பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 05, 2006

கூட்டணி ? கிலோ என்ன விலை ?


முதல் அமைச்சர் கருணாநிதி இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்தார். அவருக்கு கருணாநிதி பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார்(அதை சோனியா காந்தி காதில் வைத்துக்கொண்டார்). 30 நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மத்திய மந்திரி தயாநிதிமாறன் உடன் இருந்தார்( போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டு பிஸியாக இருந்தார்).

கலைஞர் பேட்டி:

கேள்வி:- தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவது பற்றி பேச்சு நடத்தப்பட்டதா?

கருணாநிதி:- நானோ காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியோ தி.மு.க. ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெறுவது குறித்து எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.

தயாநிதிமாறன்:- தேர்தலுக்கு முன்பே இது குறித்து பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது. எனவே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றி எதுவும் பேசவில்லை.

கே:- வைகோ தலைமையிலான ம.தி.மு.க. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக் கிறதாப இல்லையாப என்பது குறித்து சோனியாவிடம் பேசினீர்களா?

கருணாநிதி:- அது கூட்டணியில் எங்கே இருக்கிறது?

கே:- அதிகாரப்பூர்வமாக இதுபற்றி அறிவிக்கவில்லையே?

கருணாநிதி:- பத்திரிகையாளர்களாகிய நீங்கள் சாதுர்யமானவர்கள். அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் தெரிவித்த அரசியல்வாதி (வைகோ) பற்றி நீங்கள் பேசவில்லை.

கே:- நாங்குனேரியில் சிறப்பு பொருளாதார ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படுமா?

கருணாநிதி:- அதை அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் வழங்க திட்டமிட்டுள்ள இலவச கலர் டி.வி. இங்கு தான் தயாரிக்கப்பட இருக்கின்றன.


இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது வீட்டில் கருணாநிதி சந்திக்கிறார். ( பெரிய பூங்கொத்து அவருக்கும் கொடுக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது ). அப்போது அரசியல் நிலவரம், வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசின் ஒத்துழைப்பு குறித்து பேசுகிறார்.

மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி செல்கிறார். அங்கு ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து பேசுகிறார்.

Update 6/6/6

ஆட்சியில் பங்கு கேட்பது பற்றி சோனியா முடிவு செய்வார்: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

கேள்வி:- தி.மு.க.அமைச்சரவையில் காங்கிரஸ் சேருவது பற்றி முடிவு எடுக்கப்பட்டு விட்டதா?

பதில்:- இது பற்றி மேலிடத்திற்கு தகவல் போய் இருக்கிறது. சோனியா காந்தி தான் முடிவு செய்வார். இந்த விவகாரத்தில் சுவரொட்டிகள் மற்றும் பத்திரிகைகள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. ஏற்கனவே வீரப்பமொய்லி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

கேள்வி:- காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகள் சத்தியமூர்த்திபவனுக்கு வருவது இல்லையே?

பதில்:- மத்திய மந்திரிகள் சென்னையில் இருக்கும் போது சத்தியமூர்த்திபவனுக்கு வருவார்கள்.

கேள்வி:- மத்திய அரசின் சாதனைகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி சாதனை என்கிறார்கள், ஆனால் தமிழக அரசின் சாதனைகளை தி.மு.க.வின் சாதனை என்று குறிப்பிடுகிறார்களே?

பதில்:- அப்படி ஏதாவது இருந்தால் கவனத்தில் கொள்வோம்.

கேள்வி:- தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குற்றங்கள் பெருகி வருகிறதே?

பதில்:- சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் நிலைநாட்டப்படுகிறது. அம்பத்தூர் கொலையில் குற்றவாளி 2 நாட்களில் கைது செய்யப்பட்டு இருக்கிறாரே?

கேள்வி:- காமராஜரும், கருணாநிதியும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழருவிமணியன் பேசியிருக்கிறாரே?

பதில்:- 2 பேரும் ஏழை மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் தான்.

கேள்வி:- விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து தனித்து நின்று அதிக வாக்குகளை பெற்று இருக்கிறாரே? காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா?

பதில்:- காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி சேருகிறதோ அந்த கூட்டணி தான் வெற்றி பெற்று இருக்கிறது என்பது சரித்திரம். காங்கிரசுக்கு எப்போதும் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. தொடர்ந்து எங்கள் கட்சியை பலப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும், இதே வெற்றியை பெறுவோம்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவியை காங்கிரஸ் கேட்குமா?

பதில்:- தேர்தலின் போது பார்ப்போம்.

29 Comments:

Anonymous said...

congresskku periya appu vaithuvittar Dayanidhi.

