மரணம் பற்றி தேன்கூடு வலைதிரட்டி ஒரு போட்டி அறிவித்தது பலருக்குத் தெரிந்திருக்கலாம். அதில் கலந்துகொள்ளலாம் என்றால் கடைசித் தேதி முடிவடைந்து விட்டது. சரி, விஷயத்திற்கு வருவோம். அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை இந்த உலகம் அழியப்போகிறது என்றால் தமிழ் வலைப்பதிவுகளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் ? இதோ சில சாம்பிள்கள்...
( ஏதோ ஆறுதல் பரிசுக்காவது சிபாரிசு செய்யுங்கள் )
1. தமிழ்மணம் இந்த வார நட்சத்திரம்:
உலகம் அழியும் முன் என்னை யாராவது தமிழ்மண நட்சத்திரமாக கூப்பிடுவார்களா என்ற நப்பாசையில் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை யாராவது மெயில் போட்டிருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். தீடீர் என்று மதியிடமிருந்து அழைப்பு வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்ன எழுதப்போகிறேன் என்றும் தெரியவில்லை. ஆனால் நான் என்ன எழுதினாலும் எப்படியும் 'வருக வருக', 'நட்சத்திர வாழ்த்துக்கள்', 'இந்த வாரம் கலக்குங்க' போன்ற பின்னூட்டங்களைப் போடுவீர்கள் என்று தெரியும். இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்த மதி மற்றும் காசிக்கு நன்றி. பின்னூட்டம் இடுபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றி. என்னுடைய நட்சத்திர வார முடிவில் உலகம் அழிய போகிறது என்று நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.
2. சொர்க்கத்தில் இட்லி ஒதுக்கீடு - பத்ரி
இன்று வந்த ஹிந்து செய்தி இங்கே மற்றும் தினமணிச் செய்தி இங்கே.
இட்லி ஒதுக்கீடுக்கான செலவு என்று சொல்லியிருக்கிறார்கள். 'செலவு' என்று சொல்வதைவிட 'முதலீடு' என்று சொல்வது தான் சரி. ஒரு SC/ST இட்லி சாப்பிட ஆகும் செலவு ஒரு நாளைக்கு ரூ. 10.25; அதே ஒரு மாதத்திற்கு ரூ. 307.50 மட்டும். அதே போல் OBC க்கு ஒரு நாளைக்கு இட்லி சாப்பிட ஆகும் செலவு ரூ. 11.34; ஒரு மாதத்திற்கு ரூ. 340.20 தான். SC/ST, OBC மாணவனுக்கு இட்லியோடு கெட்டிச் சட்னி உண்டா இல்லையா என்பது தான் வித்தியாசம். இதற்கு ஏன் இவ்வளவு போராட்டம் என்று தெரியவில்லை. இனியாவது மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடலாம். இன்னமும் ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. அது creamy layer தொடர்பானது. அதற்கு என் முந்தைய பதிவுகளையும் பார்த்தால் ஓரளவு உங்களுக்குக் குழப்பம் வரும்.
உலகம் அழிந்து அடுத்தமுறை ஆதாம் ஏவாள் தோன்றும் பொழுது இட்லி ஒதுக்கீடு பற்றி ஒழுங்காகச் சிந்திக்காவிட்டால் இதே போல் நான் பல பதிவுகள் எழுத வேண்டிவரும். உலகம் அழிந்த பின் சொர்க்கத்தில்/நரகத்தில் எப்படி இட்லி ஒதுக்கீடு இருக்கிறது என்று பார்த்த பிறகு இது தொடர்பான அடுத்தப் பதிவு போடுகிறேன்.
இட்லி பற்றாக்குறை தீர்வதற்கு எனக்குத் தோன்றும் சில யோசனைகள்:
1) கொஞ்சமாக இட்லி நிறைய சாம்பார் போடலாம்.
2) இட்லியுடன் இரண்டு வடை சேர்த்துப் பரிமாறலாம்.
3) இட்லிக்குப் பதிலாக பொங்கல் கொடுக்கலாம்.
4). இட்லிக்குப் பதில் குட்டி(மினி) இட்லி கொடுக்கலாம்.
5) இட்லிக்கான மானியத்தை ஒரேயடியாக நிறுத்தவேண்டும்.
வலைப்பதிவுலகில் இருக்கும் ஹோட்டல் சரக்குமாஸ்டர்கள், ஆப்பக்கடை ஆயாக்களிடமிருந்து இன்னும் யோசனைகள் இருந்தால் அறிய ஆவலாக இருக்கிறேன்.
இட்லி ஒதுக்கீடு பற்றிய என் முந்தைய பதிவுகள்: பதிவு 1 | பதிவு 2 | பதிவு 3 | பதிவு 4 | பதிவு 5 | பதிவு 6 | பதிவு 7 | பதிவு 8 | பதிவு 9 | பதிவு 10....
3. இந்தப் பதிவை யார் ஆரம்பித்தது என்று தெரியவில்லை
உலகம் அழிய போகிறது என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அதனால் போன முறை ஆறு விளையாடியது போல் மீண்டும் ஒரு விளையாட்டு இது. நிச்சயம் மூளைக்கு வேலை இல்லை; அதனால் யாரும் பயப்பட வேண்டாம். உலகம் அழிந்து விட்டால் நமக்கு யார் 'பத்து' பண்ணப் போகிறார்கள். அதனால் ஒரு பத்து விளையாட்டு.
நீங்கள் இந்தப் பத்து தலைப்புகளில் எழுதலாம்:
1. செய்த தப்புகள் 10 (வாசகனை நெகிழ்விக்கிறேன் என்று செய்யாத தவறுகளை எல்லாம் யாரும் அடுக்கக்கூடாது.)
2. சொன்ன பொய்கள் 10 ( தமிழார்வத்தில்தான் வலைப்பதிகிறேன் என்றுசொல்வது, தனக்குத் தானே நட்சத்திரக் குத்து இட்டுக்கொள்வதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த பொய்தான் என்பதால் கணக்கில் சேராது.)
