பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 02, 2006

கலைஞர் பேட்டி - விஜயகாந்துக்கு சவால்

கேள்வி:- "மைனாரிட்டி தி.மு.க. அரசு'' என்று அ.தி.மு.க. தலைவி திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாரே?

பதில்:- அதற்குத்தான் நிதி அமைச்சர் பேராசிரியர் சட்ட மன்றத்திலேயே சுடச்சுடப் பதில் கொடுத்து தெம்பும் திராணியும் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் பார்க்க லாம் என்று அறை கூவல் விடுத்திருக்கிறாரே.

கே:- தி.மு.க. தலைவர்களில் சில பேர் இந்தி படிக்காததால்தான், டெல்லியில் மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்பை இழந்ததாகப் புலம்புகிறார்கள் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே?

ப:- அப்படியானால் இப் போது மத்திய அமைச்சரவையில் இருக்கும் தமிழ்நாட்டுக்காரர்கள் அனைவரும் இந்தி படித்தவர்கள் என்று அவர் நிரூபிக்கத் தயாராக இருக்கிறாரா? வளர வேண்டிய ஒருவர் "புலம்புகிறார்கள்'' போன்ற வசைமொழிகளை தவிர்ப்பது நல்லது.

கே:- ஏழை விவசாயிக்கு தி.மு.க. ஆட்சி 2 ஏக்கர் தரிசு நிலம் தருவதாக அறிவித்திருப் பது உள்ளாட்சி தேர்தலுக் காகத்தான் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?

ப:- வழங்காமலிருந்தால் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்பார்கள். வழங்கத் தொடங்குகிறோம் என்றதும் "எல்லாம் தேர்தலுக்காக'' என்கிறார்கள். பரவாயில்லை. அரசியல் அரிச்சுவடியில் "தேர்வு'' ஆகி விட்டார்கள்.

கே:- தமிழக அரசால் புதிதாக வழங்கப்படவுள்ள வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் தரமாக இருக்காது என்கிறாரே ஜெயலலிதா?

ப:- வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவுடன், அது போலியான திட்டம் என்றும், நிறைவேற்ற இயலா தென்றும், தி.மு.க. மக்களை ஏமாற்றுகின்றது என்றும் ஊருக்கு ஊர் பிரசாரம் செய்தார். தேர்தல் முடிந்த பிறகு நாம் அந்த திட்டத்தை அமுல்படுத்த முன் வராமல் இருந்திருந்தால் பார்த்தீர்களாப தி.மு.க. ஏமாற்றி விட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள், நிறைவேற்ற முன்வரவில்லை என்று கூறியிருப்பார். ஆனால் தி.மு.க. அரசு அதற்கான திட்டங்களை இரண்டரை மாதங்களில் தீட்டி நிறைவேற்ற முன்வந்ததும் வேறு என்னதான் சொல்ல முடியும்?

தொலைக்காட்சி பெட்டிகள் தரமாக இருக்காது என்று இப்போதே அது எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் அறிக்கை விட்டுள்ளார். சர்வதேச ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் என்று சொல்லியிருப்பதை வைத்துக் கொண்டு எதற்காக சர்வதேச ஒப்பந்தப்புள்ளி என்கிறார். சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோராமல் இருந்திருந்தால் ஏன் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை என்பார்.

கே:- ஏன் 21 அங்குலம் கலர் டி.வி. வழங்கவில்லை, 14 அங்குல டி.வி.தானே வழங்குகிறீர்கள் என்று புகார் கூறுகிறாரே ஜெயலலிதா?

ப:- 21 அங்குல டி.வி. வழங்குவதாக எங்கே எப்போது நாம் சொன்னோம்? வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவதாகத்தான் சொன்னோம். தற்போது வழங்கப்போகிறோம். 21 அங்குல டி.வி. வழங்கினால் ஏன் 42 அங்குல டி.வி. வழங்கவில்லை என்பார். வழங்கப்படும் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு இரண்டாண்டு உத்தரவாதம் உண்டு. ஏழை நடுத்தர வகுப்பு மக்களுக்குத்தான் இந்த தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படவுள்ளன. குடிசை வீட்டில் வாழ்பவர்கள் 14 அங்குல தொலைக்காட்சி பெட்டிகளைத்தான் வீட்டிலே வைத்து பார்க்க முடியும். ஜெயலலிதா போல மாளிகையிலே இருப்போருக்குத்தான் 21 அங்குல டி.வி. வேண்டும்.

கே:- திருமண நிதி உதவித்திட்டத்திற்காக 50 கோடி ரூபாய்தான் ஒதுக்கப் பட்டுள்ளது என்று அறிக்கை விடுத்திருக்கிறாரே ஜெயலலிதா?

