பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 01, 2006

புலியா? பூனையா ? - டாப் டென் - 2

1. 15 வருடம் கழித்து பாலசிங்கம் 'வருத்தம் தெரிவித்து, இந்தியா பெருந்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று ...ஏன் இப்போது இந்த திடீர் ஞானோதயம் ?

15 வருடம் கழித்து திடீர் என்று புலி உருமாமல் 'மியாவ்' என்று சத்தம் போடுகிறது. நீங்க புலியா ? பூனையா ? என்று நாயகன் ஸ்டைலில் படிக்கவும். ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடை ஒரு காரணமாக இருக்கலாம். "நாங்களும் சிங்களர்களும் சகோதரர்கள். எங்களுக்குள் ஏற்படுகிற விவகாரத்தில் அந்நியர்களான இந்தியர்கள் தலையிடத் தேவையில்லை" என்று பிரபாகரன் சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார். புலிகளின் கடந்த காலத்தை நினைத்து பார்த்தால் நன்றாக புரியும், இது ஏமாத்து வேலை என்று. பாலசிங்கம் பேட்டியை பார்த்து கலைஞரே குழம்ப்பிபோயிருக்கிறார்.

2. இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் ?

குழந்தைகளையும், மனித வெடிகுண்டு மூலம் காட்டுமிராண்டி போல் தங்களை எதிர்க்கும் எல்லோரையும் தகற்கும் புலிகளுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள கூடாது. வைத்துக்கொண்டால், இது நாம் எல்லோரும் தற்கொலை பண்ணிக் கொள்வதற்கு சமம். தீவிரவாதத்திற்கு ஆதரவு என்பது பாம்புக்கு பால் வார்ப்பது போன்றது. இந்தியா இதுவரை எந்த நிலைப்பாடில் இருந்ததோ அதே நிலைபாடுடன் (முடிந்தால் இன்னும் கடுமையான நிலையில்) இருப்பது தான் உத்தமம்.


3. அங்குள்ள தமிழர்க்ளின் கதி ?

தமிழ் அகதிகள், ஈழத்தமிழர் போன்ற வார்த்தைகளையும் புலிகளையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

4. ராஜிவ் காந்தி இறந்தது பழைய விஷயம் அதையே எவ்வளவு நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள் ?

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையுண்ட (துன்பியல்) சம்பவம் பழைய விஷயம் என்று பிரபாகரன் ஒதுக்கலாம், பாலசிங்கம் "பெரிய வரலாற்று துயரம்" என்று சொல்லலாம். நாம் ஒதுக்க முடியாது. எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு So Called நியாயமான காரணம் இருக்கும். எல்லா குற்றங்களையும் நியாயப்படுத்த முடியும். திருட்டுக்கு காரணம் - ஏழ்மை;கொலைக்கு காரணம் - கோபம், ஏன் பிக்-பாக்கெட்டிற்கு கூட காரணம் கண்டுபிடிக்க முடியும். நாட்டிற்கும், மக்களுக்கும் எதிர்காலத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது - தீவிரவாதிகளின் நாசவேலைகளே இதற்கு போய் காரணம் தேடி நியாயத்தை ஆராய்ந்து கொண்டு பொழுதை கழிப்பது வடிகட்டின முட்டாள்தனம். ஆட்டோ சங்கர், வீரப்பன் எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்கும். தீவிரவாதிகளை ஒழிப்பதில் தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது.


5. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்குத் தானே பாடுபடுகிறார்கள் ?

ஆமாம். தமிழர்களையும் தமிழர் பிரதிநிதிகளையும் கொலை செய்து தமிழர்களுக்கு 'விடுதலை' அளித்துவந்துள்ளார்கள். அகதிகளாக வரும் தமிழர்களை கேட்டுப்பார்த்தால் தெரியும். அவர்களில் பெரும்பாலானவர்கள் புலிகளை ஆதரிக்க மாட்டார்கள். யாரும் வன்முறையை விரும்ப மாட்டார்கள்.

6. தமிழ் நாட்டில் இருக்கும் சில கட்சிகள் இவர்களுக்கு ஆதரவு தருகிறதே ?

