பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 28, 2006

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ""ஆழ்ந்த வருத்தம்'' தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் ""புதிய உறவுக்கு'' அது அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம், இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா ""செயலூக்கமான பங்காற்ற'' முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தாந்தவாதியான ஆன்டன் பாலசிங்கம், என்டிடிவி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1991 மே 21-ம் தேதி பெண் மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது, ""மாபெரும் வரலாற்று சோகம்'' என்று அவர் கூறியுள்ளார்.

அவரது பேட்டி வருமாறு:

அந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில்... அது ஒரு பெரும் சோகம்... மாபெரும் வரலாற்று சோகம்... அதற்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.

கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசையும், இந்திய மக்களையும் அழைக்கிறோம்... மாறுபட்ட கண்ணோட்டத்தில் இனப் பிரச்சினையை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எந்தச் சூழ்நிலையிலும் இந்திய அரசின் நலன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம்.

இந்திய அரசுடன் புதிய நல்லிணக்கத்தை, புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

கடந்த காலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணுகுமுறையைப் பின்பற்றினால், இலங்கை இனப் பூசலுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா ஆக்கபூர்வமான பங்காற்ற வாய்ப்புள்ளது.

இவ்வாறு பாலசிங்கம் பேட்டியில் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளின் பங்கை, பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான பாலசிங்கம் போன்ற புலிகள் அமைப்பின் உயர் தலைவர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதல் முறை.

ராஜீவ் காந்தி படுகொலையில் தங்களுக்குள்ள தொடர்பை ஆரம்பத்தில் புலிகள் கடுமையாக மறுத்து வந்தனர். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் நிரூபித்த பிறகே அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர்.

ஆனந்த் சர்மா: இது பற்றி, இந்திய அரசு சார்பில் உடனடியாக கருத்து தெரிவித்து, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

புலிகள் இழைத்த கொடிய குற்றத்தை இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள். பாலசிங்கத்தின் கூற்று, ராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலம். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என்பது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோரும் நன்கறிந்த உண்மை என்றார் ஆனந்த் சர்மா.

நன்றி: தினமணி

தொடர்புடைய மற்ற சுட்டிகள்
தினத்தந்தி - மாபெரும் துயர சம்பவம் என்று வருத்தம்
ராஜீவை கொன்றதாக முதல்முறையாக
விடுதலைப்புலிகள் ஒப்புதல்

The Hindu - Rajiv assassination "deeply regretted'': LTTE

NDTV - LTTE regrets Rajiv assassination: Anton

New Indian Express - LTTE 'deeply regrets' Rajiv Gandhi's assassination

46 Comments:

Anonymous said...

15 வருடத்திற்கு பிறகு இப்போது தான் இவர்களுக்கு ஒத்துக்கொள்ள துணிவு வந்த்துள்ளது. நேற்றி ஹிந்து ராம் LTTE இது வாடிக்கை, இவர்களை நம்ப கூடாது என்றார்.

பழைய இந்திய வி.பு.விரும்பி said...

இன்னும்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டது போலவே நாளை ஒரு வேளை பிரபாகரன் இந்திய அரசிடம் சரணடைந்தால், சந்தேகம் இல்லாமல் இந்தியத் தமிழனின் பழைய ஈழபாசம் துளிர்விட வாய்ப்புள்ளது. ஈழத்தமிழர் மேல் மாற அன்புகொண்ட பிரபாகரனுக்கு இது ஒன்றும் பெரிய தியாகம் ஆகிவிடாது என்று நம்புவோமாக.

Anonymous said...

எல்டிடிஇ-யை தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பிடிக்காது. மற்ற எல்லோருக்கும் பிடிக்கிறது!

Anonymous said...

//எல்டிடிஇ-யை தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பிடிக்காது. மற்ற எல்லோருக்கும் பிடிக்கிறது!//

பார்பனர்களுக்கு மூளை வேலை செய்கிறது அதனால் இருக்க்லாம். வன்முறையை மூளை உள்ளவர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள்.

Anonymous said...

புலிகள் இந்த கொலையை ஒப்புக்கொண்டதன் பின் உள்ள நோக்கம் என்ன? 15 வருடம் இல்லை என்று சொன்னவர்கள் இப்போது ஏன் எற்று கொண்டனர்? இது ஒன்றும் Million Dollar கேள்வி அல்ல! ஐரோப்பிய யூனியன் இவர்களை தடை செய்துவிட்டனர் இப்பொழுது அவர்களுக்கு ஒரு ஆதரவு தேவை என்பதை உணர்ந்துள்ளனர் என்பதே உண்மை!!

//*எல்டிடிஇ-யை தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பிடிக்காது. மற்ற எல்லோருக்கும் பிடிக்கிறது!*//

ஏங்க இப்படி? நாம் இந்தியர்களாக வாழ வழியில்லையா? பார்ப்பனர்களை ஏன் இழுத்து விடுகிறார்கள்? இது தவறான சிந்தனை அல்லவா??!! பார்ப்பனர்களை திட்டும் ஒரு விடையமாக மாறிவிடக்கூடாது தமிழ்மணம்!

India beleives in Unity in Diversity! Equality to everybody is the Indian Constitution.

யாத்திரீகன் said...

அப்போ குஜராத்ல நடந்தது எல்லாம் வன்முறை இல்லீங்களா ? அந்த அமைப்புக்கெல்லாம் இன்னும் கண்மூடியா எத்தனை ***** ஆதரவு தெரிவிக்கல.. சொம்மா சொல்லாதீங்க சார்..

செல்வமணி. said...

பாலசிங்கம் அவர்கள் NDTV-பேட்டியில் எந்த இடத்திலும் LTTE அந்த கொலையைச் செய்ததாக கூறவில்லை.அந்த கோரச் சம்பவம் நடந்தமைக்கு வருத்தபடுவதாக பல்வேறு விதமாக வார்த்தைகளை வைத்து விளையாடிருந்தார்.மிக கவனமாக,திறமையாக கொடுக்கபட்ட பேட்டி அது.பாலசிங்கம் ஒரு அரசியல் வல்லுனர்.எந்த சமயத்தில் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.உலக நாடுகளின் கதவுகள் ஒவ்வொன்றாக சாத்தப்பட, இந்தியாவின் கதவை திறக்க சாவி தேடுகிறார்.இதுதான் யதார்த்தம்...Capital மாதிரி ஆட்கள் 'தைய்யா தக்கா' என்று குதிப்பதில் அர்த்தமில்லை.இது உலகெங்கும் சிதறிக் கிடக்கும் எணணற்ற தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சனை.வெட்டித் தனமான இந்திய வெறுப்பில் காலத்தை செலவிடாது ஈழமக்களின் அமைதி வாழ்க்கைக்கான முயற்ச்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

luckylook said...

புலிகளின் முடிவை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கவே செய்யலாம்... இதுகுறித்த எனது பதிவு : http://madippakkam.blogspot.com/2006/06/blog-post_28.html

Anonymous said...

15 வருடங்கள் ஆகியிருக்கிறது, இந்திய அமைதிப்படை ஈழத்தமிழருக்கு கொடுத்த காயங்களின் வடுக்கள் ஆற, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

கலாநிதி said...

//இன்னும்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டது போலவே நாளை ஒரு வேளை பிரபாகரன் இந்திய அரசிடம் சரணடைந்தால், சந்தேகம் இல்லாமல் இந்தியத் தமிழனின் பழைய ஈழபாசம் துளிர்விட வாய்ப்புள்ளது. ஈழத்தமிழர் மேல் மாற அன்புகொண்ட பிரபாகரனுக்கு இது ஒன்றும் பெரிய தியாகம் ஆகிவிடாது என்று நம்புவோமாக//
என்னமோ போங்க இது சரியா படல

CAPital said...

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துரை செய்த அரசியல் கட்டமைப்பு, இந்தியா தன் மாநிலங்களுக்குக் கொடுத்துள்ள கட்டமைப்பை விட குறைவானதாகவே இருந்தது. இதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். யானைப் பசிக்கு கீரைப்பிடியை இந்தியா திணிக்க முற்பட்டது. ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதற்கு பலர், இந்தியா இலங்கைத் தமிழருக்கு இப்படி சலுகை கொடுத்தால், தனது மாநிலங்களூம் மேலும் சலுகைகள் கேட்க ஆரம்பித்துவிடும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படியோ, தமது பரிந்துரையை ஏற்க மறுத்த விடுதலைப் புலிகளை, இந்தியா ஒழிக்க முற்பட்டது.

புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள்.

இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை.

இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

இந்திய இராணுவம் சமாதானப் படையாக இருந்த பொழுது, இந்திய பொருட்கள் தமிழீழத்தில் அதிகமாக கிடைத்தன. அதில் ஒன்று நெருப்பெட்டி [தீப்பெட்டி]. நெருப்பெட்டியில், ஒரு பக்கத்தில் படம் இருப்பது வழமை. இந்திய நெருப்பெட்டியில் இருந்த படம், ஒரு புலி பாய்கிறது, எதிரே நெற்பயிர்கள் அறுவடை செய்யும் அரிவாள். இந்தியா சும்மா வரவில்லை, கபட நோக்கத்தில் தான் வந்துள்ளது என்று எங்களுக்கு அப்பவே தெரியும்.

இந்திய-இலங்கை ஒபந்தம் யாருக்கு நன்மை? இந்தியா சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழரை அழிக்க ஒரு ஒப்பந்தம். புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். லொறி லொறியாக ஆயுதங்கள் ஒப்படைக்கப் பட்டன. அதைப் பார்த்து நாங்களே யோசித்திருக்கிறோம், இனி புலிகளால் தலை எடுக்க இயலாது என்று. என்ன புலிகள் முட்டாள்களாக இவ்வளவு ஆயுதங்களையும் ஒப்படைக்கிறார்களே என்று. ஆனால், MGR ஆயுதங்களை கொடுத்தார், களவாக, இந்திய அரசாங்கம் அல்ல. இந்தியா இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்த பின் மீண்டும் எப்படி ஆயுதம் வந்தது என்பதை தலைவரின் வரலாற்று VCD ஐ வாங்கி பார்க்கவும். அதில் தலைவரே சொல்கிறார் MGR தான் ஆயுதம் தந்தார் என்பதை.

அந்தக் காலத்தில் சிங்களப் படை பெண்களை பலவந்தம் செய்தது கிடையாது (அ) அரிது. இந்திய இராணுவம் வந்த பின்பே பெண்களும் பயப்பட ஆரம்பித்தார்கள். ஒரு சந்தியில் புலி குண்டு வைத்து வெடித்தால், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டிலுள்ளவர்களுக்கு சணல் பறந்த அடி. அதில் வயது வித்தியாசம் இல்லை.

நான் ஆறாம் ஆண்டு படிக்கும்பொழுது, எனது சக மாணவனின் குடும்பத்திற்கு சணல் பறந்த அடி. அவர்கள் வீட்டிற்கு அருகாமையில், குண்டு வெடித்தது தான் காரணம். ஆறாம் ஆண்டு படிக்கும் எனது நண்பன் உயரத்தில் சற்று குள்ளமானவன், மற்றய மாணவர்களை விட. அவனையே அடித்தார்கள். நாங்கள் அவர்கள் வீட்டிற்கு சிறிது நேரம் கழித்து சென்றபோது, உடம்பில் இரத்தக் காயங்களுடன் தான் அவர்கள் இருந்தார்கள். அவனின் தந்தையை மரத்தில் சாத்தி தான் அடியாம். அடுத்த நாளே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். அந்தக் காலத்தில் சிறுவர்களோ, பெண்களோ, வயோதிபர்களோ இயக்கத்தில் இருந்தது கிடையாது. இந்திய இராணுவம் தான் பாகுபாடின்றி எல்லோருக்கும் பயத்தை உண்டுபண்ணியது.

இந்திய இராணுவத்தில் “para troops” என்று ஒரு பிரிவு உள்ளது. அவர்கள் சற்று குள்ளமாகவே இருப்பார்கள். இவர்களிடம் ஒரு வாள் இருக்கும்; கறுப்பு உடை அணிவார்கள். இந்திய இராணுவத்திலேயே இவர்கள் தான் மோசமானவர்கள். அப்போ இலங்கை இராணுவம் ஒரு வீட்டிற்கு அதன் முன்வழியாலேயே வருவார்கள்.

இந்திய இரணுவம் அப்படி இல்லை. வேலியைப் பிய்த்துக் கொண்டு வருவார்கள். திடீர் திடீர் என்று வருவார்கள். இதனாலேயே, பெண்கள் குளிக்கப் பயப்பட்டார்கள். தனியாக இருந்த பெண்களிடம் தப்பாக நடந்தது. ஏன் என் தாயார் தனியாக இருக்கும் பொழுது கூட ஒரு இந்திய இரணுவம் வீட்டிற்கு உள் நுளைய முற்பட, அம்மா பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கே வந்த அவன், அம்மாவை எங்கள் வீட்டிற்கு செல்லும்படி சொன்னான். எங்கள் அம்மா ஒரு பைத்தியம் போல் நடிக்க, அந்த வீட்டுக்காரர்கள், எங்கள் அம்மாவிற்கு சற்று மூளை குழப்பம் என்று சொல்லி விட்டதால் அவன் திரும்பி சென்றுவிட்டான்.

இவை போன்று பல கசப்பான சம்பவங்களே இந்திய இராணுவத்துடன் தமிழீழ மக்களுக்கு. இந்திய இராணுவத்தை விட சிங்கள இராணுவமே மேல் என்று நினைத்த காலங்கள் அவை. இந்திய இராணுவத்திடமிருந்து கற்ற்குக்கொண்டதைத் தான் இப்போது சிங்கள இராணுவம் செய்து வருகிறது. எங்கள் நாட்டிற்கு படை அனுப்பி, பலரைக் கொன்று, பல சித்திரவதைகள், வயது வித்தியாசம் இல்லாமல் அடிகள், கற்பழிப்புகள் எல்லாம் செய்த இந்தியாவின் மீது எவ்வளவு கோபம் இருக்கும்?

இவ்வளவுக்கும் காரண கர்த்தாவான றாஜீவ் காந்தி மீண்டும் பிரதமராக தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால், மீண்டும் ஓர் அச்சுறுத்தல் தமிழீழ மக்களுக்கு வரலாம்.

றாஜீவ் கொலை, ஒரு பழிவாங்கல் என்பதை விட ஒரு அச்சுறுத்தல் ஆகவே செய்யப்பட்டது. இன்னும் ஒருமுறை இராணுவத்தை அனுப்பாமல்; ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய வேண்டுகோள்களுக்கு முட்டுக்கட்டையாக இந்தியா இருக்காமல்; எம்மை அழிக்க இனிமேலும் முற்பட வேண்டாம் என்று ஒரு அச்சுறுத்தல்.

தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள் இன்னும் 13 மைல்கள் தான் இருக்கிறது; இன்னும் 11 மைல்கள் தான் இருக்கிறது என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்க, தலைவர் மாவீரர் நாள் என நவம்பர் 27ம் திகதியை அறிவிக்கிறார். சுவர்களில் சுவரொட்டிகள். இந்தியா சொன்னது, பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். அது தான் நவம்பர் 27. மக்களுமே இதை நம்பினார்கள். சில மைல்கள் தான் இருக்கு என்று இருக்கையில், இப்படி ஒரு மாவீரர் நாள் என அறிவிக்க தலைவர் இறந்து விட்டார் என எண்ணவே தோன்றும்.

இந்தியா அன்று எமது தலைவர் பிரபாகரனை கொன்றது [செய்தியின் படி] சரி என்றால், இந்தியாவின் தலைவர் றாஜீவ் காந்தியைக் கொன்றதுவும் சரியே. இதை எவ்வாறு இந்தியர்கள் தப்பு என்று சொல்ல முடியும்?

அன்று ஜப்பான், அமெரிக்கா அணு குண்டைப் போட்ட பின், தாங்கள் அமெரிக்கா மீது போர் தொடுத்தது பிழை என்று ஜப்பானிய அரசர் முட்டுக்காலாலேயே நடந்து ஜப்பானிய மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அன்றைக்கு அறிவித்தது போல், இன்றுவரை ஜப்பான் போருக்காக எங்கும் இராணுவம் அனுப்பியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் “Ministry of Defence” கூட இல்லாமல் “Agency of Defence” என்னும் குறைந்த செயற்குழுவாகவே இன்னும் ஜப்பான் அரசியலில் உள்ளது.

அன்று றாஜீவ் காந்தியைக் கொன்ற படியால் தான் இன்றுவரைக்கும், இந்தியா இன்னும் ஒருமுறை படை அனுப்பாமல் இருக்கிறது. அன்று தலைவர் எடுத்த முடிவு சரி என இன்று வரலாறு சாட்சி சொல்கிறது. அதே போல், எப்போதும் எமது தலைவர் எடுக்கும் முடிவு ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சரியான முடிவாகவே இருக்கும். ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய தொலை நோக்குச் சிந்தனை நமது தலைவரிடம் நிறையவே இருக்கிறது. அதனால், தற்சமயம் பிழை என எண்ணத் தோன்றும் முடிவுகளும், நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், அது சரி என வரும்.