3. எழுதிய மோசமான 10 பதிவுகள் (பத்துக்குள் அடங்காதே என்று மலைப்பவர்கள் 'இந்த மாதத்தில்' என்று முன்னால் சேர்த்துக்கொள்ளலாம்.)
4. படித்த மோசமான 10 பதிவுகள் ( தமிழ்மணம் சுட்டியைக் கொடுக்கக் கூடாது )
5. நீங்கள் டாவ் அடித்த 10 பெண்கள் பெயர் (உங்களை திரும்ப யாருமே டாவடிக்கவில்லை என்பதில் பிரச்சினை இல்லை.)
6. உங்களை அடித்த பத்து பேர் (தர்ம அடியில் பேர் தெரியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.)
7. உங்களை நீங்களே பாராட்டி எழுதிகொண்ட அநாநி பின்னூட்டங்கள் 10
8. அடுத்தவர் பதிவில் அநாநியாக நீங்கள் திட்டிய பின்னூட்டங்கள் 10
9. அழைக்க விரும்பும் உங்களுக்கு பிடிக்காதவர்கள் 10 பேர்
10. அழைக்க விரும்பும் உங்களுக்கு மிகவும் பிடிக்காதவர்கள் 10 பேர்
4. சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு - டோண்டு
இன்னும் ஒரு வாரத்தில் உலகம் அழிய போகிறது என்று நேற்று நண்பர் ஜோசப் தொலைப்பேசியில் தெரிவித்தார். அதனால் நமது ஆஸ்தான இடமான 'நியூ உட்லாண்ட்ஸ்'ல் ஒரு வலைப்பதிவு சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கிறேன். வழக்கம்போல் போலி டோண்டு என்ற வக்கிரம் பிடித்த மிருகத்தை இந்த ஒரு வாரத்திற்குள்ளாவது ஒழிப்பது பற்றிப் பேசி ஒரு முடிவெடுக்க எல்லோரும் வரவேண்டும். இந்தச் சந்திப்புக்கு வரும் எல்லோரும் போண்டா தான் சாப்பிட வேண்டும். நான் மட்டும் தான் மசால் தோசை, பாசந்தி சாப்பிடுவேன். பில்லை எல்லோரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் நல்லபடியாக முடியும்.
பிகு: பின்னூட்டத்தில் அனானிமஸ் ஆப்ஷனை எடுக்காதவர்கள் இந்தச் சந்திப்புக்கு வந்தால் அவர்களுக்கு போண்டா கிடையாது.
5. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு - உஷா
அன்புள்ள தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு,
தமிழ் மணம், வெறும் பதிவுகளின் திரட்டி அல்ல, இதற்கென்று சில சட்டத்திட்டங்கள், வரைமுறைகள் உண்டு என்பதை சமீபத்தில் படித்து ஆனந்தப்பட்டேன் (துள்ளிக் குதிக்க முடியவில்லை; கால் சுண்டுவிரலில் சுளுக்கு.) தமிழ்ப் பற்று உள்ளப் பதிவுகளுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. சமீபத்தில் ஒருப் பதிவில் ஜாதி பற்றி ஒருவர் எழுதியிருக்கிறார் (இவர் பதிவின் டெம்ப்லேட் நன்றாக இருக்கும் அதனால் அவர்ப் பதிவுகளை விரும்பி வேடிக்கைப் பார்ப்பேன்.). ஆனால் அந்த பதிவிற்கு ஏன் காசி தடைவிதிக்கவில்லை என்று தெரியவில்லை. மற்றவர்கள் எல்லோரும் சாதி என்று எழுதும் போது அந்த நபர் மட்டும் ஜாதி என்று சுத்த தமிழில் எழுதாதது எனக்கு மிக்க வருத்தமாக இருந்தது. அதில் இது சரி இல்லை, அது சரியில்லை என்று ஏன் குத்தம் கண்டுப்பிடிக்க வேண்டும்? இதே கேள்வி என்னை நானே இன்று கேட்டுகொண்டேன். இருந்தாலும் இந்த மூன்றுவருட இணையக் குப்பைகொட்டலில் எனக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதனால் தான் இந்த பதிவு.
உலகம் அழிய இன்னும் ஒரு வாரமே இருக்கிறது என்பதால் இந்த பதிவை படித்துவிட்டு தமிழ்மண நிர்வாகிகள் யாரும் விலக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
6. தமிழ்மண நிர்வாகி
இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. அதனால் என் குடும்பத்துடன் குற்றாலம் சென்று எல்லாவற்றையும் தலைமுழுகப் போகிறேன். உஷா எழுதியதற்கும் நான் தமிழ்மண நிர்வாகிப் பொறுப்பிலிருந்து விலகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. (அப்பா நிம்மதி :-)
7. திரும்பி பார்க்கிறேன் - ஜோசப்
என் அலுவலகத்துக்கு லோன் எடுக்க ஒருவர் வந்தார். அவர் வீடு கட்ட 100 கோடிக்கு லோன் கேட்டார். இது மாதிரி சமயங்களில் நான் என் மேலதிகாரியிடம் ஆலோசிப்பது வழக்கம். பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அந்த நபரைச் சந்தித்தேன். அப்போது 100 கோடி லோன் பற்றி திரும்பவும் கேட்டார்.
நான் அவரிடம் "சார் காப்பியா, டீயா?" என்றேன்.
அவர் ஐந்து நிமிடம் யோசித்துவிட்டு "காப்பி வித்தவுட் ஷுகர்" என்றார்.
"நான் உடனே அவருக்கு லோன் கிடையாது என்று சொல்லிவிட்டேன். அவர் திகைத்துப் போய் என்னைப் பார்த்தார்.
அவர் "வித்தவுட் ஷுகர்" என்றவுடன் நிச்சயம் அவருக்கு டயாபடீஸ் இருக்கும் என்று தீர்மானித்தேன். அதனால் அந்த 100 கோடி அவர் மருத்துவச் செலவுக்கு என்று முடிவு செய்தேன்.
தொடரும்..
(G.Ragavan பின்னூட்டம் இல்லாமல் 'திரும்பிப் பார்க்கிறேன்' இருக்கக் கூடாது என்பதால்...)
