பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 14, 2006

தவறு இல்லை


[ ஹேமமாலினி ஆண்டி சொல்லிட்டாங்க, இப்போ என்ன பண்ணுவீங்க ? ]


நடிகைகள் தங்கள் அழகை காப்பாற்றிக்கொள்ள எவ்வளவோ சிரமப்படுகிறார்கள். உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு, கஷ்டப்பட்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு சாதித்த அழகை வெளிக்காட்டுவதில் தவறு ஏதும் இல்லை. அழகு என்பது, அடுத்தவர்கள் பார்த்து பாராட்டத்தானே? ஒரு நடிகைக்கு அழகான உடல் அமைப்புடன் கூடிய பிகர் இருக்குமானால், அதை வெளிக்காட்டுவதில் என்ன தவறு?

தடியான உடல் அமைப்புடன் கூடிய நடிகைகள், கவர்ச்சி என்ற பெயரில் உடலை காட்டினால் யார் பார்த்து ரசிப்பார்கள்? எனவே அழகான நடிகைகள் சினிமாவில் கவர்ச்சியை காட்டுவது தவறு அல்ல.

எனக்கு அழகு என்பது, இறைவன் தந்த பரிசு. நான் அதை ஜாக்கிரதையாக காப்பாற்றி வருகிறேன். தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றுக்காக 2 மணி நேரம் செலவிடுகிறேன்.

உடற்பயிற்சியால், தெளிவான சிந்தனை கிடைக்கிறது. திறந்த மனதுடன் இருப்பதன் மூலம், அழகை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நடிகை ஹேமமாலினி கூறினார்.

11 Comments:

Karthikeyan Muthurajan said...

அட அட அடடே.. இதுவல்லவோ விளக்கம்

TAMIZI said...

அப்படியே அந்த கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று சொல்லிவிட்டால்,தமிழ் ரசிகர்கள் புளாங்கிதம் அடைவார்கள்.

Cervantes said...

"ஹேமமாலினி ஆண்டி சொல்லிட்டாங்க, இப்போ என்ன பண்ணுவீங்க ?"

சந்தோஷமா ரசிப்போம் அவ்ளோதான். ஹேமமாலினி வாழ்க.

கிருஷ்ணன்

ஆசிப் மீரான் said...

இட்லி அண்ணாச்சி,

நாலு பேருக்கு **நல்லது** செஞ்சா எதுவுமே தப்பில்லன்னு சொல்லியிருக்காங்க. நல்லா இருங்கடே!!

சாத்தான்குளத்தான்

c.m.haniff said...

"திறந்த மனதுடன் இருப்பதன் மூலம், அழகை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நடிகை ஹேமமாலினி கூறினார்"- Ithai thappa kandu pidichittanga nayan ;)

நாமக்கல் சிபி said...

//அப்படியே அந்த கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று சொல்லிவிட்டால்,தமிழ் ரசிகர்கள் புளாங்கிதம் அடைவார்கள்.
//

அதான் நம்ம ஜொள்ளுப் பாண்டி ஒரு பதிவே போட்டிருக்காரே!

நாமக்கல் சிபி said...

அதெல்லாம் சரி இட்லி வடையாரே!

இந்தப் பதிவுக்கு நயன்தாரா படம்தான் கிடைத்ததா?

:-x

IdlyVadai said...

//இந்தப் பதிவுக்கு நயன்தாரா படம்தான் கிடைத்ததா?// இவர் தான் இப்போ என் favourite :-)

உங்கள் நண்பன் said...

IdlyVadai said...

// இவர் தான் இப்போ என் favourite :-) //

ஹலோ! யாரு சிம்புவா பேசுறது? இங்க கொஞ்சம் வந்துட்டுப் போ ராசா!
இங்க ஒருத்தர் நம்ம ஆளை(?!) டாவடிக்கிறார்!


அன்புடன்...
சரவணன்.

Cervantes said...

இது என்ன கொடுமை சரவணன்?

கிருஷ்ணன்

ஆவி அம்மணி said...

//ஹலோ! யாரு சிம்புவா பேசுறது? இங்க கொஞ்சம் வந்துட்டுப் போ ராசா!
இங்க ஒருத்தர் நம்ம ஆளை(?!) டாவடிக்கிறார்!
//

சிபி சொல்லியே கேட்களை! சிம்பு சொல்லித்தான் கேக்கப்போறாரோ?