தமிழ் நாட்டில் சில தமிழ் இயக்கங்கள் கொஞ்சம் சவுண்ட் விடுவார்கள், தொண்டை கட்டியவுடன் சும்மா இருந்துவிடுவார்கள். வைகோ, ராமதாஸ் 1999 ஆம் ஆண்டு தமிழர்களான நளினி, முருகன், சாந்தன் போன்றவர்களுக்கு அவர்கள் செய்த தியாகத்திற்கு மரண தண்டனையை குறைக்க சொல்லி வலியுறுத்தினார்கள். தமிழர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பது சட்டத்திற்கு தெரியாது, தெரியக் கூடாது. "Auto" சங்கரும் ஒரு தமிழர் தான், ஏன் அவர்கள் அவனுக்கு விதித்த தூக்கு தண்டனையை குறைக்க சொல்லவில்லை.
பிகு: "தொப்புள் கொடி உறவு", "தமிழினத் தலைவர்", போன்ற கோஷங்கள் செய்யும் கோஷ்டிகளுக்கு வாயில் ஒட்டிக்கொள்ள 3M டேப் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

7. இலங்கையில் மீண்டும் போர் மூளுமா ? மூண்டால் யாருக்கு லாபம் ?

தெரியாது. அப்படி ஒரு போர் மூண்டால், இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இந்தியா உதவக்கூடாது. இலங்கையில் யுத்தம் மூண்டால் லாபம்புலிகளுக்கும் கிடையாது, இலங்கை அரசுக்கும் கிடையாது. ஆயுத வியாபாரிகளுக்கு தான்.

8.. வலைப்பதிவில் இவர்களுக்கு நிறைய ஆதரவு இருக்கிறதே ?

வலைப்பதிவில் சும்மா ஒரு ஆதரவு இருப்பது போல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள், பூணூல் ஏடுகள், பாப்பார புத்தி என்று எழுதுவார்கள். அவர்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நான்கு, ஆறு, பாண்டி விளையாடும் சிறு பிள்ளைகள். Please excuse them.


கார்ட்டூன் உதவி: The Hindu

22 Comments:

தம்பி said...

''வலைப்பதிவில் சும்மா ஒரு ஆதரவு இருப்பது போல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள், பூணூல் ஏடுகள், பாப்பார புத்தி என்று எழுதுவார்கள். அவர்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நான்கு, ஆறு, பாண்டி விளையாடும் சிறு பிள்ளைகள்''

வாழைப்பழத்துல ஊசி ஏத்தறதுனு சொல்வாங்களே அதான இது?

Prabu Raja said...

//ஆர்டர்களுக்கும் (ஆட்டோ அனுப்புவதற்கும்) : //

இதுவரை வந்ததா தெரியவில்லை. ஆனா இந்த பதிவுக்கு லாரியே வரும்னு நினைக்கிறேன்.

இது என்ன நீங்களே எழுதியதா? ஒண்ணும் புரியலயே!

கேள்வி யார் கேட்டது? பதில் யார் சொன்னது?

Anonymous said...

//8.. வலைப்பதிவில் இவர்களுக்கு நிறைய ஆதரவு இருக்கிறதே ?

வலைப்பதிவில் சும்மா ஒரு ஆதரவு இருப்பது போல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள், பூணூல் ஏடுகள், பாப்பார புத்தி என்று எழுதுவார்கள். அவர்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நான்கு, ஆறு, பாண்டி விளையாடும் சிறு பிள்ளைகள். Please excuse them.//


good joke..kusumbuyya umakku..in tamilmanam we are only around 300. in that if you reduce polis you will get only 100 people:)
in what way this support counts..

Anonymous said...

Hindu Ram got LANKA RATNA award.
he must do something for SriLanka

Anonymous said...

Hindu Ram got LANKA RATNA award.
he must do something for SriLanka

Anonymous said...

Hindu Ram is like "Cho' joker.
Better both Jokers get admitted in mental hospital for their selective amnesia.

ராபின் ஹூட் said...

திட்டம் போட்டுக் கொலை செய்வார்களாம். நாம் அவர்களை மன்னித்து பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமாம்.

மன்னிப்பது தமிழர்களின் பண்பாடாம். மன்னிப்பவர் பெரிய மனிதராம்.