G.Ragavan said..
ஜோசப் சார், உங்கள் அனுபவம் எங்களுக்குப் பாடம். தொடருங்கள்...
8. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் - பி.கே.சிவகுமார்
உலகம் அழியும் முன் கடைசியாக நேற்று தெருவில் ஒரு ரூபாய்க்குக் கடலை வாங்கினேன். சாப்பிட்ட பின் கடலை மடித்த பேப்பரில் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' புத்தகத்தைப் பற்றிய விமர்சனக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றைக் கீழே தந்துள்ளேன்.
கடலை மடித்துக் கொடுத்த வியாபாரிக்கு நன்றி.
9. சாகா வரம் பெரும் வலைப்பதிவுகள் - அன்னியலோகம்
அடுத்த வாரம் உலகம் அழிய போகிறது என்று கவலை வேண்டாம். இந்த ஸ்கிரிப்டை உங்கள் வலைப்பதிவில் சேர்த்துவிட்டால் போதும் உங்கள் வலைப்பதிவு அழியவே அழியாது. இந்த வசதி பிளாகர் உபயோகிப்பவர்களுக்கு மட்டும் தான் தற்போது வேலை செய்யும். [ இட்லிவடை பதிவு ஏன் வேலை செய்யவில்லை என்று தெரியவில்லை ]
10. பல்லவியும் சரணமும்(இன்றே கடைசி) - என்றென்றும் அன்புடன் பாலா
சில பழைய மரணம் பற்றிய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில்!!! தேவையிருந்தால் மட்டுமே!
ஒருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனெனில், மற்றவர்களும் சாவதற்குள் சற்று முயன்று பார்க்கட்டுமே!!!
1. பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
2. மாசற்ற அன்புக்கு
மரணம் உண்டோ?
மதிகெட்டு வந்தாயோ
வஞ்சகப் பாம்பே!
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
11. பஜகோவிந்தம் - குமரன்
பஜகோவிந்தம் 28 ஆம் பாடல் மற்றும் 21 பாடல் படித்தால் மரணம் பற்றி ஒரு தெளிவு பிறக்கும்.
சுகத: க்ரியதே ராமாபோக:
பஸ்சாதந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம்
யத்யபி லோகே மரணம் சரணம் அதாவது இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் மட்டுமே ஒரே கதி என்பதை அறிந்திருக்க வேண்டும்.
21 ஆம் பாடலில்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு; புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு என்று கூறியிருக்கிறார்.
அதனால் எல்லோரும் (நாம சங்கீர்த்தனம்)பஜனை பண்ணுங்கள்.
12. சில நேரங்களில் சில மனிதர்கள் - காசி
உலகம் அழிய போகும் இத்தருணத்தில் தமிழ் இணைய உலகில் என் அனுபவம் பற்றி எங்காவது எழுதிவைக்கலாம் என்று எண்ணம். இது என் அனுபவம் என்று சொல்லுவதா, எனக்குப் பாடம் என்று சொல்லுவதா என்று தெரியவில்லை. இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகளை படித்தபோது பல நண்பர்கள் கிடைத்தார்கள். தமிழ்மணம் உருவாக்கிய போது மேலும் பல நண்பர்கள் கிடைத்தார்கள். பிறகு சில பதிவுகளை நீக்கினேன். பல நண்பர்கள் பகைவர்கள் ஆனார்கள். பிறகு சில சட்டதிட்டங்களைக் கொண்டுவந்த போது மேலும் பல பகைவர்கள் கிடைத்தார்கள். பலர் என்னை மறைமுகமாகத் தாக்கினார்கள். சிலர் நேர்மையான கருத்துவைக்கிறேன் என்று நேரிடையாக. தேன்கூடாக இருந்த தமிழ் மனங்கள் கண்கூடாகத் சிதறிவிட்டதுதான் தமிழ்மணம் உருவாக்கி நான் கண்ட பலன்.
பாகம் 1, பாகம் 2, ...
13. நேற்று கிடைத்த லிங்க்ஸ் - பாஸ்டன் பாலா -
அடுத்த வாரம் உலகம் அழிவை பற்றி கூகிளில் தேடும் போது கிடைத்த ஏழு சுட்டிகள்
1. bsubra.wordpress.com
2. bsubra.gather.com
3. etamil.vox.com
4. boston.metblogs.com
5. gilli.in
6. snapjudge.blogspot.com
7. bioscope.blogspot.com
14. மரணம் for dummies - குசும்பன்
காட்சி 1
இடம்: பூலோகம்
ஒருவர்: ககாகிகீசசாசீச்சீ?
இன்னொருவர்: அப்படீங்கறேளா பாசு? எப்படி யார் சொன்னாலும் கடிந்து கொண்டு கடிதம் போட்டவர்களுக்கு நன்றி. மக்கமக்க சொக்கரிக்க திக்கா.
ஒரு: ஜும்பரபிம்பரதுங்கரதிக்கா. முக்கா ரொக்கா தக்க பிக்க.
இன்: தத்தக்கா பித்தக்கா.
ஒரு: மரணத்தைவிட இப்படி வலைப்பதியறதே பெட்டர்ங்கறீங்களா?
இன்: ஆமாம், மத்தவங்களை சாவடிக்கலாமே.
( கலர் அடித்து கை வலிக்கிறது )
15. எமனின் பாசக்கயிறை - ரோசாவசந்த்
உலகம் அழியப்போகும் செய்தி கிடைத்தும் இந்திய இராணுவம் என்னத்தைக் கிழித்துக்கொண்டிருந்தது என்று தெரியவில்லை.
நேரமின்மையால் இன்று முதல் கெட்டவார்த்தைகள் பேசுவதை விட்டுவிடுகிறேன். பல வலைப்பதிவாளர்கள் எழுதி முடித்துவிட்டாலும் கூட வயிற்று எரிச்சல் அடங்குமென்று தோன்றாததால் சாவகாசமாக எழுத நினைத்ததை சவசவ என்றிருந்தாலும் பரவாயில்லை என்று உடனடியாக எழுதவேண்டியதாகி விட்டது. எல்லோரும் இறக்கவேண்டும் என்பது துயரமான செய்தி என்றாலும் அதில் சில வாழவே தகுதியில்லாத, நாற்றமடிக்கும் எண்ணம் கொண்ட பிறவிகளும் சேர்ந்தே இறப்பார்கள் என்பதில் ஆறுதல் அடைவதிலும் எனக்குத் தடையெதுவும் இல்லை.
