பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 31, 2006

'பெரியார்' கருத்துக்கள்

‘‘நாங்கள் இன்னமும் குஷ்புவை நடிக்க வைப்பது பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லை. பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த விஷயம் ஏன் இவ்வளவு தூரம் பெரிதாகிறது என்று தெரியவில்லை. சட்டசபையில் விவாதித்து பற்றி கூட எனக்குத் தெரியாது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. என்றாலும் இந்த விஷயத்தில் அமைச்சரின் பதில் சரியான தாகத்தான் இருக்கிறது. அதையேதான் நானும் உங்களுக்கு பதிலாக சொல்ல விரும்புகிறேன். மற்றபடி எந்தப் பிரச்னை யும் இன்றி பெரியார் படம் எடுத்து முடிக்கப்படும்’’ - பெரியார் படத்தின் இயக்குநர் ஞானராஜ சேகரன்


ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் தமிழக பண்பாட்டை குஷ்பு ஏற்கனவே இழிவு படுத் தினார். தமிழக பெண் களின் கற்பை கொச்சைப்படுத்தினார். எந்த பெண்ணாவது கற் போடு இருக்கிறார்களாப திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா என்றெல்லாம் கேவலப்படுத்தினார்.

கண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது. எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன்.

பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம். குஷ் புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது.

பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.

அவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம். நூற்றுக் கணக்கான படங் கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும்.

திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பதுப புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்பையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடு தமிழ் கலாசாரத்தை கொச் சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.

தவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்து வந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.

ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர் பொருத்தமானவர்.

மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம் நிறைந்தது. போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப் பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா? அவர் தியாகம் பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருத்தமாகும்.

பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேறு வேலை இல்லையாப என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களை அர்ப்பணித்துள்ளோம். எண்ணற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்கு தெரியவாய்ப்பில்லை.

காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும் ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் பேசு வதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேச வேண்டும். நக்கல், கிண்டல், கேலி, எல்லாம் சினிமா வில் வைத்துக் கொள்ளுங்கள்.

குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதாப மேலே விளைகிறதாப பலாப்பழம் மரத்தில் காய்க்கிறதாப நிலத் தின் கீழ்காய்க்கிறதாப என் றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம். - பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன்


‘‘ஏங்க, நான் இருபத்தைந்து வருஷமா சினிமாவில் நடிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கு நானே ‘பெரியார்’ படத்தில் ரெக்கமென்டேஷன் செய்துக்க முடியல. கொள்கை அடிப்படையில் நான் நாத்திகவாதி. அதற்காகத்தான் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை.

படத்தை இயக்கும் ஞானராஜசேகரன், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தப் படத்தை எடுக்க ஒவ்வொரு கட்டமாக யோசித்து வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். இத்தனை வருஷமா நடிச்சுக்கிட்டிருக்கிற எனக்கே ஏதோ புதுமுகத் தேர்வு மாதிரி, என் புகைப்படங்களின் பல ‘போஸ்’களை அனுப்பச் சொல்லி நான்கு வருடத்திற்கு முன்பே அதை கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்து, தந்தை பெரியாரின் பல வயதுப் படங்களுடன் எனது முகச்சாயலை ஒப்பிட்டுப் பார்த்து, ஓரளவுக்காவது பொருந்துகிறதா என ஆராய்ந்துதான், எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். இது யாருக்குத் தெரியும்?

அதேபோன்று பெரியாருடன், காந்தி, ராஜாஜி எல்லாம் வருகிறார்கள். அவர்களையும் அப்படித்தான் மிகுந்த சிரமத்துடன் தேர்வு செய்தார். ராஜாஜியாகத் தேர்வானவரின் ஒப்பனை படத்தைப் பார்த்து ராஜாஜி குடும்பத்தாரே வியந்திருக்கிறார்கள். இப்படி முக அமைப்பு மட்டுமின்றி, அதற்கேற்ற நடிப்பாற்றலும் இருந்தால்தான் அவர்களைத் தேர்வு செய்வார். அதுதான் நடக்கிறது.

அதேபோன்றுதான் நடிகை குஷ்புவின் தேர்வும். அவரைவிடச் சிறந்தவர் என யாரைக் கூறுகிறார்களோ அந்த நடிகையைக் கூறட்டுமே. குஷ்பு உலகத் தரத்தில் போற்றக்கூடிய ஒரு சிறந்த நடிகை. பல படங்களில் என்னுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். ஒருவரது கொள்கை, கருத்து என்பது வேறாக இருக்கலாம். நடிப்பில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது. ‘தந்தை பெரியார்’ படம் என்பது, ஒரு வரலாற்றுப் படம். அப்படி இருக்கும்போது, அதில் நடிப்பை மட்டுமே பார்க்கணும். மணியம்மை பாத்திரத்திற்கு பலரின் புகைப்படத்தைத் தேர்வு செய்து, ஆராய்ந்து இறுதி முடிவாகத்தான் குஷ்பு தேர்வாகியுள்ளார். நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர், அந்த வேடத்திற்கு மிகப் பொருத்தமானவர்தான்.

இதைத் தெரிந்துகொள்ளாமல், சர்ச்சைக்குள்ளாக்குவது வேண்டாத ஒரு விஷயம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாழ்க்கைப் படத்தை, உயிரோட்டத்துடன் பார்க்க வேண்டிய எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். அதைத்தான் பார்க்கணும். இதுதான் என் கருத்து!’’ - நடிகர் சத்யராஜ்


‘தந்தை பெரியார்,’ படத்திற்கு அரசு நிதியுதவி செய்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. அந்தப் படத்தை இளைய தலைமுறையினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது வாழ்க்கை, அனைத்துத் தமிழர்களுக்கும் பாடமாக அமையும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் முன்னதாகவே இதனை சர்ச்சைகளுக்குள் சிக்க வைப்பது நல்லதல்ல.

ஆற்றல் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஆனால், ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்ற திரைப்படத்தில் சிக்கலுக்குரிய ஒருவரைத் திட்டமிட்டே நடிகையாகத் திணிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

குஷ்பு நடிப்பதற்கு தமிழக மக்களிடையே இயல்பாக எதிர்ப்புக் கிளம்பினால், அது ‘தந்தை பெரியார்’ திரைப்படத்திற்குக் களங்கமாக அமையும். எனவே, அவற்றைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. தமிழக அரசுதான் இதுகுறித்துத் தீர்மானிக்க வேண்டும்!’’ - விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயளாலர் திருமாவளவன்


‘‘என்ன சொல்வது? நான் அப்போது சொன்ன கருத்தைத்தான் இப்போதும் சொல்வேன். கற்பு பற்றி நான் சொன்ன விதத்தை_அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டிருந்தால் என்னை எதிர்த்திருக்கமாட்டார்கள். புரிந்துகொள்ள இயலாத அவசர புத்தி அவர்களுக்கு. அதனால்தான் அப்படிச் செய்தார்கள். உண்மையிலேயே தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது.

இப்போதும் அப்படித்தான். தமிழகத்தில் மக்கள் பிரச்னையாக எவ்வளவோ உள்ளது. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, குஷ்பு ‘பெரியார்’ படத்தில் மணியம்மையாக நடிப்பது மட்டும்தான் பிரச்னை என்பதுபோல், பா.ம.க. எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். அவர் போன்ற பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லை போலும்! அதுதான் என் பிரச்னையை எடுத்துப் பேசுகிறார்கள். அவருக்குத் தமிழ்நாட்டிலுள்ள மற்ற பிரச்னைகள் பற்றிய கவலையே இல்லை என்றுதான் கூறுவேன்.

வேறு என்ன சொல்வது? ‘பெரியார்’ படத்தைப் பொறுத்தவரைக்கும் நான் மணியம்மையாக நடிக்கத்தான் போகிறேன். என்னவிதமான எதிர்ப்பு வந்தாலும் சரி. பின்வாங்கவே மாட்டேன். கட்டாயம் நடிப்பேன்!’’ - நடிகை குஷ்பு.

அடடே கார்ட்டூன் : மதி, தினமணி

25 Comments:

லிவிங் ஸ்மைல் said...
This comment has been removed by a blog administrator.
வணக்கத்துடன் said...

'சீப்பு' ஒரு பிரச்சினையாகி, எப்படியாவது இந்த கல்யாணம் நின்னுபோகாதான்னு எதிர்பாக்குறவங்க ஆசை நிறைவேறுதா பாக்கலாம்! ;-)

லிவிங் ஸ்மைல் said...

"பெண்களின் கன்னித்தன்மையை கேள்விக்குள்ளாக்க காரணமாய் இருப்பது கற்பப்பை தான். அதனால், பெண்கள் தங்களின் கற்பப்பையை எடுத்து விடுங்கள். அதன் மூலமே பெண்கள் கற்பென்ற கட்டிலிருந்து விடுதலை பெறமுடியும்."

பெரியார் அவர்கள் ஒருமுறை கூட்டத்தில் சொன்னதாக நான் கேள்விப்பட்டது...

அப்பிடியா...?!

: )

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும் ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் பேசு வதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேச வேண்டும். நக்கல், கிண்டல், கேலி, எல்லாம் சினிமா வில் வைத்துக் கொள்ளுங்கள்.//

//பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேறு வேலை இல்லையாப என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களை அர்ப்பணித்துள்ளோம். எண்ணற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்கு தெரியவாய்ப்பில்லை.//

//..உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதாப மேலே விளைகிறதாப பலாப்பழம் மரத்தில் காய்க்கிறதாப நிலத் தின் கீழ்காய்க்கிறதாப என் றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம். - பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன்//

ம்..
ரஜினி (சினிமாவில் புகைபிடித்தல்) எதிர்ப்பு

குஷ்பூ (திருமணத்திற்கு முன் உடலுறவு பற்றிய கருத்து) எதிர்ப்பு

விஜயகாந்த் (சினிமாவில் இருந்து அரசியல்) எதிர்ப்பு

போன்ற எதிர்ப்புப் போராட்டங்களில் காட்டும் வேகத்தையும்,நேரத்தையும் பா.ம.க மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் கோகோ கோலாவில் காட்டாமல் அமுக்கி வாசித்தது ஏன்?

மக்களின் வாழ்வியல் ஆதாரமான தண்ணீரைச் சுரண்டும் இந்த விசயத்தில் பசுமைத் தாயகம் என்ன செய்தது?

http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_25.html

எம்.எல்.ஏ. வேல்முருகன சாருக்குத் தெரியுமா?

ஒரு வேளை கோக்-ன் வழியில் சென்றால் குஷ்பூவிற்கும் நற்சான்றிதழ் கிடைக்குமோ?

நடிகர்/நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை/கருத்துகளுக்கும் அவர்களின் திரை வேடத்திற்கும் என்ன சம்பந்தம்?

பகுத்தறிவு பெரியாரோடு போய்விட்டது. :-(((

பா.ம.க மட்டும் அல்ல தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இப்படித்தான்.

1) எதில் விளம்பரம் கிடைக்குமோ அதற்காக போராடு.போராட்டம்தான் முக்கியமே தவிர அதன் முடிவு முக்கியமல்ல. (சிதம்பரம் கோவில் தமிழ் பிரச்சனை தூங்குகிறது)

2) எதில் ஆதாயம் கிடைக்குமோ அங்கே சமரசம் செய்து கொள்.

3) காசுக்காக நடிக்க வந்தவர்கள். திமிரோடும் ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் நடந்தாலும் அவர்களின் கூட்டணியால் ஆதாயம் என்றால் சகோதரியாய் நினைத்து கூட்டணிவைத்துக் கொள். அதுதான் இராஜ தந்திரம்.

:-(((((

Idly Vadai said...

அப்படியே உங்க ஓட்டை போட்டுட்டு போங்க. நன்றி!
அன்புடன்,
இட்லிவடை

http://vote.sparklit.com/web_poll.spark?pollID=1003873&sparkKey=b30d9936491f3e4907d13c1405ca4179b0

மு.மயூரன் said...

குஷ்பூ சொன்ன கருத்துக்கள் பெரியாரது கருத்துக்களைவிட பெரிதாக முரண்படவில்லை.
கற்பை வெங்காயம் என்று தூக்கிபோட்டவர்தான் பெரியார்.

Anonymous said...

Mr Gnanasekaran IAS will not give a chance to Kusbu. all tamils must boycott Kusbu. she visited red light hotels in London. that is her private life. but she has no rights to talk about Tamil Women.

Thamil said...

பிரச்சினை அதுவல்ல மணியம்மைக்கு குஷ்பூ ஏற்ற்வரா, மணியம்மையின் கருத்தோடு இவர் ஒத்து போகிறாரா? மணியம்மையின் கற்பு பற்றிய கருத்து என்ன? குஷ்புவின் கருத்து என்ன? எதிர்கருத்து உடையவர்களை எப்படி ஒரு உருவத்தில் பார்பது, குஷ்பு போன்றதுதானா மணியம்மையின் வாழ்வும்.

Vajra said...

thamil,

அப்போ, நோபல் பரிசு பெற்ற ஜான் நாஷ் பாத்திரத்தில் நடித்த ரஸ்ஸல் க்ரோ (beautiful mind) என்ன கணித மேதையாக இருக்கவேண்டுமா ?

அம்மன் வேடத்தில் நடித்த நடிகைகள்

ரோஜா
ரம்யா கிருஷ்ணன்

போன்றவர்கள் என்ன அம்மன் களா?

நடிகை, நடிப்புத்தான் முக்கியம்...மணியம்மை போல் இவரால் நடிக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும்...! உண்மையான உலகில் குஷ்பு மணியம்மை போல் வாழ்ந்தால் தான் அவர் மணியம்மை யாக நடிக்க முடியும் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம்...!! வெட்டிப் பிரச்சனை பேசுவதிலேயே குறியா இருக்கீங்களேய்யா!!

Samudra said...

//ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் தமிழக பண்பாட்டை //

இதை அப்படியே கருனாநிதியிடம் சொல்ல இவருக்கு தைரியம் உள்ளதா?

கரிகால சோழன், ராஜ ராஜன் - சாதனை செஞ்ச நிறைய தமிழர்கள் ரெண்டு மூனுன்னு இருந்தது சகஜமப்பா!

Anonymous said...

//
குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதாப மேலே விளைகிறதாப பலாப்பழம் மரத்தில் காய்க்கிறதாப நிலத் தின் கீழ்காய்க்கிறதாப என் றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம். - பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன்
//

அதான் மக்கா அவங்க மணியம்மையா நடிக்க தகுதியெல்லாம் சொல்லியிருக்காங்களே!!!!

குஷ்புக்கு இதெல்லாம் சொல்லி தரப் பாப்போம். இல்லேனா. நம்ம வேல் முருகனுக்கே மணியம்மையா வேஷம் கட்டிட வேண்டியதுதான்.

வேல்முருகன் தொகுதியில பாலும், தேனும் பிச்சிக்கிட்டு ஓடுது. அதனால அவருக்கும் சட்டசபையில பேச ஓன்னுமில்ல பாருங்க.அதான் அண்ணாத்தே இத்த பேசறார்.

கொஞ்சம் அசந்தா கட்டியிருக்க வேட்டியை திருடிட்டு போற களவானி பசங்க இந்த அரசியல்வாதிகள்(எல்லாரையுந்தான் சொல்றேன்), ஏதோ அந்த பொண்ணு உழைச்சி சம்பாத்திச்சிது. திருடல. பொய் சொல்ல்ல. அடுத்தவன் சொத்துக்கு ஆசை படல.

நல்ல வேளை அந்த பெரியவர் ராமசாமி போய் சேந்திட்டார். இல்லாட்டி இவனுங்களுகாகவா இத்தனை சிரமப்பட்டாம்னு நொந்திருப்பார்

Anonymous said...

//ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர் பொருத்தமானவர்.//

நம்ப சத்தியராசுந்தான் நமீதா கூட கெட்ட ஆட்டம் போடறாரே. வில்லனா நடிச்சிகிறார்.ரேப் சீன் எத்தனை கொடுத்திருக்கார். அவர் பெரியாரா நடிக்கறதில வேல்முருகனுக்கு எதுவும் தடையிருக்கா.

Thamil said...

வஜ்ரா
நான் குஷ்புவை மணியம்மை போல் வாழவேண்டும் என்று சொல்லவில்லை, அது அவரால் முடியாத விடயமும்,

பாரதியார் படத்தில் சிராஜிசண்டே நடித்தார் யார் இவரை எதிர்தார்கள். அவர் என்ன பாரதியார் போல் வாழ்ந்தாரா? அதே நேரம் தமிழருக்கு எதிராகா போராடிய கன்னட சுப்பர்ஸ்டாரை பாரதியாராக நடிக்க வைத்திருந்தால் பிரச்சினை வந்திருக்குமா? இல்லையா?
அதேபோல்தான் பாரதியாரின் மனைவியாக தேவயானி நடித்தார் அவரை யார் எதிர்த்தார்கள், அதற்க்காக அவர் என்ன பாரதியாரின் மனைவி போன்றா வாழ்கிறார்,
அந்தக்கோணத்தில் பாராது இந்தக்கோணத்தில் பார்க்கவேண்டும்.

பாரதிவேடத்தில் தமிழருக்கு எதிரான கன்னட சுப்பஸ்ரார் நடித்தால் எப்படி பிரச்சினை வருமோ,
அதே போன்ற பிரச்சினைதான் தமிழ்நாட்டு பெண்களை திருமணத்துக்கு முதல் உடலுறவு வைத்திருக்கலாம், அதை படித்த இளைஞர்கள் கண்டு கொள்ள கூடது என்ற கொள்கையுடையா குஷ்பு மணியம்மையின் வேடத்தில் நடிப்பதால் ஏற்படும் பிரச்சினையை பார்க்க வேண்டும்.

Anonymous said...

பாரதிவேடத்தில் தமிழருக்கு எதிரான கன்னட சுப்பஸ்ரார் நடித்தால் எப்படி பிரச்சினை வருமோ,
அதே போன்ற பிரச்சினைதான் தமிழ்நாட்டு பெண்களை திருமணத்துக்கு முதல் உடலுறவு வைத்திருக்கலாம், அதை படித்த இளைஞர்கள் கண்டு கொள்ள கூடது என்ற கொள்கையுடையா குஷ்பு மணியம்மையின் வேடத்தில் நடிப்பதால் ஏற்படும் பிரச்சினையை பார்க்க வேண்டும். //

குஷ்புவை தவிர மத்த நடிகைகள் எல்லாரும் இந்த விஷயத்தில் கண்ணகி போலவா கோட்பாடு வைத்திருக்கிறார்கள்?அட போய்யா...

Anonymous said...

//குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது என்று தெரியாது//

என்னய்யா கேனத்தனமா இருக்கு? மருத்துவர் இரமனடிமை அவர்களுக்கு compiler எப்படி வேலைசெய்கிறது என்று தெரியுமா? அவரவர் தொழிலுக்கு தேவையானதை தெரிந்துகொண்டால் போதாதா?

முடிந்தால் தில்லியில் கான்வெண்டில் படிக்கும் அவர் பேரனுக்கு விவசாயம் தெரியுமா என்று கேளுங்கள்!

Anonymous said...