பிராந்திய வல்லரசு; அயல் நாடு; தமிழீழத்தைச் சுற்றிக் கடல் [அந்தக் காலத்தில் கடற்புலிகளும் இல்லை]; இவைக்கும் மத்தியில் இந்தியாவை எதிர்த்தால், புலிகளுக்கு பெரும் நட்டம் என்பதில் ஒரு துளி கூட ஐயப்பாடில்லை. இருந்தாலும் அரசியல் இலாபத்திற்காக தமிழர்களின் சுயநிர்ணயத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்ததாலேயே புலிகள் தமிழர்களின் மனதின் உயரத்தில் குடிகொண்டார்கள். தமிழனின் வரலாறு சொல்கிறது, போரில் வெற்றி தோல்வியை விட இறந்தவனுக்கு அம்பு முதிகில் பாய்ந்ததா (அ) மார்பில் பாய்ந்ததா என்பதே முக்கியமாக பார்க்கப்பட்டது என்று. அன்று இந்தியாவை எதிர்த்து புலி பூண்டோடு அழிந்திருந்தால், மார்பில் அம்பு பட்டவனாகவே வரலாற்றில் இடம் பெற்றிருக்கும்.

தற்போது இருக்கும் மற்றய குழுக்கள், தமிழருக்காய் தான் போராடுகிறோம் என்று சொல்லி தமிழரின் சுயநிர்ணயத்தை விற்கிறார்கள். இது தான் புலிகளுக்கும், மற்றய இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

றாஜீவ் காந்தி கொலை செய்யப் பட்ட முறை தான் பிழை என்றால், அன்று கண்ணன் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு உதவிய முறைகள் அத்தனையும் பிழைதானே. இந்தியாவையே கைப்பற்றி றாஜீவ் காந்திக்கு தண்டனை வழங்கும் பலம் புலிகளிடம் இல்லை. அமெரிக்கா செய்தது போல், அணு குண்டு போட புலிகளிடம் அணுகுண்டும் இல்லை. கண்ணன் குறுக்கு வழியில் பாவம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியது போல், புலிகள் தங்களிடம் இருந்த பிரம்மாஸ்திரத்தை பாவித்தார்கள்.

எமது சுயநிர்ணயத்தை விற்று பிச்சை வாங்கும் தமிழர்கள் அல்ல நாம்; நாங்கள் விடுதலைப் புலிகள் என்று வரலாறு எழுதட்டும்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/

thanjavur said...

They are just "Regretting" the assasination. They are in no way asking for apology. Tamil has a very good word for "APOLOGY". Please read the report carefully!!!!

All the news regarding IPKF has been spread around by LTTE. We tamilians believed it at that time. Do any of us know how bad the situation was for IPKF there?

Our Indian troops are safegaurding us in all directions. We must salute them and not fall for propoganda!!!!

dondu(#4800161) said...

"இந்தியா அன்று எமது தலைவர் பிரபாகரனை கொன்றது [செய்தியின் படி] சரி என்றால், இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தியைக் கொன்றதுவும் சரியே. இதை எவ்வாறு இந்தியர்கள் தப்பு என்று சொல்ல முடியும்?"
இது சரி என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்புறம் ஏன் புலிகள் பாலசிங்கம் மூலமாக பிச்சை எடுக்க வேண்டும் இந்திய ஆதரவு கேட்டு? அப்ப்டியே போய்த் தொலைவதுதானே. வெட்கமாக இல்லை புலிகளுக்கு?

இதனால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்படுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொண்டு தங்களுக்கு உதவி செய்திருக்கக் கூடிய ஒரு நாட்டின் தலைவர் ஒருவரை போட்டுத் தள்ளியது புகிகளின் தவறே. இந்தியாவின் ஆதரவு கிடைக்காத காரணத்தால் ஏதேனும் இழப்பு வந்தால் அதற்கு புலிகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

பிரபாகரனை பிடித்து, வழக்கு நடத்தி தூக்கில் போடும்வரை புலிகள் இந்திய நிலைமையில் மாறுதல் எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனமே.

இந்தச் சூழ்நிலையில்தான் தி.மு.க. பதவிக்கு வந்திருப்பது மனதை நெருடுகிறது.

தவறாக உபயோகம் ஆகக் கூடிய அதர் ஆப்ஷனை இந்த வலைப்பூ வைத்திருப்பதால், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகல் என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

செல்வமணி said...

டோண்டு அய்யா..LTTE எந்த காலத்திலும் தி.மு.க வை மதித்தது கிடையாது. அவர்களின் தொடர்பெல்லாம் MGR-வுடன்தான். கருணாநிதி கொடுத்த நிதி மற்றும் ஆதரவு நடவடிக்கைளை LTTE நிராகரித்த வருத்தம் இன்னும் தி.மு.க விற்கு இன்னும் இருக்கிறது. MGR ஆதரவுடன் LTTE தமிழ்நாட்டில் தனித்து,பலமாக இயங்கியதாலேயே கருணாநிதி ஆரம்பித்த TESO ஈழ ஆதரவு இயக்கம் கூட பலவீனமடைந்தது. இந்நிலையில் jain commision report ராஜீவ் கொலையில் தி.மு.க வை எப்படி சம்பந்தபடுத்தியது என்பது விளங்கவே இல்லை. எனவே இன்றய சூழ்நிலையில் தி.மு.க.ஆட்சி LTTE ஆதரவு நிலையை எடுக்காது. அதே சமயம் ஈழ மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாய சூழ்நிலை. அதனால்தான் 'மத்திய அரசின் கொள்கையே தங்களின் கொள்கையும்' என்று கவனமாக கூறியிருக்கிறார்கள். எனவே உங்கள் மன நெருடல் தேவையற்றது.சில பொதுப் பிரச்சனைகளை personal கண்ணோட்டத்தோடு பார்க்கத் தேவையில்லை.

எப்படியிருந்தாலும் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க குரல் கொடுப்பது தமிழ்நாட்டு மக்களின் கடமை.

capital மாதிரி சில பேருக்கு வேண்டுமானால் ஈழமக்களின் வாழ்க்கையை விட இந்திய வெறுப்பு முக்கியமாக படலாம். ஈழமக்களின் அமைதி வாழ்க்கை திரும்பிட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணமிது.

Anonymous said...

"இந்தச் சூழ்நிலையில்தான் தி.மு.க. பதவிக்கு வந்திருப்பது மனதை நெருடுகிறது."

இதைக்கூறி டோண்டு அய்யா திமுக ஆட்சியை கலைக்க அடித்தளம் போடுகிறாரா??

ENNAR said...

என்றைக்கு ஒருவர் தான் செய்த தவறை ஒப்புக்கொள்கிறார்களோ அன்றைக்கே அவரை மன்னிக்கலாம் என்ற ஒரு தத்துவம் இருப்பினும் இந்த புலிகள் போடுவது வேஷம் அவர்களுக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என்று அர்த்தம் அதனால் தான் இந்தியர்களின் அன்பைப்பெற முதலைக்கண்ணீர் வடிக்கிறார் பாலசிங்கம். உண்மையிலேயே அவர்களுக்கு அந்த ஞானம் வந்ததென்றால் தார்மீகமாக குற்றத்தை ஒத்துக்கொண்டு இந்தியத் தண்டணையை ஏற்றுக்கொள்வார்களா? வளத்தக்கடா மார்பில் முட்டியது என்பது நூறு விழுக்காடு இவர்களைப் பொருத்தவரை உண்மை.
நான் ஒரு இந்தியன் என்ற உணர்வில் புலிகளை மன்னிப்பது என்பது மடமை இன்னமும் வன்முறையை தூண்டக்கூடிய செயலாகும்.இந்திய குற்றிவியல் சட்டப்படி ராஜீவ் காந்தியின் கொலைக்கு தூண்டியவர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலம் வரும் காத்திருப்போம். தவறுக்கு தண்டணை உண்டு.
இன்னும் ஒரு உண்மை என்னவென்றால் பிரபாகரன் ஆட்சிக்கட்டிலில் ஏறமாட்டார் காரணம் அது அவருக்கு பாதுகாப்பு இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் காரணம் கிட்லர் முசோலினி இவர்களது வாழ்க்கையைப் பாருங்கள்.

Anonymous said...

"உண்மையிலேயே அவர்களுக்கு அந்த ஞானம் வந்ததென்றால் தார்மீகமாக குற்றத்தை ஒத்துக்கொண்டு இந்தியத் தண்டணையை ஏற்றுக்கொள்வார்களா?"

கொலைசெய்தவர்களுக்கு இந்ததண்டனை சரிதான், 2000கொலைசெய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், அரசியல் கொலைகளை அரசியல் கொலையாக ஏற்றுக்கொள்ளலாமா அல்லது தண்டனை கொடுப்போமா??

Anonymous said...

IFKF KILLED 5500 CEYLON TAMILS.
RAJIV was responsible for IFKF OPEARTION.
Rajiv or his bloody Gangs did not say " sorry"

WHY?

thanjavur said...

DMK and PMK has taken a very good stand on the issue of Tamil crisis in Lanka.

The leaders of DMK and PMK are now part of central government and hence think in terms of the country.

