பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 23, 2006

உஷார்! மீண்டும் வருகிறது, புலி ஆதரவு !

23/06/06 துக்ளக் தலையங்கம்


விடுதலைப் புலி ஆதரவுப் பிரச்சாரம் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கி இருக்கிறது. நடக்கத் தொடங்கியிருப்பது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தேடுகிற வேலையே தவிர, இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் காண்கிற முயற்சி அல்ல என்பதை, தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் இலங்கையில் தங்களை பலப்படுத்திக் கொள்ள, அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தை (நாம் எதிர்பார்த்த மாதிரியே) பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த கட்டத்தில், அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்த அவர்களுடைய அத்துமீறல்கள், இப்போது அராஜகங்களாக
உருவெடுத்து விட்டன. இவர்களுடைய சமீபத்திய கோரதாண்டவம், இலங்கையில் 60க்கும் மேற்பட்ட அப்பாவிகளை பலி வாங்கியது. இதற்கு முன் இலங்கை ராணுவ தளபதியை அவர்கள் தாக்கினார்கள். இதற்கெல்லாம் பதிலடியாக இலங்கை ராணுவம், விடுதலைப் புலி முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தியது; நடத்துகிறது.
ஒரு அரசு வேறு எப்படிச் செயல்பட முடியும்? ஒரு தீவிரவாதக் கூட்டம், தலைவிரித்து ஆடி, அட்டூழியத்தைப் பொழிகிறபோது, வேடிக்கை பார்ப்பது ஒரு அரசின் வேலை அல்ல; அவர்களை ஒடுக்க, கடுமையான தாக்குதலை மேற்கொள்வது அரசின் கடமை. இதைத்தான் இலங்கை அரசு செய்தது.இதை தமிழகத்தில் கூட்டம் போட்டுக் கண்டிப்பவர்கள், விடுதலைப் புலிகளின் கொடுமைகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்கள் தமிழ்த் தலைவர்களை எல்லாம் கொன்று போட்டதையோ; தங்களுக்கு உதவ முன்வராத அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததையோ; தமிழ்ச் சிறுவர்களை பலவந்தமாக அவர்களுடைய குடும்பங்களிலிருந்து பிரித்து, இலங்கை ராணுவத்துக்கு எதிராக கேடயமாகப் பயன்படுத்துவதையோ; தமிழர்களை மிரட்டி "வரி' என்ற பெயரில் பணம் பிடுங்குவதையோ – இங்கே பிரச்சாரக் கூட்டங்களை நடத்துகிறவர்கள் கண்டிக்கவில்லை.

"அகதிகள் நிலை அவலமல்லவா?' என்று கேட்கலாம். உண்மை; அகதிகளின் நிலை அனுதாபத்திற்குரியது. ஆனால் அப்படி அகதிகள் உருவாவதில், விடுதலைப் புலிகளின் பங்கு சாதாரணமானதா? அதை ஏன் சொல்வதில்லை, இங்கே கண்ணீர் சிந்தி கூட்டம் போடுகிறவர்கள்? இவர்கள் விடுதலைப் புலி பிரச்சாரகர்கள்; வன்முறை ஆதரவாளர்கள்; தீவிரவாதிகளின் நண்பர்கள் – அதனால்தான், ராஜீவ் காந்தி கொலை உட்பட, புலிகளின் கடந்த கால அட்டூழியங்களையும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை; இன்றைய அராஜகங்களையும் கண்டிப்பதில்லை.
ஆகையால் இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டங்கள் அல்ல; விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே! அதைப் பற்றி எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தினால்தானோ என்னவோ – ம.தி.மு.க. தலைவர் வைகோ, மதுரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், விடுதலைப் புலிகளை மிகவும் பாராட்டி, அவர்களுடைய செயல்களை நியாயப்படுத்தி இருக்கிறார்.


"மத்திய அரசின் நிலை எதுவோ, அதுவே எங்கள் நிலை' என்று, வரவேற்க வேண்டிய வகையில் கூறிய தமிழக முதல்வரை, திருமாவளவன் கண்டித்திருக்கிறார்; அதை துரோகம் என்கிறார்!


இந்த விடுதலைப் புலி ஆதரவாளர்கள், சென்ற சில வருடங்களாக இப்படிப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தத் தயங்கினார்கள்; பொடா போயிற்று; விடுதலைப் புலிகள் தமிழகத்தில் இடம் தேட முயற்சிப்பதை கடுமையாகத் தடுத்த ஜெயலலிதா அரசு வீழ்ந்தது; இவர்களுக்குத் துணிவு வந்து விட்டது; கூட்டம் போட்டு, புலி ஆதரவு பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

தி.மு.க. அரசு இதை அலட்சியப்படுத்தக் கூடாது. வன்முறையை ஆதரிக்கிறவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது; அ.தி.மு.க.வின் நண்பர்களாக, தன்னுடன் கைகோர்த்து நின்ற வைகோவும், திருமாவளவனும், மற்றொரு கைகொண்டு விடுதலைப் புலிகளுடன் கைகோர்த்து நிற்க முனைந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து – ஒன்று அவர்கள் சகவாசத்தை உதற வேண்டும்; அல்லது குறைந்தபட்சம், இந்த விவகாரத்தில் சந்தேகமற தனது நிலையை தெளிவுபடுத்தி, அது புலி ஆதரவாளர்கள் நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை அவர் தெளிவாக்க வேண்டும்.

அனைவருக்கும் ஒரு சொல் : விடுதலைப் புலிகள், இந்தியாவின் எதிரிகள். இந்நினைவகற்றாதீர்!


நன்றி: துக்ளக் 23/06/06
சு.ப.தமிழ்ச்செல்வன் பேட்டி

அமைதிக்கான கனவுகளைக் கழுவில் ஏற்றிவிட்டு மறுபடி ஆரம்பித்துவிட்டது ஆயுதங்களின் கோரத் தாண்டவம். குழந்தைகளின் கண்முன்னே தாய்மார்கள் பாலியல் வன்முறை செய்யப்படும் பெரும் துயரம், பிறப்புறுப்பில் வெடி வைத்துக் கொல்லப்படும் குரூரம், எப்போது ஷெல் வந்துவிழுமோ என பதுங்கு குழிகளில் பயந்து தவிக்கிற அவலம்... யுத்தத்தின் கொடூரமான இருட்டு ஈழத்தைச் சூழ்ந்திருக்கிறது.

ஒரு பக்கம் சிங்கள ராணுவம் வெறித்தனமான தாக்குதலைக் கட்ட-விழ்த்துவிட, புலிகளும் இன்னொரு ‘ஓயாத அலை’களுக்கு ஆக்ரோஷமாகத் தயாராகிறார்கள். இந்த நெருக்கடியான நிலையில், கிளிநொச்சியில் இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைமை அலுவலகத்தில், ஆலோசனையில் இருந்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியிலிருந்து...

‘‘நான்காண்டு கால அமைதி முயற்சிகள் குலைந்து மீண்டும் யுத்த சூழல் உருவாக யார் காரணம்?’’

‘‘சிங்கள அரசாங்கமும், சிங்கள இனவாதிகளுமே காரணம். 2002-ல் ஈழத்தில் ஆக்கிரமித்திருந்த சிங்கள ராணுவத்தை முறியடித்து பல ராணுவ வெற்றிகளை புலிகள் ஈட்டிய போது, இலங்கை அரசு அடி பணிந்து பேச்சுவார்த்தைக்கு வந்தது. நார்-வேயின் அனு-சரணையோடும் சர்வதேச சமூகத்--தின் ஆதரவோடும் இரு தரப்பும் ஏற்றுக்-கொண்டு உருவாக்கப்பட்ட விஷயம்-தான் யுத்த நிறுத்த உடன்படிக்கை.

அப்படி இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதுதான் இப்போது உருவாகியிருக்கும் வன்முறைச் சூழலுக்குக் காரணம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எமது மக்கள் கொன்று அழிக்கப்பட்டும், சொந்த நிலத்திலிருந்து விலகி, அகதிகளாக்கப்பட்ட அவல நிலையிலும் இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் சொந்த நிலங்களில் குடியமர்த்தி, அங்கிருந்து ராணுவத்தை விலக்க வேண்டும் என்பது பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். அதை இன்று வரை இலங்கை அரசு செய்யவில்லை. இன்னொன்று, துணைக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பது. ஆயுதங்களைக் களைவதற்குப் பதிலாக, அவர்களுக்கு இன்னும் இன்னும் புதிய ஆயுதங்களைக் கொடுத்து, தமிழர் பகுதிகளில் வன்முறையை ஏவிவிடுகிறது அரசு. இம்மாதிரி நம்பிக்கைத் துரோகங்கள்-தான் இன்றைய வன்முறைச் சூழலுக்கு மிக முக்கியக் காரணம்.’’

‘‘அநுராதபுரத்தில், பேருந்தில் சென்ற 64 பேர் கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியதற்குப் புலிகள்தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சுமத்தியிருக்கிறதே?’’

‘‘சிங்கள இனவாதிகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்குமே எதிரானவர்கள். தங்களுடைய சொந்த இனத்துக்குள்ளேயே எத்தனையோ கொலைகளை நிகழ்த்தியவர்கள்தான் அவர்கள். ஜே.வி.பி-யினுடைய கிளர்ச்சி காலகட்டங்களிலேயே ஆயிரக்கணக் கான சிங்கள மக்களை தென்னிலங்கை வீதிகளிலேயே ரப்பர் டயர் போட்டுக் கொளுத்தியவர்கள் அவர்கள். அதுபோலவே சர்வதேச அரங்கில் ஏற்பட்டு வரும் நல்லெண்ண மாற்றங்களை இல்லாதொழிக்கவும், ஒஸ்லோ பேச்சில் புலிகள் தமது நிலையைத் தெளிவுபடுத்திப் பேச்சுக்களை வெற்றிகரமாக முடித்து வந்ததைக் கொச்சைப் படுத்தும் நோக்கத்துடனும், துணைக் குழுக்களைப் பயன்படுத்தி, இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தி புலிகள் மீது பழி போடுகின்றனர். பேருந்து தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளி களைக் கண்டுபிடிக்குமாறு நாம் பகிரங்கமாக வேண்டியிருக்கிறோம். அத்துடன், அந்தப் படுகொலைக்குக் கடுமையான கண்டனத்தையும் மறுப்பையும் வெளியிட்டிருக்கிறோம். அடித்துச் சொல்கிறோம்... அப்பாவி சிங்களர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசின் சதிச்செயலே காரணம்!’’