நாங்கள் பெரிய மனிதர் ஆக விரும்பவில்லை.

என் நாட்டுத் தலைவரைக் கொன்றவுடனேயே உங்களுக்கும் எங்களுக்குமான உறவு அறுந்து விட்டது.

உங்களுக்கு வேண்டுமானால் ராஜீவ்காந்தி அவர்கள் பிரேமதாசா போலத் தெரியலாம். என் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்தவர்.

உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளுங்கள் அல்லது சமாதானமாகப் போய்க் கொள்ளுங்கள், நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

முடிந்தால் பிரபாகரனைச் இந்திய அரசிடம் சரணடையச் சொல்லுங்கள். மன்னிக்கிறோம்.

ராஜீவின் கொலையை நியாயப் படுத்தும் நீங்கள், ராஜீவ் நேரடியாக வந்து கொலையும் கற்பழிப்பும் செய்தாரா? அல்லது அமைதிப்படைக்கு கற்பழிப்புச் செய்யுங்கள் என்று உத்தரவிட்டாரா? அமைதிப்படையால் பிரச்சினையென்றால் இந்திய அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் முறையிட வேண்டியதுதானே?

இந்திய அமைதிப்படைக்கு எதிராக இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்த பச்சோந்திகள் விடுதலைப்புலிகள்.

நீங்கள் எவ்வளவு சொன்னாலும் பிரபாகரன் சரணடையும் வரை அல்லது கொல்லப்படும் வரை விடுதலைப்புலிகளுக்கு மன்னிப்புத் தரக் கூடாது.

Anonymous said...

//அப்படி ஒரு போர் மூண்டால், இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இந்தியா உதவக்கூடாது. //

அடடே!
இது உங்கள் கொள்கைக்கு மாறானதல்லவா?
தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, கேந்திர முக்கியத்துவத்துக்காக இந்தியா கட்டாயம் ஆயுத உதவி செய்ய வேண்டுமென்று சொல்லித் திரிந்தது என்னாச்சு.

இப்போது இந்தியா செய்யும் உதவிகளையாவது கண்டித்து ஒரு பதிவு போட்டு உங்கள் வாக்கைக் காப்பாற்றுங்கள்.

அப்படி இந்தியா உதவி செய்யாமல் இருந்தாலே பெரிய புண்ணியம். அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக்கொள்வார்கள்.

Anonymous said...

ராபின் கூட்

நீர் ஒரு அரசியல் ஞானசூன்யம் போல இருக்கிறது. யாரும் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆங்கிலம் படித்து விட்டு பேட்டியை படியும்

செல்வமணி said...

அனானி அண்ணா...பாலசிங்கம் கூறியது இதுதான்...

"As far as that event [Rajiv assassination] is concerned, I would say it is a great tragedy, a monumental historical tragedy for which we deeply regret and we call upon the Government of India and the people of India to be magnanimous to put the past behind and to approach the ethnic question in a different perspective."

இந்த இடத்தில் magnanimous என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் வரும் என்று உங்கள் ஆங்கில ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

ramachandranusha said...

இ.வ! இங்கு கேள்விகளை எழுப்பியது யார்? பதிலளித்தது யார்? இரண்டும் நீங்களே வா?

செல்வமணி said...

இட்லி..விடுதலைபுலிகளும் இலங்கை ராணுவமும் மோதிகொள்வதையும்,அதன் மூலம் அப்பாவி தமிழர்கள் பாதிப்படைவதையும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா? விமர்சனங்ளை ஒதுக்கி தள்ளிவிட்டு இந்திய அரசாங்கம் தீவின் அமைதிக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும். அங்கு மனிதர்கள் வெடிகுண்டாய் சிதறுகிறார்கள்...சொந்த நாட்டு மக்களின் மீதே விமானப்படை தாக்குதல் நடைபெறுகிறது.மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடலை கடக்கிறர்கள். போவதற்கு நாடே இல்லாவிட்டாலும் கூட பெரும்பாலான சிங்களர்கள் பாதுகாப்பாகதான் இருக்கிறார்கள் என்பதை உலகநாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.தமிழர் பிரச்சனையையும், புலிகள் சம்பந்தமான விசயங்களையும் போட்டு குழப்பிக் கொள்ள வேணடாம். முதலில் உங்களை போன்றவர்கள் இந்த மாதிரி விசயங்களை கிண்டல் கட்டுரை பாணியில் எழுதுவதை நிறுத்துங்கள்.

