பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 12, 2006

ஜெ - பேட்டி

கேள்வி: விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்லி இருக்கிறீர்களே?

பதில்:- பொதுவாக சொல்லி இருக்கிறேன். ஆருடமாக சொல்லவில்லை. விரைவில் சட்டசபை தேர்தல் வந்தால் நல்லதுதானே.

கே:- சென்னையில் இருந்து ஆயுதம் கடத்தப்பட்டது கடந்த ஆட்சியில் என்று டி.ஜி.பி. சொல்லி இருக்கிறாரே?

ப:- முதல்-அமைச்சர் பதில் சொல்ல முடியாததால் போலீஸ் டி.ஜி.பி., தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் போன்றோரை வைத்து அறிக்கை விட வைக்கிறார். இது வெட்க கேடானது. தேவைப்பட்டால் அமைச்சர்களை வைத்து பதில் சொல்லலாம். அதை விட்டு அதிகாரிகளை வைத்து அறிக்கை விடுவது கண்ட னத்துக்குரியது.

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ராக்கெட்டுகள் அனுப்பட்டது இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். இந்த சம்பவத்தால் இந்திய அளவில் கருணாநிதிக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எனது ஆட்சியில்இது நடந்ததாக என் மீது பழி போட நினைக்கிறார். அதற்காக அதிகாரிகளை வைத்து இதை சொல்ல சொல்கிறார். எனது ஆட்சியில் இது நடைபெற வில்லை.

அப்படி நடைபெற்று இருந்தால் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் எனக்கு தெரியாமல் இருந்திருக்காது. எனது ஆட்சி யில் இப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடைபெற வில்லை.

கே:- முனீர்கோடா மீது நீங்கள் நடவடிக்கை எடுத்ததை கருணாநிதி குறை சொல்லி இருக்கிறாரே?

ப: இது பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. மதானி என்ற தீவிரவாதி 1998-ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க பல விதத்தில் எனக்கு நெருக்கடி வந்தது. மத்திய அரசு குறிப்பாக காங்கிரஸ் அவரை விடுவிக்க முயற்சி செய்தது. ஆனால் அதை நான் ஏற்கவில்லை.

மதானி பல முறை ஜாமீனில் வெளிவர முயன்றும் கோர்ட்டு அனுமதிக்கவில்லை. நான் முதல்-அமைச்சராக இருந்த போது மதானி கோவை மத்திய சிறை வளாகத்தில் தான் இருக்க வேண்டும் என்று நான் வகித்து வந்த உள்துறை மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

சிறுபான்மை பிரிவை சேர்ந்த முனீர்கோடாவை அவர் மீது நம்பிக்கை வைத்து உள்துறை செயலாளராக்கியது நான் தான். ஆனால் அவர் உள்துறை பிறப்பித்த ஆணைக்கு எதிராக, மதானி கோவை சிறை வளாகத்தை விட்டு வெளியே வரலாம் என்று ஒரு ஆணையை எனக்கும், தலைமை செயலாளருக்கும் தெரியாமல் பிறப்பித்தார்.

இது போல மதானிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு ஆட்சேபனை தெரிவித்தது.

ஆனால் ஆட்சேபனை இல்லை என்றும், மதானி சென்னை வருவதற்கு எதுவா கவும் உத்தரவை எனக்கும், தலைமை செயலாளருக்கும் தெரியாமல் பிறப் பித்தார். இது மதானியை தப்ப வைக்கும் முயற்சி. இதன் காரணமாகவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை சஸ்பெண்டு செய்தது போதாதது. டிஸ்மிஸ் செய்து இருக்க வேண்டும்.

தேச துரோகியான முனீர் கோடாவின் பின்னணியில் தான் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடக்கிறது.

கே: காஞ்சி மடாதிபதியை கைது செய்த பிரேம்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருக்கிறாரே?

ப: காஞ்சீபுரத்தில் சங்கர ராமன் கொலை வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த பிரேம்குமாரை இன் றைய முதல்வர் கருணாநிதி சஸ்பெண்டு செய்து இருக் கிறார். இதுபோல தா.கிருஷ் ணன் கொலை வழக்கில் அழகிரியை கைது செய்த மாரிமுத்துவும் சஸ்பெண்டு செய்யப்பட்டு 2 நேர்மையான அதிகாரிகளும் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

கே: விடுதலைப்புலிகளை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

ப: இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை அ.தி.மு.க. எதிர்க்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். அதை இப்போதும் நாங்கள் எதிர்க்கிறோம்.

விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க நான்தான் காரணம். ஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதி விடு தலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது விவாதிக் கப்பட வேண்டிய விஷயம் என்று சட்டசபையில் சொல்லி இருக்கிறார். இதற்கு அவரிடம் தான் நீங்கள் விளக்கம் கேட்க வேண்டும்

3 Comments:

Anonymous said...

//அப்படி நடைபெற்று இருந்தால் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் எனக்கு தெரியாமல் இருந்திருக்காது//

உங்களுக்கு தெரியாம பல விஷயங்கள் நட(க்கிறது)ந்ததுதானே உங்க பிரச்சினையே!

Anonymous said...

>>" முதல்-அமைச்சர் பதில் சொல்ல முடியாததால் போலீஸ் டி.ஜி.பி., தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் போன்றோரை வைத்து அறிக்கை விட வைக்கிறார். இது வெட்க கேடானது. "

It's regrettable that the whole thing got politicised. This is a matter of national security not a topic for Arratai Arangam. We need factual information, not something uttered by a politician. If a DGP/Chief Secretary (Who are adminstrative people) can't speak on these issues to the public then who can?
Definitely, they know more about those issues than a Chief Minister and how could that be a shame? If the CM has to investigate everything and report by himself, then why are we wasting public money appointing DGPs and Secretaries.

The DGP has mentioned the three dates of shipment given by the Andhra Police and all of them fall in a period before Karunanidhi took over -- in JJ's period. What evidence she has to say that these happened in TN after Karunanidhi took over?

BTW, do any one realise the quality of response between K and J has detoriated -- infact, it's become downright obscene and with thr coming Local Body elections, it can only go worse.

lollu-sabha said...

பொதுவாக சொல்லி இருக்கிறேன். ஆருடமாக சொல்லவில்லை.

சரியான காமடி. ஜெயலலிதாவிற்கு ஜோசியம் கூட தெரியுமா?

lollu-sabha.blogspot.com