எப்படி இருந்தாலும் எல்லோருடைய மரணத்திற்கும் ஜல்லியடிக்கும் எமன் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அறுத்துவிடுவேன், பாசக்கயிறை.
16. வலைப்பதிவு ரௌண்ட அப் - ரஜினி ராம்கி
சென்னைவீதி முழுதும் பீதி ( சிலருக்குப் பேதி )இன்னமும் நிரம்பியே கிடக்கிறது. வுட்லேண்ட்ஸ் ஹோட்டல் சுத்தமாகக் காலி. டோண்டு மனது வைத்தால் நடக்கும்.
தென்தமிழ்நாட்டுக்கு இந்தப் பக்கமும் அமெரிக்காவுக்கு அந்தப் பக்கமும் கடைசி வரை எனக்குப் பெண் கிடைக்கவே இல்லை. கல்யாணம் வேண்டாம் என்றே காலம் கடத்தி விட்டேன். ஒரு வேளை தப்போ?
பதித்த நானூறு பதிவுகளில் தலைவருக்குப் போட்ட பதிவுகளை விட ராமதாசுக்குப் போட்ட பதிவுகளே அதிகம். ஜோன்ஸ் ரோடு முழுதும் தலைவர் பேனர் கட்டினால் போகும் வழிக்காவது புண்ணியம் என்று லேட்டாகத்தான் புரிந்திருக்கிறது.
17. கில்லி: பிரகாஷ் ஸ்பெஷல்
Prakash's blog
வலைப்பதிவு உலகம் முழுதும் block செய்யப்படப்போவதைக் கண்டித்து எழுதுகிறார் பிரகாஷ் (link).
No comments
Prakash's blog
பாதிக்கும் மேல் எப்படி மலரும் நினைவுகளை வைத்தே பதிவுகளை ஓட்டினேன் என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் இகாரஸ் (link).
No comments
தனக்குப் பிடித்த பெண் எழுத்தாளர் பற்றி பிரகாஷ் படத்துடன் விவரிக்கிறார் இங்கே
No comments
Prakash's blog
தான் எத்தனையோ முயன்றும் உலகம் அழிவதற்குமுன் தன்னை ஒரு எழுத்தாளனாக சுமதியிடம் நிரூபிக்கமுடியாமல் பத்திரிகை உலகமும் நண்பர்களும் தன்னைப் பழிவாங்கியதைப் பகிர்ந்துகொண்டு நெகிழவைக்கிறார் பிரகாஷ் (link).
No comments
Prakash's blog
அடுத்த வாரம் கடைசிக்கடைசியான நாள் என்பதால், கில்லி முழுக்க என் பதிவுகள் என்று கில்லி வைரஸ் பரப்புகிறார் பிரகாஷ்...
No comments
18. நான் யார் - இட்லிவடை
உலகம் அழியும் நாளும் வந்தே விட்டது. தொடங்கிய நாள் முதல் இன்று வரை கலாய்ப்பு, கலாசல் போன்ற வார்த்தைகளுக்குப் பொருளே அறிந்து கொள்ள முடியவில்லை.
இனியும் நான் யார் என்பதைச் சொல்லாமல் விட்டால் என்னாலும் நிம்மதியாக இருக்க முடியாது. இட்லிவடையின்மேல் எச்சில் துப்பியவர்களும் இனி துப்ப நினைப்பவர்களும், தான் துப்பியது யார்மேல் பட்டது என்ற உண்மையை அறியாமலே உலகமும் தானும் அழிவதை விரும்பமாட்டார்கள். எனவே வெள்ளிக்கிழமைதான் உலகம் அழியப்போகிறது; அதனால் சனிக்கிழமை நான் யார் என்பதை அறிவிக்கிறேன். அந்தப் பதிவு [இங்கே]
"அடுத்த வாரம் கடைசி.. தமிழ்மணம் விற்பனைக்கு. The package includes, domain name and administrators. kindly contact... " என்று தமிழ்மணத்திற்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 26, 2006
தேன்கூடு போட்டி ( ஆறுதல் பரிசு ) பதிவு
Posted by IdlyVadai at 7/26/2006 02:49:00 PM
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










72 Comments:
//6. உங்களை அடித்த பத்து பேர் (தர்ம அடியில் பேர் தெரியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.)//
:-))))
யப்பா...... சிரிச்சு சிரிச்சு முடியலடா சாமி....
எந்த திசைல ஒக்காந்து யோசிக்கரீங்க சொன்னீங்கனா......
...
...
...
...
அந்த பக்கம் போகாம பாத்துப்பேன்.
:-)
யப்பா சாமி யார் கிட்டே இம்புட்டு ஞானப் பால் குடிச்சீய... சிரிச்சு சிரிச்சி... சத்யமா முடியல்லை... ஆமா... முடியல்லை..
//நீங்கள் இந்தப் பத்து தலைப்புகளில் எழுதலாம்://
எனது 10 அவதாரங்கள். இதை விட்டுட்டீங்களே.
:D
நல்லாத்தான் எழுதறீரு.
இன்னும் இரண்டு விஷயம் இருக்கு. அதைச் சொன்னா என்ன அடி வாங்குவேனே. வேண்டாம் ஏற்கனவே இந்த சங்கத்தில் அட்லாஸ் வாலிபராகி வாங்கற அடியே உடம்பு தாங்கலை!
இலவசக்கொத்தனார்,
//இன்னும் இரண்டு விஷயம் இருக்கு. அதைச் சொன்னா என்ன அடி வாங்குவேனே. வேண்டாம் ஏற்கனவே இந்த சங்கத்தில் அட்லாஸ் வாலிபராகி வாங்கற அடியே உடம்பு தாங்கலை!//
அட சும்ம பயப்படாம சொல்லுங்க. நீங்க அடிவாங்குவதை நான் பார்க்க வேண்டாமா :-)
brilliant
:))
Great (since I am not listed!.)
