பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 12, 2006

குண்டுவெடிப்பு செய்திகள்..

சபாஷ் மும்பை
மும்பையில் குண்டு வெடித்த 3 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது. மும்பையில் நேற்று மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் 8 இடங்களில் ரெயிலில் குண்டு வெடித்தது. இதனால் மும்பை நகரம் முழுவதும் பெரும் பீதியும் பதட்டமும் நிலவியது. புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன.

ரெயில் பயணிகள் நடுவழியில் தவித்தனர். அதே சமயம் குண்டு வெடிப்பில் பலியானவர்களை மீட்பதிலும் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதிலும் மற்ற பயணிகள் ஈடுபட்டனர்.

ரெயில்வே போலீசாரும் மருத்துவ குழுவினரும் வரும் வரை காத்திராமல் பயணிகளும் அருகில் வசித்த பொது மக்களும் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறìக் கிடந்த உடல்களையும் சேகரித்து ரெயில் நிலையங்களுக்கு கொண்டு வந்தனர்.

ரெயில் பயணிகள் பலர் ரெயில்வே போலீசார் மீது புகார் கூறினார்கள். குண்டு வெடித்ததும் உதவிக்கு உடன டியாக ரெயில்வே போலீசார் வரவில்லை. ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பே இல்லாமல் இருந்தது என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.

குண்டு வெடித்த போது மும்பையில் பலத்த மழை பெய்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

செல்போன்கள் செயல் இழந்ததால் காயம் அடைந்த பயணிகள் தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த னர். வீடுகளில் இருந்தவர்களும் வெளியில் சென்ற தங்களது உறவினர்கள் கதி என்ன என்பதை அறிய முடியாமல் பதட்டம் அடைந்தனர்.

இதே போல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மும்பையில் வசிக்கும் தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதற்கிடையே குண்டு வெடித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.

3 மணி நேரத்தில் நிலைமை சீரடைந்தது. குண்டு வெடிப்பில் சேதம் அடைந்த ரெயில் பெட்டிகள் ஆங்காங்கே தனியாக கழற்றி விடப்பட்டது. மீண்டும் 9.45 மணி அளவில் ரெயில்கள் ஓட ஆரம்பித்தன.

இரவு 9.55 மணிக்கு விரார்-வசாய் இடையே முதலாவது ரெயில் ஓடத் தொடங்கியது. அடுத்து 10.45 மணிக்கு சர்ச்கேட்-பந்தரா இடையேயும் 11.05 மணிக்கு கோரேகான்-போரேவிலி இடையேயும் 11.30 மணிக்கு பந்தரா-அந்தேரி இடையே துறைமுகம் மார்க்கத்திலும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

அதுவரை ரெயில் நிலையங்களில் தவித்த பயணி கள் நள்ளிரவில் வெகு நேரம் கழித்து வீடு திரும்பி னார்கன்.

இன்று காலை மும்பை நகரம் சகஜ நிலைக்கு திரும்பியது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. மின்சார ரெயில்களும் வழக்கம் போல் ஓடின.

தொலை தூரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வழக்கம் போல் மின்சார ரெயில்களில் ஏறிச் சென்றனர்.

வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. சாலையோரத்தில் மக்கள் எல்லோருக்கும் தண்ணீர், உணவு கொடுத்து அசத்தினார்கள். சபாஷ் மும்பை.

பிரதமர் மன்மோகன் சிங் இன்று இரவு தூர்தர்ஷனில் உரை

பிரதமர் மன்மோகன் சிங் இன்று தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.இந்த வார இறுதியில் பிரதமர் மும்பை வரவிருப்பதாகவும், மும்பை நிலவரத்தை அவர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக அவர் இன்று இரவு தூர்தர்ஷனில் உரையாற்ற உள்ளார்.

தீவிரவாதிகள் குறித்து முக்கிய தடயம்

* மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் பற்றி சில தடயங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாசிக், அவுரங்காபாத் உட்பட பல நகரங்களுக்கு புலனாய்வு பிரிவினர் விரைந்துள்ளனர். மேலும் மாஹிம், மாதுங்கா பகுதியில் பென்சில் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தில் லஷ்கர்}இ}தொய்பா மற்றும் சிமி என்னும் இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியவற்றின் கைவரிசை இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

* இந்தியாவில் மத வெறியை தூண்டி விட்டு அதனால் ஏற்படும் வன்முறையில் ரத்தம் குடிக்கும் நரியாக பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் சதிச் செயல்களை பல தடவை இந்திய உளவுத்துறை தொடக்கத்திலேயே கண்டு பிடித்து அழித்துள்ளது. ஆனால் இந்த தடவை உளவுத்துறை கண்ணில் தீவிரவாதிகள் மண்ணை தூவி விட்டு நாசவேலையை அரங்கேற்றி விட்டனர்.

