பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 07, 2006

'தட்'ஸ் விஜயகாந்த்

....விஜயகாந்த் அறிமுகமாகும் காட்சியில் அவரைச் சுடுகிறான் ஒரு ரெளடி. அவரின் வயிற்றில் உள்ள தாம்பாளத்தில் படும் தோட்டா, ரிவர்ஸ் எடுத்து சுட்டவனையே வீழ்த்துகிறது. இந்தளவுக்கு ஆன பின், ஸ்ரீரங்கத்தையே ராமேஸ்வரம் என்று பேரரசு காட்டுவது பெரிய உறுத்தலா என்ன-?

- (தர்மபுரி) விகடன் விமர்சனம்

கீழே உள்ள படத்தை பார்த்து யாரும் சிரிக்க கூடாது. பாஸ்டன் பாலா இப்போது உங்களுக்கு சந்தோஷம் தானே :-).

குண்டு பட்ட இடத்தில் சட்டை கூட ஓட்டையாக வில்லை


12 Comments:

tamilreber said...

கீழே உள்ள படத்தை பார்த்து யாரும் சிரிக்க கூடாது

No, Now I understood Newton's third law of motion better :).

பொன்ஸ்~~Poorna said...

கேட்பன் ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினருக்கு சீருடை, துப்பாக்கி, குண்டு இவற்றுடன், ஒவ்வொருவருக்கும் ஒரு அர்ச்சனைத் தட்டும் தரப்படுமா?

(இட்லிவடை, இந்த மாதிரி ஒரு படத்தைப் போட்டுட்டு சிரிக்கக் கூடாதுன்னா எப்படிங்கண்ணா?!! )

We The People said...

ஐயோ சாமி கொல்றாருங்க... இன்னும் இந்த சின்ன வயசு போட்டோ வெச்சு இப்ப எப்படி இருப்பாரு, என்ன மோதிரம் போடுவாரு, என்ன டிரெஸ் போட்டுக்கிட்டு இருப்பருன்னு கண்டுபுடிக்கர டெக்னாலஜி வெச்சே கொல்லறாங்கபா!!!

//கீழே உள்ள படத்தை பார்த்து யாரும் சிரிக்க கூடாது. //

சிரிப்பு வரல பேரரசு போன்ற காமெடி டைரெக்டர்களை சினிமா துறை விட்டு வெளியேற்றாவிட்டால் மக்கள் முட்டாள்கள் ஆக்க இவர்களை விஜயகாந்த் போன்றோர் உபயோகிப்பார்கள்.

ramachandranusha said...

அந்தக்கால சினிமாக்களில் மந்திரவாதி மாயகண்ணாடி அல்லது புகை மண்டிய குடுவைகளில் பிரபஞ்ச அழகியை தேடுவான்.
இன்று அது சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் அது கம்ப்யூட்டராய் மாறியுள்ளது.
அது என்னங்க மோதிரம், அதுதான் ஐயாவோட கட்சி சின்னமா?

IdlyVadai said...

உஷா - என்ன இப்படி விவரம் தெரியாம இருக்கீங்க :-)
பார்க்க http://idlyvadai.blogspot.com/2006/01/blog-post.html

Hariharan # 26491540 said...

இன்னாமாதிரி சுளுவா சிம்பிளா புல்லட் புரூப் அட்டையரா அர்ச்சனைத்தட்டை ஆப்டிமைஸ் பண்ணிக்காட்டியிருக்காரு விசயகாந்து!
கோந்துமாதிரி புடிச்சுக்கணும் இந்தமாதிரி இன்னோவேடிவ் விஷயத்தை!

அரசியல்வாதிக்ளுக்கு ஆகும் புல்லட்புரூபிங் செக்யூரிட்டி புரோட்டோகாலெல்லாம் கொத்திப்போட்ட புரோட்டாமாதிரி எகனாமிக்கலா ஆக்கிடலாம்!

இதுக்காகவே விசயகாந்தைப் பதவியில் அமர்த்தி அழகுபார்க்கலாம்! :-))

வானமே எல்லை said...

அப்படியே இந்த படத்துல 'பேரரசு' நடிச்ச காமெடி சீன் இருந்தா யாராவது போடுங்கப்பா

வானமே எல்லை said...

ஹரிஹரன்,

ஏற்கனவே நம்ம விசயகாந்து விருத்தாசலத்துல இருக்குற எல்லா போலீசுக்கும் குடுக்கறதுக்காக 'மோதிரமும்' 'தாம்பாளத் தட்டும்' ஆர்டர் குடுத்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்

Sivabalan said...

சிரிக்காம இருக்கமுடியல...

Karthikeyan Muthurajan said...

//கேட்பன் ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினருக்கு சீருடை, துப்பாக்கி, குண்டு இவற்றுடன், ஒவ்வொருவருக்கும் ஒரு அர்ச்சனைத் தட்டும் தரப்படுமா?

//
நல்ல கேள்வி பொன்ஸ்.. ஹிம்ம்.. இவர் மட்டும் ஆட்சிக்கு வந்து என்ன செய்ய போறார்.. மச்சானுக்கு இப்பவே குடியாத்தம் கொடுத்தாச்சு.. பார்ப்போம் இவரோட அரசியல் காமடிகளையும்.

Anonymous said...

சுப்பர்ஸ்டார் செய்தா மட்டும் பாப்பீங்க, புரட்சி கலைஞர் செய்தா பாக்க மாட்டீங்களா? தமிழ் நாட்டில் முட்டாபசங்க இருக்கும் வரை இப்படியான படங்களை சுப்பர்ஸ்டாரும்,புரட்சி கலைஞரும் தொடர்ந்து தந்திகிட்டுதான் இருப்பாங்க, பாக்கவேண்டியது உங்க தலை எழுத்துதான்.

enRenRum-anbudan.BALA said...

:))))

http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_08.html