Idly Vadai said...

//இ.வ! இங்கு கேள்விகளை எழுப்பியது யார்? பதிலளித்தது யார்? இரண்டும் நீங்களே வா?// ஆமாம்.

Anonymous said...

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 1

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 2

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 1

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 2

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 3

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 4

CAPital said...

http://www.nitharsanam.com/?art=18567

Anonymous said...

Forget about the LTTE support..

Thing abt the Tamil people who ever comming from srilanka to tamilnadu?.

Why dont you to support them?.

Did go to mandapam camp by any chance (tamil srilankan orphange home).

why dont you write any single line abt them?.

I hope your next blog would be in this topic.

They are our brothers and sisters

PisaasWithPizazz said...

Selvamani,
India has already learnt it's lesson by interfering in Lanka before. Do you want them to repeat it again ?

Anonymous said...

This website, for some reason is not visible(tamil fonts) in firefox 1.5.0.4.

செல்வமணி said...

பிட்ஸா...அமாம் இந்தியா தலையிட்டாக வேண்டும்.அங்கு மனித உயிர்கள் வேட்டையாடப்படுகிறது.அகதிகள் இங்கு வருகிறார்கள்.

அதுவுமில்லாமல் இது நம் பாதுகாப்பு சம்பந்தபட்டவிசயம்.ஈழப் பிரச்சனையில் பல அன்னிய சக்திகள் பின்னனியில் இருக்கின்றன.இலங்கை அரசும்,LTTE யும் அவரவர் கோணத்தில் அணுகுவார்கள்.அது அவர்கள் உரிமை. நாம் நம் பாதுகாப்புகாக எடுக்கப்படும் நாடவடிக்கைகளுக்காக யார் அனுமதியையும் கேட்கவேண்டியதில்லை.

பாடமாக இருந்தால் என்ன? கற்றுத் தேறி விட்டு மேலே போய்க் கொண்டெ இருக்க வேண்டியதுதான்.ஒரு பெரிய நாட்டுக்கு இதுதெல்லாம் வழக்கமான அனுபவங்களே.அனுபவங்களே பலம்.

Anonymous said...

India should never forgive Tigers..

Say, in your neighbour house 2 "brothers" are fighting. When you interfere to solve their problem, one of them are pushing you out of their house causing injury. What will you do?
India is doing the same thing. When refugees are fleeing, India is helping them without suppporing any group in Lanka.

It is their fight. Let them fight. If innocent ppl are coming to us, we help them.

aruna said...

I have been following your blog for quite a while now..every post is worth a read.Keep writing !

Anonymous said...

idlyvadai, good post. Iam glad you came out with your views on this. Well, I dont think they are asking for 'forgivance'. They are asking India to forget, not forgive.(ie) We may or may not be responsible for the killing. Whatever happened, just forget it and support us now. (ie) To heck with you India, your PM is just such small fry , what have you lost by losing a PM, just get on with life, and cant you see that we are the only hope for Eelam Tamils, why the heck dont you support us now?
I remember a dialogue from Virumandi(now lets not discuss the flaws of teh movie and Kamalhassan and tht he is a brahmin etc - lets just focus on that particular dialogue - it is relevant in thsi context)
"Mannikkira manasu irukkaravan Manushan. Mannippu ketkara manasu irukkaravan Kadavul".
Anton and co would do well to rememeber this - Oru planned assasination senjuttu, adhai vaayala oppukollamal, adhai marandhu engalukku help pannunganu eppadi solla manasu varadhu ivangalukku? I dont know why you guys cant see that even now, if you come out clean with "Theriyaama senjuttom. Mannichudunga", public sympathy might be more for you.But "nannga appadi dhaan seivom. Ippodhaikku naanga dhaan tamilina kaavalali adnaaala engalai support pannunga" - how do you expect even the most reasonable person to support you with that sort of attitude?
It is another matter that Tamils in India will always feel for their brethren and will support refugees in the best manner possible. But to deserve our interference, you simply need to do more. My friends, it is not a one-way street. Give respect and take respect.