Mr Karunanidhi is not a leader who will encourage terrorism. He has always treaded a democratic path and never in life would have imagined LTTE's ruthlessness. DMK has taken a big hit once and they know LTTE and their ruthlessness better!

None can read LTTE and their ways. Anyone who is supporting them now are just doing so based on emotion.

But how to help the Tamil population in Lanka? A question that is not easy to answer.
As it is this "Regret" drama is over.

CAPital said...

செல்வமணி/ செல்வன் அவர்களே

இந்தியாவை வெறுக்கிறேன் என்று நான் சொல்லவில்லை. இந்தியா ஒரு குற்றமுமே செய்யவில்லை. இந்தியா தமிழருக்கு மிகப் பெரும் உதவி செய்தது; ஆனால் புலிகள் தான் இந்தியாவை முதுகில் குற்றிவிட்டார்கள் என்பது போல் இந்தியர்கள் பேசுவது தான் பிழை என்றேன்.

இந்தியாவும் கபட நோக்கில் விளையாடியது, புலிகளும் முதுகில் குற்றினார்கள் என்றால் ஒத்துக் கொள்ளலாம். இந்திய இராணுவம் தமிழீழத்தில் செய்தது முழுக்க அனியாயம். பிறகு நல்ல பிள்ளைக்கு நடிக்கிறது இந்தியா.

கிழவிகளைக் கூட விடாமல் கற்பழித்தது பிழை என்று இந்தியா ஒப்புக் கொள்ளட்டும், பின்பு பிரபாகரனை சரணடைய கேட்கட்டும். கலாச்சாரத்தைப் பற்றி பெருமைப் படும் நாட்டில் பிறந்தவர்களா இவர்கள் என்ற சந்தேகமே வருகிறது. இலங்கை இராணுவம் கூட இப்படிச் செஞ்சதில்லை முன்பு. பெயர் மட்டும் IPKF.

_______
CAPital

Anonymous said...

IPKF killed tamils. Rajiv was responsible for inocents murder.
Lady of justice punished him. leave it. this is karma of Rajiv.

vaasanthi
chennai

Anonymous said...

i accept CAPital

செல்வமணி said...

Capital...பொதுவாக ராணுத்துக்கு என்று ஒரு முரட்டு சுபாவம் உண்டு. இது எல்லா நாட்டு ராணுவத்துக்கும் இது உண்டு. இந்த முரட்டு சுபாவம் சில சமயம் எல்லை மீறி போவதுண்டு. அப்படி எல்லை மீறுகின்ற போதல்லாம் நடுநிலையாளர்களால் கண்டிக்கபட்டு இருக்கிறது. அதே போல் தான் IPKF ஆத்துமீறலில் ஈடு பட்டதாக செய்திகள் வந்த போது இந்தியாவில் பலரும் அதை கண்டித்து இந்திய அரசாங்கத்துக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தார்கள். தமிழ் நாட்டில் பல அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு பண்ணியிருக்கின்றன. எதிர்ப்பை காட்டும் விதமாக, இந்தியா திரும்பிய IPKF-ஐ வரவேற்க்க கருணாநிதி செல்லாமல் இருந்தது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சயை ஏற்ப்படுத்தியது. எனவே நீங்கள் இந்திய மக்கள் அனைவரையும் எதிரிகளாக பார்க்கத் தேவையில்லை. நம் எழுத்துக்கள் இரு நாட்டு மக்களிடையே பகையை ஏற்படுத்தக்கூடாது.

ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும் இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு. இங்கு யார் என்ன குற்றம் செய்தாலும் அதை கண்டிக்க ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும்,இருக்கிறது.அதுதான் இந்திய ஜனநாயகத்தின் பலமும்கூட..ஜனநாயகத்தின் நிழல்கூட இப்போது வட இலங்கையில் இல்லை.அதனால் தான் தங்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை. துப்பாக்கிகள் திருபிடிக்கும் போதுதான் ஜனநாயகத்தின் கண்கள் திறக்கின்றன.

ஆனால் இதில் என்ன விசேஷம் என்றால் IPKF அத்து மீறல் நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசாங்கமோ அல்லது LTTE அமைப்போ இந்த குற்றசாட்டுகளை இதுவரை ஆவண வடிவில் இந்திய அரசாங்கத்திடம் கொடுத்ததாக தெரியவில்லை. ஒரு சில மனித உரிமை அமைப்புகளும்,பத்திரிக்கைகளும் தான் விரிவாக எழுதியிருக்கிறார்கள். எனவே IPKF அத்துமீறல் நடவடிக்கை என்று கூறப்படுபவைகளை தனியாக ஆராயபட்டிருக்கவேண்டும். அதற்கு பதிலாக ராஜீவ் கொலை என்பதெல்லாம் ஏற்கமுடியாது. நீதிபதி ஜெயின் கூறியது போல்
இந்த கொலையின் பின்னால் உள்ள conspiracy பற்றி ஆராயவேண்டும்.

ஒரு நாட்டின் கொள்கை முடிவுகளுக்கு அந்த நாட்டின் தலைவரே பொறுப்பு என்று கூறி தலைவர்ளை கொல்ல ஆரம்பித்தால் எந்த ஒரு நாட்டின் தலைவரும் மிஞ்சமாட்டார்கள்.

கொலை செய்வதையெல்லாம் வீரம் என்று சொல்லமுடியுமா?

.

Anonymous said...

"ஆனால் இதில் என்ன விசேஷம் என்றால் IPKF அத்து மீறல் நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசாங்கமோ அல்லது LTTE அமைப்போ இந்த குற்றசாட்டுகளை இதுவரை ஆவண வடிவில் இந்திய அரசாங்கத்திடம் கொடுத்ததாக தெரியவில்லை."

கள்வனிடத்தில் களவு போன பொருட்களின் லிஸ்டா?

"அரசன் எவ்வழி குடில்களும் அவ் வழி"
"அரசன் எவ்வழி ராணுவமும் அவ் வழி"

செல்வமணி said...

அனானி அய்யா...இப்படி வார்த்தை ஜாலங்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு உருப்படியாக இது சம்பந்தமாக எதாவது குறிப்புகளோ அல்லது ஆவண விவரங்களோ தந்தால் நாங்களும் தெரிந்துகொள்வோம்.

அனானி பெயரயே வெளிப்படுத்த தயங்குபவர்...இதில் ஆவணவங்கலாவது கத்திரிக்காயாவது...

CAPital said...

இந்தியா உணவுப் பொட்டலம் போட்டதாம் தமிழருக்கு. நானும் யாழ்ப்பாணத்தில் தான் வசித்தேன் அக்கால கட்டத்தில். அங்கு எவருக்கும் அப்படி ஒரு உணவுப் பொட்டலம் கிட்டியதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பத்திரிகையில் போட்டிருந்தார்கள், இந்தியா காட்டுப் பகுதிகளாய்ப் பார்த்து போடுகிறதாம் என்று.

ஏதோ போட்டார்களே, அதில் சந்தோசப்பட்டுத் தான் ஐயா, நாங்களும் நம்பினோம். இந்தியா தமிழருக்கு உதவத் தான் வந்தது என்று. ஆயுதங்களைக் ஒப்படைக்க வைத்து, நிராயுதபணியாக சென்றவர்களைப் காப்பாற்றாமல், இந்தியாவின் பிச்சையை [அரசியல் பரிந்துரை, இந்தியா தன் மாகாணங்களுக்கும் குறைவான கட்டமைப்பையே பரிந்துரைத்தது] ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக எத்தனை எத்தனை புலி வீரர்களை கொன்றார்கள். எவ்வளவு சித்திரவதைகள் எமக்கு. கிழவி என்று கூட பார்க்காமல் கற்பழித்த நாசகார கும்பல்.

இலங்கை இராணுவம் கூட இவ்வளவு மோசமாக நடந்துகொண்டதில்லை முன்பு. உணவுப் பொட்டலத்தை பார்த்தேனோ இல்லையோ, செய்ன் ப்லொக்ஸைப் முதன் முதலில் பார்த்தது இந்திய இராணுவத்தால். இலங்கையில் "கன்டோஸ்" என்று ஒரு சாக்லட் வாங்கினால் அதனுடன் ஒரு ஸ்ரிக்கர் [sticker] வரும். அதில் வந்த செய்ன் ப்லொக்ஸைப் [chain blocks] பார்த்த எங்களுக்கு கண்ணுக்கு முன் பார்க்க மிக்க வியப்பாகவே இருந்தது. சாண் பாம்பென்றாலும் முழத்தடியால் அடி என்று சொல்வதுபோல், இந்தியா முழுப் பலம் கொண்டு புலிகளை அழிக்க எத்தணித்தது. அதுவரையும் எம் செவியில் கேட்காத சுப்பெர் சொனிக் [super sonic] விமானங்கள் கூட எங்கள் தலைக்கு மேல் பறந்தன. மிகவும் சக்திவாய்ந்த கெலிகொப்டர்கள், விமானங்கள் எல்லாம் இந்தியா தான் தமமிழனுக்கு முதலில் காட்டியது. நாங்கள் இவற்றிற்கு பெயர்கள் கூட வைத்திருந்தோம். "முதலை கெலிகொப்டர்" என்பது தான் கெலிகொப்டரில் பயங்கரமாக இருந்தது. அதன் சரியான பெயர் எனக்குத் தெரியாது. அதன் முகப்பில் பற்களும் நாக்கும் தீட்டப்பட்டிருக்கும்.

