பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 20, 2006

தனித்து போட்டி - இளங்கோவன்

மத்தியில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இந்த கருத்தை சோனியாகாந்தியிடம் முறையிட்டு அவர் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 80 சதவீதம் இடங்களில் வெற்றி பெற்று வலுவான கட்சி என்பதை நிரூபிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பது நம்முடைய இயக்கத்தின் கொள்கை. அதில் நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கை என்றாவது ஒரு நாள் நிறைவேறும். இதற்காக இளைஞர்கள் போராட வேண்டும். இன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்களின் கையில் தான்காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி உள்ளது.

கட்சியில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கட்சியின் வளர்ச்சிக்கு இது தடையாக இருக்க கூடாது. - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இன்றைய தங்கம் விலை : 1 பவுன் (8 கிராம்) 6,440.00
இன்றைய வானிலை : வெயில் வாட்டி எடுக்கும்;

4 Comments:

G.Ragavan said...

என்னது? காங்கிரஸ் தனித்துப் போட்டியா? அடிச்சுச் சொல்றேன். நடக்கவே நடக்காது. தயாநிதி மாறன் சோனியாகிட்ட நேருல பேசுவாரு. கருணாநிதி ஃபோன்ல பேசுவாரு. கூட்டணி தொடரும். அவ்வளவுதாங்க. ஒன்னு ஜெயலலிதா. இல்லைன்னா கருணாநிதி.

viewmatrix said...

ஈ.வி.கே.எஸ் உடைய தனிபட்ட கருத்தும் விருப்பமும் நியாயமானது தான். எத்தனை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அவருடைய கருத்தை ஏற்று கொண்டு கட்சி தலைமையிடம் பேசுவார்கள்? முதலில் உட்கட்சி பூசலை ஒழிக்க பாடுபடவேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் காமராஜ் பற்றி நினைவு வருகிறது. மற்ற நேரங்களில் கோஷ்டி தகராறு மட்டுமே! முதலில் கட்சிக்குள் ஒருமைபாடு வேண்டும். கட்சி வளர்ப்பு பணிகள் எவ்வளவோ உள்ளது. அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்தை ஏற்று, ஒவ்வொரு பணிக்கும் ஒருவர் தார்மீக பொறுபேற்று பாடுபட வேண்டும். காங்கிரஸ் இயக்கதின் கொள்கையை முதலில் முற்றிலுமாக பரப்ப வழிவகை செய்ய வேண்டும். ஈ.வி.கே.எஸ் உட்பட ஜெயித்த அனைத்து பாரளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் நன்றாக உழைத்து மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும். Long way to go!

Rajkumar said...

>>>இன்றைய தங்கம் விலை : 1 பவுன் (8 கிராம்) 6,440.00
>>>இன்றைய வானிலை : வெயில் வாட்டி எடுக்கும்;

Ithukkum Ilangovan Paettikkum enna sambantham?? (Any nakkals in there)??

BTW I have been reading your blogs since the start of the state elections. It is excellent and very very informative. Thanks for doing this.

சீனு said...

//உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 80 சதவீதம் இடங்களில் வெற்றி பெற்று வலுவான கட்சி என்பதை நிரூபிக்க வேண்டும்.//
என்னதான் "0"-க்கு மதிப்பில்லேன்னாலும், இப்படியா?