பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 13, 2006

காளிமுத்து - கலைஞர் அறிக்கை

என்னை அண்ணனாக ஏற்று மறைமுக அன்பு செலுத்தியவர் காளிமுத்து என்று நினைவு கூறுகிறார் கலைஞர். ( நன்றி தினத்தந்தி )

வளமான தமிழ்ப் புலமை

வற்றாத கற்பனையும், வளமான தமிழ்ப் புலமையும் கொண்ட தம்பி காளிமுத்து மறைந்துவிட்டார். நமக்கு எதிர்வரிசைக்கு சென்றார். இயற்கை எய்தினார் என்பதற்காக; மனிதநேயம் மறந்தோமில்லை. மறுகணமே இரங்கற் செய்தி வெளியிட்டோம்.

அரசியல் கட்சிகளிடையே இந்தப் பண்பாடு நிலைத்திட வேண்டும் என்று தான் நடுநிலையாளர்கள், நல்லோர் அனைவருமே தமிழகத்தில் விரும்புகின்றனர். நிலைத்திருக்கிறது நம்மிடையே அந்தப் பண்பாடு என்பதினால்தான் நினைத்திருக்கிறோம் இன்னமும்; அவர்களுக்கும் நமக்குமிடையே இருந்த நட்புணர்வை; தோழமையை; அதன் விளைவுதான் தம்பி காளிமுத்துவின் மறைவுக்காக நான் விடுத்த இரங்கல் அறிக்கை!

என் எழுத்து மீது காதல்

என்னிடமும், என் எழுத்துகளின் மீதும் காளிமுத்து கொண்டிருந்த `காதல்' அளவிட முடியாதது என்பேன். 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிறார். அப்போது சபாநாயகராகப் பதவிப் பொறுப்பு தம்பி காளிமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி தொடங்கிய பிறகு ஒவ்வொரு நாளும் காலையில் பேரவை கூடும் பொழுது; சபாநாயகர், ஒரு திருக்குறளைப் படித்து அவையில் அதற்குப் பொருளும் கூறுவார்.

என்னைப் பொருத்தவரையில் நான் அப்போது சட்டப்பேரவைக்குப் போவதில்லை. இருந்தாலும் ஒரு ஆசை - ஒவ்வொரு நாளும் அவைத் தலைவர் காளிமுத்து எந்த குறள் உரையைப் படிக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஆசை! அதைத் தெரிந்து கொள்வதற்காக அவையில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சிகள் பற்றிய விவரக் குறிப்புகளை நமது சட்டமன்ற உறுப்பினர் மூலம் கொண்டு வரச் சொல்லிப் படிக்கத் தொடங்கினேன்.

குறளுக்கு பொருள் விளக்கம்

அவைத் தலைவராக காளிமுத்து வீற்றிருந்த அந்த ஐந்தாண்டு காலத்தில் மிகப் பெரும்பகுதி நாட்களில் அவர் என் குறள் உரையை படித்துத் தான் அவையில் பொருள் விளக்கம் தந்திருக்கிறார்.

``கருணாநிதி, குறளுக்கு எழுதிய உரையைத் தான் பேரவையில் நாள்தோறும் சபாநாயகர் காளிமுத்து படிக்கிறார் என்பது எப்படியோ ஜெயலலிதாவுக்குத் தெரிந்து அவர் காளிமுத்துவை அழைத்து மிரட்டிய பிறகு, ஜெயலலிதா ஆட்சி முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரையில் அதாவது 2005-ம் ஆண்டு வரையில் காளிமுத்து `கலைஞர் உரை'யாம் என்னுரையை பயன்படுத்துவதை சில மாதங்கள் மட்டுமே நிறுத்திக் கொண்டார். இதுதான் நடந்த உண்மை.

அனுதாப செய்தி

தம்பி காளிமுத்து சபாநாயகராக இருந்த பேரவையில் விளக்கமë அளித்தது இந்த உரைதான். அதனால்தான் என் தமிழë மீதும், இலக்கிய ஆய்வின் மீதும் காதல் கொண்டவர் காளிமுத்து என்று சொன்னேன்- இப்போதும் சொல்கிறேன்.

மறைந்தவர்களின் குறை தவிர்த்து நிறையைப் போற்றுவதே மனித நேயப் பண்பு. அந்த பண்பினை நமது பண்பாளர் பழனிவேல்ராஜன் மறைநëத போதும், கண்மணி முரசொலி மாறன் மறைந்த போதும் ஒரு வரி அனுதாப செய்திகூட வெளியிட மறந்த அ.தி.மு.க. நண்பர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாததுதான்.

பண்பு

நாம் கட்டிகë காக்கும் அந்தப் பண்பை உணர்த்திட தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்த தம்பி காளிமுத்துவின் மூச்சல்லவா அடங்கியிருக்கிறது. அந்தோ; அந்தத் தமிழ் மூச்சு நின்றுவிட்டதே! மானசீகமாக என்னை அண்ணனாக ஏற்று மறைமுக அன்பு செலுத்திய அந்த மரகத மணிச் சுடர் மண்ணில் புதைந்து போனதே

0 Comments: