பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 09, 2006

மோசமான ஐந்து தமிழ் வலைப்பதிவுகள்

நான்கு நாட்களுக்கு முன் இணையத்தின் தந்தை என்று போற்றப்படும் டிம் பெர்னர்ஸ் லீ (Sir Tim Berners-Lee) இணையம் ரொம்ப கேட்டு போச்சு என்று வருத்தப்பட்டுள்ளார். வலைப்பதிவு வந்த பின் இணையத்தில் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகிவிட்டது. அதேபோல் அவதூறான செய்திகளும் பெருகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

சரி, தமிழ் வலைப்பதிவில் மிக மோசமான 5 வலைப்பதிவுகளை கொடுக்கவும்.

விதிமுறைகள்:
1. அனானிமஸ் பின்னூட்டங்கள் செல்லாத ஓட்டு என்று கருதப்படும்.
2. தமிழ்மணம், தேன்கூடு, கில்லி என்றாலும் செல்லாத ஓட்டு தான்.
3. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பதிவுகளின் URL கொடுக்க வேண்டும்.
3. நீங்கள் தேர்வு செய்யும் வலைப்பதிவில் குறைந்தது 5 பதிவுகளாவது இருக்க வேண்டும்.
4. ஈ-மெயில் மூலமாகவும் வாக்கு பதிவு செய்யலாம்.
5. விதிமுறை அடிக்கடி அப்டேட் செய்யப்படும் :-)

முக்கிய குறிப்பு: உங்கள் பெயர் வெளிவராது, பயப்படாதீர்கள்

கடைசி செய்தி: இந்த வாக்குபதிவினால் சிலருக்கு தேவையில்லாத மனக் கசப்பு உண்டாக்கும் என்று நினைப்பதால் இந்த வாக்கு பதிவு ரத்து செய்யப்படுகிறது
அன்புடன்,
இட்லிவடை.

31 Comments:

ramachandranusha said...

இனி இருக்கு தீபாவளி ;-)
அது என்ன உரல் எல்லாம், பெயர் சொன்னா போறாதா

செந்தில் குமரன் said...

இது தேவையில்லாத வேலைங்க சிறந்ததை தேர்தெடுத்து சரி. இது யாருக்கோ மனக் கஷ்டத்தையும் தேவை இல்லாத மனக் கசப்பையும் உண்டாக்கும் என்று நினைக்கிறேன்.

இதை தயவு செய்து நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

IdlyVadai said...

குழப்பம் இல்லாம் இருக்க இது தேவை

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

இதையாவது எனக்கு கொடுங்க.. சாமீ...

IdlyVadai said...

செந்தில் குமரன் - நீங்க சொல்லுவதிலும் ஒரு பாயிண்ட் ஒருக்கு. இப்படி யோசிக்க வைத்துவிட்டீர்களே :-)

luckylook said...

இந்த தேர்தலிலும் எனக்காக கள்ள ஓட்டு குத்துமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

// தமிழ்மணம், தேன்கூடு, கில்லி என்றாலும் செல்லாத ஓட்டு தான்//

Pl. include every one.
This should be an open poll/feedback.
idly vadai-yaiyum aattathukku sethukonga saami. yaaraiyum vittu vaikka vendam.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//இந்த தேர்தலிலும் எனக்காக கள்ள ஓட்டு குத்துமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.//

எனக்கு நல்ல வோட்டுக்களே அப்படித்தான் விழும். இதுல எனக்குத்தான் மொதல் ப்ரைஸ் ஆமா!
:-))))))))))))

We The People said...

//இந்த தேர்தலிலும் எனக்காக கள்ள ஓட்டு குத்துமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.//

அட எந்த தேர்தலா இருந்தாலும் ஏதோ படத்துல மனோரமா "எனக்கு ரெண்டுன்னு" கேட்குமே அது போல கள்ள ஓட்டு குத்த ரெடியாயிட்டாருபா!!! லக்கி இது மோசமான பதிவுக்காக தேர்வு. போனதடவ சிறந்த பதிவுக்கு போட்டா மாதிரி இதுக்கு கள்ள ஓட்டு போட்டு தி.மு.க சென்னை மாநகராட்சி தேர்தலில் மாட்டிக்கிட்டு முழிக்கற மாதிரி முழிக்காதிங்க.

Hariharan # 26491540 said...

கருணாநிதி, ஜெயலலிதா என கழகங்களை விமர்சித்து பதிவுகள், கூடுதலா வேதம்,பகவத்கீதையில் சில பதிவுகள்,மேலா சுய அனுபவப் பதிவுகள் என எனது பதிவு மோசமான பதிவுக்கான பல்சுவை அம்சங்களோட இருக்கு!

எனது பதிவின் உரல்:
http://harimakesh.blogspot.com

உலக்கையோடு வந்துடாதீங்க அடிக்க!

என்பதிவு மோசம்னு அடிச்சுச்சொல்ற இந்த சமயத்தில் ஷேம் ஷேம் பப்பி ஷேம்னு இன்னும் நாலு பேரை கலாய்க்கணுமான்னு யோசிக்கிறேன்

luckylook said...

நீங்க மட்டும் மக்கள்!

மொதல்ல நம்ம யோக்கியம் என்னன்னு கொஞ்சம் யோசிச்சிப் பார்த்துட்டு அடுத்தவனை பாத்து விரலை நீட்டுங்களேன்.

யோக்கியத்தைப் பத்தி யாரெல்லாம் பேசுறதுன்னு வெவஸ்தையே இல்லையா :-)

IdlyVadai said...

இந்த வாக்குபதிவினால் சிலருக்கு தேவையில்லாத மனக் கசப்பு உண்டாகும் என்று நினைப்பதால் இந்த வாக்கு பதிவு ரத்து செய்யப்படுகிறது
அன்புடன்,
இட்லிவடை.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

பரட்ட.. கவுத்தீட்டீயே பரட்ட...
:-((((((((((((((((((((999

கார்மேகராஜா said...

இட்லி அங்கிள்!.........

இதிலாவது என் பயரை சீ.. பெயரை சேர்த்துகொள்ளுங்க!

இல்லாட்டி நான் அழுவே.

பொன்ஸ்~~Poorna said...

// பரட்ட.. கவுத்தீட்டீயே பரட்ட...
:-((((((((((((((((((((999 //


ரிப்பீட்டே!!! :))))

உண்மையில் இதை ரத்து செய்தவரை நல்லதே.. இல்லைன்னா இதில வெற்றி பெற்ற பதிவுகளை லிஸ்ட் பண்ண இட்லிவடை இலை பத்தவே பத்தாதே!

We The People said...

அதிர்ஷ்ட பார்வை,

நான் யோக்கியன் என்ற வாதம் இங்க வராது! நான் யோகியன், யோகியன் இல்லை என்று எப்படி வேணும்னாலும் பட்டம் கட்டுங்க, அதை எல்லாம் நான் கவலைப்படலை, உம்ம பட்டத்தை வைத்து எனக்கு ஒன்னு ஆக போறது இல்லை. நீர் தானே முதல்ல கள்ள ஓட்டு போட அட்களை அழைச்சது??!!! அந்த கமெண்டுக்கு தான் நான் கமெண்ட் போட்டேன். தப்பு செஞ்சவர்களுக்கு தானே Usualla கோபம் வரும்!!!???

IdlyVadai said...

We the people, Lucklook - காமெடியாகவே சண்டை போடுங்க. தனி நபர் தாக்குதலாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். எதுக்கும் என்ன எழுதினாலும் கடைசியில இரண்டு ஸ்மைலி போட்டுடுங்க :-)

luckylook said...

இட்லிவடை!

மன்னிக்கவும். இந்த கமெண்டோடு நிறுத்திக்கறேன். சில பேரு வெளியே வேஷம் போட்டுக்கிட்டு உள்ளே அழுக்கா இருக்காங்க என்பதை கண்டுபிடித்தவன் என்ற முறையில் தேவைப்படும் நேரங்களில் அதை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. அதான் :-)

Bye, அடுத்த பதிவில் சந்திப்போம்.

luckylook said...

இட்லிவடை!

மன்னிக்கவும். இந்த கமெண்டோடு நிறுத்திக்கறேன். சில பேரு வெளியே வேஷம் போட்டுக்கிட்டு உள்ளே அழுக்கா இருக்காங்க என்பதை கண்டுபிடித்தவன் என்ற முறையில் தேவைப்படும் நேரங்களில் அதை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. அதான் :-)

Bye, அடுத்த பதிவில் சந்திப்போம்.

IdlyVadai said...

லக்கி லுக் - நன்றி. நான் எந்த பின்னூட்டத்தையும் Moderate செய்வதில்லை. சில சமயம் ரொம்ப ஓவராக இருந்தால் மட்டுமே செய்வேன். ஆனால் பின்னூட்டத்தில் சொல்லிவிடுவேன். சில நேரங்களில் காப்பி குடிக்க போகும் போது Approve செய்ய கொஞ்சம் நேரம் ஆகும் அவ்வளவு தான்.