எல்லாம் நடந்து முடிந்த பிறகு உளவுத் துறையினர் இப்போது தான் சுறு சுறுப்பாகி உள்ளனர். குண்டு வெடிப்பு ஸ்டைலைப் பார்த்து விட்டு, இது லஷ்கர்-இ-தொய்பா கைவரிசை தான் என்ற முடிவுக்கு அவர்கள் வந் துள்ளனர். தடயவியல் ரிப் போர்ட் வந்ததும் அடுத் தடுத்து உண்மை களை கண்டு பிடிக்கப் போவதாக உள வுத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

முதல் கட்ட ஆய்வில், அல்- கொய்தா வகுத்து கொடுத்த திட்டத்தை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் உள்ளூர் சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்) ஆதரவாளர்கள் துணையுடன் நிறைவேற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நோக்கமே வர்த்தக தலைநகரான மும்பையை சீர்குலைப்பதுதான். அதற்கு சிமி ஆதரவாளர்கள் உதவி இருக்கிறார்கள்.

மும்பையில் சிமி இயக்கத்தினர் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்கள் தான் ரெயில் பெட்டிகளில் குண்டுகளை கொண்டு போய் வைத்துள்ளதாக உளவுத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

பிவாண்டியில் நடந்த மத கலவரம், பால் தாக்கரே மனைவி சிலை விவகாரத்தால் நடந்த சம்பவங்கள் தான் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்று மக்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. ஆனால் இதை உளவுத்துறை மறுத்துள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்பு பல மாதங்களாக திட்ட மிட்டு நடந்துள்ளது என்று அறிவித்துள்ளனர்.

* மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியில் வசித்து வருபவர் சந்தீப்சிங். சிட்டி பைனான்சில் பணியாற்றிய இவர் தற்போது வேறு வேலை தேடி வருகிறார்.

நேற்று இவர் வேலை தேடுவதற்காக சர்ச்கேட் பகுதிக்கு சென்றிருந்தார். மாலை 5.30 மணிக்கு சர்ச்கேட் ரெயில் நிலையத்துக்கு சந்தீப்சிங் சென்றார். அப்போது ரெயில் நிலைய வாசலில் நின்றிருந்த 3 பேரை அவர் தற்செயலாகப்பார்த்தார்.

அந்த 3 பேரும் தங்களுக்குள் ஏரோ தீவிரமாக விசாரித்தப்படி நின்றனர். சந்தீப்சிங் அவர்களை நெருங்கி கடந்த போது, "பரிசை (வெடிகுண்டு) நாம் வைக்கலாம்'' என்ற வார்த்தை காதில் விழுந்துள்ளது. மேலும் அந்த 3 பேரில் ஒருவன், மற்றவர்களிடம், "சார் நான் பார்சல் டிரெயினை விட்டுவிட்டேன், மலாடு டிரெயினை நான் எப்படியும் பிடிச்சுடுவேன்'' என்று கூறி இருக்கிறான். இதை கேட்ட சந்தீப்சிங் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் சென்றுவிட்டார்.

இரவு 7 மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்த சந்தீப்சிங், மும்பை ரெயில்களில் 8 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித் ததை டி.வி.யில் பார்த்து அதிர்ந்தார். அப்போது தான் அவருக்கு சர்ச்ரோடு ரெயில் நிலையத்தில 3 பேர் நின்று தீவிரமாக பேசியது நினைவுக்கு வந்தது.

அவர்கள் மூவரின் நடை, உடை மற்றும் கையில் வைத் திருந்த பொருட்களை ஞாபகப் படுத்தி பார்த்த சந்தீப்சிங் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர்கள் 3 பேரும் குண்டு வைத்த தீவிரவாதிகள் என்பதை உணர்ந்தார்.

இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீ சாரும், தீவிரவாதிகள் தடுப்பு பிரிவினரும், உளவு பிரிவினரும் சந்தீப்சிங்கிடம் விசாரணை நடத்தினார்கள்.

சந்தீப்சிங் நேரில் பார்த்த 3 தீவிரவாதிகளில் 2 பேர் நீண்டதாடி வைத்து இருந்தனர். பதான்ரக உடை அணிந்து இருந்தனர்.

மூவர் கையிலும் 3 பெரிய பொட்டலங்கள் இருந்தன. கிப்ட் பேப்பர் போட்டு அவை சுற்றப்பட்டு இருந்தன. அந்த பார்சலுடன் அவர்கள் ரெயில்களில் ஏறி உள்ளனர்.

சந்தீப்சிங் சொன்ன தகவல்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் தீவிரவாதிகள் உருவப்படம் வரையப்பட்டு வருகிறது.

தீவிரவாதிகள் யார் என்று மும்பை போலீஸ் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் சந்தீப்சிங் கொடுத்த தகவல்கள் மூலம் தீவிரமாக உளவுத்துறை துப்பு துலக்கி வருகிறது.

உயிரிழந்தவர் - 190, காயம்மடைந்தவர் - 625
மும்பையில் நேற்று மாலை நடந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 190 பேர் உயிரிழந்தனர். மேலும், 625 பேர் காயமடைந்தனர்.

1 Comment:

நாகை சிவா said...

மும்பை மக்களை கண்டிப்பாக பாராட்டத் தான் வேண்டும்.
மக்களும் விழிப்புணர்வு அடைந்து இருப்பது மகிழ்ச்சியான விசயம் தான்.
சபாஷ் மும்பை