பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 19, 2006

கலைஞர் பேட்டி - வாஸ்து, சிவாஜி சிலை...


கேள்வி:- வாஸ்து முறைப்படி சட்டசபை இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா?

பதில்:- இவ்வளவு நாள் என்னிடம் பழகிக் கொண்டு இப்படி கேட்கலாமா?

கே:- அதற்கான அவசியம் ஏற்பட்டதால் கேட்கிறோம்.

ப:- சபாநாயகரிடம் கேளுங்கள்.

கே:- எதிர்க்கட்சி தலைவரை ஆலோசிக்காமல் அவை யில் இருக்கைகள் மாற்றப் பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளாரே?

ப:- சென்னை கோட்டையை ராணி மேரி கல்லூரிக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தார்கள். அப்போது எந்த எதிர்க்கட்சி தலைவரிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கோட்டையை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு மாற்ற பூமி பூஜை போட்ட போது எந்த எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டார். அவரது தோழி சசிகலாவை துணை சபாநாய கர் இருக்கையில் உட்கார வைத்த போது எந்த எதிர்க்கட்சி தலைவரிடம் ஆலோசனை நடத்தினார்.

பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிதான் சிந்தனை செய்ய வேண்டும். சிறிய சாதா ரண விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

கே:- மதிப்பு கூட்டு வரி அமல்படுத்தப்படுமா?

ப:- பட்ஜெட்டில் எதிர்பாருங்கள். இப்போது சொல்ல முடியாது.

கே:- சிவாஜி சிலை அதே இடத்தில் நிறுவப்படுமா?

ப:- சிவாஜி நடிக்க வரும் போதும் பிரச்சினைதான் இப்போதும் பிரச்சினைதான். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வேறு சில இடங்களை பார்த்தோம்.

என்ஜினீயரிடம் கேட்டபோது சிலையை ரம்பத்தினால் வெட்டிதான் எடுக்க வேண்டும் என்று கூறினார். கண்ணகி சிலையை அறுத்து எடுத்தபோது யாரும் கேட்கவில்லை. ஆனால் சிவாஜிக்கு குடும்பத்தினர் இருக்கிறார்கள். சிலையை சிதைத்தால் "சென்டிமென்ட்" ஆக பாதிக்கும் என்று நினைப்பார்கள்.

கே:- சிவாஜி சிலை காந்தி சிலையை மறைக்கிறதா?

ப:- ராதாகிருஷ்ணன் சாலையில் நின்று பார்த்தால் தெரியும். நிச்சயமாக காந்தி சிலையை மறைக்கவில்லை. கண் உடையவர்கள் யாருக்கும் உண்மை தெரியும்.

கே:- அமைச்சரவை கூட்டம் நடக்கும் பழைய அறை எதற்கு பயன்படுத்தப்படும்?

ப:- வெளிநாட்டு பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு இங்கு நடைபெறும். முதல்வர் `சேம்பர்' ஆவணங்களை பார்க்கவும், அரசு அலுவலர்கள், மத்திய மந்திரிகளை சந்திக்கவும் பயன் படுத்தப்படும்.


நன்றி: கார்ட்டூன் மதி, தினமணி

5 Comments:

சீனு said...

உண்மையிலேயே இதிலாவது அரசியல் கலக்காமல், சுமூகமாக முடிவாக எடுக்க வேண்டும்.

ஜோ / Joe said...

ஒரு மாபெரும் கலைஞனுக்கு சிலை வைப்பதில் கூட அரசியல் .என்னமோ போங்க!

மனதின் ஓசை said...

//உண்மையிலேயே இதிலாவது அரசியல் கலக்காமல், சுமூகமாக முடிவாக எடுக்க வேண்டும். //


இப்படியும் ஒரு அப்பாவியா?

சீனு.. அதெல்லாம் சான்ஸே இல்ல....லெபனான இஸ்ரேல் தாக்கறதுக்கே அடுத்த கட்சிதான் காரணம்னு பேசிக்கறாங்க..:-)

நன்மனம் said...

//லெபனான இஸ்ரேல் தாக்கறதுக்கே அடுத்த கட்சிதான் காரணம்னு பேசிக்கறாங்க..:-) //

வாங்க வாங்க மனதின் ஓசை! நீங்களுமாஆஆஆஆஆ..... :-)

மனதின் ஓசை said...

//வாங்க வாங்க மனதின் ஓசை!//
வரவேற்புக்கு நன்றி நன்மனம்...

// நீங்களுமாஆஆஆஆஆ..... :-) //
ஆமாஆஆஆ..... நான் தனி ஆள் இல்ல :-)