We The People said...

//சில பேரு வெளியே வேஷம் போட்டுக்கிட்டு உள்ளே அழுக்கா இருக்காங்க என்பதை கண்டுபிடித்தவன்//

முதலில் அவரவர் உள்ளிருக்கும் அழுக்கை கண்டுபிடித்து, அதை களைந்த பின்னர் மற்றவர்களின் அழுக்கை கவனித்தால் ஊரு உருப்படும் என்பதை பொதுவா சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

:)))) :)))) இந்த இரண்டு ஸ்மைலியும் இட்லி வடைக்கு சமர்ப்பனம் :)

நாடோடி said...

இட்லி வடையாரே.

என்னோட blog:
http://naagariika-naadoodi.blogspot.com/
இதுக்கு முதல் பரிசு குடுக்கலாம். என் blogக்குதான் யாருமே வர மாட்டேனுரானுங்க. இதுலையாவது பரிசு குடுங்க.

Dharumi said...

நல்ல வேளை...என்ன கவுத்துறதுக்கின்னே திரிஞ்ச எங்க ஆளுக கிட்ட இருந்து தப்பிச்சேன்.

Anonymous said...

//...என்ன கவுத்துறதுக்கின்னே திரிஞ்ச எங்க ஆளுக கிட்ட இருந்து தப்பிச்சேன்.//

எங்கள் பேராசிரியர் இந்தப் பரிசையும் வாங்கி விடப் போகிறாரே என்ற பொறாமையில் இந்தத் தேர்தலையே ரத்து செய்ததைக் கண்டித்து அமெரிக்கன் காலேஜ் வாசலில் நாளைக்கு அனானி முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனானியாகவே போராட்டம் நடத்தப் படும் என்பதைத் தெரிவித்துக் கொல்கிறோம்!!!

அகுக
மதுரை.

நாமக்கல் சிபி said...

Its Good that you stopped this...

We are not great writers... Blog is just a time pass for us...

ILA(a)இளா said...

// பரட்ட.. கவுத்தீட்டீயே பரட்ட...
:-((((((((((((((((((((999 //


ரிப்பீட்டே!!! :))))
//
ரிப்பீட்டே

சீனு said...

அது சரி! டாப் ஐந்து தமிழ் வலைப்பதிவுகள் லிஸ்டில் வந்தவர்கள் இதிலும் வந்துவிடப்போகிறார்கள்.

நாடோடி said...

எனக்கு இரண்டு..

BadNewsIndia said...

லக்கி, வீ த மக்கள்,

நல்லா இருந்ததே உங்க ரெண்டு பேர் சண்டை. உங்க சண்டையின் ஹிஸ்டரி தெரீல எனக்கு ( கட்சி, ஜாதி, கருத்து வேறுபாடு,....?) . ஆரோக்யமான சண்டையா இருந்தா தப்பில்லை. ஆனால், இந்த குழாயடி சண்டை அவ்ள நல்லா இல்ல.

இட்லி, போட்டிய நிறுத்திருக்கக் கூடாது. ரிஸல்ட்ஸ் டிக்ளேர் பண்ணாம வேணா விட்டிருக்கலாம்.

சரி, என் கண்ணோட்டத்தில் மோசமான வலை பதிவர்கள் யாரெனில்:
"சுயமா யோசிச்சு எழுதாம அங்கங்க சுட்டு copy/paste செய்து தங்கள் பதிவுகளாக போட்டு, அந்த பதிவுகளில் விளம்பரமும் சேர்த்து துட்டு சம்பாதிக்கப் பார்க்கும் சிலதுகள்"

சரிதானே, என்ன சொல்றீங்க?

செந்தில் குமரன் said...

எனக்கு ஒரு சந்தேகம். போட்டி ஓரு வேளை நடந்திருந்தா இதில் இட்லி வடைக்கு விழுந்த ஓட்டும் செல்லாத ஓட்டு ஆகி இருக்குமா? இதுக்கு பிளான் பண்ணிதான் அப்பவே அது செல்லாத ஒட்டாச்சா? ஹீம் யோசிக்க வேண்டிய விஷயம். :-))) ;-)))

BadNewsIndia said...

அச்சச்சோ, smiley போட மறந்துட்டேன்.

ஸ்மைலிக்குத்தான் எவ்ளோ சக்தி.

என்ன வேணா சொல்லலாம், கடைசில ஒண்ண போட்டுட்டா, வாழப்பழ ஊசி மாதிரி அழகா இருக்குல்ல.

;););););)