பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 02, 2006

சென்னை சில்க்ஸை தொடர்ந்து 20 கடைகளை இடிக்க நோட்டீஸ்

ஆகஸ்ட் மாதம் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க கோர்ட் உத்தரவிட்டது. அதை பற்றி R.L.Narayanan (The Hindu) அலசிய கட்டுரையை படிக்க

இதை தொடர்ந்து இன்று மேலும் இருபது27 கட்டடங்களை 30 நாட்களுக்குள் இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் நியூ சரவணா ஸ்டோர் , போத்தீஸ், ஸ்ரீ சங்கர பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்றவை அடங்கும். இவையாவும் அனுமதியின்றி அடுக்குமாடி கட்டடங்களை கட்டி உள்ளனர்.


முன்பு சென்னை சில்க்ஸ் இடித்த போது வந்த நக்கல் படம் இது (Keerthivasan Rajamani, http://chennai.metblogs.com )

11 Comments:

IdlyVadai said...

Update:
1. உஸ்மான் சாலையில் உள்ள சரவணா கோல்டுஹவுஸ் நிறுவனத்தின் 7 மாடிக் கட்டடம் (7 தளங்களுக்கும் இவர்கள் அனுமதி பெறவில்லை)
2. 9 மாடிகளைக் கொண்ட நியூ சரவணா ஸ்டோர்ஸின் அனுமதி பெறாத பல தளங்கள்
3. சரவணா செல்வத்திரத்தினம்
4. ஜி.ஆர்.டி நிறுவனம்
5. ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ்
6. போத்தீஸ்
7. கோடம்பாக்கம் சேகர் எம்போரியம்

Anonymous said...

Was CMDA sleeping all these days or was it fear of rebuke from High Court that prompted this move.

பொன்ஸ்~~Poorna said...

எல்லாத்தையும் இடிச்ச பின்னால தி நகர் எப்படி இருக்கும்?!!!

இப்போவே ஒரு படம் எடுத்து வச்சிகிட்டா இருபது வருடம் கழித்து "சென்னை பை 2006"னு ஒரு forward மெயில் அனுப்ப வசதியா இருக்கும்..

IdlyVadai said...

பொன்ஸ் - வலது பக்கம் பார்த்தீர்களா இன்றைய வலைப்பதிவு மெனு ?

bala said...

//1. உஸ்மான் சாலையில் உள்ள சரவணா கோல்டுஹவுஸ் நிறுவனத்தின் 7 மாடிக் கட்டடம் (7 தளங்களுக்கும் இவர்கள் அனுமதி பெறவில்லை)
2. 9 மாடிகளைக் கொண்ட நியூ சரவணா ஸ்டோர்ஸின் அனுமதி பெறாத பல தளங்கள்
3. சரவணா செல்வத்திரத்தினம்
4. ஜி.ஆர்.டி நிறுவனம்
5. ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ்
6. போத்தீஸ்
7. கோடம்பாக்கம் சேகர் எம்போரியம்//

இட்லிவடை அய்யா,

இந்த கடைகளுக்கு பின்னால் உள்ள ஆதிக்க சக்திகள் யார் என்பது யாருக்கு தெரியும்?
ஒரு வேளை நம்ம மடிப்பாக்கம் பார்ட்டிக்கு தெரிந்திருக்குமோ?
அல்லது சட்டையை அசுரத்தனமாக கிழித்து முதுகில் முத்திரை குத்தும் அல்லது குத்தின முத்திரையை படிக்கும் பார்டிக்கு
தெரிந்திருக்குமோ?

பாலா

பொன்ஸ்~~Poorna said...

பார்த்தேன் இட்லிவடை :)

நன்றி :) ஆனா எனக்கென்னவோ அந்த மெனுவைப் படிக்கிறது நானும் நீங்களும் மட்டும் தானோன்னு ஒரு சந்தேகம் ;) :))))))

பொன்ஸ்~~Poorna said...

சரி, இந்த தினமணி கார்ட்டூனில் என்ன இருக்கு? தட்டிப் பெரிது பண்ணி பார்க்கும் வசதியையும் எடுத்துட்டீங்க போலிருக்கு..

பூதக் கண்ணாடி தான் எடுத்து வரணும்.. :(

நாகு said...

இந்த இடிமான உத்திரவுகள் எல்லாம் பம்மாத்து வேலைகள் தான். எனக்கு தெரிந்து சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட (அப்பட்டமான விதிமுறைகளை மீறிய) கட்டிடங்களை இடிக்க உத்திரவு இட்டது. ஆனால் இன்றும் அவை அப்படியேதான் இருக்கிறது. ஊழல் ரொம்பி வழியும் துறைகளிலே சி.எம்.டி.ஏ.வும் ஒன்று என்பது மறைக்கமுடியாத ஒன்று. சொந்த வீடு கட்டிய அனைவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும்.

இந்த விசயத்திலும் இது தான் நடக்க போகிறது. நீங்கள் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட போவதில்லை. இந்த இடிமான மிரட்டல் எல்லம்.....ச்ச்ச்சும்மமா.....லுலுலுலு மாதிரியாக்கும்!

வடுவூர் குமார் said...

போன வாரம் அங்கு இருந்த போது பார்த்தேன்,என்னடா ஓட்டை ஓட்டையாக இருக்குதே என்று.
இது தான் விஷயமா?

நல்ல மு உதாரணம்.

IdlyVadai said...

பொன்ஸ் - சரி பண்ணிவிட்டேன். ஆனால் மேலே உள்ள படத்துக்கு பண்ணலை :-)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//ஆனால் மேலே உள்ள படத்துக்கு பண்ணலை :-)//

இது எல்லாம் ஓர வஞ்சனை சொல்லீட்டேன்.