பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 06, 2006

No கூட்டணி - விஜயகாந்த்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர், சென்னை கேயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தனர். விஜயகாந்த் பேசியது

"பதவிக்கு ஆசைப்பட்டு யாரும் தே.மு.தி.க.வில் சேர வேண்டாம். மக்களுக்காக உழைப்பவர்களுக்கு நிச்சயம் எங்கள் கட்சியில் உரிய மரியாதை வழங்கப்படும். சுய விளம்பரத்துக்காகவும், ஆதாயம் பெறும் எண்ணத்து டனும் உள்ளவர்களுக்கு இந்த கட்சியில் இடம் இல்லை.

சட்டசபை தேர்தலில் தே.மு. தி.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பலர் பேசினார்கள். ஆனால் யாருடனும் கூட் டணி வேண்டாம் என்று நாம் முடிவு செய்தோம். பல்வேறு நெருக்கடிகள் இருந் தாலும் எடுத்த முடிவில் இருந்து மாறாமல் தனித்து போட்டியிட்டோம்.

27 லட்சம் ஓட்டுகள் தே.மு. தி.க.வுக்கு கிடைத்தது. மாற்று கட்சிகள் அதிர்ச்சி அடையும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் நமது வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுகளைப் பெற்று கடும் போட்டியாக இருந்தனர். மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கி தே.மு.தி.க.வை அங்கீகரித் திருக்கிறார்கள்.

இனி வரும் தேர்தல்களில் முக்கிய இடம் வகிக்கும் அளவுக்கு தே.மு.தி.க. வளர்ச்சி அடைந்திருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான புதிய உறுப்பினர்கள் இங்கு வந்து சேருவதைப் பார்க்கும்போது, இந்த கட்சி மீது மக்கள் வைத்துள்ள ஆழமான நம்பிக்கையை உணர முடிகிறது. தமிழக தேர்தலில் தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம்.

நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. முக்கிய அங்கம் வகிக்கும் நிலை வர வேண்டும். அந்த அளவு கட்சி உயர அதை பலப் படுத்துவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தே.மு.தி.க. யாருடனும் கூட்டணி அமைத்து போட்டியிடும் எண்ணம் இல்லை. தனித்து போட்டியிடவே விரும்புகிறது. உங்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் வெற்றி இலக்கை நாம் எளிதாக எட்ட முடியும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான் வந்தால்தான் கட்சி நடக்கும் என்று எண்ணி சும்மா இருக்க கூடாது.

மக்களின் நன்மதிப்பை பெற தே.மு.தி.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். புதியவர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்."

2 Comments:

மனதின் ஓசை said...

வரும் அனைவரையும் சேர்க்க முடியாது என சொல்லும் ஒரு அரசியல்வாதி.. உன்மையிலேயெ பராட்டப் பட வேண்டியவர்..அரசியலில் இதுவரை வித்தியாசமான, பாரட்டப்பட வேண்டிய அனுகுமுறையை கடைபிடித்து இருக்கிறார்... நியாயமாக, நேர்மையாக இருந்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கும்.. பொறுத்துப் பார்க்கலாம்.

viewmatrix said...

ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் கவலையாக உள்ளது. சேரும் அரசியல்வாதிகள் கேப்டனை மாற்றாமல் இருந்தால் நல்லது.
கேப்டன்: தயவு செய்து நன்றாக அலசி ஆராய்ந்து, சேர்பவர்களின் குறிகோள் அறிந்து சேர்கவும்.