இட்லி,
சூப்பர்...கலக்கல்
(எதையெல்லாம் ரசித்தேன் என்று எடுத்துப்போட முடியாத அளவு எல்லாமே சூப்பர்யா)
என்னங்க - உக்காந்து யோசிப்பீங்களோ ? மக்கா தாங்கமுடியலடா சாமீ...சும்மா பிச்சு உதறிட்டீங்க...
:)) சூப்பர்..
வாசகர்கள் பரிந்துரைத்த சில இடுகைகள் படிப்பதற்கே எனக்கு நேரம் இல்லை,
இத்தனை பதிவுகளையும் படித்து நடையை உள்வாங்கிக் கொள்வதென்றால்....
கூலிக்கு ஆள் வைத்து படிப்பீர்களோ?..
பதிவு நன்று..
நன்றி,
பூங்குழலி
//கூலிக்கு ஆள் வைத்து படிப்பீர்களோ?..//
:-))
ராஜ்குமார் - நன்றி.
haranprasanna - அடுத்த முறை கவனித்துக் கொள்கிறேன்
முத்து - நன்றி.
செந்தழல் ரவி - நன்றி. உட்கார்ந்து எல்லாம் யோசிக்க வேண்டாம்.
பூங்குழலி - இது கொஞ்சம் ஓவர்.
இட்லி,
எல்லாமே சுவையான இட்லிகள். ரசித்து ருசித்தேன்.
நல்ல வேளை போட்டி முடிஞ்ச பிறகு போட்டீரே அதுவரைக்கும் உமக்கு புண்ணியம்தான். மாஞ்சு மாஞ்சு கதை எழுதுன ஆசாமிங்களை(என்னையும் சேர்த்துதான்) எல்லாம் ஓரங்கட்டிவிட்டு வென்றிருப்பீரே.
நேத்து இம்சை அரசன் பார்த்து மகிழ்ந்தேன். இன்று உமது படைப்பை படித்து மகிழ்ந்தேன்**.
**:-) போடவா வேணாமானு தெரியலை**
நன்றி.
இரசித்தேன்.. சிரித்தேன்..
கடைசிவரை நீங்கள் யாரென்று தெரியாமல் போகவேண்டியதுதானா ? :) துப்பறியும் சாம்புதான் வரவேண்டும்.
நல்ல நையாண்டி, இதில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களும் இதனை இரசிப்பார்கள்..அதுதான் முக்கியம்.
freeakin' hilarious :-)
thanks,
Srikanth
:-))))))
அட்டகாசம்....பின்னீட்டீங்க....எப்படி இதெல்லாம்???
//உலகம் அழியும் முன் கடைசியாக நேற்று தெருவில் ஒரு ரூபாய்க்குக் கடலை வாங்கினேன். சாப்பிட்ட பின் கடலை மடித்த பேப்பரில் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' புத்தகத்தைப் பற்றிய விமர்சனக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றைக் கீழே தந்துள்ளேன்.
[ ஸ்கேன் செய்த படம் ]
கடலை மடித்துக் கொடுத்த வியாபாரிக்கு நன்றி.
//
நேற்றுதான் PKS கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். இன்னிக்கு அவரைக் கிண்டல் பண்ணி பதிவா.. அடுக்கவே அடுக்காது...
அதனால என்ன பரவாயில்ல..
PKS.. "இன்றைய இட்லிவடையில் அட்லாண்டிக்கு அப்பால்.." னு ஒரு பதிவு ஸ்கேன் பண்ணிய படத்தோடு போட்டு விடுங்கள்.
சீமாச்சு..
Padithean. Rasithean.
முத்துகுமரன் - சரி ஒரு ஆறுதல் பரிசிக்காவது சிபாரிசு செய்யுங்கள். நன்றி.
மணியன் - இதில் குறிப்பிட்டுள்ளவர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். பார்க்கலாம்.
srikanth - thanks.
கல்வெட்டு - நன்றி.
சுதர்சன் கோபால் - நன்றி.
சீமாச்சு - //"இன்றைய இட்லிவடையில் அட்லாண்டிக்கு அப்பால்.." னு ஒரு பதிவு ஸ்கேன் பண்ணிய படத்தோடு போட்டு விடுங்கள்.// நல்ல ஐடியாவா இருக்கே. இதோ இப்போதே அப்டேட் செய்கிறேன். நன்றி
பி.கே.ஸ் - Sportiveஆக எடுத்துக்கொண்டதற்கு நன்
இட்லிவடை,
உங்க பதிவு தலைப்பு பார்த்துட்டு தேன்கூடு போட்டிக்கு நீங்க வேற தனியா ஏதும் ஆறுதல் பரிசு தரப் போறீங்க போலிருக்குன்னு நினைச்சு வந்தேன் :)
//( கலர் அடித்து கை வலிக்கிறது )//
கலர் படிச்சு கண்ணும் வலிக்குது..
நல்லா இருக்கு.. ஆனா வழக்கமான இட்லிவடை ஜோக் அளவுக்கு சிரிப்பு வரவில்லை :(.. எனக்குத் தான் பழகிடுச்சா? ;)
ஆமாம், எப்போவும் ஒரே செட் ஆட்களையே கலாய்க்கிறீங்களே? ஆட்டோ பயமா?
அப்ப கடைசிவரை இட்லிவடை யாருன்னு சொல்ல மாட்டீங்க!!!
பொன்ஸ் - நீங்க சொல்லுவது கொஞ்சம் உண்மை. //ஆமாம், எப்போவும் ஒரே செட் ஆட்களையே கலாய்க்கிறீங்களே? ஆட்டோ பயமா?// அடுத்த லிஸ்டில் யாரெல்லாம் வரலாம் என்று ஒரு பட்டியல் கொடுங்களேன்.