சும்மா கொழும்பில் இருந்த தமிழனும், தமிழ் நாட்டில் இருந்த தமிழனும், வெளிநாடுகளில் இருந்த தமிழனும் பத்திரிகையைப் படித்து விட்டு எதிர்க்கிறோம், துன்பப்படுகிறோம், வருத்தப்படுகிறோம் என்றவர்களுக்கு இந்த வலி தெரியாதையா.

அமெரிக்காவில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவரை ஏற்ற கெலிகொப்டர் கட்டிடத்திற்கு மேலே வர கீழே இருந்தவர்கள் கையை அசைத்தும் வேறு சமிஞ்ஞைகளும் காட்டுகிறார்கள். ஐயா தமிழீழத்தில் கெலி வந்தால் இப்படி கையை காட்ட இயலாது ஐயா. எங்கிருந்து வருகிறது, எங்கே வட்டமடிக்கிறது என்று ஒரு பதபதைப்பு. எங்கோ ஓர் சூட்டுச் சத்தம் கேட்டால், வேலைக்குச் சென்ற கணவனை நினைப்பதா, பள்ளிக்குச் சென்ற பிள்ளையை நினைப்பதா, திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கும் மகளை நினைப்பதா என்று சிந்திக்கவே நேரமில்லாமல் ஓடி ஒளிய இடம் தேடுவார்கள். ஒரே வீட்டுக்குள் அடுத்த அறையில் இருக்கும் தன் பிள்ளையைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஒளியவேண்டிய கட்டாயம். தோட்டாக்களும், விமானத்தால் போடும் குண்டுகளும் எவ்வளவு வேகம் என்பதைப் புரிந்தவர்கள் நாங்கள். விமானம் வந்துவிட்டது என்றால், எல்லோரும் பங்கருக்குள் ஓடி ஒழிவார்கள். பங்கர் எப்படி இருக்கும் என்று கூட அறியாதவர்களுக்கு அந்த வேவதனை புரியாதையா. பங்கருக்குள் விஷ பூச்சிகள் கடித்து எத்தனை பேர் இறந்தார்கள். பாம்புகளுடனேயே பதுங்கி இருந்தவர்கள் ஐயா நாங்கள். இலங்கை இராணுவத்துடனான மோதலில் நாங்கள் பங்கர் கட்டவில்லை. இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன.

புலிகளுக்கும் இராணுவத்திற்கும் பெரும் சண்டையாம், ஆர்மி முன்னேறுதாம் என்றால் உடுக்க சில உடைகளும், கிடந்த பணத்தையும் நகைகளையும் ஒரு பொட்டலமாக துணியால் கட்டி, எங்கே செல்கிறோம், எப்படி இரவு நித்திரை கொள்ளப்போகிறோம் என்று கூடத் தெரியாமல், ஆட்டு மந்தைகள் போல் வெடிச் சத்தத்துக்கு எதிர்த் திசையில் நடந்தவர்கள் நாங்கள். எங்கள் நாட்டில் நாங்களே அகதிகள் என்னும் சொல்லை முதலில் உணர்த்தியது இந்திய இராணுவம். இலங்கை இராணுவத்துடனான போரில் [முன்பு] நாங்கள் யாரோ ஒரு தமிழனின் வீட்டில் இருந்தோம். இந்தியா இராணுவத்துடனான போரில் நாங்கள் கோயில்களிலும் பாடசாலைகளிலும் தங்கவேண்டிய நிலமை. தனியா இருந்தால் தானே கெடுக்கிறானே.

ராஜீவ் காந்தியைக் கொன்றதை, இந்திய ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்த எந்தத் தமிழனும் தவறு என்று சொல்ல மாட்டான். அடி வாங்கினவுக்குத் தன்யா தெரியும் அதன் வலி. மணி அடிச்சா சோறு லைற் ஓவ் [light off] பண்ணினால் நித்திரை என்று இருந்தவர்களுக்கு இதெல்லாம் சொல்லிப் புரியவைக்க இயலாது.

ராஜீவ் காந்தியின் கொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொல்லலாம்; வரலாற்றுச் சோகம் என்று சொல்லலாம்; புலிக்கு மிகுந்த பின்னடைவு என்று சொல்லலாம் [அரசியல் ரீதியாக]; ஆனால் அது தவறு என்று மன்னிப்புக் கேட்பதோ, தலைவரை சரணடைய வேண்டுமென்பதோ இந்திய இராணுவத்தால் ஏற்பட்ட வலியை தாங்கியவனுக்கு இயலாத காரியம்.

இவ்வளவு துரோகமும், துன்புருத்தல்களும் செய்த இந்தியாவிடம் சரணடைவா? இதை விட மரணமே மேல்.

இலங்கை இராணுவத்தால் அவ்வளவு புலிகளைக் கொல்ல முடியவிலை. எவ்வளவு திறன் மிக்கவர்கள், பெரும் பதவியில் இருந்தவர்கள் எல்லாம் இந்திய இராணுவமே கொன்றது. பத்தாததற்கு, இந்தியாவின் RAW வேறு குள்ளநரி விளையாட்டு. அவ்வளவு புலிகளையும், அவர்களது சொத்துக்களையும் இந்தியா அழிக்காமல் விட்டிருந்தால், இன்று புலிகள் இன்னும் பலம் வாய்ந்தவர்களாக இருந்திருப்பார்கள் என்பதில் ஐயப்பாடில்லை. இந்தியாவாலேயே, தமிழீழம் கிடைப்பது தள்ளிப்போகிறது.

_______
CAPital
http://1paarvai.wordpress.com/

CAPital said...

Major General Harkirat Singh, the Indian Peace Keeping Force’s first commander says this after his retirement:

How did the IPKF, sent to enforce peace, get involved in a bloody fight with the LTTE? Do you personally believe that it could have been prevented?

One afternoon I was in my operations room when then vice chief of army staff (S F) Rodrigues came. Later he became [army] chief. He talked of hard options. I advised him against it. I told him, If you adopt hard options you would be fighting for the next 10 to 20 years. And this will lead to insurgency and there is no stopping it. You are fighting in Nagaland, Mizoram, all over. This will be another. And sure enough, it has not ended to date. And it won’t end.

Why?

I have all regards for Sri Lanka. The Tamils have sacrificed [a lot], the LTTE is highly motivated and there is one aim: Eelam. Independence. Till they get independence they are not going to stop. You see stray incidents everyday, they even attempted to kill the present president.

——

**************
IPKF ஜெனரல் புலிகளை சந்திக்கிறார் முதன் முதலில்:

மாத்தையா was standing outside a bungalow. He said, General, I am not prepared to talk to you.
I said, Why? I have come here with a message of peace, goodwill.
He said, Unless you bring back Prabhakaran, we will not talk to you.
I said, Where is Prabhakaran?

I didn’t even know that. They kept the army absolutely in the dark. Prabhakaran was in the Ashoka Hotel in Delhi. Now I know the room number also, 512 or 522. And he was to see the prime minister, before the prime minister went in for the Accord. Anyway he saw him, the PM gave him certain assurances, and before he could say ‘Jack Robinson’, the prime minister was in Colombo, signing the Accord.

Prabhakaran learnt it on television that the Accord had been signed and they were not party to it. It was one reason why the LTTE never accepted the Accord and India’s stand.

If we had taken the LTTE into confidence, they would have known the whole thing, their terms would have been put across to Jayewardane, and the situation would have been different.

**************

இந்தியா தன் மக்களுக்கு எவ்வளவு உண்மைகளை மறைத்திருக்கிறதென்று பாருங்கள். பேச்சுத் சுதந்திரம் செய்திச் சுதந்திரம் இருந்தும் உண்மை ஏன் மக்களுக்குச் சென்றடையவில்லை? பங்களாதேஷைப் பிரித்துக்குடுக்க முன் நின்ற நாடு, தமிழனுக்கு ஏன் இந்த வஞ்சகம்?

….
Surrender ceremony was fixed for 5th of August.
….
Yogi [Prabhakaran’s representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha.

they did not stop arming the EPRLF… . RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn’t stop it.

Did you tell the army headquarters that the EPRLF was being armed?

Of course.

What was the reaction?

Nothing. No reaction. [Indian army chief] General [K] Sunderji never said anything.


….
But then the Thilappan fast happened.
….
Unless the assurances given by the prime minister of India are fulfilled I am not giving up, he said.
I kept requesting the high commissioner, Come and meet, come and meet, come and meet. He dragged his feet, he delayed it, he didn’t come. Finally he came when the man was dead. We should have saved his life, one life.


Kumaran, the Trincomalee leader, and Pulinderan, the Jaffna leader, they were in the boat.

Now, the tamasha started. There were LTTE, around them were the Indian troops, around us were the Sri Lankan troops, around them were the Indian troops, around them the APCs of Sri Lanka.

I was guarding the airfield. And all of them came, Depinder, Dixit and some other staff officers. They landed there, they could not convince Jayewardane, and he was too clever for them.

You are given amnesty to them, fulfill it, but these politicians, they couldn’t. Depinder next day flew into Trincomalee and told me, Hand over, let them go and do whatever they want. Let us go and have a cup of tea with them, with the three chiefs.

Our troops withdrew, the Sri Lankan troops charged, and these fellows swallowed cyanide. Those who chewed, they died on the spot, those who swallowed were saved. This created chaos in the Indo-Sri Lankan entity. That the Indian army, IPKF, could not save them.

What was Dixit’s approach to your attempts to buy peace with LTTE?

Once he said, Shoot Prabhakaran, shoot மாத்தையா.
I said, Sorry I don’t do that. Those were his orders. When they came to me at 12 o’clock at night for some work, he said shoot them.
General, I have told you what I have ordered.
I said, I don’t take your orders. And we are meeting under a white flag, you don’t shoot people under white flag.

So who messed up during the boat tragedy?

The responsibility is entirely on the diplomats, entirely on the army headquarters. Otherwise, for me to save those people was no problem. I would have just put them into few APCs and smuggled them out. Sri Lankans tho dekthe raha jathe [The Sri Lankans would have just looked on]. We would have taken them out, we had all the troops there. No problem.


Did you bring this to the notice of your chief?

Of course. Sunderji was well-informed. Sunderji, Depinder everybody knew about it. But they didn’t have the courage to speak out to the press. Why did they not speak to the press regularly? When we were fighting in Lanka, why was press briefing not done, like during the Kargil time? Roz raat ko bhashan ho jatha tha, yeh ho gayi, ye ho gayi. Why wasn’t it done in Sri Lanka?
WHY WHY WHY ???
Why Indian government never told its people the truth that LTTE wasn’t even aware of the Accord being signed???
If this doesn’t fall into betrayel of Tamils of Elam, then what does?
சமாதானம் பேச வந்தவனை “house arrest” இல் வைத்து விட்டு நீங்களாவே இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துபோட்டு முழுத் துரோகமும் தமிழன் என்றால் என்னையா ஞாயமிது?

இந்தியா செய்த சூட்சும தந்திரங்கள் இந்திய மக்களுக்கு வெளிக்கொணரப்படவில்லை. இதை அறியாமல் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களும் ஈழத்தமிழர் மேல் பழி போடுகிறார்கள். இந்தியா மிகப் பெரும் ஜனநாயக நாடு என்ற பெயர்தான் ஆனால் தம் மக்களுக்கே உண்மை தெரியாமல் செய்வதில் சீனாவை விட கெட்டித்தனம்.

….
Will the fight in Sri Lanka go on?

….
This will carry on. The LTTE is not a simple soul to crack. A hard nut. Lead by Prabhakaran, a highly-motivated man. He has only one aim, Eelam.When India went in, they didn’t want them to win independence outside the constitution because it had problems in Kashmir etc. They didn’t want Trincomalee to become Diego Garcia, because there were oil wells there. I don’t see any peace in the near future.


source: http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm

_______
CAPital
http://1paarvai.wordpress.com/

Anonymous said...

//சமாதானம் பேச வந்தவனை “house arrest” இல் வைத்து விட்டு நீங்களாவே இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துபோட்டு முழுத் துரோகமும் தமிழன் என்றால் என்னையா ஞாயமிது?//
அய்யா அது தான் முடிந்து விட்டதே பிறகு ஏன் இந்தியாவின் உதவியை நாடுகிறார்கள் இனி இலங்கைக்கு எந்த உதவியையும் இந்தியா செய்யாது எத்தனை கருணாநிதி வந்தாலும் நடக்காது

Anonymous said...

//இன்னும்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டது போலவே நாளை ஒரு வேளை பிரபாகரன் இந்திய அரசிடம் சரணடைந்தால், சந்தேகம் இல்லாமல் இந்தியத் தமிழனின் பழைய ஈழபாசம் துளிர்விட வாய்ப்புள்ளது. ஈழத்தமிழர் மேல் மாற அன்புகொண்ட பிரபாகரனுக்கு இது ஒன்றும் பெரிய தியாகம் ஆகிவிடாது என்று
நம்புவோமாக.//

உண்மையே

Anonymous said...

அமைதிப்படையில் சென்ற தமிழ் நாட்டு சிப்பாய்கள் இறந்த போகவில்லையா?

karikaalan said...

please visit here

http://karikaalan.blogspot.com/2004_08_01_karikaalan_archive.html

Anonymous said...

இந்தியா இராணுவத்துடன் யுத்தத்தை ஆராம்பித்ததே பிரபாகரன்தான்
தன் ஆளுமைபறிபோகிறதே என்ற பயத்தினால். சரி பிரபாகரனை
பிடிக்கத்தனே இந்தியா இராணுவம் இவ்வளவு நாசம் செய்தது என்றால்
இந்த தேசிய தலைவர் தமிழர்களை காப்பாற்ற தான் இந்தியா இராணுவத்திடம் சரணடைந்திருக்கலாமே.

செல்வமணி said...

நீங்கள் சொன்ன விசயங்களில் பெரும்பகுதி rediff.com-ல் வந்த india's vietnam என்ற தொகுப்பில் வந்த விசயங்கள்.ஆனால் அதையும் ஒரு இந்திய media தானே வெளிக் கொண்டு வந்துள்ளது.இது மட்டும் அல்ல indo-china war-க்கு பிறகு ஒய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியால் எழுதி வெளிவந்த Himalyan Blunder என்ற புத்தகத்தில் அந்த போரில் இந்தியா பண்ணிய தவறுகள் விரிவாக கூறப்பட்டுள்ளது.இந்த மாதிரி விமர்சனங்களை இங்கு பலரும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை.IPKF தவறு பண்ணியிருந்தால் அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.அதற்கு ராஜீவ் கொலையை நியாயபடுத்தி பேசுவது சிறுபிள்ளைத்தனம்,வீண்பிடிவாதம்.

capital...இங்கு வந்து தமிழ்நாட்டு தமிழர்கள் மீது கோபக்கனலை வீசுவதை விட்டுவிட்டு http://vizhippu.net/ ,தேனீ.காம் போன்ற இணையதளங்களில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் உங்கள் மக்களயே நீங்கள் மாற்றலாம்.

Anonymous said...

Well said Capital. We accept your views on India's betrayal.

Thamil said...

"http://vizhippu.net/ ,தேனீ.காம் போன்ற இணையதளங்களில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் உங்கள் மக்களயே நீங்கள் மாற்றலாம்."

உது வீண் வேலை.

Thamil said...

"இந்தியா இராணுவத்துடன் யுத்தத்தை ஆராம்பித்ததே பிரபாகரன்தான்
தன் ஆளுமைபறிபோகிறதே என்ற பயத்தினால். சரி பிரபாகரனை
பிடிக்கத்தனே இந்தியா இராணுவம் இவ்வளவு நாசம் செய்தது என்றால்
இந்த தேசிய தலைவர் தமிழர்களை காப்பாற்ற தான் இந்தியா இராணுவத்திடம் சரணடைந்திருக்கலாமே."

உலகத்தில் பெரிய நாலாவது ராணுவம் ஒரு பொடியனைபிடிக்க முடியவில்லை, வெக்கமாக இல்லை, அவரைப்பிடிக்கத்தான் ipkf கற்பழிச்சது என்று சொல்ல.

Thamil said...

//இன்னும்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டது போலவே நாளை ஒரு வேளை பிரபாகரன் இந்திய அரசிடம் சரணடைந்தால், சந்தேகம் இல்லாமல் இந்தியத் தமிழனின் பழைய ஈழபாசம் துளிர்விட வாய்ப்புள்ளது. ஈழத்தமிழர் மேல் மாற அன்புகொண்ட பிரபாகரனுக்கு இது ஒன்றும் பெரிய தியாகம் ஆகிவிடாது என்று
நம்புவோமாக.//

உண்மையே

சரனடையிறது பிரச்சினை இல்லை இந்தியா காவுகொண்ட 5500 உயிரை திருப்பி தரமுடியுமா?

Thamil said...

//சமாதானம் பேச வந்தவனை “house arrest” இல் வைத்து விட்டு நீங்களாவே இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துபோட்டு முழுத் துரோகமும் தமிழன் என்றால் என்னையா ஞாயமிது?//
அய்யா அது தான் முடிந்து விட்டதே பிறகு ஏன் இந்தியாவின் உதவியை நாடுகிறார்கள் இனி இலங்கைக்கு எந்த உதவியையும் இந்தியா செய்யாது எத்தனை கருணாநிதி வந்தாலும் நடக்காது

உமதி ஜடியாவை பாத்தால் உதவச்சு கலஞர் ஆட்சியை திரும்பவும் கலைக்கலாம் என்று மனகணக்கு போடுறீர் போல கிடக்கு, இனி எத்தனை ஆம்மா வந்தாலும் கலைஞரை கலைக்கமுடியாது, ஏனெனில் காங்கிரஸ் கலைஞரின் பாக்கெட்டுக்குள்.

Anonymous said...

செல்வமணியே...
இந்தியா துரோகம் செய்தது. அதற்கு பதில் துரோகமாக ராஜீவைக் கொன்றது புலிகள். அவ்வளவுந் தான். இதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

அன்று குமரப்பா புலேந்திரன் அவர்கள் ஆயுந்தகளை ஒப்படைத்த பின் சமாதான படையாக/ மத்தியஸ்தம் பேச வந்த நீங்கள் சிங்கள இராணுவம் என்னாவது செய்யட்டும் என்று அப்படியே விட்டுவிடுவது தான் இந்தியனின் துரோகம் கலக்காத தமிழனுக்கு உதவியோ?

_______
CAPital
http://1paarvai.wordpress.com/

CAPital said...

//இன்னும்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டது போலவே நாளை ஒரு வேளை பிரபாகரன் இந்திய அரசிடம் சரணடைந்தால், சந்தேகம் இல்லாமல் இந்தியத் தமிழனின் பழைய ஈழபாசம் துளிர்விட வாய்ப்புள்ளது. ஈழத்தமிழர் மேல் மாற அன்புகொண்ட பிரபாகரனுக்கு இது ஒன்றும் பெரிய தியாகம் ஆகிவிடாது என்று
நம்புவோமாக.

உண்மையே
//

ஏன் இப்படி தமிழனுக்கு உதவிறம் எண்டு வந்து தானே.. தமிழனைக் கொன்றது இந்தியா.

விட்ட தவறை மீண்டும் விடமாட்டோம்

_______
CAPital
http://1paarvai.wordpress.com/

செல்வமணி said...

capital அய்யா.. ஒத்துக் கொள்ள ஒட்டு மொத்த ஈழ மக்களின் பிரதிநிதியா நீங்கள்? ஆனந்த சங்கரிக்கும், கருணா அம்மானுக்கும் சேர்த்தா? ஆனால் யார் இதை ஏற்றுக் கொள்வது?

ஈழப் பிரச்சனை இரு நாட்டு உயர்மட்ட அரசியலிலும்,வன்னி காட்டிலும் தீர்மானிக்கப்படுகிறது. எல்லா தரப்பினரும் தங்கள் பாதுக்காப்பை மையமாக வைத்து திட்டங்களை தீட்டுகின்றன.எல்லா தரப்பினரும் தவறுகள் செய்திருக்கிறார்கள். இதை ஊடகங்கள் மூலம் படித்துவிட்டு நம்மை போன்றவர்கள் விவாதம் செய்கின்றோம்.அப்படி செய்யும் போது அது ஒரு ஆக்கபூர்வமான யோசனயை அளிக்கக் கூடிய விவாதமாக இருந்தால்தானே நல்லது. அதைவிட்டுவிட்டு துவேசத்தையும்,வெறுப்பையும் வளர்ப்பது போல் நாம் விவாதிப்பதில் என்ன பயன்? குறைகளே இருந்தாலும் அதை களைந்துவிட்டு அடுத்தகட்டத்திற்க்கு போகின்ற முயற்சியில் தானே இறங்கவேண்டும்.

வளைத் தளங்களில் எழுதும் பல ஈழ நண்பர்கள் இந்தியர்களையும்,தமிழ்நாட்டு தமிழ்ர்களையும் குறைகூறி, திட்டிதான் எழுதுகிறார்கள். இப்படி எழுதி என்ன சாதிக்கப்போகிறார்கள்? மேலும் மனக்கசப்பு அதிகமாகுமே தவிர குறையாது. அவர்களுக்கு வேண்டுமானால் திட்டித் தீர்த்த நிம்மதி கிடைக்கலாம்.குறை கூறுவதை தவறு என்று நான் சொல்லவில்லை. எதைத் தான் தவறு என்று சுட்டிக்காட்டுவதற்க்கு ஒரு அளவில்லையா? ஒரு வளை பதிவாளர் எழுதுகிறார்...காங்கேசந்துறையை வேறு ஒரு மாவட்டத்தோடு இணைத்து ஒரு இணைய பத்திரிக்கை தவறாக போட்டுவிட்டதாம்..தமிழக ஊடகங்களின் ஈழம் பற்றிய அறிவு குறைவாம்...இவர் முடிவு பண்ணிவிட்டார்..ஒரு பக்கம் எழுதியிருக்கிறார்..என்னைய்யா ஆச்சு உங்களுக்கு? இதெல்லாம் ஒரு குறையா? BBC பல முறை இந்தத் தவறை செய்திருக்கிறது.இது சாதரணமாக எங்கும் நிகழக்கூடிய சிறு தவறுதான். சின்னத் தவறுகளை பூதக் கண்ணாடி வைத்துத் தேடும் மனோவியாதியா?

அரசியல் நிலைப்பாடுகளை யாரோ எங்கோ எடுக்க நாம் இங்கு அடித்துக் கொள்வதுதான் வேதனயாய் உள்ளது.

CAPital said...

உலகில் சுதந்திரம் பெற்ற எந்த நாடுகளும், நிரந்தரமாக பகைமை வைத்துள்ளதாக எனக்குத் தெரியவில்லை. அதற்காக சுதந்திரம் பெறாமலுமில்லை. அப்படி இருந்தால், இற்றைக்கு பிருட்டிஷ் தான் உலகில் மிகப்பெரிய நாடாக இருந்திருக்கும். அனேகமாக எல்லோரும் போராடித் தான் பெற்றார்கள். அமெரிக்காவும் போராடித் தான் பெற்றது. நோர்வேயும் போராடித் தான் பெற்றது. இந்தியாவும் போராடித் தான் பெற்றது. அகிம்சைப் போராட்டங்களை விட ஆயுத வழி சுதந்திரம் எடுத்த நாடுகளே அதிகம் உலகில் என்பதை மறுக்க இயலாது. ஆயுதமேந்தினால் நாடு சிதைந்து போகும் என்றில்லை. அயுத வழி சுதந்திரம்/ ஒற்றுமை ஆக்கிய நாடுகளே உலகில் வல்லரசாகவும் இற்றைவரைக்கும் இருந்திருக்கின்றன. ஆர்தர், அலெக்ஸாண்டர், என்று அவர்களுக்கு முன்னும் பின்னும் பல பேரரசுகள். நூறு ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷ் வேற்று நாடுகளை ஆண்டும் இருப்பது வரலாறு. [அதற்காக புலிகள் வல்லரசாகிவிட முடியுமா என்று கேட்காதீர்கள் - அது அல்ல நோக்கம்]

தலைவர், சிங்களவர் எதிரி என்று சொல்லவில்லை. சிங்கள அரசியல் பீடமே தமிழருக்கு மனித உரிமையை மறுக்கிறது என்று சொல்லியிருக்கிறார். சுதந்திரம் கிடைத்து மறு நிமிடமே, இலங்கையுடன் சமாதான மாக புலிகள் போகவும் தயங்க மாட்டார்கள். இப்போது அமெரிக்காவில் "White House" என்று அழைக்கப்படுவது ஒரு காலத்தில், கனேடியர்களால் எரிக்கப்பட்டது. அதன் பின் அதற்கு வெள்ளை நிற வண்ணம் அடித்து "White House" என்று பெயரானது. அவ்வளவு பகைமை கொண்ட நாடுகள் இப்போது அண்ணன் தம்பி போல் இருக்கவில்லையா. பகைமையை எல்லோரும் நிரந்தரமாக்கி இருந்தால் பிரிட்டிஷ் தான் பலருக்கு முதல் எதிரியாக இருந்திருக்கும். அரசியலில் பகைமை நிரந்தரமல்ல என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொன்னது போல், போராட்டங்கள் எதுவும் உடனடியாக வெற்றி ஈட்டுவதில்லை. இந்தியாவிற்கே 50 வருடங்கள் எடுத்தது. எந்த ஒரு சுதந்திரப் போராட்டமும், இன்றைக்கு கேட்டு நாளைக்கு கொடுக்கப்பட்டது அல்ல. புலிகள், தனி நாடு பெற்றால், தமிழீழம் முன்னேறும் வேகம் பல மடங்காகும் என்பதில் ஒரு துளி கூட எனக்கு ஐயப்பாடில்லை.

