பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 30, 2006

பெரியார் படத்திற்கு சில யோசனைகள் - 2

போன வாரம் பெரியார் படத்திற்கு சில யோசனைகளை தொடர்ந்து இந்த வாரமும்.
( நன்றி துக்ளக் ).


கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி !

உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும், எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் "பூச்சாண்டி, பூச்சாண்டி'
என்பது போல், இவை எளியோரையும் பாமர மக்களையும், வலுத்தவர்களும்
தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும்.

– "மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்' என்ற நூலிலிருந்து.பெண்களும் கற்பும்

பெண் தன்னைப் பற்றியும், தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ள, தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

– 3.11.1935 "குடி அரசு' இதழ்பெண்களுக்கு அறிவுரை

ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது, அநாகரீகமும் தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்.

– "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி' என்ற நூலிலிருந்து.உண்மையான சமரசம்

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.

– "தந்தை பெரியார் அறிவுரை 100' என்ற நூலிலிருந்து.பெண்ணடிமை ஒழிய...

பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும். திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது... திருமணம் என்பது ஆண்களுக்கு நன்மையாகவும், பெண்களுக்கு கேடாகவும் இருக்கிறது. பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்.பெண் விடுதலை

...கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான, நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்... கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

– "உயர் எண்ணங்கள்' என்ற நூலில் பெரியார்ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது

...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,
ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.
...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.அடிமைத்தனம்

மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ சுபாவமானது. அதை ஏதோ நிர்பந்தத்திற்காக தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தன மேயாகும்.கற்பு என்பது புரட்டு

சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்கு, சிறிதும் தேவையில்லாததேயாகும். எப்படி கற்பு என்ற வார்த்தையும் அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகும் என்றும் சொல்லுகிறோமோ, அது போலவே விபச்சாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும்
புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமானதென்றும் கூட
விளங்கும்.ஒழுக்கம் அவசியமில்லை

சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும், இந்திரியச் செயலையும் கட்டுப்படுத்தும்படியானதான கொள்கைகளை, ஒழுக்கங்களை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவணியாகுமா? செலாவணியாவதாயிருந்தாலும், அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளை கவனிக்க வேண்டாமா என்றுதான் கேட்கிறோம்.கர்ப்பத்தின் விளைவு

பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம்
அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும் கர்ப்பம்
என்பதே மூலகாரணமாயிருக்கிறது. பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும்
என்று நாம் சொல்லுகின்றோம்.

– "பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலிலிருந்து.பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை கற்பு
என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது! கூடாது!

– தந்தை பெரியார் – சமுதாய சீர்திருத்தம் என்ற நூல் – பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகேள்வி : பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?

பதில் : கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபச்சார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.

– தந்தை பெரியார் – குடிஅரசு 29.10.1933 – "விடுதலை' வெளியிட்ட தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
( தொடரும்.. :-)

8 Comments:

arunmoli said...

பாவம் சொக்க தங்கம் சோ. இதையெல்லாம் 3 மாதத்திற்கு முன்பே போட்டிருந்தால் படம் எடுப்போர் சேர்த்து இருப்பார்கள். படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இப்போது புலம்பி என்ன பிரயோசனம் :-)

Anonymous said...

put other articles of thuglak.

IdlyVadai said...

அனானி - உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்க முடியவில்லை. Sorry.

Anonymous said...

"பாம்பையும் பாப்பானையும் ஒருசேரப் பார்த்தால் பாப்பானை முதலில் அடித்துக் கொல்"

- தந்தைப் பெரியார்

Dawood ibrahim said...

//
கர்ப்பத்தின் விளைவு

பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம்
அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும் கர்ப்பம்
என்பதே மூலகாரணமாயிருக்கிறது. பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும்
என்று நாம் சொல்லுகின்றோம்.

– "பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலிலிருந்து.
//

அதுக்காக என்ன ஆண் கர்பமடைய முடியுமா...?

என்ன உளரல் ?


நடுவுல இந்த அருன் மொழி என்ற தி.குஞ்சு வந்து ஒரு பெனாத்தல் வேற...

Vajra said...

//
ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது

...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,
ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.
...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.
//

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க விடாது கருப்பு, விடாது கருப்பு என்ற ஒரு உத்தமன் இருந்தாய்யா........அவனக் காணோம்!

-இந்தியன் படத்தில் கவுண்டர் சொல்வது போல் படித்துக் கொள்ளவும்.

bala said...

//இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்./
//
வஜ்ரா அய்யா,

இப்படி நம்ம வெங்காயத் தலைவர் கடைப்பிடிக்க சொன்ன ஸ்டெப்னிகள் கல்ச்சர் (not even stepney culature)
நமது திராவிட குஞ்சுகளை பிடித்து கொண்டதால் தான் இந்தியாவிலேயே AIDS incidence அதிகள் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது.
வழ்க பெரியார்.

பாலா

ரொம்ப நல்லவன் said...

ஒருவர் தான் சம்பத்தப்பட்ட எல்லா முடிவுகளையும் அவர் தான் எடுக்க வேண்டுமே தவிர மற்றவர் கட்டாயப்படுத்த கூடாது என்பது தான் பெரியார் கூறுவதின் சாரம். முன்னேறிய நாடுகளின் சமூகமும் அப்படி தான் இருக்கிறது.