பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 20, 2006

ஜெ அறிக்கை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எனது 17-7-06 ஆம் தேதியிட்ட அறிக்கையில் சட்டமன்றப்பேரவையில் முதல் -அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருக்கைகள் மாற்றி அமைத்திருப்பது சம்பந்தமாக எனது கருத்தை வெளியிட்டு இருந்தேன். அதற்கு கருணாநிதி பத்திரிகையாளர்கள் நேற்று சந்தித்த போது உண்மைக்குப் புறம்பான, அரசு ஆவணங் களுக்கு மாறான சில தகவல் களைத் தெரிவித்திருக்கிறார்.

அதைப் போலவே, சட்ட மன்றப் பேரவைத் தலைவரும் சில முரண்பாடான தகவல்களை வெளிப்படுத்தி இருக்கின்றார். 2 பேரும் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசு ஆவணங்களுக்கு எதிரானதாகும்.

தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ராணிமேரி கல்லூரி இடத்தை முதலில் தேர்ந்தெடுத்ததற்கும், பிறகு கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி இடத்தை தேர்ந்தெடுத்ததற்கும் நான் யாரை, எந்த எதிர்க்கட்சி தலைவரை கலந்து கொண்டு முடிவு எடுத்தேன் என்று கேட் டிருக்கிறார்.

சட்டமன்றத்தில் ராணிமேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்ட இருப்பது பற்றியும், அந்த சந்தர்ப்பத்தில் மேற்படி கல்லூரி எங்கு இயங்க வேண்டும், எப்படி இயங்க இருக்கிறது என்பதையும் நான் சட்டமன்றத்தில் தெளிவுப் படுத்தினேன். பல உறுப்பினர்கள் அந்த விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், சட்டசபைக்கு வராமலேயே இருந்த கருணாநிதி, குறைந்த பட்சம் மேற்படி சட்டமன்ற நடவடிக்கைகளைப் பற்றி பத்திரிகைகளைப் படித்தாவது தெரிந்து கொண்டு இருக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டலாம் என்று அரசு தீர்மானத்தையும் பலமுறை நான் சட்ட மன்றத்தில் தெரிவித்து இருக்கின்றேன்.

நான் முதல்-அமைச்சராக இருந்த போது தலைமைச் செயலகம் புதிய இடத்தில் அமைப்பது குறித்துப் பல முறை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டு பின்பு சட்டமன்றத்திலேயே வெளிப் படையாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கருணாநிதி மத்திய அரசினுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டைப் போட்டதால் அத்திட்டம் நிறை வேற்றப்படவில்லை.

சசிகலா சட்டசபைக்கு வந்தது குறித்து பல ஆண்டுகள் கழித்து ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் தற்சமயம் அவர் கட்சியில் இருக்கும் சேடப்பட்டி முத்தையாதான் காரணம். அப்போதைய சட்டமன்றப் பேரவைத் தலை வராக இருந்தவர் அவர்தான்.

அன்றைய தினம் சட்ட சபைக்குள் வந்து அமர்வதை சசிகலாவும் விரும்பவில்லை. எனக்கும், அதில் உடன்பாடு இல்லை. ஆனால் அது ஒரு பொது நிகழ்ச்சி என்பதால் அதில் தவறில்லை என்று வற் புறுத்தி அழைத்தவர் சேடப் பட்டி முத்தையா. சட்டமன் றத்திற்குள் சசிகலா வந்து அமர வேண்டும் என்றால், அவரை தேர்தலில் நிற்க வைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கச் செய்து சட்ட மன்றத்தில் அவரை அமர வைக்க என்னால் நிச்சயம் முடியும்.

சட்டப் பேரவையில் இருக்கைகள் இடமாற்றம் என்பது ஒரு சாதாரண விஷயம் என்று கருணாநிதி சொல்லி இருக்கிறார். அதாவது, சட்டமன்ற சம்பிரதாயங்கள், சட்டமன்ற மரபுகள், நடைமுறை பழக்க வழக்கங்கள், இவை எல்லாம் அவருக்கு மிகச்சாதாரணமாகத்தெரிகிறது. எதிர்க்கட்சி தலைவருக்கான அறை சிறியதாக உள்ளது என்றும், இன்னும் பெரிய அறையை எனக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் நான் கேட்டதாக கருணாநிதி கூறி யிருக்கிறார். அத்தகைய எந்தக் கோரிக்கையையும் நான் வைக்க வில்லை.

