பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 06, 2006

டாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் - முடிவுகள்

போன வாரம் ஐபின் லைவில்(CNN-IBN) ஒரு அதிர்ச்சியான தகவல் சென்னார்கள் - ஒரு வினாடிக்கு உலகில் இரண்டு வலைப்பதிவுகள் உருவாகிறது என்பது தான் அந்த செய்தி. ஆகஸ்ட் 1991ல் முதல் வலைத்தளம் வந்து இந்த மாத கணக்குப்படி 101 மில்லியன் வலைத்தளம் வந்துள்ளது. ( போன மாதம் போன மாதம் 97.9 மில்லியன் வலைத்தளங்கள் இருந்தது) இந்த அசுர வளர்ச்சிக்கு வலைப்பதிவும் ஒரு காரணம் என்றும் சொல்லுகிறார்கள்.

Technorati செய்த ஆய்வின் படி நாள் ஒன்றுக்கு 175,000 வலைப்பதிவுகள் உருவாகிறது!. அதாவது 2 வலைப்பதிவு ஒரு வினாடிக்கு !

2004ல், 50 மில்லியனாக இருந்த வலைத்தளங்கள் கடந்த இரண்டே ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகியிருக்கிறது.

தமிழ் வலைப்பதிவில் ஐந்து டாப் வலைப்பதிவுகள் பற்றி கேட்டிருந்தேன் கணிசமான அளவு ஓட்டுக்கள் வந்திருந்தது. முடிவுகள் கீழே :


முதல் இடம்:

பத்ரி - thoughtsintamil.blogspot.com

இரண்டாம் இடம்

மா.சிவகுமார் - http://masivakumar.blogspot.com/

மூன்றாம் இடம்:

பாஸ்டன் பாலா - http://etamil.blogspot.com
துளசி - http://thulasidhalam.blogspot.com

நான்காம் இடம்:

ஜி.ராகவன் - http://gragavan.blogspot.com/

ஐந்தாம் இடம்:
தருமி http://dharumi.blogspot.com/
தமிழ் சசி http://thamizhsasi.blogspot.com/
டுபுக்கு http://dubukku.blogspot.com/
முத்து தமிழினி - http://muthuvintamil.blogspot.com/
லக்கிலூக் - http://madippakkam.blogspot.com/
பெனாத்தல் சுரேஷ் - http://penathal.blogspot.com/
செல்வன் - http://holyox.blogspot.com/

சிறப்பு தேர்வு
கடல் கணேசன் - http://kadalganesan.blogspot.com/
குறு குறு குறுஞ்செய்தி - http://kurunjeythi.blogspot.com/

பிகு: இட்லிவடைக்கு வந்த ஓட்டுகள் செல்லாதவை :-)


32 Comments:

Hariharan # 26491540 said...

வாழ்த்துக்கள் டாப் லிஸ்டில் வந்த அனைவருக்கும்!

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள்...

இட்லிவடை, இது போல் அடிக்கடி டாப் 5 தேர்ந்தெடுப்பதாகத் திட்டமா? :)

IdlyVadai said...

பொன்ஸ் - ஆமாம். இருக்கிறது.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்..!
அடிக்கடி நடத்தினால் மதிப்பு இழந்து விடும்.
அதனால்.. வலைப்பூவில் கதையாசிரியர்/கவிஞர்/ கட்டுரையாளர்/விமர்சகர்/பொழுதுகோக்கர்/ இப்படி தனித்தனி தலைப்புக்களின் கீழ் நடத்தினால் நல்லா இருக்கும்னு தோனுது.

(நான் வோட்டு போட நினைத்த வலைபதிவர்களே.. முதல் மூன்று இடத்தில் இருக்கிறார்கள்.)
அடுத்த வாய்ப்பில் கட்டிப்பாய் வோட்டு போடுகிறேன்.

IdlyVadai said...

பால பாரதி - நீங்கள் சொல்லுவது உண்மை. அடுத்த தேர்தல் 'மிக மோசமான பதிவுகள்' பிறகு என்ன என்று பார்க்கலாம். நன்றி.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

தல.. இந்த வெளையாட்டு தான வேணாம்ங்கிறது...
(அனேகமாய்.. இதுல நான் தான் பர்ஸ்ட்.)
திங்க். பாஸிட்டீவ் ஒன்லி தல!

