பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 06, 2006

சிக்குன் குனயாவில் சிக்கிய நடிகர்கள்

நடிகர் நடிகைகளுக்கு சிக்குன் குனியா காய்ச்சல் பரவி வருவதால் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நடிகர் ஜெயம் ரவி தீபாவளி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த வேளையில் ஜெயம் ரவியை திடீரென சிக்குன் குனியா தாக்கியதால் அப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரையும் சிக்குன் குனியா தாக்கியது. விக்ரமுக்கு காய்ச்சல் குணமான பிறகும் கை, கால்களில் வலி இருப்பதால் அவரது படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை சதா மற்றும் நடிகை ஷோபனா ஆகியோரும் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6 Comments:

சிறில் அலெக்ஸ் said...

அப்படா ஒரு வழியா அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சிடும். நடிக நடிகைகளுக்கு ஒண்ணுன்னா கலைஞர் 'அழாமலே பால்குடுப்பாரே'.

சிக் குன் குனியா பாராட்டு விழா விரைவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் எதிர் பார்க்கலாம்.

அதுல எல்லாரும் 'கடி' ஜோக்தான் அடிக்கணும்.

G.Ragavan said...

தமிழகத்தில் இருக்கும் எனக்குத் தெரிந்தவர்களுக்கும் உறவினர்களும் சிக்குன்குனியா வந்து துன்பப்படுகிறார்கள். நோய் கொல்லாதுதான். ஆனால் நோயின் தாக்கத்தில் உடல் வலிவு குறைந்து இருவர் தடாலெனக் கீழே விழுந்து அடி பட்டிருக்கின்றனர். என் அத்தை ஒருவர் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார். வெறும் நீராகாரம்தான்.

Hariharan # 03985177737685368452 said...

நடிகைகள் நயந்தாரா, சதாவுக்கு கை, கால் வலி-சிக்குன் குனியான்ற செய்தி சரி.

நடிகை ஷோபனா - வயசாகி ஆர்த்ரடீஸ் மாதிரி மூட்டுத் தேய்வால கூட கை , கால் வலி வந்திருக்கலாம் இல்லியா!

செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கிற மாதிரி ஆகிடுதில்லீங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

இட்லிவடை, தகவலுக்கும், சிறில் - கமெண்டுக்கும் நன்றி. என் இப்பதிவை ஊக்கியதற்கு!

IdlyVadai said...

Suresh - கலக்கல். சிறில் அலெக்ஸ் நல்ல ஐடியா தான் கொடுத்தீங்க போங்க.

Anonymous said...

Chikun-Guniya can be fatal !!!! I know of people who have died.