ப:- ஏழை பெண்கள் திருமண நிதி உதவித்திட்டத்திற்கே மூடு விழா நடத்தியவர். எந்த முகத்தை வைத்துக் கொண்டு அத்திட்டத்திற்கு நிதி உதவி போதுமானதாக இல்லை என்கிறாரோ?

கே:- பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஜெயலலிதா ஆட்சியை விட தி.மு.க. அரசு குறைத்து விட்டதாக ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?

ப:- பேரவையிலே பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை இந்த அரசு கைவிட்டு விட்டதாக ஜெயலலிதா பேசினார். நிதியமைச்சர் பேராசிரியர் குறுக்கிட்டு அந்த திட்டம் கைவிடப்படவில்லை, தொடருகிறது என்று பதில் அளித்தார். தற்போது அந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டதாக அறிக்கை விடுத்துள்ளார். இதுவும் உண்மை அல்ல.

15 Comments:

நன்மனம் said...

//ப:- வழங்காமலிருந்தால் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்பார்கள். வழங்கத் தொடங்குகிறோம் என்றதும் "எல்லாம் தேர்தலுக்காக'' என்கிறார்கள். பரவாயில்லை. அரசியல் அரிச்சுவடியில் "தேர்வு'' ஆகி விட்டார்கள்.//

//சர்வதேச ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் என்று சொல்லியிருப்பதை வைத்துக் கொண்டு எதற்காக சர்வதேச ஒப்பந்தப்புள்ளி என்கிறார். சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோராமல் இருந்திருந்தால் ஏன் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை என்பார்.//

இதுதாம் "புமராங்" என்று சொல்வார்களோ. :-)

(தான் விட்ட கேள்விகள், இப்போது திரும்ப வருகிறதோ)

Sivabalan said...

அடுத்த ஆடசியே கேப்படன் தான் போலிருக்கு...

சீக்கிரமே மேம்பர்ஸிப் வாங்கிறனும் போல..

PKS said...

இதன் பின்னால் இருக்கிற அரசியலுக்குள் போகவில்லை. புலம்புகிறார்கள் என்ற வார்த்தையை வசைமொழி என்று தமிழறிஞர் கருணாநிதி சொல்லியிருப்பதைப் படித்தேன். இதில் என்ன வசை இருக்கிறது என்று என் மரமண்டைக்கு விளங்கவில்லை. விஜயகாந்த்க்கு விட்ட சவாலோடு நிறுத்தியிருந்தால் அது பதில். வசைமொழி என்று விஜயகாந்த் கேள்விக்கு வண்ணம் பூச கருணாநிதி முயல்வது அவரது வழமைதான் என்றாலும், திருந்திவிட்ட பிம்பத்தைச் சமீபகாலமாகத் தந்து கொண்டிருந்தார். பதவிக்கு வந்து சில மாதங்கள் ஆனபின்னால், அவர் கொடுக்கிற பதில்கள், பழக்கங்கள் மாறாதவை என்பதை நிரூபிக்கின்றன.

அன்புடன், பி.கே. சிவகுமார்

மனதின் ஓசை said...

நெத்தியடியான பதில்கள்...

பாலசந்தர் கணேசன். said...

கலைஞர் திருந்துவதா.... எப்போதுமே புத்தி கூர்மையை பயன்படுத்தி ஷார்ப்பாக,கிண்டலாக ஏதாவது சொல்லி ,திசை திருப்புவாரே ஒழிய நேரடியான பதில் எப்போதும் வராது..

மனதின் ஓசை said...

இந்த பதில்களில் திசை திருப்புவது எதுவும் இருப்பதாக தெரியவில்லை...அவர் சொல்வது நியாயம்தானே.. ஜெயா முன்பு கூறியதைதான் சொல்கிறார்..மறுக்க முடியுமா?

இது இப்பொது வை.கோ சொல்வதையும் பாருங்கள்..."ஜூ.வி.கைமாறியதாக நான் சொன்னது உண்மையல்ல! உணர்ந்து விட்டேன்... வருந்துகிறேன்!""

Anonymous said...

தி.மு.க. தலைவர்களில் சில பேர் இந்தி படிக்காததால்தான், டெல்லியில் மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்பை இழந்ததாகப் புலம்புகிறார்கள்
Not all can have Maran as their
father.Progeny not proficiency
matters.

G.Ragavan said...

வழக்கமான குற்றச்சாட்டுகள். அதற்கு வழக்கமான கருணாநிதி பதில்கள். வித்தியாசமா யாராவது சொன்னா குடுங்க..படிப்போம்.

Anonymous said...

