பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 11, 2006

மும்பை தொடர் குண்டுவெடிப்பு

மும்பையில் ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதலில் கர் பகுதியில் ஓடும் மின்சார ரயிலில் குண்டு வெடித்தது. 2வதாக மிரா சாலை ரயில்நிலையத்திலும், 3வதாக மாதுங்கா ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. 4வதாக ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. 5வதாக போரிவில்லி பகுதியில் குண்டு வெடித்துள்ளது. மாலை 6.09 மணிக்கு முதல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனைத்து ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் தொலைப்பேசி தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லா குண்டு வெடிப்பு சம்பவங்களும் மும்பையின் மேற்கு பகுதியில் நடந்துள்ளது.

IBNLive

NDTV

update 1: 8:10pm - குண்டுவெடிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது, 60+ மரணம், பலர் காயம்

Mumbai Helpline Number: 022-22005388

Update 2: 8:20pm - 80 பேர் மரணம், 400 பேர் காயம்

Update 3: 9:45pm : I am in the process of getting the exact information. Before getting full information, it is not correct for the govt to disclose anything. We would take precautions but not a national alert. - Shivraj Patil, Home Minister
The series of blast in Jammu and Kashmir and Mumbai are shocking and cowardly attempts. My heart reaches out to all those affected by these blasts... Citizens of Mumbai have faced terror more than 10 years ago. I urge the people to stay calm, not believe rumours and carry on with their activities. - PM Statement
Our priority is to ensure that nothing untoward takes place as a result of the blast - Police Commissioner A N Roy
12 bodies recovered from Borivili and three from Khar stations - Police Commissioner A N Roy
Terror attacks planned - Home Ministry
No link between Mumbai, Srinagar blasts - Home Secretary

MUMBAI HELPLINE: (022) 22005388
COOPER HOSP: 26207254, 26207256
HINDUJA HOSP: 24451515, 24452222

Update: 9:50 - லல்லு மும்பை செல்கிறார், சோனியா அதிர்ச்சி, பாக் அதிபர் முஷ்ரப் கண்டித்துள்ளார்.

Update: 10:00pm : குண்டுவெடிப்பு படங்கள் ( NDTV வழியாக )


Update 10:10pm: - * மக்கள் பதட்டம் அடைய வேண்டாம் அமைச்சர் பாட்டீல் வேண்டுகோள்.

* சீரழிந்து விட்டது உள்நாட்டு பாதுகாப்பு மத்திய அரசு மீது அத்வானி பாய்ச்சல - மும்பையில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிடவும், குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் அத்வானியும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கும்மும்பை செல்கின்றனர்.

* தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த டி.ஜி.பி.,க்கு முதல்வர் கருணாநிதி நேரடி உத்தரவு

* டில்லி மெட்ரோ ரயில்நிலையங்களில் அபாய அறிவிப்பு

மும்பை குண்டு வெடிப்பு : பிரதமருடன் உள்துறை அமைச்சர் அவசர ஆலோசனை

* குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசரணை மேற்கொள்ளப்படும் - முதல்வர் விலாஷ்ராவ் தேஷ்முக் - இறந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாயயுள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Update 10:20pm - மும்பையில் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.மேலும் தகவல்கள் பெற ஹெல்ப்லைன் 22005388 என்ற எண்ணுக்கும் , விசாரணைக்கு 131, 3061763 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

Update 10:30pm: 8 குண்டுவெடிப்பு என்று செய்தி.

Update 12/7/06 - 12:45am - மும்பை குண்டு வெடிப்பு : பாதிக்கப்பட்டவர்களை சோனியா, சிவராஜ் பாட்டீல், லாலு நேரில் பார்த்து ஆறுதல்.

தகவல் + உதவிக்கு இங்கு செல்லவும்

Messages from kith & Kin

Update 6:45am - தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டது என்பதையே மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் காட்டுகிறது. இதுபோன்ற தீவிரவாத சம்பவங்களை கட்டுப்படுத்த உறுதியான, கண்டிப்பான சட்டங்களை கொண்டு வர வேண்டும். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை பின்பற்றுகிறது. மேலும், அவர்களுடன் நட்பும் காட்டி வருகிறது. - உமா பாரதி.

31 Comments:

We The People said...

நம் இந்திய அரசு மேலும் சில ரெயில்களும், பேருந்துகளும் பாகிஸ்தானுக்கு ஓட வைத்தால் இது போன்ற நிகழ்வுகள் தினமும் கேட்டு இந்திய மக்கள் பூரிப்பு அடையலாம். அல்லது திருவாளர் முஷாரப் சொல்வது போல் ராணுவ விலகல் ஒப்பந்தம் செய்தால் இன்னும் ஜாலியாக இருக்கும். :( ஐயோ! ஐயோ!! நமக்கு புரியும் அளவுக்கு கூட இந்திய அரசை வழி நடத்தும் மந்திரிகளுக்கு தெரியாதா என்ன??

சுதர்சன் said...

கொடூரம். இந்த ரத்தக் காட்டேறிகளின் மூர்க்கம் அப்பாவிகளின் மீதே பாய்வது பெருங்கொடுமை.

Sivabalan said...

மிகவும் கோழைத்தனமான செயல்.

வன்மையாக கன்டிக்கதக்கது.

ENNAR said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை
மக்கள் சுதந்திர நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே!! ஐயகோ! அந்த கொடூர எண்ணங் கொண்டவர்களை ஒரு கையையும் ஒரு காலையும் வெட்டி காட்டில் போட்டால் கூட நமது கோபம் அடங்காது.

கால்கரி சிவா said...

பொறுத்தது போதும் அரசியல்வாதிகளே இஸ்ரேலைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள். இந்த முறை தீவிரவாதிகளுக்கு தரும் அடியில் அவர்கள் எந்திருக்கவே கூடாது

Shakthiprabha said...

நாம் எவ்விதமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.
எத்தனை பேரின் வலிகள், ஓலங்கள்..
இத்தனை பேரின் கதறல்களால் இன்பம் விளையும் என்ற நினைப்பே அருவெறுப்பானது.

Idly Vadai said...

Some more updates.

Idly Vadai said...

8 குண்டுவெடிப்பு என்று செய்திகள் சொல்லுகின்றன.

தம்பி said...

இப்பதான் படிச்சேன் ரொம்ப வேதனையா இருக்கு. கொஞ்ச நாளா தலை காட்டாம இருந்தது இப்போ மறுபடி தலை காட்ட ஆரம்பிக்குது. தொடர்ந்து குண்டுகள் வெடிக்காம பாதுகாப்பை பலப்படுத்தணும். இனிமேல் நடக்காதவாறு நடவடிக்கைகள் இருக்க வேண்டும். எதிகட்சிகள் ஆளுங்கட்சியை குறை கூறிகொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபட வேண்டும்

செய்வார்களா?

சல்மான் said...

கடுமையாக சாடப்பட வேண்டியது. அப்பாவிகளுக்கு என்ன ஆறுதல் சொல்வது? குற்றவாளிகளுக்கு எவ்வித த்யவுதாட்சன்யம் காண்பிக்ககூடாது

சல்மான்

Idly Vadai said...

தகவல் + உதவிக்கு : http://mumbaihelp.blogspot.com/

Muse (# 5279076) said...

இன்று அவர்கள். நாளை உங்களுடைய குழந்தைகள்.

யார் செய்தார் என்று தெரியவில்லை. நேற்று வரை ஏதோ சிலையில், யாரோ மண்ணை வீஸிவிட்டார்கள் என்று பஸ்ஸை எரித்த ஷிவ சேனாவும் இதை செய்திருக்கலாம். அப்படி நடந்திருக்குமானால் அவர்கள் இந்தியர்களை எதிரியாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர் என்று பொருள். இப்போது இதைச் செய்தது இவர்களில்லாமலிருக்கலாம். ஆனால் இதுவரை இவர்கள் செய்டுவந்த ஹிந்து தீவிரவாதத்திற்கு இவர்களையெல்லாம் தடை செய்யவேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற குண்டு வெடிப்பை இவர்கள் எதிர்காலத்தில் செய்வது நிச்சயம். இஸ்லாமியத் தீவிரவாதம், ஹிந்து மதத் தீவிரவாதம் இரண்டும் தடை செய்யப்பட வேண்டும். அழிக்கப்பட வேண்டும். அரஸாங்கமே இங்கு பலமுள்ளதாகவேண்டும். ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும். அது மனித நலம் நாடும் அரசாங்கமாகவிருக்கவேண்டும். ஹிந்து மதத் தீவிரவாதம் ஆபிரகாமிய மதங்களின் விளைவு என்பதால் அதை விட்டுவிட முடியாது.

Anonymous said...

Ithu oru thodarkathai...thodarum. Yaar muttruppulli vaipathooo

துளசி கோபால் said...

என்னங்க இது அநியாயம். இப்படிச் செஞ்சுட்டாங்களே.

