பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 03, 2006

ஜாதிகள் இல்லையடி பாப்பா

"பிரஷர் எகிறிய பா.ம.க... டாக்டரின் கொதிப்புக்கு பின்னால்..!" என்று ஜூவியில் வந்த கவர் ஸ்டோரியிலிருந்து சில பகுதிகள். டாக்டரின் கொதிப்புக்கு பின்னால் மூன்று முக்கியமான காரணங்கள் அலசப்படுகிறது. எது உண்மை என்று எனக்கு தெரியவில்லை. இவை யாவும் பொய்யாக கூட இருக்கலாம். எது உண்மை என்று நீங்களே முடிவு செய்துக்கோங்க. ஒன்று மட்டும் உண்மை என்று புரிகிறது - மக்கள் நலன் ? மூச்!.


முதல் காரணம் : ஜாதிகள் இல்லையடி பாப்பா!

உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறிய கசப்பான சம்பவங்கள் பற்றி அறிக்கை விடுவதற்கு முன்பே கருணாநிதி யிடம் ராமதாஸ் போனில் பேசினாராம். கருணாநிதியும் சில சமாதானங்கள் சொன்னாராம். அதன்பிறகு, சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவியை தங்களுக்குத் தரச் சொல்லி, பா.ம.க-வின் தலைவர் ஜி.கே.மணி நேரில் சந்தித்து கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார். முதலில் தயங்கி பிறகு ஒப்புக் கொண்ட கருணாநிதி, ‘இந்த மாநகராட்சி தலித்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை மனதில்கொண்டுதான், தி.மு.க-வைச் சேர்ந்த தலித் பிரமுகர் சத்தியபாமாவை நாங்கள் துணை மேயர் பதவியில் அமர்த்த முடிவு செய்திருக்கிறோம். உங்கள் கட்சிக்கு நாங்கள் துணை மேயர் பதவி அளித்தாலும், தலித் ஒருவரையே ஆக்குவீர்களா?’ என்று நிபந்தனை விதித்தாராம். டாக்டரிடம் பேசிவிட்டுச் சொல்வதாக கிளம்பிய ஜி.கே.மணி, அடுத்த சில மணி நேரங் களிலேயே போன் செய்து, ‘டாக்டரிடம் பேசினேன். வன்னிய இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பைத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்’ என்றாராம்.

கருணாநிதி இந்த திருப்பத்தையும் ஜீரணித்து, விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தாலும், மு.க.ஸ்டாலின் கண்டிஷனாக மறுத்துவிட்டாராம். ‘துணை மேயர் பதவி சத்தியபாமாவுக்குதான் என்று கட்சிக்குள் பரவிவிட்டது. அவரை மாற்றி வேறு கட்சிக்கு அந்த வாய்ப்பைத் தந்தாலும்கூட சகித்துக் கொள்வார்கள். ஆனால், வேறு சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு என்றால், நம் கட்சிக்குள்ளேயே தலித்கள் மத்தியில் கடும் அதிருப்தி பரவும். இதற்கு இடம் கொடுக்கவே கூடாது’ என்று கட்சித் தலைமையிடம் கூறிவிட்டாராம்.

இது அப்படியே பா.ம.க. தரப்புக்குத் தெரிவிக்கப்பட... அதுவே டாக்டரின் ஆவேச பிரஸ் மீட்டாக மாறியது என்கி றார்கள் இந்த இன்னொரு தரப்பினர்.
இரண்டாம் காரணம் : இரட்டை பதவி
ஆதாயம் தரும் இரட்டைப் பதவிக்கு எதிரான சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, பல பிர முகர்களின் பதவியைக் காப்பாற்றியது மத்திய அரசு. ஆனால், விதிவிலக்காக அவர்கள் அறிவித்த பதவிகளின் பட்டியலில், மத்திய அமைச்சர் அன்பு மணி வகிக்கும் அகில இந்திய மருத்துவக் கழகத் தலைவர் பதவி இல்லை! இதனால், அன்புமணிக்கு எதிராக எந்த நேரத்திலும் யாராவது காய் நகர்த்தி, அவரது எம்.பி. பதவியைப் பறித்துவிட முடியும் என்ற நிலை நீடிக்க... தி.மு.க. மீதுதான் பா.ம.க-வின் கோபம் திரும்பியதாம்.

‘‘அகில இந்திய மருத்துவக் கழகத் தலைவர் பதவியையும் விதிவிலக்குப் பட்டியலில் சேர்க்கச் சொல்லும்படி தி.மு.க-விடம் நாம் வற்புறுத்தினோம். ஆனால், அவர்கள்தான் காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் இதைக் கொண்டு செல்லாமல் விட்டுவிட் டார்கள்’’ என்று பா.ம.க. தரப்புக்குள்ளேயே கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில், இதே கோபத்து டன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்ற டாக்டர் ராமதாஸ், அங்குள்ள சில தலைவர்களைப் பார்த்துப் பேசியதாகவும், ஆனால் நினைத்த காரியம் நடப்பதற்கான அடையாளங்கள் தெரியாததால் கோபம் கூடிப் போய்த் திரும்பினார் என்றும், அந்தக் கோபத்தைத்தான் உள்ளாட்சித் தேர்தல் முடியட்டும் என்று காத்திருந்து, இப்போது சீற்றமாகக் காட்டுகிறார் என்றும் சொல்கிறார்கள் இந்த சிலர்.