நல்ல வேளையாக விஜய்காந்தின் கேள்விகளுக்கு ஜாதிப் பூச்சு இவரால் கொடுக்க முடியவில்லை. இல்லையென்றால் என் ஜாதியினால் தான் என் மகன் முன்னுக்கு வர முடியவில்லை என்று சொன்னது போல் ஏதாவது சொல்லியிருப்பார்.

மாயவரத்தான்... said...

மத்திய அமைச்சர்களாக இருக்கும் தி.மு.க.வினர் 'அனைவருமே' ஹிந்தி தெரியாதவர்கள் என்று கருணாநிதியால் உறுதி மொழி கொடுக்க முடியுமா?!

Vazhipokan said...

>> Not all can have Maran as their father. Progeny not proficiency matters.

Except Dayanidhi Maran, no other DMK minister in the Central Govt has anything to do with Karunanidhi's progeny.
Are you trying to say Dayanidhi Maran - Who's of legal age, well qualified academically and doing fairly well as a minister (has been Voted No.4 best minister in the UPA govt by Magazine polls) is not proficient? Do you think (insert-random-DMK-person) should have been the minister instead? You can think someone is an idiot or a brilliant person - its purely subjective. The DMK thinks Jayalalitha is incompetent as a CM, so should everyone take that as a fact? who has the final say?

The point is, Karunanidhi as the leader of the DMK party, has every right to choose his representatives in the Central govt.
He knows better about the capabilities of his party members than you. His choice of D.Maran is as biased, as researched, as wise as Jayalalitha's choice of TTV Dinakaran(Sasikala's Nephew) for the post of AIADMK treasurer.

ஜோ / Joe said...

ஹிந்தி தெரியாததால் தாங்கள் மந்திரிகளாக நியமிக்கப்படவில்லை என தி.மு.கவினர் புலம்புவதாக விஜயகாந்த் கூறினால் இப்போது மந்திரியாய் இருப்பவர்கள் அனைவரும் இந்தி தெரிந்தவர்கள் என்று தான் அர்த்தம் .அதை கலைஞர் நிரூபிக்க முடியுமா எனக் கேட்டிருக்கிறார் .இதற்கு மாயவரத்தான் சொல்லுகிறார்..
//மத்திய அமைச்சர்களாக இருக்கும் தி.மு.க.வினர் 'அனைவருமே' ஹிந்தி தெரியாதவர்கள் என்று கருணாநிதியால் உறுதி மொழி கொடுக்க முடியுமா?!//
ரெண்டுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா ?ஹிந்தி தெரிந்திருப்பது ஒன்றும் பாவமில்லையே ! எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பது தான் பாவம்.

மனதின் ஓசை said...

திரு மாயவரத்தான் அவர்களே...

உங்களுடைய கேள்விக்கு ஜோ பதில் சொல்லி உள்ளார்..இன்னும் பல கேள்விகலும் பதில்களும் உள்ளன.. ஒவ்வொரு கேள்வி பதில் வாரியாக உங்கள் கருத்து என்ன என சொல்ல முடியுமா? சொல்வீர்கள் எனும் நம்பிக்கையில் இருக்கிறேன்.

என் கருத்து..
1. நெத்தியடியான பதில்.
2. ஜோவின் கருத்துதான் எனதும். (ஹிந்தி தெரியாததால் தாங்கள் மந்திரிகளாக நியமிக்கப்படவில்லை என தி.மு.கவினர் புலம்புவதாக விஜயகாந்த் கூறினால் இப்போது மந்திரியாய் இருப்பவர்கள் அனைவரும் இந்தி தெரிந்தவர்கள் என்று தான் அர்த்தம் .அதை கலைஞர் நிரூபிக்க முடியுமா எனக் கேட்டிருக்கிறார்)
3. நெத்தியடியான பதில்.
4. நெத்தியடியான பதில்
5. நெத்தியடியான பதில்
6. அவரின் பதில் கேள்விக்கு பதில் சொன்னால் இதை பற்றி விவாதிகலாம்.
7. அவரின் பதில் கேள்விக்கு பதில் சொன்னால் இதை பற்றி விவாதிகலாம்.

மனதின் ஓசை said...

சிறு திருத்தம்.

7-ம் கேள்விக்கு என் கருத்து : சரியான பதில்.. மாற்றுகருத்து இருந்தால் விவாதிக்கலாம்.

இரா.மோகன் காந்தி said...

வன்ன தொலைகாச்சி தான் சொல்லபட்டதோ தவிர 14\ 21 என்று குறிப்பிடப்படவில்லை.வன்ன தொலைகாச்சி வருவதிற்க்கு முன்போ தரத்தை குறைகுறுவது அவர் கள் தரத்தை காட்டிவிட்டது.