Anonymous said...

//congresskku periya appu vaithuvittar Dayanidhi.//

"எவ்வளவு பேரிசு"-"அத சொல்லலியே"

(ஹமாம் விளம்பர பாணியில் படிக்கவும்)

முத்து(தமிழினி) said...

காங்கிரஸ்காரர்களுக்கே இல்லாத கவலை இங்கு ஏன் உங்களுக்கு?
பலரும் முதலைகண்ணீர் வடிப்பது செம காமெடி.

ஆட்சியை விட்டு வெளியே இருந்தால்தான் ஆட்சியை குறைகூற முடியும் என்பது அவர்களுக்கும் தெரியும்

மத்திய அரசு இவர்கள் புண்ணியத்தில்தான் இருக்கிறது என்பதும் இங்கு நினைவுக்கு வருதல் முக்கியம்.

ஜயராமன் said...

காமராசர் வளர்த்த தமிழக காங்கிரஸ் இப்படி மானங்கெட்டு பிச்சை ஏந்தி தீர்மானம் போட்டு நிற்பதையும்,

இந்த சோனியாகாந்தியை கலைஞர் இப்படி taken for granted மாதிரி இளக்காரமாக நடத்துவதையும் பார்த்தும் இவர்கள் .....

ராஜீவ் கொலையில் பங்கு இருப்பதாக நீதிபதி அறிக்கையில் விலாவாரியாக குற்றம் சாட்டப்பட்ட கழகத்தால் இப்பொழுது காங்கிரஸூக்கும் தமிழகத்தில் கூடிய விரைவில் சமாதி நடக்கும்.

மெட்ராஸ் பீச்சில் இன்னொரு சமாதி அமைத்து காங்கிரஸ் இங்கே உறங்குகிறது என்று பளிங்கு மேடையில் எழுதப்படும்

நன்றி

ஜயராமன் said...

முத்துவின் பதில் செம காமெடி,

குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை என்று எம்மாம் வீரம்?

காங்கிரஸ்காரங்களுக்கு கவலை இல்லையா? உண்மையான காங்கிரஸ்காரனுக்கு நிச்சயம் இருக்கும்.

அரசியலில் நீ உன் நண்பனை நடத்தும் வழியை பார்த்து உன் தரம் வெளிப்படும். கழகத்தின் தரம் இப்படி கெட்டுவிட்டது என்பது பொதுவான ஒரு அரசியல் நிகழ்ச்சிதானே?

ஆட்சியை விட்டு வெளியே இருந்து விமர்சிப்பார்களாம்? எப்படி, இப்போ கம்யூனிஸ்டகள் டெல்லியில் வலிக்காமல் கடிக்காமல் குறைத்துக்கொண்டிருக்கிறார்களே, அப்படித்தானே?

நன்றி

Idly Vadai said...

முத்து,
//மத்திய அரசு இவர்கள் புண்ணியத்தில்தான் இருக்கிறது என்பதும் இங்கு நினைவுக்கு வருதல் முக்கியம்.//

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு திமுக தயவில் இல்லை.

Anonymous said...

Muthu is an udanpirappu.What else will he say.DMK wants to share power in centre but not in state.
To expect that congress will tolerate this forever is a folly.
DMK has less than 100 members.Let
Muthus understand this.

முத்து(தமிழினி) said...

ஆகா,

நன்றி ஜெயராமன் மற்றும் அனானி.புரிகிறது.அவ்வளவு காமெடியா நான் பதில் சொல்றனா? நன்றி.

இன்னும் கொஞ்சம் நாள் பெருமூச்சு விடுங்கள்.துக்ளக் படியுங்கள்.

மத்தியில் தேர்தல்வந்தால் உங்களுக்கு சந்தோஷப்படற மாதிரி எதாவது நடக்கும்.

(நான் உடன்பிறப்பு என்றால் நீங்கள் ரத்தத்தின் ரத்தங்களா :)

ஜெயக்குமார் said...

//
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு திமுக தயவில் இல்லை.//

ஆம், இப்போதுள்ள சூழ்நிலையில் லல்லு காங்கிரசை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை அதனால் திமுகவின் தயவு இவர்களுக்கு தேவையில்லை. இருந்தாலும் திமுகவை பகைத்துக்கொள்ளும் நிலையிலும் இவர்கள் இல்லை. ஆனால் காங்கிரசை வேறு வழிகளில் திருப்திப்படுத்தும் எண்ணம் திமுக-விற்கு இருக்கிறது.

காங்கிரசை திருப்திப்படுத்தவும், வைகோ-வின் வாயை அடைக்கவும் விடுதலைப் புலிகள் மீதான தடை போன்ற அறிவிப்புகள் திமுக-விற்கு உதவும்.

