பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 01, 2006

கதாநாயகனே வில்லனாக மாறும் காலம் வரும்-வைகோ

தி.மு.க. அரசு மைனாரிட்டி அரசு என்று எதிர்க்கட்சி தலை வர் ஜெயலலிதா பேசியதும் துள்ளி குதிக்கிறார்கள். தி.மு.க. அரசு கூட்டணி மந்திரி சபை அமைக்கவில்லையாப அப் படியானால் வெறும் 93 இடங்களை பெற்று ஆட்சி யில் இருக்கும் தி.மு.க. அரசு மைனாரிட்டி அரசு தானே. இந்த உண்மைகளை சொன்னால் ஏன் கோபம் வருகி றது?

118 தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் மைனாரிட்டி அரசு என்று நாங்கள் சொல்ல போவதில்லை. 93 எம்.எல்.ஏ.க்களுடன் தள்ளாடி கொண்டிருக்கும் தி.மு.க. சர்க்கார் 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது. எப்போது கவிழும் என்று நான் ஆரூடம் கணிக்கபோவதில்லை. தி.மு.க. தேர்தல் அறிக் கையை கதாநாயகன் என்று வர்ணித்தார்கள். கதாநாயகனே வில்லனாக மாறப் போகும் காலம் விரைவில் வரும்.

காங்கிரஸ் இல்லா விட்டால் முதுகெலும்பு நொறுங்கி இருக்கும். காங்கிரசை வைத்து தான் உங்களுக்கு வாழ்வு. 15 எம்.பி.க்களை வைத்து கொண்டு நீங்கள் மட்டும் 7 மந்திரி பதவி வாங்கினீர்கள். தமிழ்நாட்டு மந்திரி சபையில் காங்கிரசை சேர்த்தீர்களா, மந்திரி சபை யில் இடம் பெறுங்கள் என்று சோனியாவை வற் புறுத்தவாவது செய்தீர்களாப இல்லையே. கூட்டணி கட்சி களுக்கு நாமம் போட்ட சர்க் கார். இப்படி எங்களுக்கு பட்டை நாமம் போட்டு விட் டார்களே என்று உங் கள் கூட்டணி கட்சிகள் புலம் புகின்றன.

இந்தியாவில் பெரிய கட்சி காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் இருக்கும் கட்சி. சுயமரியாதையை விட்டு விட்டு எங்களுக்கு மந்திரி பதவி தாருங்கள் என்று கேட்பார்களா?

அவர்கள் உங்களை புரிந்து கொண்டார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா தன்னந் தனியாக உங்கள் அம்புகளை சந்தித்து அத்தனை பேருக்கும் பதில் சொல்கிறார். கடந்த முறை 5 ஆண்டு காலம் நீங்கள் சட்ட மன்றத்துக்குள்ளேயே நுழையவில்லையே. இப் போது துணிச்சலாக வரும் ஜெயலலிதாவை வர விட கூடாது என்று திட்டமிடு கிறீர்கள். கொச்சையாக பேசு கிறீர்கள். அதுதான் உங்கள் பண்பாடு.

ம.தி.மு.க. என்றாவது மாபெரும் சக்தியாக உருவெ டுத்து வரும். எனவே அதிகா ரத்தில் இருக்கும் போதே அழித்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இந்த இயக் கம் ஆயிரம் காலத்து பயிர். இது வாழையடி வாழையாக வளரும். இதை யாராலும் அழிக்க முடியாது. நான் நிரந்தரமானவன் அல்ல. ஆனால் இந்த இயக்கம் நிரந்தர மானது.

அண்ணா உருவாக்கிய தி.மு.க. அருமையான இயக் கம். லட்சக்கணக்கான லட்சிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை ஒரு குடும்ப சொத்தாக மாற்றுவதை எதிர்க் கிறோம். திராவிட இயக்கத்தில் ஒரு குடும்பத்துக்கு எதிராக தொடங்கிய தர்மயுத்தம் இன்றும்

தொடர்கிறது.நாங்கள் அழுத்தமான கொள்கைகாரர்கள். பகுத் தறிவு கொள்கையில் நம் பிக்கை இருக்கிறது. எங்கள் லட்சியம்-கொள்கைகள் நிரந் தரமானது.

தமிழர்களுக்கு எதிராக இந்தியா-இலங்கை கூட்டு ஒப்பந்தம் போட முயற்சித்த போது எதிர்த்து கருத்து சொன்னீர்களா?

இலங்கையில் போர் மூளும், நாங்கள் யுத்த களத்தில் தமி ழர் களுக்கு பக்க பலமாக இருப்போம். தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதர வாக தமிழர்களை திரட்டுவோம். சட்டசபை தேர்தல் எப் போதும் வரலாம். நமக் கொன்று ஒரு காலம் வரும். ம.தி.மு.க.வினர் சட்டமன்ற நாற்காலிகளை அலங்கரிக்கும் நாள் வரும்.

7 Comments:

Anonymous said...

வைகோன்னா யாரு ?

சீனு said...

//ம.தி.மு.க. என்றாவது மாபெரும் சக்தியாக உருவெ டுத்து வரும். //
இப்போ ஒரு பேச்சு, அப்புறம் ஒரு பேச்சு அல்ல. எப்போதும் ஒரே பேச்சு. "ம.தி.மு.க. என்றாவது மாபெரும் சக்தியாக உருவெ டுத்து வரும்."

//இந்த இயக் கம் ஆயிரம் காலத்து பயிர். இது வாழையடி வாழையாக வளரும். இதை யாராலும் அழிக்க முடியாது. //
"நாங்களே அழித்து விடுவோம்".

Karthikeyan Muthurajan said...

evlo naala manusan enga iruntharu.. onnukkum layakku illathavar.. thannudaiya katchikarakal maRR katchikku (kurippa..captain katchikku) porathai thadukka mudiyathavar.. ippadipatta arikkaiyil thaan uyir vazhkiraar

ஜயராமன் said...

புலி வைக்கோ எப்போ இதை யாரிடம் பேசினார் என்று கொஞ்சம் சொல்கிறீர்களா?

அண்ணன் வைக்கோ ஒரு நீறு பூத்த நெருப்பு. சரியான சமயத்தில் திமுக என்ற பொதி இதில் மாயும்.

அண்ணா போட்ட பயிர் இந்த அண்ணனால் அறுவடை ஆகும்.

அதுவரை 'கருணை'யோடு இதை விட்டு வைப்போம்.

நன்றி

luckylook said...

40 கோடியார் மறுபடியும் ஆரம்பித்து விட்டாரா? இனி கொஞ்ச காலத்துக்கு மனம்விட்டு சிரிக்கலாம்...

Anonymous said...

He has to issue such statements as per the 'agreement'. So let us not blame him. He is doing his duty for the payment he had received.

Vazhipokan said...

It will be no surprise if Vaiko disbands his party and joins Vijayakanth's DMDK (so that he has, at least, a remote chance of becoming a minister in the next ten years). I am sure Idlyvadai will be reporting the news live when it happens ;-)