பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 06, 2006

AIIMS

* எய்ம்ஸ் மருத்துவமனை செயல் பாட்டை நிர்வாகக் குழு கவனித்து வருகிறது. இதன் உறுப்பினர்களாக பா.ஜ., தலைவர் வி.கே.மல்கோத்ரா உட்பட 17 பேர் உள்ளனர். இதன் தலைவர் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி. இந்த நிர்வாக குழுவின் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு டில்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சக அலுவலகத்தில் நடந்தது. எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகம் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், இயக்குனர் வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியுடன் மிகுந்த பரபரப்புடன் இந்தக் கூட்டம் துவங்கியது. மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், சுகாதாரத் துறை செயலர் உட்பட உறுப்பினர்கள் 17 பேரும் கலந்து கொண்டனர். மருத்துவமனை டீன் தேகாவும் கூட்டத்தில் பங்கேற்றார். வேணுகோபாலும் கூட்டத்தில் இருந்தார். மூன்று மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. இறுதியில் "வேணுகோபாலை இயக்குனர் பதவியில் இருந்து நீக்குவது, அவருக்கு மூன்று மாத சம்பளம் கொடுத்து வீட்டுக்கு அனுப்புவது' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

* "வேணுகோபால் நீக்கப்பட்டார்' என்ற செய்தி வெளியானதும், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களில் பெரும்பான்மையானவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனை வளாகத்தில் ஒன்று கூடினர். அங்கிருந்த சுகாதார அமைச்சர் அன்புமணியின் அலுவலகத்துக்கு கும்பலாக சென்று அங்கிருந்த பெயர் பலகையை அதிரடியாக அகற்றினர். அன்புமணியின் சிறப்பு அதிகாரி மூர்த்தியின் பெயர் பலகையும் அகற்றப்பட்டது. பின்னர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

* தகுந்த சிகிச்சை கிடைக்காமல் ஒரு நோயாளி உயிரிழந்திருக்கிறார்.

* எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபால் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

* "சும்மா இருந்த சங்கை ஊதி" என்று ஒரு பழமொழி இருக்கிறது
கார்ட்டூன் உதவி: DC

2 Comments:

Anonymous said...

we miss the point that anbumani is the boss of the institute. the boss is always right, like it or not. venugopal was fired for insubordination and rightfully so. it is immaterial that he is a world class surgeon. he did not play his relationship with his superiors right. i feel sorry for him, but he has to go.

செல்வமணி said...

அரசின் கொள்கை முடிவின் படி 27% சதவீதம் என்று முடிவாகிறது.AIIMS மருத்துவர்களின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறது.எல்லாம் சரி. அது அவர்கள் உரிமை சம்பந்தப்பட்ட விசயம்.நம் பிரச்சனை அந்த போராட்டம் AIIMS வளாகத்திலேயே நடத்தப்பட்டிருகிறது.SHAMIYANA போடப்பட்டு FAN மற்றும் AIR-COOLERS பயன் படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் எங்கிருந்து மின்சாரம் பெற்றார்கள் என்பதை யாரவது மூளை அதிகமாகி காதில் வழிபவர்கள் பதில் சொன்னால் பரவாயில்லை. வேணுகோபாலின் அனுமதியில்லாமல் இதெல்லாம் நடந்திருக்குமா? அல்லது வேலை நிறுத்தம் நடைபெற்ற போது அதை முடிவுக்கு கொண்டுவர வேணுகோபால் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை MERIT தகுதி உள்ளவர்கள் பதில் சொன்னால் எங்களைப் போன்ற அப்பாவிகள் தெரிந்துகொள்வோம்.