‘‘முழு அளவிலான ஒரு போருக்குப் புலிகளே இப்போது தயாராக இல்லை. அப்படித் தயாரானால், இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபடும் என்கிறார்களே?’’

‘‘நாங்கள் உண்மையான போராளிகள். எமது தேசத்தையும் மக்களையும் எல்லா வகையிலும் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்யவும் எப்போதும் முழு அளவில் தயா-ராகவே இருக்கிறோம். எமது தாயக மண்ணை மீட்டெடுத்து, எமது மக்களுக்குச் சுதந்திர வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதே விடுதலைப் புலிகளின் லட்சியம். இதில் வெளியார்களின் தலையீட்டை எமது மக்களோ, எமது அமைப்போ, எமது தலைமைப் பீடமோ ஒருபோதும் அனுமதிக்காது. புரிந்துகொள்ளுங்கள்... நாங்கள் எந்த நாட்டுக்கும், இனத்-துக்கும் எதிரானவர்கள் அல்ல. எமது சொந்தத் தாயகத்தில் பூர்விக-மாக வாழ்ந்த மண்ணில், சகல உரிமைகளையும் பெற்றுப் பிற தேசங்களில் மக்கள் எப்படி வாழ்-கிறார்களோ அப்படி ஒரு வாழ்வை உறுதி செய்யவே போராடு கிறோம்.

அமெரிக்கா உட்பட அது எந்த நாடாக இருந்தாலும் சரி, தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தைப் புரிந்து ஏற்றுக்-கொண்டு அங்கீகரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மற்றபடி, இதில் தலையீடு செய்து பலவீனப்படுத்த முனைவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.’’

‘‘ஐரோப்பிய யூனியனும் இப்போது விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடைசெய்திருக்கிறார்களே? இதை எப்படி எதிர்கொள்ளப் போகி-றீர்கள்?’’

‘‘இலங்கை அரசாங்கம் தனது ராஜதந்திர அழுத்தங்களையும், பொய்யான பிரசாரங்-களையும் பயன்படுத்தித் தவறான வழியில் ஐரோப்பிய யூனியனையும் இன்னும் பல நாடுகளையும் இப்படியான அறிவிப்பை செய்யத் தூண்டியிருக்கிறார்கள். இது தவறானது. ஒரு தலைப்பட்சமானது. இந்த அநீதியான தீர்ப்புகளுக்கும், தடைகளுக்கும் எதிராக அந்தந்த நாடுகளில் வாழும் ஈழ மக்கள் தங்கள் குரல்களை எழுப்பி, உணர்வு களை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாடுகள் வெகு விரைவில் உண்மையை அறிந்துகொண்டு, தங்களுடைய நிலைப்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.’’

‘‘இந்தியாவிடம் நீங்கள் என்ன எதிர்-பார்க்கிறீர்கள்?’’

‘‘இந்தியா உட்பட எல்லா நாடுகளும் தமிழர்-களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எமது மக்களுடைய விருப்பமும், எமது விருப்பமும் ஆகும். இந்தியாவைப் பொறுத்த வரை, தனது அயல்நாடொன்றில் இனப் படு-கொலைகள் நடக்கிறபோது, பாதிக்கப்படும் இனத்துக்குத் தார்மிக ஆதரவைக் கொடுத்-திருக்கிறது. பாலஸ்தீனப் போராட்-டத்தை ஆதரித்ததைப் போல, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த ஜனநாயகக் கிளர்ச்சியை ஆதரித்ததைப் போல எமது மக்களின் தார்மிகப் போராட்டத்தையும் அபி-லாஷைகளையும் புரிந்துகொண்டு, இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்த-வேண்டும் என்பதுதான் எமது விருப்பம்.’’

‘‘தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கு பெறுவீர்களா, அல்லது யுத்தம்-தானா?’’

‘‘யுத்த நிறுத்த உடன்பாடு தற்போது கேள்விக்குறியான நிலையில்தான் உள்ளது. எம்மைப் பொறுத்தவரையில், நாங்கள் இந்த உடன்பாட்டை முறித்துக் கொண்டு யுத்தத்துக்குச் செல்ல விரும்ப வில்லை. இருந்தாலும், சிங்கள அரசு இப்போது எங்கள் மக்கள் மீது பெரிய-தொரு இனப் படுகொலையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள் ளது. புலிகளின் முக்கிய தளங்களையும் மக்களின் குடியிருப்புகளையும் சிங்கள ராணுவம் தொடர்ந்து தாக்க முயற்சித்து வருகிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்பு யுத்தத்தைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்-பட்டுள்ளோம்.

நான் உங்களிடம் கேட்டுக்கொள்வ தெல்லாம் ஒன்றுதான்... சொந்த மண்ணிலேயே நிம்மதி இழந்து, நிர்க்கதியாக நிற்க வேண்டிய கொடுமையான சூழலில் இருக்கும் எம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எமது கனவு, லட்சியம், வேட்கை எல்லாம் எம் மண்ணின் விடுதலை. மரண பயமற்று மக்கள் நடமாடும் தமிழ் ஈழம்!’’

நன்றி: ஆனந்த விகடன் 2/7/06கல்கி தலையங்கம் - 2/7/2006
அனுராதபுரம் கண்ணிவெடி கொடூரத்துக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்கிறார்கள் விடுதலைப் புலிகள். சின்ன குழந்தைகூட இதை நம்பாது! புலிகள் தலைவர் பிரபாகரன், தமது வன்முறைப் போக்கை உறுத்தலின்றி ஒப்புக் கொண்டவர். பத்திரிகையாளர் கூட்டம் கூட்டியே பிரகடனப்படுத்தியவர்.

இந்நிலையில், இலங்கை அரசுக்கு, புலிகள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? ஒரு பாவமும் அறியாத பொது மக்கள் பலியாகிறபோது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மேலும் வேதனையான விஷயம், இலங்கை ராணுவமும் ஈழத் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைப்பதாக
வெளிவரும் செய்திகள்! எனினும், இப்பழிவாங்கும் உணர்வு, புலிகளின் முதல் தூண்டுதலாலும் மூடப் பிடிவாதத்தினாலும் விளைவதுதான் என்பதை மறுக்க முடியாது.

எத்தனையோ முறை பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதிலும், புலிகள் தங்கள் வறட்டுப் பிடிவாத நிலையிலிருந்து இறங்கத்
தயாராயில்லை. பேச்சு வார்த்தைகள் முறிந்து போயின. அல்லது தோல்வியுற்றன.

பேச்சுவார்த்தை காலகட்டத்தை ஒரு சாதகமான இடைவெளியாகப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் தாங்கள் இழந்த இடத்தை மீட்டார்கள்; அல்லது புதிய தாக்குதல்களை நடத்த தங்களை மேலும் ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள்.

இலங்கையில் அமைதி திரும்ப பாடுபட்ட நார்வே அமைதிக் குழுவே வெறுத்துப் போய்விடும் அளவுக்கு, புலிகளின் இந்த நாடகம் தொடர்ந்து, சமீபத்திய அனுராதபுர கொடூர நிகழ்வில் ஓர் உச்சகட்டத்தைத் தொட்டிருக்கிறது.

ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களின் துயர் பெருகிக்
கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தமிழக மீனவர்கள்
பாதுகாப்பின்றித் தவிக்கிறார்கள். இன்னொரு புறத்தில், இலங்கை அகதிகள் வரவு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் வேறு பல சிக்கல்கள் விளையும்.

ஐரோப்பிய யூனியன் நாடுகள், விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து,
அவ்வியக்கத்துக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா வாழ் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கிட்டிய, அல்லது பலவந்தமாக வசூலிக்கப்பட்ட பொருளாதார உதவி (வரி?!) பெறப்படுவது கடினமாகியிருக்கிறது. இயலாமை, புலிகளின் கோபத்தைத் தூண்டி மேலும் வன்முறையில் ஈடுபடச் செய்யும். அதே நேரத்தில், பொருளாதார நெருக்கடியினால் அவர்கள் நிலை பலவீனப்படவும் செய்யும்.

இத்தருணத்தை, இலங்கை அரசும் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்ட இந்தியா போன்ற தோழமை நாடுகளும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு அமைதித் தீர்வுக்கு ஆக்கபூர்வமாக முயற்சி செய்வது நல்லது.

ஆனால், தமிழகத்து அரசியல் கட்சிகள் சில, முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒன்றுகூடி, தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுபோல்
மத்திய அரசு இலங்கைப் பிரச்னையில் உட்புகுந்து செயலாற்ற முடியாது.

இலங்கை மக்களின் துயரைப் போக்குங்கள் என்று இலங்கை அரசுக்கு மற்றொரு தீர்மானம் மூலம் அறிவுறுத்துவதால் மட்டுமே பிரச்னை எவ்வாறு தீரும்? பிரச்னையின் முளையும் வேரும் விடுதலைப்
புலிகள்தான் என்னும்போது, இந்திய அரசு செய்யக் கூடியது என்ன? ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தையா நடத்த முடியும்? அது இயலாத காரியம்.

ஆனால் தமிழகத்தில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுத்துவரும் கட்சிகளும் அதன் தலைவர்கள் பலரும் புலிகள் இயக்கத்தின்
அனுதாபிகள் என்று அறியப்பட்டவர்கள். இந்தத் தலைவர்கள்
விடுதலைப் புலிகளுக்கு அறிவுறுத்தி, அவர்களை இலங்கை அரசுடன் முறையான பேச்சு வார்த்தைக்கு அழைப்பதுடன், தனி தமிழ் ஈழ
பிடிவாதத்தைக் கைவிடும்படியும் வலியுறுத்த வேண்டும். கண்ணீரில்
மிதக்கும் ஈழத் தமிழர்களின் துயர் தீர்க்க இவர்கள் தான் பாடுபட வேண்டும். மத்திய அரசும் இவர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும். பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, மேம்போக்காக தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றுவதில் ஒரு பிரயோஜனமுமில்லை.

நன்றி: கல்கி

77 Comments:

rajkumar said...

ஆயிரம் பின்னூட்டம் வரப்போகிறது இதற்கு. இந்த பிரச்சனையை நேர்மையாக அலச யாராலும் முடியாது.குறிப்பாக வலைப்பதிவுகளில்.

விழிப்பு said...

தன்னினத்தின் பாதுகாப்புக்கு போராடpனால் அது தீவிரவாதமா

அங்கு இலங்கை இராணுவம் நடத்தும் வெறியாட்டத்தை பார்த்தும் படpத்தும் விட்டு இதை எழத எப்படp உங்களுக்கு மனம் வருகிறது?

ஜோ / Joe said...

//ஒரு அரசு வேறு எப்படிச் செயல்பட முடியும்?//
அட 'சோ'மாரி! தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்த மக்களை தேவாலயத்தின் உள்ளே படுகொலை செய்வதா ஒரு அரசின் செயல்பாடு?

என்ன கொடுமையப்பா இது?

ஈழநாதன்(Eelanathan) said...

சோ தெளிவாகச் சொல்லியிருக்கிறார்

உங்கள் நண்பன் said...

//அனைவருக்கும் ஒரு சொல் : விடுதலைப் புலிகள், இந்தியாவின் எதிரிகள். இந்நினைவகற்றாதீர்!//


"சோ"அவர்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை,விடுதலைபுலிகளும் நமது சகோதர்களே-என்பது என் கருத்து.

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

இந்த ஆக்கத்தின் உரிமையாளருக்கு எழுதுவதில் எந்தப் பயனும் இல்லை! இதை செவிடன் காதில் சங்கு ஊதல் என்று சொல்ல முடியாது,
"கொடியவன் போடும் எலும்பைக் கடித்தான் - மானத்தை விற்று காலைப்பிடித்தான் - மகளையும் கொடுத்து வேலை முடித்தான்" என்ற பாடலை வேண்டுமானால் ஞாபகப்படுத்தலாம்.

//நடக்கத் தொடங்கியிருப்பது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தேடுகிற வேலையே தவிர//
ஆதரவு பிரச்சாரம் செய்பவர்களுக்கெல்லாம் புலி வீடு கட்டிக் கொடுக்கிறதா? வேலை வாங்கிக் கொடுக்கிறதா?
ஆதரவுப் பிரச்சாரம் மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவருக்கும்(துக்ளக் இற்கு இருந்தால் தானே விளங்க) வரும் உணர்வின் வெளிப்பாடே தவிர வேறெதுவாய் இருக்க முடியும்? இப்பிரச்சாரங்களால் தனிப்பட்ட இலாபம் எதுவும் இல்லை என்பதை விட, எவ்வளவோ நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என்பதை அறிந்தும் மனிதாபிமானத்திற்காய் குரல் கொடுக்கும் நல் உள்ளங்களை அற்ப சலுகைகளுக்காய் காயப்படுத்தும் துக்ளக்கை என்னவென்று சொல்வது?

Anonymous said...

துக்ளக்கில் வந்த இந்த கட்டுரையினை ஒரு அளவுக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. விடுதலைப் புலிகளின் மேல் குற்றம் உண்டு என்பதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும்தான. ஆனால் துக்ளக், சோ போன்றவர்கள் ஏன் இலங்கை அரசாங்கத்தை இப்படி, அதுவும் அவர்களது மனித உரிமைமீPறல்களை நியாயப்படுத்தி எழுதுகிறார்கள் என்பதுதான் புரியவிலை;லை. சோ கொஞ்சம் எம் நாட்டிற்கு வந்து தமிழர்கள் படும் அவலங்களைப் பார்க்கட்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம் ஐயா நாங்கள். துக்ளக் மட்டுமல்ல... அனைத்து இந்தியத் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்ன தெரியுமா.. நாங்கள் இலங்கையில் தமிழர்கள் என்ற காரணத்தினால் இரண்டாம் தரப் பிரஜையாகவே நடத்தப்படுகிறோம். இங்கு வந்து பாருங்கள் கெப்பிட்டிகொல்லாவ சிங்கள மக்கள் செத்தால் மட்டும்தான் அரசாங்கத்தினால் புலிப்பயங்கரவாதம் பெரிதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. நூட்டின் முதற் பிரஜை சனாதிபதி நேரடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்படட மக்களுக்கு ஆறுதல் கூறுகின்றார், இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்படுகின்றன.. ஏன்… அவர்கள் சிங்களவர்கள்…. அல்லைப் பிட்டி தொடக்கம்.. மன்னார் வங்காலை வரை தமிழர் மீதான அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. ஏத்தனையோ அப்பாவிப் பொதுமங்கள் வகைதொகையின்றி தொடர்ந்தும் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கெல்லாம் அரசோ.. சனாதிபதியோ.. இழப்பீடு கொஞ்சம் கூட இல்லை. பேருக்கு ஒரு விசாரணை கமிஷன்.. அரசே இப்படிச் செய்யும்போது.. நீங்கள் பயங்கரவாத என்று சொல்லும் புலிப்பயங்கரவாதிகள் பழிவாங்கத்தானே பார்ப்பார்கள் தம் மக்களின் இழப்பு அவர்களுக்கு மட்டும் இனிக்குமா?? முதலில் அரசு பாதுகாப்பளிக்கட்டும் தமிழர்களுக்கு. அதன் பிறகு பாருங்களேன்.. அதைவிட்டு.. புலிகளை குற்றம் சுமத்துகிறேன் என்று சொல்லி.. அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் இந்த சோ போன்றவர்கள்.. உங்கள் நாட்டில் மட்டுமல்ல.. எங்கள் நாட்டிலும் உள்ளனர்... இவர்கள் இருக்கும்வரை ஈழம் ஒரு நாளும் அமைதியாக இருக்காது... இவர்களுக்கும் அதுதான் வேண்டும்... ஐயா.. நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் ஐயா.. அரசால் மட்டுமல்ல.. துணைக்குழுக்களாலு;தான்... இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியப்போகின்றது... உங்களுக்கு உங்களனின் ஊடகங்கள் சொல்லும் செய்தி மட்டும்தான் தெரியும்... கொஞ்சம் நடுநிலமையோடு பாருங்கள்... எங்கள் அவல நிலையினை.. துன்ப நிலையினை... நீங்கள் புலிகள் மீது குற்றம் சுமத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மக்களுக்கு நடக்கும் பாதகங்களை மூடி மறைக்காதீர்கள் ஐயா.. ஒரு அரசே பயங்கரவாதமாக இங்கு உள்ள நிலையில்.. ஒரு பயங்கரவாத அமைப்பினை மட்டும் ஒரு பக்க சார்பாக விமர்சிப்பதுதான் மனதுக்கு உறுத்தலாக உள்ளது. அரசின் குண்டு வீச்சில் புலிகளின் முகாம் தாக்கப்பட்டதாக பக்கத்திலிருந்து பார்த்ததுபோல் சோ கதை விடுகிறார். வாருங்கள் ஐயா இன்னும் குண்டு வீச்சு எச்சங்கள் உள்ளது வந்து பாருங்கள்.. அப்போதாவது பாதிக்கப்பட்டது பொதுமக்கள்தான் புலிகள் இல்லை என்ற உண்மை உங்களுக்குப் புரியும். புரிந்தாலும் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களை மாத்த முடியுமா? புpரபாகரன் ஒரு பார்ப்பனனாக இருந்தால் அல்லது சாவது பார்ப்பனனாக இருந்தால் ஒருவேளை உங்கள் மனம் உங்கள் போன்றவர்களினதும் சோவினதும் மனம் இளகுமோ தெரியாது.

சத்தியமாக இவர்களைப் போன்றவர்களை நினைத்தால் மனது பாரமாக இருக்கின்றது...
கண்ணீருடன் ----- ஈழத்திலிருந்து.
நன்றி ஐயா.. உதவி செய்யவேண்டாம்.. உபத்திரம் ஆவது செய்யாதீர்கள்... உங்களுக்கு ஒரு கும்பிடு.

vidyasakaran said...

சோ சொல்வதைப் பொருட்படுத்தக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. இதைப் படித்து 'சோ'வே இப்படிச் சொல்லி விட்டார்', 'இந்த வாரம் துக்ளக் படிச்சீங்களா?' என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறவர்களை நினைத்தால்தான்...

கானா பிரபா said...

வணக்கம் இட்லி வடை

தமிழக தேர்தல் காலத்தில் சுடச்சுடச் செய்தி தந்து என் போன்ற வாசகரைக் கவர்ந்தீர்கள். சோவின் இந்தப் பதிவைப் போட்டு கூடவே போல்ட் ஆக வரிகளைத் தந்து என் போன்ற ஈழத்தமிழனை நோகடித்திருக்கிறீர்கள். பரபரப்புக்கு நூறு பின்னூட்டம் கிடைத்த பரமதிருப்தி உமக்குக் கிடைக்கும்.
உங்களைப் போன்றவர்களின் செய்கையால் தமிழ் நாட்டுக்கு தன் உயிரைக்காப்பாற்ற வரும் அப்பாவித்தமிழனுக்கு கிடைக்கும் உதவி கூடத் தொலைந்து போகும்.

ஐயா பெரியவர்களே

அப்பாவித் தமிழன் படும் சோகங்களைப் படம் போட்டும் காட்டியாயிற்று. இனி என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்.

Idly Vadai said...

கானா பிரபா,

//போல்ட் ஆக வரிகளைத் தந்து என் போன்ற ஈழத்தமிழனை நோகடித்திருக்கிறீர்கள்//

துக்ளகில் வந்தை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

//பரபரப்புக்கு நூறு பின்னூட்டம் கிடைத்த பரமதிருப்தி உமக்குக் கிடைக்கும்.//
பின்னூட்டத்திற்கு நான் என்றும் ஆசைப்பட்டதில்லை.

நீங்கள் இந்த தலையங்கத்திற்கு எதிராக ஒரு பதிவு அனுப்புங்கள் அதையும் இங்கே போடுகிறேன்.

அன்புடன்,
இட்லிவடை

செந்தழல் ரவி said...

///நீங்கள் இந்த தலையங்கத்திற்கு எதிராக ஒரு பதிவு அனுப்புங்கள் அதையும் இங்கே போடுகிறேன்.///

கானாபிரபா அவர்களே...இன்னும் ஏன் தயக்கம்...பதிவு ஒன்று தயார் செய்யுங்கள்..

விரைவில் இட்லி வடை அதை வெளியிட்டு இந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்வார்....

முத்து(தமிழினி) said...

இட்லிவடை,

உங்கள் கொள்கைகளை அறியாதவர்கள் உங்களை தவறாக பேசினாலும் நீங்கள் அஞ்சாதீர்கள்.

வழக்கம்போல் இடுங்கள் உங்கள் பதிவுகளை.

:)

Idly Vadai said...

முத்து - குசும்பு :-)

Anonymous said...

இட்லிவடையில் இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை. ஈவு இரக்கமில்லாமல் இப்படி எழுத எப்படி மனசு வருகிறதோ? சோ மற்றும் இட்லிவடையின் இந்த செயல் கண்டிக்கதக்கது.

Anonymous said...

So is a prahmin. Don't consider his idiot statement.Did u see any prahmin support LTTE?They won't live and also won't live others.

அருண்மொழி said...

சோவின் பார்வையில் இலங்கையில் இரண்டு இனம் உள்ளது. ஒன்று சிங்களர். அடுத்தது புலிகள். அங்கு "தமிழர்" என்று கூறப்படும் நபர்கள் இல்லை.

மனம்வருந்தும் ஈழ சகோதரர்களே, சோவை போன்று சிலர் தான் இங்கே உள்ளனர். அவர்களின் பேச்சுக்களை விட்டுத்தள்ளுங்கள்.

Anonymous said...

'சோ'வெல்லாம் ஒரு மனுஷன்னு அவனுக்கு வெளக்கம் குடுக்க ஒரு ஜால்ராக்கள் கூட்டம்! கேடுகெட்ட ஜென்மங்கள்!
இந்த 'சோ'மாரி இலங்கை அரசிடம் கப்பம் வாங்கி வயிறு வளர்க்கும் கலையில் வல்லவன் என்பது நாடறிந்த உண்மை.

செந்தழல் ரவி said...

இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்...

இன்று இட்லிவடையில் வேகாத இட்லியும் புளித்த சட்டினியும், காய்ந்துபோன ஊத்த வடையும் இருப்பதால், இன்னும் இரண்டு நாளைக்கு கடைபக்கம் வராமல் தெரித்து ஓடும்படி கேட்டுக்கொள்கிறோம்...

அப்படி தெரியாத்தனமா வந்து புடிங்கி அடித்தது என்றால் அதற்க்கு கடைமுதலாளி பொறுப்பாகமாட்டார்...

காரணம் இது ஒரு சோ(மாறி) கடையில் இருந்து இரவல் வாங்கிய மாவு ஆகும்..

ந(ர)ன்றி..

Anonymous said...

சோவை போன்றவர்கள் தயவு செய்து ஒரு முறை இதையும் பாருங்கள்.http://eelavali.blogspot.com/ இலங்கை அரசு குறிதப்பாமல் புலிகள் மீது தாக்கியிருப்பதின் ஆதாரத்தை.

Idly Vadai said...

செந்தழல் ரவி - ஊசி போன சாம்பாரை மறந்துவிட்டீர்களே !

Anonymous said...

Folks, Why blame Idli Vadai.He has just placed before you what CHO has
written.

Anonymous said...

இட்லிவடையில் இப்படி ஒரு பதிவு வராவிடால்தான் ஆச்சரியப்படவேண்டும், இட்லிவடை அதிமுக விற்கு ஆதரவாக பதிவுகள் போட்டார்.(ஆரம்பப்பதிவுகளை பார்க்கவும்) வலைபதிவினரின் ஆர்வம்பார்த்து நடுநிலைமை என்ற போர்வையை போர்த்துக்கொண்டார். உள்ளே அந்த தணல் எரிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது தமிழ் நாட்டுமக்கள் கொடுத்த தீர்ப்பு வேறு விதமாக இருந்தது. அதிமுக தோல்வியின் பின் இட்லிவடையின் பதிவுகளும் சோகத்துள் போயிற்று ஆயினும் அந்த நெருப்பு உள்ளுள் எரிந்து கொண்டிருக்கிறது, இந்த பதிவோடு இட்லிவடையின் காட்டில் மழைதான் அட சா பதிவில் நெருப்புதான். இது முடிவல்ல பொறுத்து பாருங்கள் இது போண்ற பதிவுகள் வரும், உள்ளத்தில் எரியும் அந்த நெருப்பு மட்டும் அனையாது.

ஈழபாரதி said...

அய்யா சோ ஒரு சினிமா காமடியன். செந்தில் கவுண்டமனி ரேஞ்சில் இருந்தவர். செந்தில் எவ்வளவு சிரிக்கவைத்தவர், தேர்தல் நேரத்தில் ஆதுமுகா மீதிருந்த பற்றினால் கலைஞரை எவ்வளவு இழித்து கூறினார். அதேபோன்று சோவும் எவ்வளவு சிரிக்கவைத்தார். இப்போது அவரது புலி எதிர்ப்பு காரணமாக ஈழத்துமக்களையே இழித்து கூறுகிறார். செந்திலின் பேச்சுக்கு கலைஞர் கூறிய ஒற்றை வரி "அது ஒரு பைத்தியம்", அதை நாம் மீண்டும் சொல்லிக்கொள்வோம்.

Anonymous said...

சோ சொல்லுவது உண்மை. நன்றி இட்லிவடை

யாத்திரீகன் said...

இவ ... இந்த வார சரோஜாதேவி, சொப்னசுந்தரி புத்தகத்துல என்ன வந்திருக்கும்னும் பார்த்து போடுங்க...

சோ சொன்னதை வெளியிட்டேன்னு சொல்லி தப்பிக்க நினைக்கவேண்டாம்.. அப்படி பார்த்தால், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் செயல் செய்தியில்லையா ?!

Anonymous said...

அற்புதமான பதிவு..

luckylook said...

மீண்டும் அதிமுக ஆட்சி வரும் குஜாலாக இருக்கலாம் என்று நினைத்து "சோ"ரம் போனவர்களிடம் வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும்?

செந்தழல் ரவி said...

சாம்பார் ஊசினால் கடைக்குள் யாரும் நுழையவே மாட்டார்கள்...:):)

Anonymous said...

பாவிகளே, இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தியாவைக் காட்டி இந்த படுபாதக இனப் படுகொலைகளை அங்கீகரிப்பீர்கள். ஈடு இணையற்ற இந்திய பெருநாட்டை அழிக்க புலிகள் விரும்பவில்லை, விரும்பவும் மாட்டார்கள். இது அவர்களின் தாய் மண்.இந்தியாவின் உண்மையான எதிரிகள் சோ போன்ற எலிகள் தான். இதே எலிகள் தான் சிந்து வெளி நாகரிகம் தொட்டு இந்தப் பெரு நாட்டை சாதிகளின் பெயராலும் மதத்தின் பெயராலும் தின்று கொன்டிருக்கிறார்கள். கருணையே வடிவான தேவனின் ஆலயத்தில் ஏதிலிகளாக புகுந்த அப்பாவி மக்களை கொலை செய்வதை நியாயப் படுத்துபவனை அந்த தேவன் கூட மன்னிக்கமாட்டான். தன் உயிருக்கு ஆபத்து வரும் போது ஒரு சிறு பூனை கூட எதிர்த்து போராடுகிறது. இந்தியா மட்டுமன்றி இந்த உலகமே தம் மக்களை கை விட்டபோதும் மனம் தளராமல் இன்று வரை உயிரை தன் கழுத்துக் குப்பிகளில் கட்டிக்கொண்டு போராடும் அந்த மக்களுக்கு உதவாவிட்டால் கூட பரவாயில்லை. கேவலப் படுத்தாதீர்கள். உண்மையான இந்தியர்கள் அவ்வாறு செய்யவும் மாட்டார்கள்.

Anonymous said...

Hi all,
all should think with equanimity of mind.
there is no doubt that all srilankan tamilians are my brothers and sisters and i just cry them for their latest happenings.
but i don't support prabhakaran, who has comitted number of assasinations
i hope u all understand this.
Idly vadai Keep it up !
Good job!! always tree with full of fruits will have stoning.
your posting is like that.

chandar said...

/அனைவருக்கும் ஒரு சொல் : விடுதலைப் புலிகள், இந்தியாவின் எதிரிகள். இந்நினைவகற்றாதீர்!

"சோ"அவர்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை //

சோ விடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். யார் எக்கேடு கெட்டால் என்ன தனக்கு எதுவும் ஆகாமலிருந்தால் சரி என்கிற மனப்பான்மை தான்!

Anonymous said...

CHO oru mental. Thanks Idli vadai thosai saambar.

Anonymous said...

"ஆகையால் இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டங்கள் அல்ல; விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே!"

இதில் என்ன தவறு இருக்கிறது. பின்னூட்டம் இடும் முன் ஒழுங்காக படிக்கவும்.

Anonymous said...

http://ravisrinivas.blogspot.com/2006/06/blog-post_12.html

Pot"tea" kadai said...

அடத் தூ...
//அனைவருக்கும் ஒரு சொல் : விடுதலைப் புலிகள், இந்தியாவின் எதிரிகள். இந்நினைவகற்றாதீர்!//

இது சோ எழுதியது என்றால், அந்த "டாபரின்" மேல் துப்பியதாக நினைத்துக் கொள்ளவும். இதை கொட்டை எழுத்தில் நீங்கள் குறிப்பிட்டதாக இருந்தால் அதை உங்கள் மேல் துப்பியதாக நினைத்துக் கொண்டாலும் வருத்தப்பட ஏதும் இல்லை.

