* அஸினிடம் நான்கு செல்ஃபோன்கள் இருக்கின்றன. தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று தனித்தனியே வைத்திருக்கிறார். இது தவிர பர்சனல் போன் ஒன்று. இவருக்கு போன் செய்தால் எடுத்துப் பேசுவது இவரது அப்பா.
* கமலிடம் ஒரே ஒரு செல்ஃபோன். நெருக்கமானவர்கள் நம்பர் வந்தால் மட்டுமே எடுப்பார். மற்றபடி தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவரது பி.ஆர்.ஓ.விடம்தான் பேச வேண்டும்.
* விக்ரமிடம் இரண்டு செல்ஃபோன்கள். ஒன்று பர்சனல், மற்றொன்று அஃபிஷியல். பேசுவதைவிட எஸ்.எம்.எஸ். அனுப்பினால் பதில் வரும்.
* ரஜினியிடம்ஒரே ஒரு செல்ஃபோன். அந்த என் அவரது நெருங்கிய குடும்பத்தினருக்கும் சில நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றபடி அவரிடம் பேச வேண்டுமென்றால் அவரது அலுவலகத்தில் செய்தி சொல்ல வேண்டும். விருப்பப்பட்டால் அவரே உங்களை அழைப்பார்.
* விஜய்யிடம் இரண்டு செல்ஃபோன்கள் இருக்கின்றன. ஒன்று குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும். மற்றொன்று திரையுலகத்தினருக்கு அவரே போனை எடுப்பார். வணக்கம்ணா, சொல்லுங்கணா என்பார்.
* அடிக்கடி செல்ஃபோன்களை மாற்றுபவர் அஜித். அதில் பதிவு செய்யப்பட்ட பெயரர்களிலிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே பேசுவார். எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நிச்சயம் பதில் உண்டு.
* செல்ஃபோன் எண்களை அடிக்கடி மாற்றுவதில் த்ரிஷா சாதனை செய்துவிடுவார். லேட்டஸ்ட் ஹிட் பாடல்தான் ரிங்டோன். எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அவரது அம்மா நம்மிடம் பேசுவார்.
* நீண்ட நாட்களாக ஒரே எண்ணை வைத்திருக்கிறார் ரீமாசென். மும்பை எண். யார் கூப்பிட்டாலும் எடுத்துப் பேசுவார். எஸ்.எம்.எஸ். அனுப்பினால் பதில் எஸ்.எம்.எஸ். சட்டென்று வந்தவிடும்.
* சிம்புவிடம் இரண்டு செல்ஃபோன்கள். ஒன்று தோழி நயன்தாராவுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும். மற்றொன்று மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அவர் ஃப்ரீயாய் இருக்கும் நேரம் அழைப்பார்.
* லேசில் ஃபோனை எடுக்கமாட்டார் தனுஷ். ஆனால் ஃபோனை வேறு யார் கையிலும் கொடுக்கமாட்டார். அவரே பேசுவார். பணிவாகப் பதிலளிப்பார்.
* பரத்தும் விஷாலும் அவர்களே செல்ஃபோனை எடுத்துப் பேசுவார்கள். "மிஸ்ட்கால்' வந்திருந்ததைப் பார்த்ததும் உடனே கூப்பிடுவார்கள்.
* செல்ஃபோன் என்னை அடிக்கடி மாற்றுவார் சூர்யா. திருமணத்துக்கு முன்பு அதிகமாய் செல்ஃபோன் பில் கட்டிய நடிகர் என்று சொல்லப்பட்டவர். தெரிந்தவர்கள் அழைத்தால் மட்டுமே ஹலோ சொல்வார். மற்றபடி அவர் மேனேஜர் மூலம்தான் தொடர்பு.
* செல்ஃபோன் எண்ணை அடிக்கடி மாற்றிவிடுவார் நயன்தாரா. யாருக்கம் நம்பர் தரமாட்டார். ஒருசிலருக்குத் தான் அந்த என் தெரியும். பேசவேண்டுமென்றால் மேனேஜரிடம்தான் பேசவேண்டும்.
நன்றி: குமுதம்

பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 10, 2006
செல்போன் - சில முக்கிய தகவல்கள்
Posted by IdlyVadai at 11/10/2006 12:55:00 PM
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
அடச் சே.. உருப்படியா ஏதும் இருக்கும்னு வந்தேன்...!!
பொன்ஸ் - வெள்ளிக்கிழமை கொஞ்சம் ஜாலியா இருங்க :-)
Idly Vaddai has four cellphones.
One for office purposes
One for girl friend
One to see time and set alarm
One to use if the other three are missing :)
Dont ask what, if the fourth is
also missing :)
Anonymous,
Good try :-)
Anbudan,
IdlyVadai
Cell phone pattri sonneenga , avanga numbers ennanu sola villaiye ;)
அனானி.. கணக்கு தப்பு.
அப்படி பார்த்தாலும் எட்டு செல்போன் கணக்கு வரணும். இட்லியாருக்கு 4, வடையாருக்கு 4.
இட்லிவடை, செல்போனை அப்படி யூஸ் பண்ணுங்க.. இப்படிப் பண்ணாதீங்கன்னு ஏதோ யோசனை சொல்வீன்Kஅன்னு பார்த்தேன்.. நல்லவேளை அப்படி எதுவும் இல்லை.. வாழ்க்கைக்கு ரொம்ப உருப்படியான தகவல் இட்லிவடை..
//செல்ஃபோன் எண்ணை அடிக்கடி மாற்றிவிடுவார் நயன்தாரா. யாருக்கம் நம்பர் தரமாட்டார். //
அவுங்க 'அவரு'க்குக் கூடவா?
Numbers please :-)
எங்கள் இதயதெய்வம்,நடிகைகள் 'இமயம்' நமீதா பற்றி எழுதாத இட்லிவடையாரை கடுமையாக கண்டிக்கிறோம்.
இவண்,
நமீதா ரசிகர் மன்றம்,
பெரிய மேடு
ஹிஹி இத சொன்னதுக்கு
நயந்தாரா நம்பர நயமா
சொல்லியிருந்தா நாங்களும்
எஸ்.எம்.எஸ் அனுப்பி இருப்போம்ல!
Post a Comment