IdlyVadai said...

பால பாரதி - போட்டி கடுமையாக இருக்கும் என்று தோன்றுகிறது :-).

G.Ragavan said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

என்னோட வலைப்பூவும் லிஸ்ட்டில் இருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது என்னை இன்னும் பொறுப்போடு இருக்கச் சொல்கிறது. நன்றி.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

இதுலையும் போட்டியா?

:-(((((

ramachandranusha said...

இ. வ, என்னுடைய பட்டியலில் நான்கு தேர்வாகியுள்ளதே! அடுத்த போட்டி தலைப்பு சூப்பர். இதை நான் எடுத்து கொடுக்கலாம்
என்று இருந்தேன் இன்னுமொரு தலைப்பு" வெறுப்பேற்றும் பின்னுட்ட பெட்டிகளைக் கொண்டவர் யார்?"

luckylook said...

டாப்5ல் நானா?

தேர்தலில் ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது :-)

வல்லிசிம்ஹன் said...

விழிப்பாக இருக்கிறார்கள். வலைப்பதிவர்கள்.

வெங்கட்ராமன் said...

/**********************************
பிகு: இட்லிவடைக்கு வந்த ஓட்டுகள் செல்லாதவை :-)
**********************************/

உங்களைப் போல் சிறந்த தேர்தல் ஆணையர் தான் நாட்டுக்கு தேவை.(மீண்டும் உள்ளாட்சி தேர்தலை, உங்களை வைத்து நடத்தாலாம் போலிருக்கே. . . ?)

இம்சை அரசன் said...

ஆட்டைக்கு என்னையு சேர்த்துக்கொள்ளுங்கள் மிஸ்டர் வடை!

IdlyVadai said...

லக்கிலுக் //டாப்5ல் நானா?

தேர்தலில் ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது // :-)

//ஆட்டைக்கு என்னையு சேர்த்துக்கொள்ளுங்கள் மிஸ்டர் வடை!// இட்லியை விட்டுவிட்டீர்களே எங்க கூட்டணிக்குள் குழப்பம் வேண்டாம். இருக்கிற குழப்பமே போதும்.

IdlyVadai said...

வெங்கட்ராமன் என் வேலைக்கே வேட்டு வைத்துவிடுவீர்கள் போல இருக்கே :-)

Dharumi said...

டாப்5ல் நானா?

எப்படி?
சரி, எப்படியோ!

ஆனால் நான் ஓட்டுப்போட்ட மூவரில் ரெண்டு பேர் இங்க இல்லை. நம்ம 'டேஸ்ட்டே" தனியோ...??!!

வாழ்த்துக்கள் - வெற்றி பெற்றவர்க்கெல்லாம்.

நன்றி - வெற்றி பெற
வைத்தவர்க்கெல்லாம்.

பினாத்தல் சுரேஷ் said...

ஹய்யா நான் போட்டதில் 3/5 வந்துடுச்சே.. என்ன ஒரு செல்லாத ஓட்டு:-)

என்னைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கும், எல்லாராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் முறையே நன்றி, வாழ்த்து!

சீனு said...

//பிகு: இட்லிவடைக்கு வந்த ஓட்டுகள் செல்லாதவை :-)//
அடடா! இத மொதல்லையே சொல்லலியே...

//ஆனால் நான் ஓட்டுப்போட்ட மூவரில் ரெண்டு பேர் இங்க இல்லை. நம்ம 'டேஸ்ட்டே" தனியோ...??!!//
தருமி,
அதே தான் எனக்கும். உங்களுக்காவாவது பரவாயில்லை. நான் ஓட்டுப்போட்ட ஐந்து பேரும் இல்லை.
(ஒருவேளை கள்ள ஓட்டுக்கள் அதிகமோ?)

செல்வன் said...

தேர்தலை நடத்திய இட்லிவடையாருக்கும், வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். மிக பொருத்தமான வலைபதிவுகள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இட்லிவடையாரும் களத்தில் குதித்திருந்தால் நல்லதொரு இடத்தை பிடித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

துளசி கோபால் said...

