந்திரனில் இருந்து சமீபத்தில் சேர்ந்த பொன்னுசாமி வரை அப்படித்தான்.

* கட்சி நடத்த முடியாதவர்கள், நாளு பேரை வைத்து மேய்க்க முடியாமல் செயலிழந்து போனவர்கள், அரசியலில் விணாய் போனவர்கள் இப்போது விஜயகாந்திடம் சேர்ந்து இருக்கிறார்கள்.

* விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பொறுப்பில் இருந்தவர்கள் விலகி சேர்ந்தார்கள் என்று நிரூபிக்க முடியுமா?

( விஜயாந்த் திமுகாவில் கொஞ்சம் நாள் கழித்து சேர்ந்தால் என்ன நடக்கும் ?)

2 Comments:

சிநேகிதன் said...

//* பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்பட 4 பஞ்சாயத்துகளிலும் சிக்கல் இல்லாமல் தேர்தலை நடத்தி முதல்-அமைச்சர் கருணாநிதி வெற்றி கண்டுள்ளார். அவரது மனதில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த பஞ்சாயத்துகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் காரணம். அரசு நினைத்தால் எவ்வளவு கடினமான, சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதற்கு இவைகள் சாட்சி.//

அப்போ நீங்கள் இவ்வளவு பெரிய அமைப்பாக இருந்தும் அங்குள்ள தலித் மக்களுக்கு துணையாக இருந்து தேர்தலை சந்திக்க தைரியம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா திருமா?.

சிறுத்தை என்ற பெயர் அமைப்புக்கு மட்டும் இருந்தால் பத்தாது அதை செயலில் காட்டி சென்ற முறையே அங்கு தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். ஒரு சிறிய கிராமத்தில் உள்ள தலித் பிரச்சனையையே சமாளிக்க முடியவில்லை, நீங்கள் எப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு தலித் பிரச்சனையை சமாளிக்க போகிறீர்கள்?.

சரியான கோமாளி அய்யா நீங்கள்.

நீங்கள் உங்கள் அமைப்பின் பெயரை "விடுதலைக் கோமாளிகள்" என்று மாற்றிவைத்துக்கொள்ளலாம்.

வெங்கட்ராமன் said...

/***********************************
குறிப்பிட்ட சாதிக்கா ரர்கள் அதிகாரம் செலுத்தும் கட்சி என்ற பெயர் தி.மு.க. ஆட்சிக்கு ஒரு போதும் ஏற்படாது.
***********************************/

ஒரு குறிப்பிட்ட குடும்பம் தானே அதிகாரம் செலுத்துகிறது. பிறகு எப்படி
குறிப்பிட்ட சாதிக்கா ரர்கள் அதிகாரம் செலுத்தும் கட்சி என்ற பெயர் ஏற்படும்.

(இந்த பின்னூட்டத்தை வெளியிடுவதும் மறுப்பதும் இட்லி வடை யாரின் விருப்பம்)