அ.தி.மு.க. கொறடா இது தொடர்பாக வைத்த கோரிக்கையை நான் வாபஸ் பெறுகிறேன். எங்களுக்கு பெரிய அறை தேவை இல்லை.

சபாநாயகர் இருக்கைகளை இடமாற்றம் செய்வது தனது தனிப்பட்ட அதிகாரம் என்றும், அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும், அவர் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் நிலைப்பாட்டை கண்டு நான் பரிதாபப்படுகின்றேன். காரணம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள், அளித்துள்ள பல்வேறு தீர்ப்புகளில், சட்ட விதிகளுக்கு மாறாக மிகப்பெரிய தனிப்பட்ட அதிகாரம் ஏதும் பேரவைத் தலைவருக்கு இல்லை என்று மிகவும் விவரமாகத் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.

தனது அதிகாரத்தைப் பற்றிய வரைமுறைகளையும், இது சம்பந்தமான நீதிமன்ற தீர்ப்புகளையும், சட்டமன்ற கூட்டத்தொடர் இம்மாதம் 22- ஆம் தேதி ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

சட்டப் பேரவைத் தலைவர், பத்திரிகையாளர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்படாமல் தவிர்க்க இருக்கைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இப்படிச்சொன்னவர், சில வரலாற்று உண்மைகளை மறந்திருக்கிறார் அல்லது மறைத்திருக்கின்றார். கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீது செருப்பு வீச்சுவதும் நான் இதற்கு முன்பு 1989-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது என் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதும் தி.மு.க.வினர்தான். அப்போதும் கருணாநிதியின் ஆட்சிதான். ஆக தி.மு.க.விற்கு எதிர்தரப்பில் உள்ள நாங்கள்தான் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இதுதான் வரலாற்று உண்மை.

எந்தவிதத் தாக்குதலுக்குமம் நானோ அல்லது கழக சட்டமன்ற உறுப்பினர்களோ கவலைப்படவில்லை. எனவே எங்களுக்கு மூலை முடுக்கு இடங்கள் தேவையில்லை. எதையும் நேரி டையாகவே எதிர்கொள்ளும் தைரியம் எங்களுக்கு உள்ளது என் பதையும் சட்டமன்றப் பேர வைத் தலைவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவைகளை எல்லாம் கருணாநிதி மற்றும் ஆவுடையப்பன் ஆகிய இருவரும் இனியாவது புரிந்து கொண்டு சட்ட மன்ற மரபுகளையும், நெறி முறைகளையும் கடைபிடிப்பது நல்லது.

3 Comments:

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//எந்தவிதத் தாக்குதலுக்குமம் நானோ அல்லது கழக சட்டமன்ற உறுப்பினர்களோ கவலைப்படவில்லை. எனவே எங்களுக்கு மூலை முடுக்கு இடங்கள் தேவையில்லை. எதையும் நேரி டையாகவே எதிர்கொள்ளும் தைரியம் எங்களுக்கு உள்ளது என் பதையும் சட்டமன்றப் பேர வைத் தலைவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

தைரியலட்சுமி !!! :-)))

சதயம் said...

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இவர் இந்தமாதிரி வெற்று அறிக்கைகளையும் வேகாத வாதங்களையும் நம்பி அரசியல் நடத்தப் போகிறாரோ தெரியவில்லை.....

ஆண்டவண்தான் காப்பாற்ற வேண்டும்....ம்ம்ம்ம்

viewmatrix said...

மலிவு அரசியல் - சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் இவைகள் தாம் தலையாய பிரச்சனைகள்! அறிக்கைகளும் மற்றும் அதன் எதிர் அறிக்கைகளும் நமது அரசியல் பொறுப்புணர்ச்சியை நன்றாக வெளிபடுத்துகின்றன! நடக்கட்டும்!!!!