பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 12, 2006

பிரதமர் மன்மோகன் சிங் உரை

இந்தியாவை யாரும் மண்டியிடச் செய்ய முடியாது. தொடர்ச்சியாக நடந்த குண்டு வெடிப்புகளில் இருந்து மீண்டு ஸ்ரீநகர் மற்றும் மும்பை நகர மக்கள் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பியிருப்பதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது, என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மும்பை தொடர் குண்டு வெடிப்பை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: தொடர் குண்டு வெடிப்பு நடந்த மறுநாளே மும்பை மற்றும் ஸ்ரீநகர் மக்கள் மீண்டும் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு நான் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை யாரும் மண்டியிடச் செய்ய முடியாது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் வல்லமை உள்ளவர்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அரசு தேவையான உதவிகளைச் செய்யும். ஒருங்கிணைந்த இந்தியாவின் அடையாளச் சின்னமாக மும்பை மீண்டும் எழுந்து நிற்கும். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இந்தியாவை யாரும் மண்டியிடச் செய்ய முடியாது. இந்தியாவின் முன்னேற்றப் பாதையில் யாரும் குறுக்கே வர முடியாது. நாட்டின் பொருளாதார சக்கரம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும். இந்தியா தொடர்ந்து மேலான நிலைமையை அடையும். உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கும். மும்பை மற்றும் ஸ்ரீநகர் மக்கள் மீண்டும் தீவிரவாதத்தின் ரணத்தை தாங்கியுள்ளனர். இந்த துயரமான நேரத்தில் நாடே அவர்களின் பக்கம் இருக்கும். நமது நாட்டின் எதிரிகள் நமது அமைதி மற்றும் வளர்ச்சியை சீர்குலைக்க முற்படுவது இது முதல் முறையல்ல. இதுபோன்ற நேரங்களில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்பர் என்பதை அந்த தீய சக்திகள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. துயர சம்பவத்தை எதிர்கொள்வதில் போலீசார், பாதுகாப்புப் படையினர், ரயில்வே அலுவலர்கள், தீயணைப்பு படையினர், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இதர பலர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை அரசு செய்யும். இந்த தீவிரவாத சவால்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அரசு செய்யும். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம். நம்முடைய மன உறுதியை யாராலும் சீர்குலைக்க முடியாது. சகோதர, சகோதரிகளாகிய நீங்கள் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். நம்மை யாரும் பிரித்து ஆள அனுமதிக்கக் கூடாது. நமது ஒற்றுமையில் தான் நமது பலம் உள்ளது. ஒரே மக்களாக, ஒரே நாடாக நாம் இணைந்து நிற்போம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

5 Comments:

Sivabalan said...

Idly Vadai,

Thanks for the news.

சந்தோஷ் aka Santhosh said...

சும்மா இந்த மாதிரி அசைக்க முடியாது ஆட்ட முடியாதுன்னு ஸ்டேட்மெண்ட் விடுவதை விட்டு விட்டு ஏதாவது செய்ற வழியை பாருங்க.. ஒரு 300 பேர் செத்து இருப்பாங்க இதுக்கே நீங்க ஆடவில்லை அப்படின்னா எதுக்கு தான் ஆடுவிங்க..

பாலசந்தர் கணேசன். said...

இட்லி வடை உண்மையிலே சுடசுட தான் பரிமாறுகிறீர்கள்.

சீனு said...

//தொடர்ச்சியாக நடந்த குண்டு வெடிப்புகளில் இருந்து மீண்டு ஸ்ரீநகர் மற்றும் மும்பை நகர மக்கள் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பியிருப்பதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது//
ஆமாம். நாங்கள் விழுந்தவுடம் எழுவோம். நீங்கள் தான் எங்களை விழும் பொழுதே தடுப்பதில்லையே!!!

//இந்தியா தொடர்ந்து மேலான நிலைமையை அடையும். உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கும். மும்பை மற்றும் ஸ்ரீநகர் மக்கள் மீண்டும் தீவிரவாதத்தின் ரணத்தை தாங்கியுள்ளனர். இந்த துயரமான நேரத்தில் நாடே அவர்களின் பக்கம் இருக்கும்.//

உண்மை.

//துயர சம்பவத்தை எதிர்கொள்வதில் போலீசார், பாதுகாப்புப் படையினர், ரயில்வே அலுவலர்கள், தீயணைப்பு படையினர், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இதர பலர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். //

நிச்சயம் பாரட்டப்படவேண்டியவர்கள்.

ஆனால், இந்த கண்டனங்கள், சவடால்கள், "தீவிரவாதத்தை முறியடிப்போம்" ஆகியவை சம்பிரதாய வார்த்தைகளாகிவிட்டன. உளவுத்துறையும், "தண்ணீரில் ஊறவைத்த பிஸ்கட்" உள்துறை அமைச்சரும் என்ன தான் செய்துக்கொண்டிருக்கிறார்கள். பேசாமல் இவர்களெல்லாம் template கண்டனங்கள், அறிக்கைகள் தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.

Thamil said...

"ஸ்ரீநகர் மற்றும் மும்பை நகர மக்கள் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பியிருப்பதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது"

ஆமா உசிரோட இருப்பவன் வாழ்த்துதானே ஆகனும் அதுக்கு மாமூல் வாழ்க்கைக்கு திரும்பாமல் அப்படியே படுத்துக்கிடக்கமுடியுமா? வெத்துவேட்டை விட்டுப்புட்டு குண்டு வச்சவன கண்டுபுடிச்சு நாலுசாத்து சாத்துங்க.