தரகன் "சோ"வின் இந்த கட்டுரையை வெளியிடத் தோன்றிய உங்கள் மனதிற்கு வங்காலைப் படுகொலைகள் கண்ணில் படவில்லையோ...

வாழ்க நடுநிலைமையும் புனித பிம்பங்களும்

Anonymous said...

i am a Ex Diplomat. 67. Ex president invited mr cho to sri lanka and gave Some Amount with a Dinner in President Palace (1984).
mrs chandrika Invited Hindo Ram to Sri lanka. She gave a highest Titel of Sri lanka " Lanka Ratna" to Hindu Ram.
Ceylon Govt donated Some amount to
Dinamalar and Mr Sampanthan of Hindu grupe. some western Newsmen and Dipolmats also have lands and Houses in Sri Lanka. most of this People have Bank A/c in Sri Lanka.

Anonymous said...

Shame on you for publishing this Editorial!!

Anonymous said...

//அடத் தூ...//

வழிமொழிகிறேன்...

thanjavur said...

Yes. India must do something to stop the big war in Lanka and save the Tamils from this brutal attack.

But at the same time, India is not able to forget Rajiv Gandhi's assasination. LTTE has always eliminated anyone who is even remotely coming in their way.

In one post by Ravi Senthazil, he has mentioned that Tigers(read LTTE) think India as their motherland and they will not do anything to spoil this land. I am shocked with this. If he thinks like this even after Rajiv's assasination what can I say? Absolutely there is no justification for killing Rajiv.

The issue here is how to save Tamils from the slaughter house. As for India the blocking factor is LTTE. India is not prepared to lose another leader. This is the reason why Mr Karunanidhi and Mr Ramdoss have left the decision in hands of Central Government. Any wrong move by Indian Government, LTTE will not tolerate India.

ஜீன் said...

//அனைவருக்கும் ஒரு சொல் : விடுதலைப் புலிகள், இந்தியாவின் எதிரிகள். இந்நினைவகற்றாதீர்! //
சோ விடுதலைப் புலிகளை, ஈழத்தமிழர்களை, நம்மை இன்னும் ஏன் ஒட்டுமொத்த திராவிடர்களையே எதிரியாக தான் பார்ப்பார். அதை ஏன் நமக்கும் பிரசாரம் செய்கிறார்.
இவர்கள் பாகிஸ்தானுக்கு பஸ் விடலாம். இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் விடுதலைப் புலிகள் இந்தியாவின் நிரந்தர எதிரிகள். இட்லிவடை இதுபோல் ஒரு தலை பட்சமாக செய்திகளை படித்து, பிரசுரித்து ஏற்கனவே நொந்து போய் இருக்கும் நம் ஈழ தமிழ் சகோதரர்கள் நெஞ்சில் வேல் பாய்ச்சாதீர்கள்

செயபால் said...

இட்லி வடை!
நீங்கள் கானா பிரபாவிற்குச் சொல்கிறீர்கள், "நீங்களும் எழுதுங்கள் போடுகிறேன் என்று".
முதலில் இது போன்ற நச்சுத் தகவல்களை உங்களுக்கு மனச் சாட்சி இருந்து, ஈழத் தமிழரின் உண்மைத் துயர் புரிந்திருந்தால், நீங்கள் உங்கள் பதிவில் இட்டிருக்கக் கூடாது. இதை இட்டு விட்டு நீங்களும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்பது ஏதோ விவாத மேடை நடத்துவது போல் உள்ளது.
சோவுடன் நீங்கள் ஒத்துப் போனால் எங்களுக்கு ஒன்றும் இல்லை. உங்களை ஒன்றும் சொல்லப் போவதுமில்லை. ஆனால் நல்ல பிள்ளைக்கு நடிக்காதீர்கள். இந்த இணைய யுகத்தில், ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக எழுதுகிறார்கள். எல்லாம் உங்கள் பக்கத்தில் இடுகிறீர்களா? இல்லையே.

பாலாஜி said...

இட்லி வடை,
திரு.சோ அவர்களின் கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா???
உங்களுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்தினால் பின்னூட்டமிடுபவர்களுக்கு வசதியாக இருக்கும்.
நீங்கள் ஜுனியர் விகடன் படிப்பதில்லையா??? முடிந்தால் அதையும் வெளியிடவும்.

-பாலாஜி

மனதின் ஓசை said...

idlyvadai,
இங்க பாருங்க..

http://manathinoosai.blogspot.com/2006/06/6.html

வந்து ஒரு சிக்சர் அடிங்க..

Anonymous said...

அனைவருக்கும் ஒரு சொல் : சோ & Co., தமிழரின் எதிரிகள். இந்நினைவகற்றாதீர்!

Anonymous said...

cho should be very careful what he says. more so, because he would have to reflect that his opinions would be reflected on the parpanar community, especially when it comes to be unfavourably disposed. cho is not one with the right political acumen. he has backed the losers in several of the elections. the impact of his high handed pronounciations has been borne by the poorer and weaker sections of the parpanars. it is time that he comes down from his pedestal, and makes an attempt to understand the pulse of the common people of tamil nadu. not the elites of chennai city, though to his credit, i would say that admirers, though elitist, come from all backgrounds. he is not a reactionary casteist, but more a 'not so smart' political commentator.

PisaasWithPizazz said...

Viduthalai puligal != Ilangai tamizhar.

I hate viduthalai puligal != I condone srilankan govt.

Idly Vadai said...

மனதின் ஓசை - அழைப்பிறகு நன்றி

Idly Vadai said...

துப்பியவர்களுக்கு நன்றி.

Update சு.ப.தமிழ்ச்செல்வன் பேட்டி

வீரப்பன் said...

இங்கே அனானியாக வந்து விடுதலைப் புலிகளை எதிர்க்கும் பாப்பான்கள் பெயர் போட்டு எழுத வேண்டியது தானே?

Anonymous said...

இந்த சோ இந்த லொட்டைத் தலையங்கம் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை தமிழ்நாட்டுப் பின்னணியில்தான் பார்க்கவேண்டும்.

//விடுதலைப் புலிகள் தமிழகத்தில் இடம் தேட முயற்சிப்பதை கடுமையாகத் தடுத்த ஜெயலலிதா அரசு வீழ்ந்தது;//

ஜெயலலிதா அரசு கவிழ்ந்ததென்று 'சோ'க கீதம் பாட ஒரு சாக்கு வேண்டும், இப்போது போடு பழியைத் தூக்கி விடுதலைப்புலிகள் மேலே.

//ஜெயலலிதாவிற்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது; அ.தி.மு.க.வின் நண்பர்களாக, தன்னுடன் கைகோர்த்து நின்ற வைகோவும், திருமாவளவனும், மற்றொரு கைகொண்டு விடுதலைப் புலிகளுடன் கைகோர்த்து நிற்க முனைந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து – ஒன்று அவர்கள் சகவாசத்தை உதற வேண்டும்;//

தேர்தல்லயே தோத்தாச்சு, இனி வைகோவாவது திருமாவளவனாவது - ரெண்டு பேரையும் கழட்டி உடுறதுக்கு ஒரு வழி வேணுமே - பழியைத் தூக்கிப் போடு விடுதலைப்புலிகள் மேலே. தேர்தல்ல கூட்டணி வச்சுக்கிட்டப்போ வைகோவும் திருமாவளவனும் விடுதலைப்புலிகளை ஆதரிச்சாங்கன்னெல்லாம் கேக்கப்படாது. பொடாவுல வைகோவைத் தூக்கி உள்ளே போட்டதையெல்லாம் மறந்துரணும். ஆக, ஜெயாக்காவுக்கு எது சௌகரியமோ அது எல்லாம் சோவுக்கும் சரிதான். அப்பப்ப கண்டிக்கறது மாதிரி லேசா தட்டிட்டா போச்சு.

//தி.மு.க. அரசு இதை அலட்சியப்படுத்தக் கூடாது. வன்முறையை ஆதரிக்கிறவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.//

ஆட்சிக் கலைப்பு ஆப்பு இங்கே இரண்டு பக்கமும் கூர். நடவடிக்கை எடுக்காட்டி, கழட்டி விட்டப்புறம் 'சட்டம் ஒழுங்கு குலைஞ்சு போச்சு, வைகோ, திருமாவைக் கைது பண்ணலை'ன்னு கூப்பாடு போடலாம். இல்லை, கைது பண்ணவைச்சுட்டு, கைதின்மூலமா கருணாநிதியையும் வைகோ, திருமாவையும் ஒரேயடியா பிரிச்சிட்டு (இதுக்குள்ள மூணு வருசம் முடிஞ்சிராதா - அடுத்து எலக்சனுக்கு ரெண்டு வருசம் தானே?), அப்பக் கைது பண்ணினா 'அரசியல் எதிரிகளை ஜெயிலில் தூக்கிப் போடும் கருணாநிதி'யின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குலைந்ததுன்னு ஒரு கஜகர்ணம் அடிக்கலாம்.

உலகத்தில் அணுகுண்டு விழுந்து மனிதகுலமே அழிந்தாலும் கரப்பான்பூச்சிகள் சாகாது என்பார்கள் - சோ மாதிரி ஆசாமிகள் அந்த வர்க்கம்; சந்திலும் சாக்கடையிலும் என்றாலும் தங்கள் இருப்பும் பிழைப்புமே முக்கியம் அவர்களுக்கு. இதிலே இலங்கையில், ஈழத்தில் எவன் செத்தால் அவருக்கென்ன?

Sivabalan said...

IDLY VADAI,

Football Cartoon Super!!

Thanks

G.Ragavan said...

சோவின் கருத்து மிகவும் அசிங்கமானது என்பது என் கருத்து.

