பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 02, 2006

கருணாநிதிக்கு, ராமதாஸ் புகழாரம்

தமிழ்மொழியை காக்க கருணாநிதி ஒருவரால் மட்டுமே முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். கூட்டணியில் நடந்து வந்த மோதலில் சமரசமா என்று தெரியவில்லை. தமிழ்நாடு உருவான 50-வது ஆணëடு பொன்விழா நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதை பாருங்கள்:
தலித் அரசியலை அடுத்து இப்போது தமிழ் அரசியல் :-)

... தமிழ் உலகின் மூத்த மொழி, இந்திய மொழிகளிலேயே மிகவும் பழமையான மொழி ஆகும். திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய் தமிழ்தான் என்று கால்டுவெல் சொன்னார். அந்த தமிழ் மொழியை 1956-ம் ஆண்டு ஆட்சிமொழியாக்குவதற்காக தமிழக சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் சட்டமë கொண்டுவந்தார்.

அந்த சட்டம் கொண்டு வந்த போது, பிறவிப்பயனை அடைந்துவிட்டேன் என்று சி.சுப்பிரமணியம் புளங்காகிதம் அடைந்தார். ஆனால், இன்று தமிழ்நாட்டில் தமிழ்மொழி முழுமையான ஆட்சிமொழியாக இல்லை. தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க கொண்டுவரப்பட்ட சட்டம் பிறவிப்பயனை அடையவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்நாட்டில் தமிழ் முழுமையான ஆடëசிமொழியாகவில்லை. பாடமொழி ஆகவில்லை. பயிற்சி மொழி ஆகவில்லை. ஆலய மொழி ஆகவில்லை.

விளம்பர பலகைகளில் தமிழையே காணோம். நாம் பேசும் பேச்சில் பெரும்பாலும் ஆங்கிலமே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அதை மாற்ற முத்தமிழறிஞரான கலைஞரால் மட்டுமே முடியும். வேறு யாரும் இதைச் செய்ய முடியாது. அதற்கான தகுதியும் வேறு யாருக்கும் கிடையாது.

தமிழ்மொழி மத்தியில் ஆடëசிமொழி ஆக வேண்டும் என்று கலைஞர் நினைக்கிறார். நீங்கள் இன்னும் சற்று நினையுங்கள். 5 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ்மொழியை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று அறிவித்து தமிழ்மொழியை மத்திய அரசு செம்மொழி ஆக்கியது. கலைஞரே நீங்கள் இன்னும் நினைத்தால் தமிழ்மொழி 2,500 ஆண்டு பழமையாகிவிடும். உங்களால் முடியும்.

மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு தொல்காப்பியர் விருது, திருவள்ளுவர் விருது என்று பெயர்வைக்க வேண்டும். இதற்கு நீங்கள் அங்கே (மத்திய அரசு) ஆணையிடுங்கள். தமிழை நீதிமன்ற மொழியாக்க வேண்டும். இதற்காக விரைவில் சட்ட மசோதா கொண்டுவர உள்ளீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

அதுபோல, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். ஊடகங்களில் தமிழை கொலைசெய்து வருகிறார்கள். இந்த நிலை நீடித்தால் ஊடகங்களே தமிழ்மொழியை கொலை செய்துவிடும். ஊடகங்கள் செய்யும் தமிழ்க்கொலையை சொல்ல மாளாது.
( சன் டிவியும் இதில் அடங்குமா ? )

தமிழ்நாடு என்ற பெயரை பொருத்தவரையில் அதில் தமிழ் உள்ளது. இருந்தாலும் தமிழகம் என்பது எவ்வளவு பொருளாய்ந்தது என்பதை பார்க்க வேணëடும். அகம் என்றால் உள்ளம். உயிர். தமிழை அகமாகக் கொண்டு தமிழகம் அமைய வேண்டும். அதுவும் உங்கள் காலத்த்ில் அமைய வேண்டும். அதற்காக சட்டம் கொண்டு வாருஙëகள் நாங்கள் எல்லோரும் உங்கள் பின்னால் நிற்போம்.

