திருச்சியில் நடந்த தீ விபத்து பகுதியைப் பார்வையிடச் சென்ற நடிகர் விஜயகாந்த், கூட்டத்தைப் பார்த்து டென்ஷன் ஆகி, அவர்களை கட்டுப்படுத்தாமல் தேமே என்று நின்றிருந்த தனது உதவியாளரை பொதுமக்கள் முன்னிலையில் பளார் பளார் என அறைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் முகாமிட்டுள்ள விஜயகாந்த், தர்மபுரி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று திருச்சியில் ஒரு இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல குடிசைகள் எரிந்து போயின. இதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மாலையில் அங்கு சென்றார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தைப் பார்த்ததும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கூட்டமாக கூடி விஜயகாந்த்தை முற்றுகையிட்டு தங்களது கவலைகளைத் தெரிவித்தனர்.
பல பெண்கள் கண்ணீர் விட்டு அழுதபடி நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று கோரினர். சிலர் விஜயகாந்த்தின் கையைப் பிடித்து இழுத்து அழுது புலம்பினர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், விஜயகாந்த் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி விட்டார்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த தனது உதவியாளரைப் பார்த்த விஜயகாந்த் கோபத்துடன் அவரை பளார், பளார் என அறைந்தார். பின்னர் அடி வாங்கிய உதவியாளர் கோபத்துடன், பொதுமக்களை போங்கய்யா அந்தப் பக்கம் என்று தள்ளி விட்டார்.
விஜயகாந்த்தும் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு பார்க்கலாம், பார்க்கலாம் என்று கூறியவாறு அந்த இடத்திலிருந்து அகன்றார்.
போகும்போது கூட உதவியாளரை அவர் விடவில்லை. திட்டியபடியே போனார்.
நண்பரை அடிப்பது தவறல்ல நடிகர் விஜயகாந்த் விளக்கம் ( நன்றி தினமலர் )
ஸ்ரீரங்கம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறச்சென்ற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூட்ட நெரிசலை சரிசெய்யாத தன்னுடைய உதவியாளரை அடித்து விட்டார். இதனால், எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அடிவாங்கிய உதவியாளரை பத்திரிகையாளர் முன் அறிமுகப்படுத்தினார்.
தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நடிக்கும் "தர்மபுரி' படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீரங்கத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் உள்ள தெருவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 16 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின.
இதையறிந்த நடிகர் விஜயகாந்த் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தாத தன்னுடைய உதவியாளரை அறைந்து விட்டார். இந்த விஷயம் சில மீடியாக்களில் வெளியாயின.
கரூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் இரண்டாயிரம் பேர் தே.மு.தி.க.,வில் இணைப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பத்திரிகையாளர்கள் முன், தன்னால் அடிக்கப்பட்ட உதவியாளரை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் கூறியதாவது:நான், இப்ராகிம், இவர் எல்லாரும் ஆரம்பம் முதலே ஒன்றாக இருந்து வருகிறோம். அவர்களை நான் அடிப்பதும், அவர்கள் என்னை அடிப்பதும் வழக்கமாக நடப்பது. இதில், பெரிதுபடுத்த ஒன்றுமில்லை. இப்போது நான் தலைவராகி விட்டதால், அவர்கள் என்னை அடிப்பதில்லை. இப்படியாவது என்னை "டிவி'யில் காட்டுகின்றனரே என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது. இதையே தேர்தலுக்கு முன்னர் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இவ்வாறு விஜயகாந்த் "அடி' விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பேசினார்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 12, 2006
பொதுவாழ்வில் விஜயகாந்த்
Posted by IdlyVadai at 7/12/2006 07:51:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











19 Comments:
Audio வரலையே idlivadai ....
இதை காட்டிலும் பயங்கரமால்லாம் அவர் சினிமாவில பட்டைய கிளப்பி இருக்காரு. நீங்க என்னடான்னா?
பி.கு.
ஏன் கஞ்சா வழக்கு, ஆசிட் ஊத்தறது, இதையெல்லாம் பண்றவங்க பத்தி நீங்க எழுதுறது இல்ல.
என் டிஜிட்டல் கேமராவில் அதெல்லாம் வராது :-).
இது நிஜமில்லை. தர்மபுரி shootingல் ஒரு சீன் :-)
இது விஜயகாந்த்யை பெரிய ஆள் செய்வதற்கான முயற்சியே...
மக்கள் அடுத்தது கேட்கும் கேள்வியே ஜெ என்னசெய்தார் கலைஞர் என்ன செய்தார் என்றுதான்? என்னமோ போங்க...
கேப்டன் ஆட்சி ஆளவேண்டும் என்று இருந்தால் அது நடந்துதான் தீரும்போல...
முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார்
எம்.ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலிதா மறைமுகமாக செய்ததை நேரடியாக செய்கிறார்.
வாழ்க எம் தமிழ் மக்கள்.
இட்லி வடை
இது படத்தின் காட்சியா?
அது சரி, இட்லி வடை இதுமாதிரி எதாவது சொன்னலே உள்குத்து இருக்கும் என்பது எழுதப்படாத விதி...
Ha...Ha..Ha..
//சாதனை: திருமணம் ஆகவில்லை
காரணம்: ஃபிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை//
இட்லிவடை இதை கவணிக்காமல் விட்டுவிட்டேனே..
சூப்பருங்க...
Can you clarify whether the audio is working or not? It was very arrongant of Vijakanth to behave in such uncouth manner. This guy shouldn't be in politics. Save TN! :(
அடங்கொக்கமக்கா,
கேப்டன் மேலேயே கையை வைச்சா சும்மா இருப்பாரா? இவனுங்க தான் கொஞ்சம் தள்ளி நிக்கறது?
பல்லை இளிச்சிட்டு அவர் மேல உரசரதுக்கு அவர் என்ன நயன்தாராவா?
Anonymous,
Audio is not there - only video :-)
என்ன செய்ய அ.தி.மு.க ஆட்சிக்கு வராது போனதிற்கு தே.மு.தி.க காரணம் என்று "இவ்வளவு சீக்கிரமா" அம்மாவும், ர.ரக்களும் புரிஞ்சுக்கிட்ட மாதிரி தெரிகிறது. அதான் கேப்டன் ஜெயா டி.வி ஸ்கூப் நியூஸ்ல வர்றாரு.
இட்லி வடை,
கேப்டன் விஷயத்தை விட சிலநாM முன்பு நடந்த இன்னும் சூப்பர் விஷயத்த்தினை நீங்கள் கவர் செய்ய மறந்து விட்டீர்கள் தமிழினத்தலைவர் கலைஞரு காருக்குள் ஏறுமுன்பு "பெட் ரோல் விலையேற்றத்திற்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்றதற்கு " அந்நிருபரிடம் "வா நாமிருவரும் தீக்குளிக்கலாம்" என்று சொன்ன விஷயம் தான் அது.
சினிமாவில் இதுவரை வந்த இம்ம்மாதிரிக் காட்சிகளின் / டயலாக் களின் ஆதர்சம் கலைஞருதானா?
//பல்லை இளிச்சிட்டு அவர் மேல உரசரதுக்கு அவர் என்ன நயன்தாராவா?//
ரசித்தேன் :-)
http://www.dinamalar.com/2006july13/events_tn5.asp
நண்பரை அடிப்பது தவறில்லையாம், விஜயகாந்த் பேட்டி, அது சரி அவர் நண்பர் பொது மக்களை அடித்தது சரியாமா?
அந்த நண்பரை இந்த மாதிரி அடிக்க விடுவாரா? அதாவது இந்த உரிமை அந்த நண்பருக்கு உண்டா? ஒரு பெரிய கூட்டணி இருக்கும் போதே இவ்வளவு வாக்கு அவர் பெற்றதற்கு காரணம் தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தது தான். இவர் இந்த மாதிரி எல்லாம் செய்து கொண்டு போனால் இவர் இவர்களுக்கு மாற்று அல்ல. இவர்கள் போல இன்னொருவர் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
குழலி, அவருடைய நண்பர் பொதுமக்களை அடித்தது சரியா என்று கேட்டுள்ளீர்கள். அவர் அதற்கு பொது மக்களும் என்னுடைய நண்பர்களே என்று பதில் கொடுப்பார். இவர்களிடம் போய் விளக்கமோ , கேள்வியோ கேட்பது என்பது சரிப்பட்டு வருமா?
வீடியோவில் வருவதை மட்டும் தான் இது வரை பதிவு செய்திருக்கிறீர்களா இட்லி வடை.
அரசியல் வாழ்க்கையில் அதெல்லாம் சகஜம்!
பாலசந்தர் கணேசன்,
இதுவரை வீடியோவில் வருவதைதான் பதிவு செய்திருக்கிறேன். நேரடியாக பதிவு செய்ய ஆசைதான் ஆனால் இவர்கள் இதையேல்லாம் சொல்லிவிட்டு செய்ய மாட்டேங்கிறாங்க :-)
அன்புடன்,
இட்லிவடை
http://thatstamil.oneindia.in/news/2006/07/13/vijayakanth.html
அவன் என்னை அடிப்பான், நான் அவனை அடிப்பேன். இது எங்களுக்குள்ள சகஜம் என்று கூறியிருக்கிறார் விஜயகாந்த்
Post a Comment