சிங்கள அரசு அப்பாவித் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடும் அட்டூழியங்கள் புலியெதிர்ப்புப் போராட்டமாகத் தெரிகிறது இவருக்கு. வங்காலைப் படுகொலை பற்றித் தெரியவில்லை போல இருக்கிறது. மூன்று வயது சிறுவனுஞ் சிறுமியும் வயிறு கிழிந்து மாண்டது தீவிரவாதக் களையெடுப்பா? வன்புணரப்பட்டே ஒரு பெண் சாவதும் அப்படியோ! அடப்பாவி மனுசா...உமக்கு அவர்கள் செய்தது என்ன?

சேனை கட்டிய குதிரை போலவா பார்ப்பது? விடுதலைப் புலிகள் என்றதும் ஓடி வருகின்ற சோ அவர்களே...இனமானப் படுகொலைகளைப் பற்றி உமது புத்தகத்தில் ஏதாவது எழுதியிருக்கிறீரா? அவர்களுக்கு நல்ல வாழ்வு அமைவதற்கு யோசனை ஏதேனும் இருக்கிறதா?

அடப் போங்கய்யா....நீங்களும் ஒங்க இதுவும்...கொஞ்சம் ஒங்க ஒடம்புல கீறிப் பாருங்க...வலிக்கும்...ஒடம்பு முழுக்கக் கீறுனா...புளியேப்பத்துக்கு என்ன தெரியும் பசியேப்பம்!

மனோகர் said...

சோ மாதிரி ஆசாமிளுக்கு ஈழ மக்கள் பிரச்சனை பற்றி உண்மையான அக்கறை கிடையாது..எல்லாவற்றையும் காமெடி பண்ணுகிறவர்..இட்லி வடையும் அப்பிடிதான்..இவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன.எல்லாம் விஷ சாம்பார்...

Anonymous said...

'சோ' ஒரு கீழ்பாக்க கேசுன்னு எல்லோருக்கும் தெரியுமே! அவனுக்கு 'அவாள்' நலன் தானே முக்கியம். பொழப்புக்கு சிங்களவனுக்கு அவன் குடை புடிக்கிறான். சும்மா சொல்லக்கூடாது, சிலோன் அரசாங்கம் இந்த மாதிரி சோரம் போன கேசுகளையெல்லாம் பொறுக்கியெடுத்து நன்னா கவனிப்பதால் அவங்களுக்கு மனிதாபமானம் என்ற உணர்வே மரத்து போச்சு போல.

Idly Vadai said...

Update - கல்கி தலையங்கம்

கொண்டோடி said...

டோண்டுவை வைத்து நான் இட்ட பின்னூட்டத்தை மட்டுறுத்தலில் நிறுத்திவிட்டீர்களா?

Prince said...

இலங்கை அரசு எதற்காக தன் சொந்த மக்கள் பிரயாணம் செய்த
பஸ்சின் மீதே ஆழ ஊடுருவும் தாக்குதல் தொடுத்து பழியை புலிகள்
மீது போட்டதோ, அந்த காரணம் நிறைவேறியிருப்பதை கல்கியின்
தலையங்கம் காட்டுகிறது.

எல்லாத்தையும் போடுறீங்களே, முடிஞ்சா இதையும் போடுங்க.
கல்கியின் அபத்தக் குற்றச்சாட்டுக்குப் பதில்:
http://www.tamilnaatham.com/articles/2006_JUN/special/poobalan20060624.htm

Idly Vadai said...

கொண்டோடி - எனக்கு உங்களிடமிருந்து எந்த பின்னூட்டமும் வரவில்லை. திரும்பவும் போடவும்.

CAPital said...

ஒரு நாடாக தன்னை நாடி வரும் அகதிகளுக்கு மனிதாபிமான முறையில் தமிழ் நாடு/ இந்தியா உதவிகள் செய்திருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.

ஆனால், ஒரு தமிழ் அரசாங்கம் என்னும் முறையில் இன்னொரு தமிழனுக்கு துன்பம், நிகழ்கிறதே அதற்காக மேலதிகமாக எதாவது செய்ததுண்டா?

மனிதாபிமான முறையில், உலகிலுள்ள அனேகமான நாடுகள் ஈழத்தமிழனுக்கு உதவி செய்திருக்கிறார்கள். தமிழ் நாடு செய்ததற்கு குறைவில்லாமல் எல்லா ஐரோப்பிய நாடுகளும் செய்திருக்கின்றன. ஏன் கனடாவில் நாட்டின் பிரஜா உரிமை கூட கொடுக்கிறார்கள். அரசியலில் கூட பல தமிழர்கள் இப்போது துளிர்களாய் கால் எடுத்து வைக்கிறார்கள். நம்மவர்கள் பலர் வியாபாரத்தில் முன்னேறியிருக்கிறார்கள். பல்கலைக் கழக பேராசிரியராய் இருக்கிறார்கள். இங்கு மாத்திரம் அல்ல. உலகில் எங்கெல்லாம் ஈழத்தமிழன் அகதியாய் சென்றானோ, அங்கெல்லம் அவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரையில், உலகிலுள்ள ஏனைய நாடுகளை விட [இந்தியா உட்பட] Norway இக்கு ஈழத்தமிழன் எவ்வளவோ நன்றிக்கடன் உள்ளவனாக இருக்க வேண்டும். அகதிகளுக்கும் இடம் கொடுத்து, எங்களுக்கு நேர்மையாகவும் மத்தியச்தம் செய்கிறார்கள்.

ஈழத்தமிழன் அரச பாடசாலையில் பயில இயலாது என்னும் சட்டம் தமிழ் நாட்டில் இருந்ததாம். இப்பவும் இருக்கிறதோ தெரியவில்லை. அகதிகள் அகதி முகாம்களில் அடைக்கப்ப்டுகிறார்கள். வெழியேறினால், புலி தப்பி ஓட்டம் என்னும் செய்திகள். என்னையா தமிழனுக்கு தமிழ் அரசாங்கம் செய்யும் மிகப் பெரிய உதவிகள் இவைதாமோ?

தமிழனுக்கு என்று ஏதும் சலுகையோ அல்லது மேலதிக உதவிகளோ தமிழ் நாட்டு அரசாங்கத்தால் புலிகளுகு வழங்கப்படவில்லை [except MGR]. அன்று குட்டிமணி தொடக்கம் இன்று கிட்டு வரை இந்திய அரசாங்கத்தாலேயே இறந்தார்கள். போதாததற்கு, தழிழீழத்திலும் வந்து, கொன்று குவித்தார்கள். அந்தக் காலத்தில் சிங்களப் படை பெண்களை பலவந்தம் செய்தது கிடையாது (அ) அரிது. இந்திய இராணுவம் வந்த பின்பே பெண்களும் பயப்பட ஆரம்பித்தார்கள். ஒரு சந்தியில் புலி குண்டு வைத்து வெடித்தால், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டிலுள்ளவர்களுக்கு சணல் பறந்த அடி. அதில் வயது வித்தியாசம் இல்லை. இந்தியனை விட சிங்களவனே மேல் என்று சொன்ன நாட்களும் உண்டு. இந்திய இராணுவத்திடமிருந்து கற்றதைத் தான் இப்போ சிங்கள இராணுவம் செய்து வருகிறது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டவுடன், பல ஈழத்தமிழர்கள் வெட்டிக் கொலைசெய்யப் பட்டார்கள் தமிழ் நாட்டிலே. இது ராஜீவ் கொலை புலிகள் தான் செய்தார்கள் என்று அரசாங்கம் அறிவிக்க முன்னம்.

தமிழ் அரசு, அயல் நாடு, தாய் நாடு, என்ன பயன். தமிழனுக்கு ஆதரவாய் அரசாங்க சார்பாக ஒரு குரல் கொடுத்துதா? ஒரு சில அரசியல்வாதிகள் செய்தார்கள், ஆனால் அவர்களையும் சிறை வைத்தது தமிழ் நாட்டு அரசு. ஏன் இப்போது கூட மத்திய அரசின் முடிவு தான் என் முடிவு என அறிவித்திருக்கிறார்கள். நாதியற்ற தமிழர் நாம்.

என்னதான் இருந்தாலும், ஒரு தமிழனாய் தன் இனம் படும் துன்பத்திற்கு உதவி செய்யவில்லை தமிழ் நாட்டு அரசு. மற்றய நாடுகள் போல் மனிதாபிமான அடிப்படையில் தான் உதவி செய்தது.

நாதியற்ற தமிழர் நாம்:
http://www.thinakkural.com/news/2006/6/9/articles_page4059.htm

______
CAPital
http://1paarvai.wordpress.com/tag/tamil-elam-war/

CAPital said...

உங்கள் யாரையும் குறை கூறுவதோ. புண்படுத்துவதோ என் நோக்கம் இல்லை அதைநீங்களும் அறிவீர்கள்.

என் தேசம் அங்கு இரத்ததில் குளிக்கும் போது என் இதயத்துடிப்புத்தான் இங்கு எழுத்துக்களாய் ஒலிக்கின்றது..

ஆனால், இந்திய ராணுவத்தினருடனான மனக் கசப்புகள் யாவும் அனுபவபூர்வமானவையே.

இந்திய இராணுவம் சமாதானப் படையாக இருந்த பொழுது, இந்திய பொருட்கள் தமிழீழத்தில் அதிகமாக கிடைத்தன. அதில் ஒன்று நெருப்பெட்டி [தீப்பெட்டி]. நெருப்பெட்டியில், ஒரு பக்கத்தில் படம் இருப்பது வழமை. இந்திய நெருப்பெட்டியில் இருந்த படம், ஒரு புலி பாய்கிறது, எதிரே நெற்பயிர்கள் அறுவடை செய்யும் அரிவாள். இந்தியா சும்மா வரவில்லை, கபட நோக்கத்தில் தான் வந்துள்ளது என்று எங்களுக்கு அப்பவே தெரியும்.

இந்திய-இலங்கை ஒபந்தம் யாருக்கு நன்மை? இந்தியா சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழரை அழிக்க ஒரு ஒப்பந்தம். புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். லொறி லொறியாக ஆயுதங்கள் ஒப்படைக்கப் பட்டன. அதைப் பார்த்து நாங்களே யோசித்திருக்கிறோம், இனி புலிகளால் தலை எடுக்க இயலாது என்று. என்ன புலிகள் முட்டாள்களாக இவ்வளவு ஆயுதங்களையும் ஒப்படைக்கிறார்களே என்று. ஆனால், MGR ஆயுதங்களை கொடுத்தார், களவாக, இந்திய அரசாங்கம் அல்ல.