முன்றாம் காரணம்: 'அன்பு' மணி
‘‘தங்களுக்கென்று ‘தமிழ் ஓசை’ பத்திரிகையைத் துவங்கிய பா.ம.க., அதற்கென அரசாங்க விளம்பரங்களைக் கேட்டது. ஒரு நாளிதழ் துவங்கி ஆறு மாதங்கள் ஆன பிறகுதான் அரசு விளம் பரங்கள் அளிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று நடைமுறை இருந்தும், ‘தமிழ் ஓசை’க்கு தொடர்ந்து விளம்பரங்களை அளிக்கத் துவங்கியது அரசு. அதேபோல், அவர்கள் துவங்கிய ‘மக்கள் தொலைக்காட்சி’க்கு அரசு விளம்பரங்களை தாராளமாக தந்து உதவவேண்டும் என்று துவக்க விழா மேடை யிலேயே மறைமுகமாக ஒரு கோரிக்கை வைத்தார் ராமதாஸ். மேடையில் புன்ன கைத்தார் முதல்வர். அரசு விளம்பரங் கள் அந்த சேனலுக்கு தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. ஏற்கெனவே 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு விவகாரத்தில் போராடி உயிர் நீத்த வன்னிய சங்கத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் வழங்கப் பட்டு வந்த உதவித் தொகையை உயர்த்தினார். இதெல்லாம் யாருக்காக கொடுக்கப்பட்டது? ஆனால், மத்திய தொலை தொடர்புத் துறையின், ‘ஒரு ரூபாய், ஒரே இந்தியா’ என்ற விளம்பரத்தையும் மக்கள் தொலைக்காட்சி பெற நினைத்தது. அது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல் லாததால் முதல்வர் அமைதி காத்தார். அந்தத் துறைக்குரிய அமைச்சர் தயாநிதி மாறன் மூலம் விளம்பரத்தைப் பெறு வதற்கு பா.ம.க. முயன்றது. ஆனால், மத்திய அரசின் விதிமுறைகளை கருத்தில் கொண்டு, தயாநிதி மாறன் தரப்பிலி ருந்து அமைதியே பதிலாக வந்தது. இதுதான் டாக்டரை ரொம்பவே கொதிக்க வைத்துவிட்டது’’



6 Comments:

மீனாக்ஸ் | Meenaks said...

Brilliant pun on 'அன்பு' மணி. Too good. :-)

IdlyVadai said...

பாராட்டுக்கு நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

வாழும் அய்யா பெரியார் பெரிய மருந்து அய்யா ராமதாசு குறித்து வெகுசன ஊடகங்களால் நடத்தப்படும் ஊடக வன்முறையான தகவல் திரிப்பு, மறுப்பு இட்லிவடை பதிவிலும் மறு ஒளிபரப்பாகியிருக்கிறது!

மூன்றே காரணங்கள்தான் என்று பட்டியலைக்குறுக்கியதற்கு வன்மையான கண்டனங்கள்!

ஆண்டிமடத்துச் சிங்கம் காடுவெட்டி குருவைப் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவராக்க வேண்டும் எனும் கோரிக்கையை இருட்டடிப்புச் செய்தது சரியா!??

பாபா படப் பெட்டிச் சர்ச்சை மாதிரி இக்கட்டு வந்துடக்கூடாதே! காடுவெட்டி சென்சார் போர்டு தலைவரானால் முந்திரிக்காட்டுக்குள் பிலிமை வெட்டித் தணிக்கை செய்வார் வொர்கிங் ப்ரம் ஹோம்னு அபிசியல் ஆகிடும்!

ஆதிசேஷன் said...

பாட்டாளி மக்கள் கட்சியின் அகில இணைய கொள்கை பரப்பு செயலாளர் குழலி இதுபற்றி கருத்து தெரிவிப்பாரா?

IdlyVadai said...

ஆதிசேஷன் எதற்கு குழலியை இதில் கொண்டு வருகிறீர்கள் ?

VSK said...

பகவானே கேளய்யா
பச்சோந்தி உலகிலே
பணமேதான் ஜீவநாடி-வெள்ளிப்
பணமேதான் ஜீவநாடி

என்ற பழைய பாடல் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இன்னொரு பாடலைத்தான் தலைப்பே சொல்கிறதே!
:))
-------------

"குழலி"யை இதில் கொண்டுவந்தது நீங்கள்தான் இட்லிவடையாரே!

குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டுவது சரியில்லை!

தவறென்றால், அந்தப் பின்னூட்டத்தை அனுமதித்திருக்க வேண்டாமே நீங்கள்!