பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 06, 2006

சதாம் உசேனுக்கு தூக்கு - ஜெ கண்டனம்

சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா : ( இது போல் எந்த அரசியல் தலைவர் அறிக்கை விடுவார் என்று பார்க்க வேண்டும் )

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து இருப்பது நீதியை கேலிக்கூத்தாக்கி போலி நாடகம் அரங்கேற்றி இருக்கிறார்கள்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு நாட்டில் அமெரிக்காவால் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் இதை தவிர வேறு தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது. அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

விசாரணையின் போது ஏராளமான எதிர்தரப்பு வக்கீல்கள் மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தடவை நீதிபதிகள் மாற்றப் பட்டு உள்ளனர். நீதித்துறையை இப்படி தவறாக பயன்படுத்தியதை இந்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதி, சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள எவரும் இதை ஏற்க மாட்டார்கள்.

5 Comments:

ஜோ / Joe said...

அப்சல் தீர்ப்பில் அம்மையார் நிலைப்பாடு என்னவோ?

Hariharan # 26491540 said...

ஜெ.ஜெயிச்சா பிரதமர் பதவிக்கு தகுதியானவர்ன்னு ர.ரக்கள் ராகம்பாடுவது அறிந்ததே!

ஜெ.தோத்தா அமெரிக்க அதிபர் பதவிக்குத் தகுதியானவர்ன்னு ராவா அடிச்சுட்டு ர.ரக்கள் இனி தெம்பா தமாஸு கட்டும்!

தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினையைத் தாண்டி இன்னுமொரு உலகத்தலைவர்!

காமெடி இல்லாத பஞ்சம் இன்று இந்த அறிக்கை தீர்த்து வைக்கிறது!

சரி ஒவ்வொரு அறிக்கைக்கும் இலக்கு தெளிவாக இருக்கும், கருணாநிதி, விஜய்காந்த் மாதிரி! இதில் டார்கெட் யாருன்னு சொல்லக்காணோமே?

SUNIFNB said...

orey thamasuu ponga!!! priminister agronga lo illayo... Lallu vukku sister agiduvenga ... ippadiya poona. ada ippla Lallu kuda periyallu agittaru.

Sadaiappa said...

இன்னும் நீங்கள் இன்றய ஜோக்கை மாற்றவில்லை.

ஏன் இது உங்களுக்கு ஜோக்காக தெரியவில்லையா? அல்லது உங்கள் ரசனை மங்கி விட்டதா?.

வானமே எல்லை said...

//நீதித்துறையை இப்படி தவறாக பயன்படுத்தியதை இந்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதி, சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள எவரும் இதை ஏற்க மாட்டார்கள்.
//

காமெடி No. 1!!!ஒருவேள குடிபோதைல சொல்லியிருப்பாரோ (யாரு ஊத்திக் குடுத்தாங்க????)