Idly Vadai said...

ஜெயக்குமார் - காங்கிரஸ் கொஞ்சம் அதிமுக பக்கம் போனாலே திமுகவிற்கு கொஞ்சம் பயம் வந்துவிடும்.
* காங்கிரஸ் MLAக்களிடம் கொஞ்சம் SOFTக நட்நதுக்கொள்ளும் படி அதிமுகவிற்கு அட்வைஸ் என்று கேள்வி.
* மதிமுக பற்றி காங்கிரஸ் இன்னும் வாயை திறக்கவில்லை.

selvan said...

//தயாநிதிமாறன்:- தேர்தலுக்கு முன்பே இது குறித்து பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது. எனவே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றி எதுவும் பேசவில்லை//

No single congressmen including chidamabaram has guts like dayanidhi.This silent(congressmen's) shows that the present congressmen has lost their diginity.Again sonia proves that she cannot be a commandable leader.

selvan said...

//ஜெயக்குமார் - காங்கிரஸ் கொஞ்சம் அதிமுக பக்கம் போனாலே திமுகவிற்கு கொஞ்சம் பயம் வந்துவிடும்.
* காங்கிரஸ் MLAக்களிடம் கொஞ்சம் SOFTக நட்நதுக்கொள்ளும் படி அதிமுகவிற்கு அட்வைஸ் என்று கேள்வி//

In the hostory, congress never allowed any ruling party which was supported by them to rule full term.

Anonymous said...

//காங்கிரசை திருப்திப்படுத்தவும், வைகோ-வின் வாயை அடைக்கவும் விடுதலைப் புலிகள் மீதான தடை போன்ற அறிவிப்புகள் திமுக-விற்கு உதவும்//

MK will never do that mistake to retain the power. Because he has still soft corner towrds them.

மனதின் ஓசை said...

//அரசியலில் நீ உன் நண்பனை நடத்தும் வழியை பார்த்து உன் தரம் வெளிப்படும். கழகத்தின் தரம் இப்படி கெட்டுவிட்டது என்பது பொதுவான ஒரு அரசியல் நிகழ்ச்சிதானே?//

ஜெயலலிதா இதுவரை கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் ஞாபகத்துக்கு வருகிறது...

//தேர்தலுக்கு முன்பே இது குறித்து பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது//
அதுதான் புரியர மாதிரி சொல்லிட்டாங இல்ல... அப்புரம் என்னங்க?

//உண்மையான காங்கிரஸ்காரனுக்கு நிச்சயம் இருக்கும்//
யாரு...நீங்களா?


//குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை என்று எம்மாம் வீரம்?//
யாருங்க குப்புற விழுந்தது??? யாரு இது ஒன்றும் பெறிய வெற்றியே அல்ல.. கொஞம் வோட்டு தான் வித்தியாசம் etc etc.. என்று கூறுவது யாரு???
மீசையில மண் ஒட்டாதது யாருக்குங்க???

இது முதலை கண்ணீர் இல்லாம வேர என்னாங்க?

Idly Vadai said...

ஆட்சியில் பங்கு கேட்பது பற்றி சோனியா முடிவு செய்வார்: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி - Update

G.Ragavan said...

என்னுடைய கருத்தைக் கேட்டால், கருணாநிதி, எப்படியாவது காங்கிரசைக் கூட்டிக் கொண்டு கூட்டணி அரசை அமைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாயது சறுக்கலே.

மாநிலத்தில் காங்கிரஸ் தயவில்லாமல் திமுக ஆட்சி இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஜயராமன் said...

லக்கிலுக் அவர்களே!

<<<<<(நான் உடன்பிறப்பு என்றால் நீங்கள் ரத்தத்தின் ரத்தங்களா :) >>>>>

ஆகா, என்னமாதிரி லாஜிக். நீங்க ஒன்று என்றால், நான் அதற்கு எதிர்மாறாக தான் இருக்கவேண்டுமா? மடிப்பாக்கத்தில் நீங்கள் கலைஞருக்கு ஜால்ரா என்று சொன்னால், மற்ற ஊர்களில் அவருக்கு திட்டு என்று பொருளா? நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொன்னால், பக்கத்தில் உள்ளவன் மடையன் என்று அர்த்தமா?

இல்லை, ஒருவேளை பகுத்தறிவு பட்டறையில் தீட்டப்பட்ட மூளைகள் இப்படித்தான் குண்டக்க மண்டக்க என்று யோசிக்குமோ? ...

மனதின் ஒசை அவர்களே!