//அதே போன்ற பிரச்சினைதான் தமிழ்நாட்டு பெண்களை திருமணத்துக்கு முதல் உடலுறவு வைத்திருக்கலாம், அதை படித்த இளைஞர்கள் கண்டு கொள்ள கூடது என்ற கொள்கையுடையா குஷ்பு மணியம்மையின் வேடத்தில் நடிப்பதால் ஏற்படும் பிரச்சினையை பார்க்க வேண்டும். //

மாற்று கருத்துள்ளவர்கள் நண்பர்களாகவோ, நல்லவர்களாகவோ இருக்க முடியாதுனு பெரியார் சொல்லியிருக்காரா. பெரியார் சொன்னது சொந்தமா சிந்திக்கடா.உங்களோட அடிப்படை உரிமைகளை போராடி வாங்குகடானு.
கல்வி,குடிநீர்,சுகாதாரம்,வேலைவாய்ப்பு
இதெல்லாந்தான் அடிப்படை உரிமை.
அந்த படத்தில யார் நடிக்கறா,இந்த படத்தில யார் நடிக்கறானு இவன் என்னா சொன்னானு அவன் என்ன சொன்னானு அலைஞ்சிட்டு இருந்திங்கனா அது விசிலடிச்சான் குஞ்சு கலாச்சாரம். அதைத்தான் நீங்க விரும்பறிங்களா? அதைத்தான் பெரியார் சொல்லிக் கொடுத்திருக்காரா?

Anonymous said...

//குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது என்று தெரியாது//

என்னய்யா கேனத்தனமா இருக்கு? மருத்துவர் இரமனடிமை அவர்களுக்கு compiler எப்படி வேலைசெய்கிறது என்று தெரியுமா? அவரவர் தொழிலுக்கு தேவையானதை தெரிந்துகொண்டால் போதாதா?

முடிந்தால் தில்லியில் கான்வெண்டில் படிக்கும் அவர் பேரனுக்கு விவசாயம் தெரியுமா என்று கேளுங்கள்!

Anonymous said...

ஒருவனுக்கு ஒருத்தி என்பது பெரியார் கொள்கையா? உங்களை பார்த்தால் சிரிப்பு இல்லை, பரிதாபம்தான் வருகிறது. ஊருக்கு தெரிந்தே அவருக்கு ரெண்டு பொண்டாட்டி, அவர் சிஷ்யபிள்ளைக்கு 3 பொண்டாட்டி!

Anonymous said...

அப்ப புதுப்பேட்டை படத்தில ஸ்னேகா விபச்சாரியா நடிச்சப்ப மட்டும் ஏன் பொத்திகிட்டு நின்னீங்க? ஒரு தமிழ் பெண்ணை இப்படி நடிக்க வைத்ததற்கு கூச்சல் போட்டிருந்தால் விளம்பரமாவது கிடைத்திருக்குமே!

Anonymous said...

By the way, இந்த பின்னூட்டமிட்டது மெய்யாலுமே அனானிதான் என்று வழக்கம்போல மாரியாத்தா கோவிலில் சூடம் அணைத்து சத்தியம் செய்கிறேன்!

Anonymous said...

//குஷ்புவை தவிர மத்த நடிகைகள் எல்லாரும் இந்த விஷயத்தில் கண்ணகி போலவா கோட்பாடு வைத்திருக்கிறார்கள்?அட போய்யா... //

இது தரங்கெட்ட வாதம். இதுனால நீங்க நடிப்புங்கற தொழில இழிவு பண்ணறிங்க.

உங்க உள்மனசு சுத்தமா ஐயா. நடிகை பார்த்தா உங்க மனசு அலையலியா. அடுத்தவங்க படுக்கையறையை விமர்சிக்காதிங்க. உங்களுக்கும் வேல்முருகனுக்கும் என்ன வித்தியாசம் அவர் குஷ்புவை சொல்லறார்,நீங்க எல்லாரையும் சொல்லறிங்க. ஒரு தவறை இன்னோரு தவறு கொண்டு சரி பண்ண பாக்காதீங்க.அடுத்தவங்களுக்கு விரல் நீட்டும் போது நீங்களும் விரலுக்கு அந்த பக்கமிருகிங்களானு பாருங்க ஐயா

Swami said...