எத்தனை ஆண்டுகள் எடுக்கிறதோ தெரியாது, ஆனால் ஒரு நாள் தமிழீழம் மலரும் [வரலாற்றில் மற்றய நாடுகள் போராடி எடுத்தது போல்]. அதன் பின் எவரெவர் உதவினார்கள், எவரெவர் துரோகம் செய்தார்கள் என்பது சீர்த்தூக்கிப் பார்க்கப்படும். அன்று வரைக்கும் "தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும், உன் கடன் பணி செய்து கிடப்பதே" என்று இருப்போம்.

ஆகவே, சுதந்திரப் போராட்டத்திற்கு ஆயுதமேந்தி போராடினால் அழிவு தான் வழி என்றில்லை என்கிறது வரலாறு. சுதந்திரம் பெற்ற நாடுகள் பகைமையை தக்கவைத்துக் கொள்ளவில்லை என்றும் சான்று பகிர்கிறது வரலாறு. எல்லாவற்றிக்கும் காலம் தான் பதில் சொல்லும்.

வரலாறே வழிக்காட்டு.

______
CAPital
http://1paarvai.wordpress.com/

Anonymous said...

Srilanka buys weapons from Pakisthan, China and Israel to attack tamil people. Govt of India during Natwar singh period as minister for External Affairs has signed a Military pact with Srilanka. I feel that is a wrong thing to do. It does not justify India's position as neutral country.

Tamil people are our people living in Srilanka for ages. Tamil people in Srilanka are intellects, hardworking, supporting India, civilized and cultural, forward looking and talented. 60% of Srilankan Coastline is under Tamils. Tamil people work in Paddy fields, Tea Gardens, do fishing in coastal areas, study well to become doctors, engineers, accountants, lawyers, and outperform and outshine every where in Srilanka. This is another reason for war on Tamils by Srilankan government. Areas where tamil people live are rich in minerals and natural wealth.

Trincomalee is a natural harbour earning lot to foreign exchange for Srilanka. Srilanka exports, Tea, Cement and Minerals from this harbour majoity of people here is Tamils. This is the place Indian Oil Corporation is looking for investment, this is the strategic place is a disputed area.

செல்வமணி said...

ஒரு தேசிய இனவிடுதலையையும், மக்களின் சமூகப் புரட்சியையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.மக்கள் புரட்சியின் போது தெளிவான கொள்கையின் அடிப்படையில் அமைக்கப் பட்ட ஒரு அமைப்பால், அனைத்து மக்களின் உதவியோடு நடத்தப்பட்ட ஆயுதபுரட்சிதான் வெற்றி பெற்றிருக்கிறது. மற்றதெல்லாம் வேறு ஆயுதம் தாங்கிய கும்பலால் ரத்த வெள்ளத்தில் முழ்கடிக்கபட்டிருக்கிறது.இதையும் வரலாறுதான் நமக்கு புரியவைக்கிறது. லத்தீன் அமெரிக்க ,ஆப்பிரிக்க நாடுகளிலும் சரியான கொள்கையில்லாத அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆயுதபுரட்சிகள் கடைசியில் கண்டது ரத்தவாடையும்,மனிதஎலும்புகளும் தான்.ஆயுதம் வைத்திருப்போர் செய்வதெல்லாம் புரட்சியா? சில ஆண்டுகளுக்கு முன் மாலத்தீவில் ஆயுதங்களோடு போய் சினிமா பாணியில் இறங்கினார்களே சிலர், அவர்களும் புரட்சிதான் செய்தார்களோ?

ஒரு ஆயுதபுரட்சி வெற்றி அல்லது தோல்வி பெறுவதற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.ஒரு சமுதாயத்தில் அது தவிர்க்க முடியாமல் தேவை படுவதில் ஆரம்பித்து,அதை நடத்தும் அமைப்பின் சித்தாந்தம்,அக புற ஆதரவு மற்றும் எதிர்ப்பு,எல்லா மக்களையும் சேர்ந்தணைத்து செல்வது, அண்டை நாடுகள் அடங்கிய பூகோள அமைப்பு...மற்றும் பல...இந்த மாதிரி பல காரணங்களை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் புரட்சிகர அமைப்புதான் புரட்சியில் வெற்றிபெற்றிருக்கிறது. அந்த அமைப்புகள் கூட ஆயுதத்தை கடைசியாகத் தான் தூக்கியிருக்கின்றன.'நிகழ்ச்சி நிரலில் துப்பாக்கிச் சனியனை வைப்பது அவ்வர்க்கங்கள்தான்' என்றுதான் அந்த அமைப்புகள் கூறியிருக்கின்றன.

ஒரு அமைப்பு இதையெல்லாம் ஆராயாமல், தத்துவார்த்த ரீதியில் மக்களை தயார் செய்யாமல் ஆயுதங்களை மட்டும் அந்த சமுதாயத்தில் அறிமுகம் செய்தால் அந்த ஆயுதங்களே அவர்களுக்கு எதிராக ஒருநாள் திரும்பும்.


திரிகோணமலை ராணுவ முக்கியத்துவம் குறித்து அடிக்கடி இணய தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் படிக்கமுடிகின்றது. வியாபார ரீதியிலும்,பூகோள ரீதியிலும் அது ஒரு நல்ல துறைமுகம். எனது யோசனை அதன் ராணுவ முக்கியத்துவம் பற்றி. சில மணிகளில் துவம்சம் செய்துவிடும் ICBM என்றழைக்கப்படும் intercontinental ballistic missile(range 5500k.m) வந்துவிட்ட சூழ்நிலையில் இந்த 'ராணுவமுக்கியத்துவம் வாய்ந்த'என்ற வார்த்தையே தன் முக்கியத்தை இழந்துவருகிறது. இன்றைய சுழ்நிலையில் pentagon-க்கே பாதுகாப்பில்லை.
இந்த நிலையில் சில நகரங்களும்,சில துறைமுகங்களும் எப்பிடி முக்கியத்துவம் வாய்ந்தது என்று விளங்கவில்லை.இந்தியாவின் எந்த நகரத்தையும் தாக்கும் திறன் பாக்கிஸ்தானிடம் இருப்பதாகவும் பதிலுக்கு இந்தியா தாக்கினால் பாக்கிஸ்தான் எழுந்து வர 20 ஆண்டுகள் ஆகும் என பத்திரிக்கைகள் உணர்ச்சி வசப்பட்டு எழுதினாலும் இந்த பகுதியில் எந்த நகரமும் பாதுகாப்பானதில்லை என்பது புரிகிறது.இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறினால் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்

CAPital said...

திருகோணமலை ஏன் முக்கியம்?
http://thamizhsasi.blogspot.com/2006/06/4.html

______
CAPital
http://1paarvai.wordpress.com/

செல்வமணி said...

capital...அந்த கட்டுரையை தெளிவாக படிக்கவும். சசி முழுக்க முழுக்க திரிகோணமலையின் வியாபார முக்கியத்துவம் பற்றிதான் எழுதியிருக்கிறார். வேண்டுமானால் LTTE-இலங்கை அரசுக்கு வேண்டுமானால் தாக்குதல் சம்பந்தமாக முக்கிய கேந்திரமாக இருக்கலாம்.நான் சொல்லவந்தது திரிகோணமலையின் international military importance பற்றி. அரசியல் வட்டாரத்திலும், பத்திரிக்கைகளிலும் இந்த விசயம் பரவலாக பேசப்படுவதால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் சம்பந்தமாக நடந்த கடித போக்குவரத்தில் சில வரிகள் பயன்படுத்தப்பட்டன .அவ்வளவுதான்.சாண்டில்யனின் 'கடல் புறா' காலத்தில் வேண்டுமானால் திரிகோணமலை 'ராணுவமுக்கியத்துவம்'வாய்ந்த இடமாக இருந்திருக்கலாம்.
ஏவுகணைகளின் தாக்கும் தூரமும்,திறனும்,துல்லியமும் அதிகரிக்க அதிகரிக்க எந்த இடமும் பாதுகாப்பானதல்ல என்பதுதான் என் கருத்து.

சசியின் blog-ல் பின்னூட்டமிட்ட நண்பர் சுடலை மாடன் குறிப்பிட்ட,யாழ்ப்பாண பேராசிரியர்களால் எழுதப்பட்ட அந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.எஸ்.வி.ராஜதுரை முன்னுரை எழுதியிருப்பார்.அந்த புத்தகத்தின் பெயர்தான் சரியாக நினைவில்லை. 'இந்துமகா சமுத்திரமும் உலக அரசியலும்' என்பது போல் வரும். சரியான தலைப்பு தெரிந்தவர்கள் கூறினால் பயனுல்லதாக இருக்கும்.