கூட்டங்கூட்டமா மக்களைக் கொன்னு குவிக்கறாங்களே.

சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு என்னன்னு
ஆறுதல் சொல்ல முடியும்?

Anonymous said...

வளைகுடா பதிவர்கள் யாராச்சும் இது சம்பந்தமா பதிவு போட்டானுங்களா பாருங்களேன்.

Anonymous said...

புளிச்ச பிண்டங்களுக்கு(பு.பி),

"தன் வினை தன்னைச் சுடும்","எல்லாம் கிருஷ்ணனின் மாய விளையாட்டு" ? ?..!..!


மற்றபடி,செய்தவர்களுக்குக் கண்டணங்கள்,பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஜோ / Joe said...

அப்பாவி மக்களை கொல்லும் பேடிகள்!

மனதின் ஓசை said...

காட்டுமிரான்டித்தனமான, மனிதத்தன்மையற்ற செயல்.. இத்தகைய சக்திகளை உடனடியாக வேரருக்க வேண்டும்...

நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருனம் இது..பாதிப்படைந்தவர்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்ப்போம்....அவரவரால் முடிந்த உதவிகளை செய்வோம்...

இதன் பாதிப்பாக மெற்கொண்டு எதுவும் வன்முறை நிகழாமல் இருக்க பிரர்த்திப்போம்..

We The People said...

நாம் திரும்ப அடி கொடுக்கும் நாள் இன்று தான்!! War Against Real Terror Unlike USA declared war!!! ஒரு அளவு வேண்டும் பொருமைக்கும்! இது தான் Breaking Point!!! அரசு நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும்.

வெட்டிப்பயல் அவர் சொன்ன காமெடியிலும் ஒரு பெரிய பொருள் இருக்கு!!! அரசு இனியாவது சினிமா வடிவேலு போல் அடிவாங்கி கொண்டு இருக்காமல் சினிமா விஜயகாந்த் போல் படையெடுக்க வேண்டும். அடிவாங்குவது சாதாரண மக்கள் மந்திரிகள் அல்ல என்பதால் தானோ இந்த தாமதம்!!!


ஒரு மத்திய மந்திரியின் மகள் மேல் காட்டும் கரிசனம்த்தில் 10தில் ஒரு பங்கு கூட இந்த பாவப்பட்ட மக்கள் மேல் காண்பிக்காத அரசு இருந்து என்ன பயன்??

ஓகை said...

மஹாராஷ்ட்ரத்தில் மரண ஓலம் கேட்கச் செய்தவர்களுக்கு மரண மொழியிலே பதில் தர வேண்டும் நம் அரசாங்கம்.

Anonymous said...

உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். இலங்கையில் புலிகள் ஒரு போதும் அப்பாவி மக்களை கொன்றது கிடையாது. சமீபத்தில் நடந்த பேரூந்து நிகழ்ச்சி கூட அவர்களால் செய்யப்பட்டது அல்ல. புலிகள் நினைத்தால் கொழும்பிலோ அல்லது வேறு பெரிய நகரங்களிலோ, இது போல குன்டுகள் வைக்க முடியும் ஆனால் அது அவர்கள் நோக்கமுமல்ல. புலிகளைக் கண்டபாட்டுக்கும் குறை கூறுபவர்கள் இதை ஒரு முறை சிந்திக்க வேண்டுகிறேன். வெந்த புண்னில் வேல் பாச்சுவதாக நினைக்க வேன்டாம்.

Idly Vadai said...

Anonymous,
ராஜிவ் காந்தியுடன் இறந்தவர்கள் எல்லாம் எந்த கணக்கு. இப்படி லூஸ் தனமாக பேசுவதை முதலில் நிறுத்துங்கள்.

Thamil said...

சோவிடம் கேட்டால் இதற்க்கும் யார் காரணம் என்று உடன சொல்லுவார் அதை வைத்து அவர்களை பிடித்து விடலாம்.

இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

சுவனப்பிரியன் said...

gundu vaittha kozaihalai thookkil ida vendum.

Anonymous said...

எத்தனை பேரோட வயிறு எரிகிறதோ. யார் பதில் சொல்வார்கள்/

Anonymous said...