வெட்டிப்பயல் - ;-)
//அடுத்த லிஸ்டில் யாரெல்லாம் வரலாம் என்று ஒரு பட்டியல் கொடுங்களேன். //
ஆகா.. அடுத்த மாசம் முதல் மீண்டும் சென்னை.. சென்னையில் ஆட்டோக்கள் இருப்பது அறிந்ததே..
நானும் "ஃப்ரைட் பொன்ஸ்" [பொரித்த பொன்ஸ்] ஆக விரும்பாததால்..கைப்பு ஸ்டைலில் ஐ ஆம் தி எஸ்கேப் ;)
பொன்ஸ் நீங்க நிச்சயம், உங்கள் நண்பர்களை சிபாரிசு செய்யுங்கள்.
சங்கத்தைப் பற்றியும், 550+ பின்னூட்டம் வாங்கி சாதனைப் படைத்த "பின்னூட்ட நாயகன்" இ.கொவை பற்றியும் எழுதாதை வன்மையாக கண்டிக்கிறோம் :-))
இட்லிவடை,
நீர் இட்லிவடை இல்லயய்யா! கொத்து பரோட்டா மாஸ்டர்! :))))
போட்டியில் கலந்திகொள்ளாமலேயே என்னையும் சேர்த்து 11 வோட்டு ( + ) :)
அட வாங்க இளவஞ்சி நீங்க கொடுத்த தலைப்பு அப்பு. இன்னும் என்னோட ஓட்டு வேற இருக்கு :-)
பெரியவரே இட்லி! இப்படிக் கிண்டல் அடிக்கறதுன்றது எப்பவாச்சும்தான் அமையும்! கிண்டலடிக்கப்பட்டவங்களே ரசிச்சுச் சிரிக்கிற அளவுக்கு! தூஊஊஊஊஊஉள் கிளப்பிட்டீங்க! என்னை சிஸ்யப்புள்ளையா ஏத்துப்பீங்களா?
//பொன்ஸ் நீங்க நிச்சயம், உங்கள் நண்பர்களை சிபாரிசு செய்யுங்கள்// -- இது வேறயா? பொன்ஸுக்கு நண்பர்கள் இருப்பது கண்டு பொறாமையா?
சுரேஷ் - நீங்க சொல்லுவது சரி. சில சமயம் கொஞ்சம் ஓவராக போவதும் உண்டு..
அடுத்த லிஸ்டில் உங்களை சேர்த்துவிட்டேன்.
:-}
இட்லிவடை,
இந்தப் பதிவில் ரொம்ப முக்கியமான விசயம் என்னவென்றால், இட்லிவடை அனைவருக்கும் பதில் சொல்வதுதான்...
பதிவு கலக்கல்..
காசி - வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி. எப்போ ஸ்மைலிக்கு மீசை வளர்ந்தது :- )
சிவபாலன் - :-) நன்றி
/(G.Ragavan பின்னூட்டம் இல்லாமல் 'திரும்பிப் பார்க்கிறேன்' இருக்கக் கூடாது என்பதால்...)
//
நீங்க எல்லோரோட பிளாக் மட்டும் இல்லை பின்னூட்டமும் சேர்த்தே படிக்கிறீங்கன்னு தெரியுது. இ.கொ.வுக்கு வரும்(?) பெரும்பாலான பின்னூட்டங்கள் அவரே போட்டதா இருக்கும். பார்க்கலாம் அவரை எப்படி கலாய்க்கிறீங்கன்னு...
ரொம்ப நல்லா இருக்கு. அகப்பையில் மாட்டிய யாருக்கும் கோபம் வராமல் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்...
இட்லி வடை.. எக்ஸலெண்ட் ;-)
---------------------------
எச்சரிக்கை: இட்லி-வடை மெய்யாலுமே பதிவு போட்டா (உலகம் முடிய ஒரு வாரம் இருக்கும்போது)...
தமிழகம் புதுவை உட்பட உலகெங்கும் சீக்கிரமே அழியப் போகிறது. அழியும் தேதிகள் அறிவிக்கும் முன்னரே வலைப்பதிவில் பயம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
அழியாமல் இருக்க அனுப்பப்போகும் வலைப்பதிவு கோப்புகளை எப்படி தமிழ் வலையுலகம் தேர்ந்தெடுக்கப் போகிறது?
தமிழ்மணத்தில் கோஷ்டி பிரச்சனை நீடிக்குமா ?
தேன்கூடு - எதாவது செய்து கூட்டணியை உடைக்குமா ?
முகுந்த்ராஜ் என்ன செய்ய போகிறார் ?
பி.கே.சிவகுமார் தனியாக கொடி பிடிக்க போகிறாரா ?
பாஸ்டன் பாலா ('ஹார்ம்லெஸ்') என்ன செய்ய போகிறார் ?
மூன்றாவது அணி இந்த முறையாவது உருவாகுமா ?
சுஜாதா 'வாய்ஸ்' காமெடி இந்த முறையும் இருக்குமா ?
வலைப்பதிவு உலகம் களைகட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
எச்சரிக்கை: இட்லிவடையில் இனி கொஞ்சம் சூடும் குறும்பும் இருக்கும்.
அய்யா இட்லிவடை,
ஆபிசில் படித்துவிட்டு சிரிப்பை அடக்கமுடியாமல் கஷ்டப்படுவதால் வீட்டுக்குப்போய் இன்னொருதரம் படிக்கிறேன். ஆனாலும் இப்படி அன்னியலோகத்தை வாரிட்டீங்களே :0}}}}} (இந்த ஸ்மைலிக்கு மீசை மட்டுமில்ல தாடியும் வளர்ந்திருக்கு)
Venkataramani,
நன்றி. சிரித்தால் ஆயுள் கூடும், அதனால் நிறைய சிரியுங்கள்.
அன்புடன்,
இட்லிவடை
Archives எப்போ எனக்கு வேலை செய்யும். ஏதாவது செய்யுங்களேன் :-)
யப்பா.... இப்படி....?
