பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 12, 2006

பதிப்பகங்களும் நூலகங்களும்

இன்றைய தினமணி செய்தியில் - தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுபவர் முதல்வர் கருணாநிதி. கடந்த ஆட்சியில் எழுத்தாளர்களின் படைப்புகளை நூலகங்களுக்கு 750 படிகள் பெற அனுமதி இருந்தது. அதை 1000 படிகளாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நூலகங்களுக்குத் தேர்வு செய்ய விரைவில் குழு அமைக்கப்படுமென பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதாக வந்துள்ளது.

இன்று பல பதிப்பகங்கள் உங்களையும், என்னையே நம்பி இல்லை. அவை பல நூலகங்களை நம்பியே இருக்கிறது. 1200 பிரதிகள் ஒரு பதிப்பு. இதில் 50-60% நூலகங்க ஆர்டர்கள். மீதம் உள்ள 30-40% பிரதிகள் புத்தக கண்காட்சிகளில் விற்பனை ஆகிறது. 10% காம்பிளிமெண்டரி காப்பிகள்.

நூலகங்கள் இந்த புத்தகங்களை ஆர்டர் செய்யவில்லை என்றால் ஒரு பதிப்பில் 50% பதிப்பகத்தார் கொடவுன்களில் தங்கிவிடுகிறது. தெரியாத எழுதாளர் என்றால், அந்த பதிப்பில் காம்பிளிமெண்டரி பிரதிகள் போக, மீதம் உள்ள எல்லாம் கொடவுனில் தான் இருக்கிறது.

நூலகங்கள் ஒரு பதிப்பகத்தாரிடம் இவ்வளவு தான் வாங்கலாம் என்று சில விதிமுறை இருக்கிறது. அதனால் தான் ஒரே பதிப்பகம் நடத்துபவர்கள் வேறு சில பெயர்களிலும் பதிப்பகம் நடத்துகிறார்கள். முதல் பதிப்பில் வந்த புத்தகத்தை அடுத்த பதிப்பில் அட்டையும், தலைப்பையும் மாற்றி அடுத்த ஆர்டர்களுக்காக அனுப்பிவைக்கிறார்கள். நூலகங்கள் எப்படி நூல்களை தேர்வு செய்கிறார்கள் என்று ஆராய்ந்தால், உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.

1 Comment:

Karthikeyan Muthurajan said...

இட்லிவடை, தமிழ் வளர்சிக்காகத் தான் கலைஞர் பாடுபடுகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக தமிழில் பெயர் வைத்தல் வரிவிலக்கு என்று சொன்னதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. தனக்கு பாராட்டுவிழ வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்ய வேண்டுமா என்ன..