அட! நம்மளையும் ஆட்டைக்குச் சேர்த்துருக்கீங்க.

ரொம்ப நன்றிங்க, ஓட்டுப்போட்ட மக்களுக்கும், ஓட்டுப்பெட்டி வச்ச உங்களுக்கும்.

நம்ம ராகவன் சொல்றதுபோல, 'இனியாவது கொஞ்சம் பொறுப்பா எழுதணும், இந்த ஜல்லியெல்லாம் கூடாது'ன்ற
பயம் வந்துருச்சேங்க:-)))

ஐந்து இடங்களில் மட்டுமில்லே, எல்லாப் பதிவர்களுக்குமே வாழ்த்து(க்)கள்.

Narayanaswamy.G. said...

அய்யா, தருமி அய்யா,நீங்க வாங்கி குடுத்த குவார்ட்டருக்கும் சிக்கன் பிரியாணிக்கும் இத்தனை வோட்டுதான் போட முடிஞ்சது. அடுத்த எலெக்சனுக்கு ஒரு ஃபுல்லும் 2 நாள் கொடைக்கானல்ல ரூமும் போட்டுக்குடுங்க தலைவா........

மத்த ஆளுக்கு எல்லாம் டெபாசிட்டயே காலி பண்ணிருவோம்.

கால்கரி சிவா said...

இது அநியாயம்.. என் பெயர் இல்லை. மேற்கு கனடாவில் இருந்து எழுதும் இருவர்ல் ஒருவர் பெயர் கூட இல்லையா? இந்த தேர்தல் செல்லாது. நான் புறகணிக்க்கிறேன் :)))

மா சிவகுமார் said...

வாக்குப் பதிவு நடத்திய இட்லிவடைக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் வலைப்பதிவு உலகை வளமாக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றிகள்.

அன்புடன்,

மா சிவகுமார்

ramachandranusha said...

கா.சிவா, சீனுவோட கமெண்ட் படிக்கலையா? நம்ம ரெண்டு பேருக்கு ஓட்டுப் போட்டதா சொல்லியிருக்காரே :-)

சீனு said...

//கா.சிவா, சீனுவோட கமெண்ட் படிக்கலையா? நம்ம ரெண்டு பேருக்கு ஓட்டுப் போட்டதா சொல்லியிருக்காரே :-)//
இதென்ன கலாட்டா? இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாக்கிடாதீங்க...

கால்கரி சிவா said...

ஆமாம் உஷா அவர்களே

Dharumi said...

அய்யா நாணு,

எப்படியும் அடுத்த தேர்தலில் டாப் 10-ல் முதல் இடம் எனக்கு வாங்கித்தந்து விடுவது என்று கங்கணம் கட்டியாச்சா..?

இப்படி கொஞ்சம் பேர் அலையிறீங்க'பா!

அதெல்லாம் இருக்கட்டும்; மொதல்ல ஒரு ப்ளாக் ஒண்ணு ஆரம்பிச்சு, ஜோதியில கலந்திடறதுதான...

Anonymous said...

தேர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

வாழ்த்துறதுக்காச்சும் நேரம் வந்ததே...ஹிஹி

மாஹிர்
http://techtamil.blogspot.com

கடல்கணேசன் said...

தேர்ந்தெடுக்கப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
சிறப்புத் தேர்வாக எனது வலைப்பக்கத்தையும் தேர்ந்தெடுத்த வலை நண்பர்களுக்கு எனது நன்றி.

Syam said...

//இட்லிவடைக்கு வந்த ஓட்டுகள் செல்லாதவை :-)//
என்னோட பேரு வரலனு தெரிஞ்ச உடனே...இது உண்மைனு தோனுங்க்னோவ் :-)

Syam said...

தேர்ந்தெடுக்கப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

உங்கள் பங்கு மென்னேலும் தமிழ் வலை உலகுக்கு தேவை என்பதை இதன் மூலம் உணர்த்திய...

என்னமோ ஒளர்ரேன்..மக்களே எல்லாம் நல்ல இருங்க... :-)