நான் ஆறாம் ஆண்டு படிக்கும்பொழுது, எனது சக மாணவனின் குடும்பத்தை சணல் பறந்த அடி. அவர்கள் வீட்டிற்கு அருகாமையில், குண்டு வெடித்தது காரணம். ஆறாம் ஆண்டு படிக்கும் எனது நண்பன் உயரத்தில் சற்று குள்ளமானவன், மற்றய மாணவர்களை விட. அவனையே அடித்தார்கள். நாங்கள் அவர்கள் வீட்டிற்கு சிறிது நேரம் கழித்து சென்றபோது, உடம்பில் இரத்தக் காயங்களுடன் தான் அவர்கள் இருந்தார்கள். அவனின் தந்தையை மரத்தில் சாத்தி தான் அடியாம். அடுத்த நாளே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். அந்தக் காலத்தில் சிறுவர்களோ, பெண்களோ, வயோதிபர்களோ இயக்கத்தில் இருந்தது கிடையாது. இந்திய இராணுவம் தான் பாகுபாடின்றி எல்லோருக்கும் பயத்தை உண்டுபண்ணியது.

உங்களுக்கே தெரியுமோ தெரியாது, இந்திய இராணுவத்தில் "para troops" என்று ஒரு பிரிவு உள்ளது. அவர்கள் சற்று குள்ளமாகவே இருப்பார்கள். அதற்கு காரணம் எனக்குத் தெரியாது. இவர்களிடம் ஒரு வாள் இருக்கும்; கறுப்பு உடை அணிவார்கள். இந்திய இராணுவத்திலேயே இவர்கள் தான் மோசமானவர்கள். அப்போ இலங்கை இராணுவம் ஒரு வீட்டிற்கு அதன் முன்வழியாலேயே வருவார்கள். இந்திய இரணுவம் அப்படி இல்லை. வேலியைப் பிய்த்துக் கொண்டு வருவார்கள். திடீர் திடீர் என்று வருவார்கள். இதனாலேயே, பெண்கள் குளிக்கப் பயப்பட்டார்கள்.

தனியாக இருந்த பெண்களிடம் தப்பாக நடந்தது. ஏன் என் தாயார் தனியாக இருக்கும் பொழுது கூட ஒரு இந்திய இரணுவம் வீட்டிற்கு உள் நுளைய முற்பட, அம்மா பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கே வந்த அவன், அம்மாவை எங்கள் வீட்டிற்கு செல்லும்படி சொன்னான். எங்கள் அம்மா ஒரு பைத்தியம் போல் நடிக்க, அந்த வீட்டுக்காரர்கள், எங்கள் அம்மாவிற்கு சற்று மூளை குழப்பம் என்று சொல்லி விட்டதால் அவன் திரும்பி சென்றுவிட்டான்.

ராஜீவ் காந்தியை கொன்றதை ஞாயப்படுத்த எத்தணிக்கவில்லை. ஆனால், இந்தியா மீது தமிழீழதில் கடுமையான கோபமே இருந்தது. இந்தியா ஒருகையால் புலிகளை அழித்து மறு கையால் தமிழரை அரவணைக்கிறோம் என்று காட்ட முற்பட்டது. புலிகள் என்ன பாலஸ்தீனத்தில் நடப்பது போல், பொது மக்களுக்கா குண்டை வைத்தது. சந்தையிலும், வீதிகளிலும், சமைய தலங்களுக்கும் முன்பா குண்டை வைத்தது? இந்திய இராணுவம் தமிழீழத்திற்கு வந்து இவ்வளவு அட்டூழியங்களும், கொலைகளும் செய்ய காரணமாக இருந்தாரோ, அவருக்கே குண்டு வைத்தது.

எங்கள் நாட்டிற்கு படை அனுப்பி, பலரைக் கொன்று, பல சித்திரவதைகள், வயது வித்தியாசம் இல்லாமல் அடிகள், கற்பழிப்புகள் எல்லாம் செய்த இந்தியாவின் மீது எவ்வளவு கோபம் இருக்கும்?

இதில் என்ன கவலை என்றால் தமிழ் நாடு அரசு சார்பாக ஈழத்தமிழருக்கு ஆட்சேபனையோ, அல்லது ஆதரவாகவோ குரல் கொடுக்காதது தான். அப்படிக் குரல் கொடுத்த சிலரும் சிறையுள் தள்ளப்பட்டார்கள்.
______
CAPital
http://1paarvai.wordpress.com/tag/tamil-elam-war/

thanjavur said...

Hello CAPital,

Please do not justify the assasination of Mr Rajiv Gandhi. You can give any reasons, but there is no justification to such brutality.

That is the prime reason why Tamilnadu is keeping quiet. How can you expect help from Tamilnadu's leaders? You justify assasinations and suicide bombers!!!

Tamilnadu leaders think in terms of India now and they are not prepared to lose anyone to acts of killing.

Now you say lot about tamil and tamilnadu connection. Where was these feelings when LTTE intruded into Tamilnadu and made the shameful act of sucide bombing of our youthful leader and that too in TamilNadu?

I am sorry I cannot digest your justification of Rajiv Gandhi's assasination.

Myself and Most of my friends have supported tamil eelam cause in 1980's. But after May 21,1991 we just do not want to do anything.

IdlyVadai, I would have expected you to strongly reply to such postings by CAPital.

Thanks

Prabu Raja said...

இட்லி வடைக்கு வந்த சோதனை- சோ பதிவு.

தேர்தல் நேரத்தில் சன் டிவி/ ஜெயா டிவி பார்த்தா அப்டேட் கொடுத்தீர்கள்?
இல்லை அல்லவா? நடுநிலை தொலைக்காட்சி எது என அறிந்து அப்டேட் செய்தீர்கள்.

இதிலும் இனி நீங்கள் அப்படி செய்யலாமே?

நாங்களும் இட்லிவடை மூலம் தெரிந்து கொள்வோம்.

பதிவுலக மீடியாவில் முக்கிய திருப்பமாகவும் இருக்கும். நடுநிலையை நிரூபித்தது போலவும் ஆகும்.

Prabu Raja said...

//நாதியற்ற தமிழர் நாம்//

தயவுசெய்து அப்படி சொல்லாதீர்கள்.

இந்திய அரசியல் போகும் போக்கு பற்றி நீங்கள் வலை பதிவுகளிலேயே தெரிந்துகொள்ளலாம்.

மிகுந்த மன வருத்ததோடுதான் உள்ளார்கள் எம் தமிழர். அதுவே உண்மை.

CAPital said...

Who is responsible for the India-Sri Lanka agreement to kill Tamils of Tamil Elam?

Who is responsible to send military to kill Tamils?

Who is responsible for all the Indian army brutals and rapes in our land?

Who is responsible to kill hundreds of LTTE?

Who is responsible for Kumarappaa, Puleenthiran & other's suicide in the jail?

Mr. Rajiv Gandhi

WE ARE NOT ANOTHER PUNJAB. WE ARE TIGERS!

புலி பதுங்குவது, பயந்தல்ல; பாய்வதற்காகவே.

_____
CAPital
http://1paarvai.wordpress.com/tag/tamil-elam-war/

ஒரு ஜாதிக்கு ஒரு கட்சி இருக்கிற தேசத்தில், தமிழனுக்கென்று ஒரு கட்சி இருக்கவில்லையே ஐயா.

Anonymous said...

படத்தில் தன் அக்கா, தங்கை தாய் என்பவர்களை பலவீனப்படுத்தும், பலாத்காரப்படுத்தும் கூட்டத்தையும் அழித்து தலைவனையும் அழித்தால் கைதட்டி விசிலடிக்கின்றோம்....

நாம் எல்லாம் என்ன மனுஷங்க அதையே நிஜத்தில் செய்தா ஏத்துக்க மறுக்கிறோம்?!!...

'தமிழன் வேறு புலிகள் வேறல்ல!....

புரியாதவனுக்கு எல்லாம்சொல்லி நம்மை நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை....

Karaivasan said...

Who is responsible for the India-Sri Lanka agreement to kill Tamils of Tamil Elam?

Who is responsible to send military to kill Tamils?

Who is responsible for all the Indian army brutals and rapes in our land?

Who is responsible to kill hundreds of LTTE?

Who is responsible for Kumarappaa, Puleenthiran & other's suicide in the jail?

Mr. Rajiv Gandhi

WE ARE NOT ANOTHER PUNJAB. WE ARE TIGERS!

புலி பதுங்குவது, பயந்தல்ல; பாய்வதற்காகவே.
I completely accept the above statement.Rajiv Gandhi deserve that

இலவசக்கொத்தனார் said...

இட்லிவடையாரே,

உங்களையும் ஆறு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன். எனது ஆறு பதிவு இங்கே.

மனிதன் said...

காரைவாசன்...புலேந்திரன்,குமரப்பா செத்ததற்க்கும் ராஜீவ் தான் காரணமா? வரலாற்றை ஒழுங்காக படிக்கவும்.அதன் பிறகு இந்தியாவுக்கு சவால் விடலாம்.

Anonymous said...

ஆயுதத்த ஒப்படைக்கிறேன்னு ஒத்துக்கிட்டு ஏமாத்துனது யாரு.

இல்ல நாங்க ஒப்படைச்சிட்டோம்னா ஆயுதம் எப்படி வந்துச்சு.

ஆயுதத்த ஒப்படைச்சிட்டா பின்னாடி பாதுகாப்பு இல்லையினா ஏன் அதுக்கு ஒத்துக்கணும்.

ராஜிவ கொன்னதால நீங்க சாதிச்சது என்ன

ராஜிவ கொல்லறதுக்கு முன்ன இந்தியால தமிழ்நாட்டத் தவிர வெளிய இருந்த தமிழர்கள நினைச்சுப் பாத்தீங்களா?