சிரிச்சுச் சிரிச்சு இப்ப வயித்துவலி:-))))))
தூள் கிளப்பிட்டீர்
உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
http://www.desipundit.com/category/tamil/
மரணம் பற்றி நகைச்சுவையாக எழுத யோசித்திருப்பதே மிக பெரிய விஷயம். பாராடுகிறேன் உங்கள் கற்பனை திறனை
இட்லிவடை,
முன்னர் சொன்னபடி, archives பக்கங்களில் உள்ள இட்லிகளை.. சீ.. இடுகைகளை கண்டுபிடிக்க நான் பயன்படுத்தும் சில keywords உங்கள் டெம்ப்ளேட்டில் இல்லாததால்தான் இதுவரை வேலை செய்யலை. ஆனால், இப்போ உங்களுக்காக ஸ்பெஷலாக ஒரு keyword சேத்தாச்சு!! Archive browser, featured post from archive ரெண்டுமே வேலை செய்யும். முயன்று பாருங்க.
அப்புறம் இதேமாதிரி நிறைய கிச்சுகிச்சு மூட்டுங்க. மனசு லேசான மாதிரி இருக்கு.
பி.கு. தமிழ்மண pdf சேவையை உங்க பதிவில் இருந்து எடுக்காதீங்க. அதுதான் உங்க keyword ;)
துளசி கோபால் - மிக்க நன்றி.
பாலசந்த கணேசன் - கற்பணை எல்லாம் ஒன்னும் இல்லை :-)
ரமணி - நன்றாக வேலை செய்கிறது. ரொம்ப நன்றி. அடுத்த பதிவில் 'கவனித்துக் கொள்கிறேன்'
இட்லி வடை சாப்டே இந்த போடு போடுறாருன்னா, முழுச் சாப்பாடு போட்டா? அவருகென்ன சாப்டு நல்லா வக்கணையா நையாண்டி அடிப்பாரு! படிக்கிறவன்? வயத்துவலின்னு பத்தியமிருக்க வேண்டியதுதான்!
"பிகு: பின்னூட்டத்தில் அனானிமஸ் ஆப்ஷனை எடுக்காதவர்கள் இந்தச் சந்திப்புக்கு வந்தால் அவர்களுக்கு போண்டா கிடையாது."
ஆனால் பில் மட்டும் ஷேர் செய்து கொள்ளவேண்டும்!!!!!!!
அன்புடன்,
டோண்டு ராகவன்
Really I enjoyed this post.
நல்லாவே கலாய்ச்சி இருக்கீங்க இட்லி வடை.
பத்து மேட்டரில் எல்லாத்தையும் நல்லாவே பத்திவிட்டு இருக்கிங்க
:)))))
தேன்கூடு போட்டிக்கு ஆறுதல் பரிசா, ஸ்பெஷல் பரிசே கொடுக்க சொல்வோம்.
ரொம்ப நல்லா இருந்தது.. ரெண்டு தடவை சாப்பிட்டேன்.. 18வது ஈடு மட்டும் கொஞ்சம் ஊசிப்போயிடுச்சி... இன்னொரு தடவை வேகவைச்சா ::
18. இட்லிவடை ::
உலகம் அழியப்போகிறதே என்று எல்லாவற்றையும் ஊத்தி மூடிவிட்டு கடற்கறையில் சுண்டல் சாப்பிட சென்றேன். அங்கே ஒரு கூட்டம் சோகமாக உலக முடிவை பற்றி பேசிக்கொண்டே மசால் வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. பக்கத்தில் போய் உட்கார்ந்து நைசாக இரண்டு வடைகளை அமுக்கிய போது பேச்சு திசை மாறி இட்லிவடை பற்றி திரும்பியது. இந்த "முடிவையும்" இட்லிவடை ரிப்போர்ட் செய்வாரா என்று அவர்கள் பேசியதை கேட்டதும் புல்லரித்தது... உடனே முருகன் இட்லி கடையில் ஒரு ஓரமாக பெஞ்சு போட்டு லேப்டாப் செட்டப் செய்துவிட்டேன். அடுத்த வாரம் உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் வரும் அழிவு செய்திகள் மினிட் பை மினிட் அப்டேட் தரப்படும்.
*
மேலும் உலக அழிவு குறித்து ரஜினி எழுதியதாக வெளிவந்த சத்தியநாராயணாவின் அறிக்கை. (20 செகண்ட் காப்பி எடுக்க போனேன், அதற்குள் அறிக்கை முடிந்துவிட்டது.. நாளை தினமணியில் வந்ததும் கட் & பேஸ்ட் செய்கிறேன்)
வைகோவின் பேட்டி ஜெயா டிவியில் (கரண்ட் கட் என்பதால் இந்த வீடியோ க்ளிப்பிங் முழுவதும் இருட்டாக இருக்கும்)
laughter laughter, lots of that .now i know
why you write under a pen name.
அடப்பாவி :-)))))))))))))))
முகமூடி - அடுத்த முறை நீங்களே எனக்கு எழுதுங்கள். :-)
Anonymous - :-)
உஷா - அட வந்துட்டீங்களா ;-)
ROTFL :))
சுதர்சன் - நன்றி :-)
18::இட்லி வடை
1. பூமி இந்த வாரத்தோட அழியும்னு கடவுள் சொல்லி இருக்கிறாரே . அதை பற்றி உங்கள் கருத்து ?
பூமி உருவாகி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் ஏன் இந்த திடீர் ஞானோதயம் ? நீங்க கடவுளா இல்லை சாத்தானா என்று நாய்கன் ஸ்டைலில் கேட்டகவும். கடவுளின் கடந்தக் காலத்தை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தாலே தெரியும், அவர் ஏற்கனவே பல முறை உலகை அழிக்க முற்பட்டவர் என்று. வேண்டுமானால் நோவா வைக் கேட்டுப் பாருங்கள்.
2 . இதற்கு இந்திய அரசு என்னச் செய்ய வேண்டும் ?
குழந்தைகளையும் தங்களை எதிர்க்கும் எல்லோரையும் தகற்கும் கடவுளுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள கூடாது. வைத்துக்கொண்டால், இது நாம் எல்லோரும் தற்கொலை பண்ணிக் கொள்வதற்கு சமம்
3. அப்ப தமிழர்க்ளின் கதி ?