இட்லி வடை அவர்களே. ராஜீவ் காந்தியின் மரணத்துக்கு புலிகள் காரணமாக இருந்தனர் என்று தெரியும் வரை இதட்கு நான் பதில் கூற முடியாவிட்டாலும். அப்படி ஒன்று நடந்தது வேதனைக்குரியதே. அதாவது ராஜீவ் காந்தியுடன் இறந்த அப்பாவி மக்களுக்காக மட்டும் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் ராஜீவ் கந்திக்காகவல்ல. கையில் தூக்கி வளர்த்த அக்காவின் மகள் என்னைப் போன்ற தாய் மாமனின் கண் முன்னாலேயே இந்திய இராணுவத்தால் கட்பழித்துக் கொலை செய்யப்பட்ட வேதனைகளையும் வலிகளையும் உம் போன்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அப்படி ஒன்று உமக்கும் நடந்தால் ( நடக்கக் கூடாது என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்) அப்போது புரியும் எங்கள் வேதனை. எங்களிடம் இருக்குக் ஒரே ஒரு சந்தோசம் உம்மைப் போன்ற ஒரு சிலர் தவிர்த்து ஏனைய தமிழ் நாட்டில் இருக்கும் பலர் எம்மைப் புரிந்து கொள்வதே

Anonymous said...

அப்பாவி பொது மக்கள் மும்பையில் இறந்திருக்கும் நேரம் இந்த வாக்குவாதம் அழகல்ல. அதனால் வேறு ஒரு சமயம் சந்திப்போம் இட்லி வடை அவர்களே.
அத்துடன் இறந்த அனைத்துப் பொது மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thamil said...

கஸ்மீர் மக்களையும் இந்தியா சரிசமனாக மதித்து அவர்களது உரிமையை மதிக்கும் வரை இப்படியான மக்களின் வீன் அழிவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

செல்வமணி said...

அனானி...இதிலும் புலி பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டீர்களா? 1984 என்று நினைக்கிறேன்...அனுராதபுரம் சம்பவம் என்று ஒன்று உங்கள் நாட்டில் நடந்தது...கொல்லப்பட்ட அனைவருமே அப்பாவி மக்களே..அதன் சூத்ரதாரி யார் என்பது உலகறிந்த உண்மை...புலிகள் சம்பங்களுக்கு உரிமை கோருவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றன. அதுகூட தெரியாத அப்பாவியாக இருக்கிறீர்கள்.

உங்கள் பெயரைக் கூட நீங்கள் சொல்லமாட்டீர்கள்...ஆனால் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை மட்டும் நாங்கள் அப்பிடியே நம்பிவிடவேண்டும். ம்...நம்புகிறோம் அய்யா...நம்புவதுடன் வருத்தமும் அடைகிறோம்.

ஆமாம்...தமிழ் நாட்டில் பலரும் உம்மை புரிந்துகொண்டுதான் உள்ளார்கள்.அவர்களைத்தான் உங்கட'பொடியன்' கள் கேவலப்படுத்தி பேசுவார்கள்.


thamil காஷ்மீர் மக்களின் உரிமை பற்றி பேசுகிறார். அதே போல் மலையக தமிழர்கள்,மட்டகிளப்பு தமிழர்கள்,கிழக்கு மாகாண தமிழ் முஸ்லீம்மக்கள் உரிமை பற்றியும் பேசினால் நமக்கு பெரிதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

நரி மட்டுமல்ல புலியும்தான்.

மும்பை வெடிகுண்டு சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதுடன், இந்த மாதிரி சம்பவங்களுக்கான காரணங்களை ஆணிவேரோடு கண்டுப்பிடித்து அவைகளை நீக்க வேண்டும்.

இந்தியா பெரிய நிலப்பரப்பையும்,அதிக மக்கள் தொகையும் ஒருங்கே கொண்ட ஒரு நாடு.RAW,CBI போன்ற உளவு அமைப்புகளோ,பாதுகாப்பு அமைப்புகளோ இதனூடாக செயல் படும் போது மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றன.தீவிரவாதிகளுக்கு இது மிகவும் சாதகமாக உள்ளது.அதனால்தான் சரியான கால இடைவெளியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் இதை செய்த சிலரை தேடி நம்முடைய அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் தங்கள் சக்தியை வீணடிக்கின்றன.அதற்கு பதிலாக இந்த மாதிரி சம்பவங்களுக்கு காரணமான அடிப்படை காரணங்களை கண்டுபிடித்து அதை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதே சிறந்தது.

aaradhana said...

கொடூரம் சார். ஏன் சார் இப்படி?

Idly Vadai said...

இதற்கு மேல் இந்த பதிவில் புலிகளை பற்றி வரும் பின்னூட்டமும் அனுமதிக்கப்பட மாட்டாது.
அன்புடன்,
இட்லிவடை