அதிமுக அணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகல்; திமுகவுடன் கூட்டு
அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடப் போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
சன் டிவியில்:
* ஜெ என்னை அவமதித்தார் - திருமா.
* முன்பே வந்திருக்க வேண்டும் - மு.க
சிறுத்தைகளுக்கு விடுதலை ! ( சன் டிவி விடியோ காட்சி.. ( சுமார் தான் கண்டுக்காதீங்க )
ஜெயா டிவியில்:
மாயாவி 3D தொடரை பார்க்க உதவும் 3D மாயக்கண்ணாடியுன் விலை 6.50 மட்டுமே... என்று ஓடிக்கொண்டிருக்கிறது
திருமாவின் அவதாரங்கள் பார்க்க : http://oosi.blogspot.com/2006/09/photo.html
Update 28-Sep-2006:
திருமா பேட்டி :அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு 4 சதவீதம் இடப் பங்கீடு ஒதுக்கப்பட்டது. எங்களுக்கு சாதகமான இடங்களில் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
ஒரு சில மாவட்டங்களில் எனது கட்சி நிர்வாகிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். நான் அவர் களிடம் பேசி கூட்டணியின் முடிவுபடி போட்டியிட வேண்டும். தனியாக போட்டியிடக்கூடாது என எச்சரித்தேன்.
இதற்கிடையே அ.தி.மு.க. வினர் எங்களுக்கு ஒதுக்கப் பட்ட இடங்களில் மனுதாக்கல் செய்தனர். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது.
இது பற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் `அம்மா'விடம் தெரிவிக்க முயற்சி செய்தேன். நேற்று முன்தினம் முதல் அவரை சந்திக்க கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டேன்.
கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. எனது கட்சி நிர்வாகிகள் சிலர் எடுத்த நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்துவிட்டேன். இது பற்றி அம்மாவிடம் பேச வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்தேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
இந்த நிலையில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங் களிலும் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அ.தி.மு.க.வினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் மீண்டும் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி னேன். போயஸ் கார்டன் முன்பு நானும் எனது எம்.எல்.ஏ.க்களும் அம்மாவை சந்திக்க காத்திருந்தோம். தங்களை சந்திக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால் அதற்கும் எந்த பதிலும் வரவில்லை.
பல மணி நேரம் காத்திருந்து அவமானப்பட்டேன். கடைசி நேரத்திலாவது கூப் பிடுவார்கள் என எதிர் பார்த் தேன். ஆனால் அழைப்பு வரவில்லை.
பின்னர் அங்கிருந்து கொண்டே அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம் என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தேன். அதன்பிறகும் அவர் என்னை அழைக்கவில்லை. இதனால் மனவேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன்.
48 மணி நேரமாக ஜெய லலிதாவுடன் பேச முயற்சி செய்தேன். அ.தி.மு.க. மூத்த நிர்வாகி களிடம் இருந்தும் எந்த பதில் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பினேன். அதன்பிறகு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தேன்
திமுக கூட்டணி தலைவர்கள் ரியாக்ஷன்
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம்: தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிதான் என்பதை உணர்ந்து எங்கள் கூட்டணிக்கு வந்த திருமாவளவனை வரவேற்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ரொம்பவும் மகிழ்ச்சி. தேர்தல் முடிந்ததும் வருமாறு அழைப்பு விடுத்தேன். அதிமுக கூட்டணியில் யாரும் இருக்க முடியாது. கறிவேப்பிலை போல் பயன்படுத்துவார்கள். தேர்தலுக்குப் பின் மதிக்கும் மனப்பக்குவம் இருக்காது. திருமாவளவன் வந்தது தாமதம்தான் என்றாலும் மகிழ்ச்சி.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன்:திருமாவளவன் திமுக கூட்டணிக்கு வந்ததை வரவேற்கிறேன்.
ஜெ அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சகோதரர் திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க. சகோதரி என்ற முறையில் அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான்: ""ஆத்திரமும் அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது''.
திருமாவளவன் அணி மாறியது சந்தர்ப்பவாதம் - இல.கணேசன
ஒரு அணியில் இருக்கும் போது அந்த அணியின் தலைவரை புகழ்ந்து பேசுவதும், எதிர் அணி தலைவரை பற்றி இழிவாக பேசுவதும், பின்னர் திடீர் என்று அணி மாறி வேறு அணியில் சேர்ந்து அந்த அணி தலைவரை புகழ்ந்து பேசுவதும், முன்பு ஏற்றுக்கொண்ட தலைவரை பற்றி தரக்குறைவாக பேசுவதையும் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீர் என்று தி.மு.க. அணிக்கு மாறி இருப்பது சந்தர்ப்ப வாதம். மக்கள் இதற்கு சரியான பதில் அளிப்பார்கள். இது அரசியல் நாகரீகம் கிடையாது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 27, 2006
Flash: விடுதலை சிறுத்தைகள் திமுகவுடன் கூட்டு !
Posted by IdlyVadai at 9/27/2006 09:48:00 PM
Labels: உள்ளாட்சித் தேர்தல்
Subscribe to:
Post Comments (Atom)











7 Comments:
திருமா, முக சன் டிவி வீடியோ படம்.
இது என்னடா கூத்து..
இவங்கள திருத்தவே முடியாது
இட்லிவடை,
வீடியோ கிளிபிங் எல்லாம் கொடுத்து கலக்குறீங்க.. நன்றி...
மற்றபடி அரசியலில் இதெல்லா சகஜமப்பா!!!???
இன்று இட்லிக்கடையில் திருமா சட்னி..
Update: 28-Sep-2006
திருமா பேட்டி, மற்றும் திமுக கூட்டணி தலைவர்க்ள் ரியாக்ஷன்
Update 29-Sep-2006 - ஜெ அறிக்கை - எங்கிருந்தாலும் வாழ்க !
kadiseela nambala kenain akidaranga??? ella thalivarun theliva irrukanga oru visuathila.. mannam, soodu, sorana onnum kediyathu innu...
Post a Comment