எல்லாருக்குமே சங்குத்தான். தமிழனுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ?
4. தமிழ் நாட்டில் இருக்கும் சில கட்சிகள் கடவுளின் இந்த செயலுக்கு ஆதரவு தருகிறதே ?
தமிழ் நாட்டில் சில தமிழ் இயக்கங்கள் கொஞ்சம் சவுண்ட் விடுவார்கள், தொண்டை கட்டியவுடன் சும்மா இருந்துவிடுவார்கள்.தமிழர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பது கடவுளுக்குத் தெரியாது,
5.. வலைப்பதிவில் இவருக்கு நிறைய ஆதரவு இருக்கிறதே ?
வலைப்பதிவில் சும்மா ஒரு ஆதரவு இருப்பது போல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள், கடவுள் எதிர்ப்பு தமிழுனுக்கு தனித் சொர்க்கம் என்று எழுதுவார்கள். அவர்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் சிறு பிள்ளைகள். Please excuse them.
Laughter Unlimited..!! Guarenteed by Idlyvadai.
Thanks!!!!
Expecting many such posts...!!!!
ஜெய சந்திரசேகரன் - :-)
டோண்டு - வருகைக்கு நன்றி. நீங்கள் எல்லாம் இருப்பதால் தான் என் புழப்பு ஓடுகிறது.
சுரேஷ் கண்ணன் - நீங்க எங்க இந்த பக்கம் ? அடியேன் தன்னியன் ஆனேன்!
நாகை சிவா - நன்றி.
சின்னவன் - ஹி ஹி
ஸ்ரீராம் - நன்றி.
:-)))))
நன்மனம் - நன்றி
dev - சிரித்ததற்கு ரொம்ப நன்றி.
பின்னூட்டம் போட்டு delete செய்தவருக்கும் நன்றி.
( முதல் மூன்று பேருக்கு நன்றி சொல்லுவதில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. இந்த மூன்று பேரில் ஒருவர் எனக்கு மெயில் அனுப்பி செல்லமாக கோபித்துக்கொண்டார் :) அவருக்கு ஸ்பெஷல் நன்றி.
குமரன் - நன்றி
அய்யா இட்லிவடை
மரணப்படுக்கையிலும்
மறக்காது
சிரிச்சிட்டே போகலாம்:-)))))))))))))
///
அதனால் சனிக்கிழமை நான் யார் என்பதை அறிவிக்கிறேன். அந்தப் பதிவு [இங்கே]
///
இங்கே 'ங்ஏ' ன்னு விழித்தபடி
மதுமிதா - நன்றி.
எப்படிங்க உங்களுக்கு இது மாதிரி யோசிக்க முடிகிறது :-) தேன்கூடு போட்டிக்கு நல்ல வேளை இதை அனுப்பலை
//ஏதோ ஆறுதல் பரிசுக்காவது சிபாரிசு செய்யுங்கள்//
ஆறுதல் பரிசாவது, இந்த பதிவை போட்டியில வெச்சு இருந்தீங்கன்னா இத படிச்சு சிரிச்சு சிரிச்சு வயித்து வலியில கொஞ்சம் பேர் மேல போய் சேர்ந்து இருப்பாங்க. அப்புறம் என்ன முதல் பரிசே கிடைச்சு இருக்கும்.
:: சங்கம் இந்த நகைச்சுவைப் பதிவை பரிந்துரை செய்கிறது::
பார்க்க: http://vavaasangam.blogspot.com
Idly Vadaiyarum Pinnotta Kayamaithanathil eedubada munainthu vittar enbathai ovvoruvarukkum pathil solvathil irunthe therigirahu
:)
இட்லிவடை,
நிஜமாவே ஒலகம் முடியப்போகுதோன்னு பயமா இருக்கு! பின்ன? எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்லறீங்களே! :)))
தல sorry இளா - எப்படியோ http://vavaasangam.blogspot.com விளம்பரம் செய்துட்டீங்க :-) நன்றி.
நாமக்கல் சிபி - எனக்கு மாட்டும் அந்த ஆசை இருக்காதா பின்ன
இளவஞ்சி - பின்னூட்டத்திற்கு பதில் சொல்லவில்லை என்றால் தெனாவட்டு பிடித்த ஆசாமி என்கிறார்கள். பதில் சொன்னால், நீங்க இப்படி பின்னூட்டம் போடறீங்க ;-)
வ.வா.சங்கம் வந்தாச்சு.
ப.ம.க. வந்தாச்சு.
யாரு வரலைன்னு சொல்லுங்க...
;)
இட்லி வடை,
பதினெட்டுப்பட்டி கிராமத்துப் பஞ்சாயத்து நாட்டாமை மாதிரி பதினெட்டு பதிவர்களின் ஸ்டைலைக் கலாய்த்திருக்கின்றீர்கள்.
யாரும் நாட்டாமை இட்லியை மாத்து, சட்னியை ஊத்துன்னு கிளம்பாத வரைக்கும் சரி :-)))
இட்லி வடை அதிக பின்னூட்டங்களுக்கு பதில் சொன்ன பதிவு இது என்பதால் நிஜமாலுமே உலகம் அழிந்தாலும் அழியலாம் உஷார் நண்பர்களே
ஆவியோட இட்லி சாப்பிட்டது மாதிரி இருந்துச்சு. நிறைய வாசிச்சி, நிறைய நேரம் எடுத்து எழுதுவீங்க போலும். நல்லா எழுதியிருக்கீங்க...தருமி
இந்தக் களேபரத்துல தமிழ் நாடு அரசியல் என்ன செய்யும்னு சொல்லவே இல்லையே!!!
நாம வாங்கின ஆறுதல் பரிசுக்கும் ஒரு போட்டியா?
எங்க தலைவரப் பத்தி ஒண்ணும் சொல்லலியே.
போலியார் நற்பணி இயக்கம்,
ஏஞ்சலினா ஜோலி சலூன் கடை,
லெபனான்.
வலைச்சரம் மூலமா இந்த இடுகையப் பார்த்தேன்..நல்ல நகைச்சுவை :)
Post a Comment