கேள்வி பதில் பகுதி என்பது எல்லா பத்திரிக்கைகளிலும் ஒரு பகுதியாக வருகிறது. ஏன் கலைஞர் கூட சில சமயம் தன் அறிக்கைகளை கேள்வி-பதில் ஸ்டைலில் தான் வெளியிடுவார்.
இந்த வாரம் சில பத்திரிக்கையில் வந்த (சுவாரசியமான?) கேள்விகளை உங்களுக்கு கொடுத்துள்ளேன். பதில்களை அந்தந்த பத்திரிக்கையில் படிக்கவும் :-)
1. கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயின்கள் ஏன் 'குடும்பப் பெண்கள்' ஆகிவிடுகிறார்கள் ? நடிப்பதை ஏன் நிறுத்திவிடுகிறார்கள் ? தொடர்ந்து நடித்தால் என்ன ? ( ஞாநி, ஓ-பக்கங்கள், ஆனந்த விகடன் )
2. தாடி, மீசை வைத்தவர் முத்தமிடுவதற்கும், மழுங்க மழித்தவர் முத்தமிடுவதற்கும் வித்தியாசம் இருக்குமா ? ( பெண்களிடம் கேட்க வேண்டிய கேள்வி என நழுவ வேண்டாம்) ( ஹாய் மதன், ஆனந்த விகடன் )
3. மக்கு என்றால் தெரியும், ப்ளாஸ்திரி என்றாலும் தெரியும், அது என்னங்க மக்கு பிளாஸ்திரி ( அரசு பதில்கள், குமுதம் )
4. சமீபத்தில் சென்னை வந்த ஜனாதிபதி அப்துல் கலாம், மாணவர்களிடையே பேசுகையில், பொறியாளராக, மருத்துவராக, ஆசிரியராக விரும்புவோர் கையை உயர்த்தலாம்' என்ற போது, மகிழ்ச்சியோடு கை உயர்த்திய மாணவர்கள், அடுத்து 'அரசியல்வாதியாக விரும்புவோர் கையை உயர்த்தலாம்' என்ற போது ஒரு மாணவர் கூட கை உயர்த்தாதது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
( கேள்வி பதில் பகுதி, துக்ளக் )
5. 'ஒரு முதல்வர் ஆற்ற வேண்டிய பணி, முடிதிருத்தும் கடையைத் திறந்து வைப்பது' என்ற மிகப்பெரிய முன்னுதாரணத்தை கருணாநிதி ஏற்படுத்தியிருப்பதாக ஜெ பேசியிருக்கிறாரே ( தராசு பதில்கள், கல்கி )
6. வி.ஐ.பி-களுக்கு சிறப்பு தரிசனம் சரிதானா ? ( சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், சக்தி விகடன் )
7. அர்ச்சனை செய்யும்போது, தேங்காய் அழுகி விட்டால் கெடுதல் ஏற்படுமா? வேறு தேங்காய் வாங்கி அர்ச்சனை செய்யலாமா? ( ஸ்ரீவேணுகோபாலன் பதில்கள், குமுதம் பக்தி )
8. "புதிதாக ஏற்றுமதித் தொழிலில் இறங்கப்போகிறேன். என்னென்ன பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது?" ( நாணய விகடன் )
9. "எனக்கு வயது 50. கடந்த ஒன்றரை வருடமாக, எனக்கு எந்நேரமும் பூச்சி கத்துவதுபோல சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதுவரை பல ஈ.என்.டீ., மற்றும் பொது நல மருத்துவர்களை சந்தித்து விட்டேன். எல்லோருமே ‘உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றுதான் சொல்கிறார்கள். இதற்கு ஒரு தீர்வு சொல்வீர்களா?" ( டாக்டர் பதில்கள், அவள் விகடன் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, September 23, 2006
பத்திரிக்கை விஷமம் - புதிய பகுதி
Posted by IdlyVadai at 9/23/2006 03:57:00 PM
Labels: பத்திரிக்கை விஷமம்
Subscribe to:
Post Comments (Atom)











5 Comments:
நானும் ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். ஏன் பழனியாண்டவரின் இணையதளம் தமிழில் இல்லை?
பழனியாண்டவரும் ஆங்கிலமும்
http://www.balachandar.net/node/186
நன்றி
பாலச்சந்தர் முருகானந்தம்
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
பதிலும் தரலாமில்ல! அதாவது அவங்க பதில் + உங்களுது!
Balachander - :-)
இலவசக்கொத்தனார் - தரலாம், நீங்களே அதை தேடி படித்தால் சுவரசியமாக இருக்கும் :-)
மாப்ளே!
கோழி குருடாயிருந்தா என்ன? குழம்பு ருசியா இருந்தா போதும்!
இலையா முக்கியம்? வைக்கிற இட்லி வடை ருசியாயிருந்தா சரிதான்!
டெம்ப்ளேட்டைபற்றி கவலைப் படாதே மாப்ளே!
மத்ததைப் பாரு மாப்ளே!
எங்க பேட்டைல அக்கா பசங்களை மாப்ளேன்னுதான் கூப்பிடுவோம்
நீ இன்னான்றே - கோவிச்சுக்க மாட்டீல்ல?
Chinna (Ppa Doss)
உங்க அட்வைஸுக்கு நன்றி மாப்பு!
Post a Comment