போலி டோண்டு பிரச்சனை.
தங்கர்பச்சன் பிரச்சனை.
குஷ்பு கற்பு பிரச்சனை.
பார்ப்பனர் பிரச்சனை.
வந்தேறி பிரச்சனை.
நாய்ப் பிரச்சனை.
இளவஞ்சி - குசும்பன் பிரச்சனை.
ஐயப்பன் கோவில் பிரச்சனை.
சிதம்பரம் கோவில் பிரச்சனை.
வந்தே மாதரம் பிரச்சனை.
பெரியார் சிலை பிரச்சனை.
பெரியார் படம் பிரச்சனை.

Gap ஏ இல்லாம அடுத்து அடுத்து சூடா தமிழ் வலைப்பதிவில மட்டும் எப்பிடி? ஏதோ common factor இருக்கிற மாதிரி இருக்கு. நான் என் பிரச்சனையை நினைச்சு கவலைப் பட்டுட்டு இருந்தேன்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்து பார்த்து நிம்மதி நாடு!

சுவாம

Anonymous said...

ஏன்லே சும்மானாச்சியும் சலம்புறீக?
சந்தனம் போட்ட என்னா வரும்? மணம்! மணத்துக்கு தான் இந்தில குஷ்புன்னு பேரு. அதாவது, பெரியார் எவன் கனவிலோ வந்து, என் பட்த்தில மணியம்மையா நடிக்க குஷ்புவத்தான் எடுக்கோணும் அப்பிடீன்னு டைரக்டர் டச்சில சந்தனத்த போட்டுருங்க. இத்தன வருசமா வளத்த பகுத்தறிவு சிங்ககுட்டிங்க புரிஞ்சுப்பாங்ன்னு சொல்லியிருக்காரு!

நம்புனா நம்புங்க, நம்பாட்டி வெத்தலையில மை வெச்சு அவர் ஆவியவே கூப்டு கேட்டுற்றலாம்.

DRRS said...

நான் ஒரு வெளிநாட்டு தமிழன். தமிழக அரசியல்வாதிகளை நினைத்தால் எனக்கு நகைப்புதான் வருகிறது. நிரந்தர கொள்கை என்பதையே வைத்துக்கொள்ளக்கூடது என்பதை மட்டும் கொள்கையாக கொண்டிருப்பவர்கள்தான் இவர்கள். அதைப்பற்றி பேச வேண்டுமென்றால் ஒரு நாவலே எழுதலாம். அதேல்லாம் போகட்டும், வேறு விஷயம் கிடைக்கவில்லையென்று ஒரு திரைப்படத்திற்கு இப்படி ஒரு ஆர்ப்பாட்டமா? சட்டசபையில் பேசும் அளவிற்கு ஒரு திரைப்படத்தில் நடிகையைர் தேர்வு அமைந்திருப்பது தமிழ் நாட்டில் மட்டும்தான் நடக்கும். கற்பு நெறி தவறாத தமிழ் பெண்கள் இலவசமாக கிடைக்கப்போகும் தொலைகாட்சியைப் வீட்டிலிருந்தே பார்த்துகொண்டிருக்கும்போது தமிழ் நாட்டில் சட்ட சபையில் பேசக்கூடிய அளவிற்கு என்ன பிரச்சனை வந்து விடப்போகிறது. அதனால்தான் தங்களை பிரபலப்படுத்த வேறு விஷயங்கள் கிடைக்காது என்று உறுதியாக நம்பி இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள். பெரியார் படத்தில் யார் நடிக்க வேண்டும் என்று அந்தப்படத்தை எடுக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் என்ன உரிமை இருக்கிறது. இவர்கள்தானே தமிழ் நாட்டில் தமிழ் காவலர்கள். அப்படி என்னதான் இவர்கள் தமிழை கட்டி காப்பாத்துகிறார்கள் என்று ஒரு வெங்காயமும் விளங்க வில்லை.

ஜோ / Joe said...

ஒரு சினிமாவில் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தகுதியுள்ளவர் என்று சொல்வதற்கு ஒருவரின் நடிப்புத் திறமை தான் அளவு கோலாக இருக்க முடியுமே தவிர தனிப்பட்ட அந்த நபரின் தகுதியல்ல .இதை பகுத்தறிய முடியாமல் பகுத்தறிவு பற்றி பேசுவதில் அர்த்தமில்லை .