8 Comments:

bala said...

இட்லிவடை அய்யா,

கொள்ளையில் பங்கு பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டு விட்டது.. தமிழ் மறுபடியும் காப்பாற்றப் பட்டுவிடும். தமிழ் கொடுத்து வைத்தது.

பாலா

SK said...

கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்றாகிவிட்டது போல!!

நாடகமே உலகம்!
நாளை நடப்பதை யாரறிவார்?

மனொகராவில் கருணாநிதி எழுதிய வசனம்!

இன்றும் பொருந்துகிறது!

காலத்தை வென்ற கருணாநிதி!!

Prabu said...

சென்னப்பட்டணம் படத்துல லின்க் வேலை செய்யல. என்னன்னு பாருங்க.

Hariharan # 26491540 said...

அரசியலில் சுயநலம் மிக அதிகமாக வெளிப்பட்டுவிடும் சூழலில் அரசியல் வாதிகள் தலையில் போட்டு மறைக்கும் முக்காடு ரேஞ்சுக்கு முத்தமிழை மூத்த அரசியல் வாதிகள் ஆக்கியிருக்கிறார்கள்!

மருத்துவர் ராமதாஸ் அய்யா சொல்லிட்டார்ன்னாலே அது கலப்படமற்ற உண்மைதானே!

தமிழுக்கு 40ஆண்டுகளாக இந்த கேவலமான சோதனைதானே! என்ன கொடுமை இது தமிழ்மொழியே!

IdlyVadai said...

"நடந்த பிரச்னைகளை மீண்டும் கிளற வேண்டாம். அந்த பிரச்னைகளை விட்டுவிட்டு கட்சியினர் அனைவரும் அவரவர் வேலையைப் பாருங்கள்" என்று ஜி.கே.மணி சொல்கிறார். நல்ல கூத்து.

bala said...

//தமிழுக்கு 40ஆண்டுகளாக இந்த கேவலமான சோதனைதானே! என்ன கொடுமை இது தமிழ்மொழியே//

ஹரிஹரன் அய்யா,

என்ன இப்படி சொல்லிட்டீங்க?
நம்ம காக்கா கவிஞர் தமிழே உருவெடுத்து அரியணையில் அமர்ந்து விட்டது என்று புகழாரம் சூடினார்.
தமிழுக்கு எப்படீங்க தமிழாலேயே சோதனை வரும்?
காக்கா கவிஞருக்கு கற்பனா சக்தி அதிகம் தான்..ஆனாலும் பணத்துக்காக கூசாம பொய் பேசியிருப்பார்னா நினக்கறீங்க?

பாலா

சிநேகிதன் said...

இவென்ங்க "பச்சை துரோகம்பான்ங்க", உடனே தொண்டர்கள் ஒருத்தருக்கு ஒருத்தன் அடுச்சுகிட்டு மண்டைய உடைசுகுவான்ங்க. அப்புறம் அண்டர்கிரவுண்டு பேரம் படிஞ்சப்புரம், சமாதனமாயச்சு கூட்டணித் தலைவர் பெரிய மனசுக்காரர் அவரவர் வேலையைப் பாரும்பான்ங்க. பாவம் தொண்டனுங்க, சூடு சுரனையற்ற தலைங்களுக்கு இவன்ங்க சூடு சொரனையோட இருக்கிறத பாத்தா மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா.

karuppu said...

சத்தியராஜ் அமைதிப்படையில சொல்றமாதிரி..
ரொம்ப ஆட்டங்கட்டுனான்னா கட்டங்கட்டி "உஸ்ஸ்ஸு"
மன்னிப்பு கேட்டான்னா..
கட்டிப்புடிச்சி "இஸ்ஸ்ஸு"..
"உஸ்ஸ்ஸு, இஸ்ஸ்ஸு" இவ்வளவுதா அரசியலு.