இந்தியா உங்க எதிரின்னா இப்ப ஏன் இந்திய உதவிய எதிர்பாக்கறீங்க. அந்த நளினி குழந்தக்கூட இந்தியாலதான் படிப்பேன்னு அடம் பிடிக்குதாமே?

யாராலும் உங்கள கிழிக்கமுடியாதுன்னா தடை,தடைன்னு ஏன் அழுவுறீங்க.

Anonymous said...

Amaidhi ......

Mayooresan said...

ஈழத் தமிழர்கள் கேட்பதெல்லாம தம்மைத்தாமே ஆட்சி செய்ய ஒரு ஆட்சி அலகு. அதை தர சிங்கள அரசு தயாராகா விட்டால் தனிநாடு கோருவதைவிட என்ன வழி?
பார்பநீயப் பத்திரிகைகளை குறிப்பாக துக்ளக் போன்ற பத்திரிகைகளை திராவிடர்கள் புறக்கணிக்கவேண்டும்.

Anonymous said...

There is already a reply to this post in unarvukal.com:

தமிழெதிரிப் பார்ப்பனப் பத்திரிகைகள் தங்களின் வேலையை தொடங்கி விட்டார்கள். மகிந்த ராஜபக்ச பதவியேற்றதிலிருந்து ஓவ்வொரு நாளும், தமிழர்கள் கொல்லப் பட்டார்கள். தமிழ்க்குழந்தைகள் குடும்பத்தோடு அழிக்கப் பட்டார்கள்,ஆனால் சோ ராமசாமி கண்டு கொள்ளவேயில்லை.

Read more at this link:
http://www.unarvukal.com/ipb/index.php?act=ST&f=43&t=1798&st=0&#entry11113

செல்வமணி said...

80-களில் ஈழபோரளிகளுக்கு எவ்வளவு ஆறுதல் அளித்து உதவினோம்.ஆனால் நம் உணர்வையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டுதானே ராஜீவ் கொலையை செய்தார்கள்.அந்த'துன்பியல் சம்பவம்' ஒரு ராஜதந்திரமாம்...என்ன எழவு தந்திரமோ...அதற்கு பிறகு அங்கு அமைதி திரும்பிவிட்டதா? கேட்டுப் பாருங்கள்,,,வாய் கிழிய பேசுவார்கள்.தமிழீழம் என்றாலும் சரி ஒருங்கிணைந்த இலங்கை என்றாலும் சரி..ஒரு முடிவுக்கு வந்து அந்த அல்லல் படும் தமிழர்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கையை தரவேண்டிய தருணம் இது.

Anonymous said...

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5115308.stm

LTTE - a tolerant bunch!

Anonymous said...

தமிழர்கள் கேட்பதெல்லாம் மானத்தோடு சுயநிர்ணயத்துடன் தங்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ வழி. அதற்கு தடைக்கல் போடும் அந்நிய சுயநலக் கும்பல்களை தமிழர்கள் என்ற பெயரில் தரம் தாழ்ந்து உண்மையை மறைத்து எழுதுவது வெட்கக்கேடு.

CAPital said...

புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள்.

இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை. இந்தியாவை எதிர்த்ததிலிருந்தே தெரியவில்லையா, புலி இந்தியாவை நம்பி உயிர் வாழவில்லை என்பது.

இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள் இன்னும் 13 மைல்கள் தான் இருக்கிறது; இன்னும் 11 மைல்கள் தான் இருக்கிறது என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்க, தலைவர் மாவீரர் நாள் என நவம்பர் 27ம் திகதியை அறிவிக்கிறார். சுவர்களில் சுவரொட்டிகள். சற்றே சிந்தித்துப் பாருங்கள், எவ்வளவு இக்கட்டான நிலமை. சில நாட்களோ (அ) சில மணி நேரமோ என்று இருக்கையில், இப்படிச் சிந்திக்க முடியுமா? இந்தியா சொன்னது, பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். அது தான் நவம்பர் 27. மக்களுமே இதை நம்பினார்கள். சில மைல்கள் தான் இருக்கு என்று இருக்கையில், இப்படி ஒரு மாவீரர் நாள் என அறிவிக்க தலைவர் இறந்து விட்டார் என எண்ணவே தோன்றும். தலைவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லும்போது கூறுவார்கள், அவர் ஒரு தொலை நோக்குப் பார்வை உடையவர் என்று.

இந்தியா இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்த பின் மீண்டும் எப்படி ஆயுதம் வந்தது என்பதை தலைவரின் வரலாற்று VCD ஐ வாங்கி பார்க்கவும். அதில் தலைவரே சொல்கிறார் MGற் தான் ஆயுதம் தந்தார் என்பதை.

கிட்டு கூட இந்திய கடற்பரப்பில் பயணம் செய்யும்போது இந்தியா மடக்கவில்லை. சர்வதேச கடற்பரப்பில் வைத்தே இந்தியா கிட்டுவை பிடிக்க முற்பட, தமிழீழத்திற்காய் உயிர் துறந்தார். இந்தியா தனது எல்லையையும் மீறியே புலியை எதிர்த்தது.

இந்தியாவின் ஒரு துளி உதவி கூட இல்லாமல் தான் புலி இப்போது மிகப் பெரும் இயக்கமாக, அரசாங்கமாக உருவெடுத்திருக்கிறது [உதவி என்ன எதிரியாவே இருந்தும்]. கடற்படை, விமானம், நீர்மூழ்கிக் கப்பல் [உள்ளூர் தயாரிப்புகள்] எல்லாம் இருக்கு. புலிகளிடம் என்னம் அணு குண்டு தான் இல்லை. அனேகமாக அதையும் பாகிஸ்தானிடம் இருந்து வேண்டியும் இருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அன்று றாஜீவ் காந்திக்கு குடுத்த அடியால் தான் இன்று இந்திய இராணுவம் இலங்கைக்கு வரப் பயப்படுது.

அன்று தலைவர் எடுத்த முடிவு சரி என இன்று வரலாறு சாட்சி சொல்கிறது. அதே போல், எப்போதும் எமது தலைவர் எடுக்கும் முடிவு ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சரியான முடிவாகவே இருக்கும். ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய தொலை நோக்குச் சிந்தனை நமது தலைவரிடம் நிறையவே இருக்கு. அதனால், தற்சமயம் பிழை என எண்ணத் தோன்றும் முடிவுகளும், நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், அது சரி என வரும்.

அன்று இந்தியாவை எதிர்த்து புலி பூண்டோடு அழிந்திருந்தால், தமிழீழத்தில் இந்தியா குடிகொண்டிருந்திருக்கும். அன்று தலைவர் தன் உயிருக்காக கொள்கையை கைவிடவில்லை. இன்று இந்தியாவில், தேர்தல் சீட்டுக்காக கட்சி மாறுகிறார்கள். இது தான்யா இந்திய அரசியல் வாதிக்கும் தமீழத் தலைவருக்கும் உள்ள வித்தியாசம்.

சும்மா போராளிகளை மட்டும் வளர்க்கவில்லை எமது தலைவர். ஒரு நாட்டுக்கு தேவையான சகலதையும் வளர்த்திருக்கிறார். கலை, பண்பாடு, சுயதொழில் என்று சகலதும். திறமையானவர்கள் போராளியாக சேர விரும்பினாலும், தலைவர் அவர்களின் திறமைக்கேற்ப வேறு துறைகளிலோ [அரசியல், மக்கள் தொடர்பாளர், பேச்சாளர்] (அ) மேற்படிப்போ செய்ய திட்டங்களை அமுல்படித்தியிருக்கிறார். அறிவாளிகளை, புலி தனது செலவில் வெளிநாடு சென்று படிக்க முழுப் பண உதவியும் குடுக்கிறார்கள்.

இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பதற்காக, எல்லோரையும் புலி சேர்க்கவில்லை. ஒரே குடும்பத்தில், மூத்த தமையன் புலிக்கு சேர்ந்து, இரண்டாவது தமையனும் சேர்ந்து, பின் இளைய தங்கையும் புலிக்கு சேர, புலி இளைய தங்கையை ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டது. ஒரே குடும்பத்தில், எல்லோரும் புலிக்கு சேர்ந்தால் அந்தக் குடும்பம் மீண்டும் தழைக்காமல் போய்விடக்கூடும் என்றும் சிந்திக்கவும் செய்கிறது. இப்படி பல நிகழ்வுகள்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. இந்தியா மிக முக்கியமாக இருந்தாலும், எம்மை எதிர்த்தால், அது எவராக இருந்தாலும், பாய்வோம். அமெரிக்கா வியற்நாமில் தோற்றது போல், இந்தியா தமிழீழத்தில் தோற்றது.

ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் புலிகளுக்கு உதவி இருப்பான். நீ புலியா (அ) தமிழனா என்று கேட்பதற்கே அங்கு இடமில்லை. புலி என்றால் தமிழன், தமிழன் என்றால் புலி என்று வரலாறாகிவிட்டது. இனி இதை அகராதியில் ஏற்றுவது தான் மிச்சம்.

இந்தியத் தமிழர்களை தமிழர்களாகவே எண்ணவே தோன்றவில்லை ஐயா. இந்திய அரசாங்கம் தமிழர்களை கொன்றொழிக்க அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் தானே. அவர்களும் இந்தியர்களே; தமிழர்கள் அல்ல.

_______
CAPital
http://1paarvai.wordpress.com/tag/tamil-elam-war/

செல்வமணி said...

capital சொல்வதை பார்த்தீர்களா?இந்தியத் தமிழர்களை தமிழர்களாகவே எண்ணவே தோன்றவில்லையாம்..இதை தீர்மானிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? இந்த மாதிரி மாதிரி வாய் கொலுத்த அசாமிகள் சற்று வாயை மூடிக் கொண்டு இருந்தால் இந்த பிரச்சனை மேலும் சிக்கலாகமல் இருக்கும். இவரை விடுங்கள்...ஈழத் தமிழர்கள் நம் சகோதர்கள்..அவர்களின் அமைதியான வாழ்க்கை திரும்பிட நாம் அனைவரும் உதவிட வேண்டும்.