//அரசியலில் நீ உன் நண்பனை நடத்தும் வழியை பார்த்து உன் தரம் வெளிப்படும். கழகத்தின் தரம் இப்படி கெட்டுவிட்டது என்பது பொதுவான ஒரு அரசியல் நிகழ்ச்சிதானே?//

ஜெயலலிதா இதுவரை கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் ஞாபகத்துக்கு வருகிறது...

பதில்:

அதனால் என்ன? ஜயல்லிதாவை பற்றி யார் இங்கே பேசினார்கள்? கேள்வி இங்கு கருணாநிதியின் நடத்தை பற்றித்தானே?

அதற்கு சரியாக பதில் இல்லாததால், 'அவள் மட்டும் ஒழுங்கா' என்று பதில் சொன்னால், ரொம்ப சாமர்த்தியம் என்று ஆகுமா?

சரி, ஜயலலிதாவும் அரசியல் தரம் அற்றவள் என்று நான் சொன்னால், கருணாநிதியும் அப்படித்தான் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

உங்கப்பன் அயோக்கியன் என்று ஒருவன் சொன்னால், பக்கத்துவீட்டுக்காரன் மட்டும் ஒழுங்கா என்று அவன் திருப்பிக் கேட்டால், அவன் அப்பன் அயோக்கியன் என்று அவன் ஒத்துக்கொண்டதாகவே ஆகிறது.

ஐயோ பாவம்.

நன்றி

அருண்மொழி said...

அம்பி,

//அதனால் என்ன? ஜயல்லிதாவை பற்றி யார் இங்கே பேசினார்கள்? கேள்வி இங்கு கருணாநிதியின் நடத்தை பற்றித்தானே? அதற்கு சரியாக பதில் இல்லாததால், 'அவள் மட்டும் ஒழுங்கா' என்று பதில் சொன்னால், ரொம்ப சாமர்த்தியம் என்று ஆகுமா?//

ஆமய்யா, கருணாநிதியின் நடத்தை அப்படிதான். அவர் அரசியல் தரம் இவ்வளவுதான்.

அவர் தரம்தான் தெரிந்து விட்டதே இப்ப என்ன செய்ய போகிறீர்கள்? தமிழ்நாட்டை விட்டு ஓட போறீங்களா?.
இல்ல அவர் மேல போக யாகம் வளர்க்க போறீங்களா?

ஜயராமன் said...

அருள்மொலி அவர்களே,

தங்களின் பதிலில் எரிச்சலும், தங்களின் இயலாமையும் தெரிகிறது.

தங்களின் சாதி வெறியும் தலைக்கேறி இருக்கிறது என்பது புரிகிறது.

ஆனால், அவை என்னை சிறிதும் பாதிக்கவில்லை.

கருணாநிதி தரம் கெட்டுவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தாங்கள் ஒப்புக் கொண்டதற்கு தங்களுக்கு நன்றி. ஏனென்றால், தரம் அதிகமிருந்தால் அல்லவா, கெட வாய்ப்பு வரும். :-)

அவர் தரம் கெட்டுவிட்டது என்றால், நான் ஏன் என் தாயகத்தை விட்டு ஒட வேண்டும்? தரம்கெட்டவர்கள் அல்லவா விலக வேண்டும்!

அவர் மேலே போக யாருக்கு லாபம். நேற்று அவர் கொடுத்த பேட்டியில் அவர் 'நாளை நடப்பது யாருக்கு தெரியும். பழனிவேல்ராசனை பாருங்கள். நான் ஐந்து வருடங்கள் ஆள்வேனா என்று தெரியவில்லை' என்றெல்லாம் பேட்டி கொடுத்ததை பார்த்தால் என்னவோ பயமாக இருப்பதாக தான் படுகிறது!

ஆனால், அவரின் பகுத்தறிவு மஞ்சள் துண்டும், அவர் குடும்பத்தினரின் ரகசிய பூசைகளும் அவரை வாழ வைக்கும்.

எனக்கும் அப்போதுதான் பொழுது போகும்.

பாவம் கிழவர். இருந்துவிட்டு போகட்டுமே!

நன்றி

மனதின் ஓசை said...

//சரி, ஜயலலிதாவும் அரசியல் தரம் அற்றவள் என்று நான் சொன்னால், கருணாநிதியும் அப்படித்தான் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?//
ஜயராமன் அவர்களே, ஜயலலிதாவை பற்றி பேசும்போது கருனாநிதியை பற்றி பேசாத ஒரு பதிவை காட்ட முடியுமா? இது அரசியல் பதிவுகள்..அரசியலில் முழுக்க முழுக்க நல்லவர் என யாரும் இல்லை..அதனால் ஒருவர் செய்வதை ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாதது.. பதிவு பொட்ட இட்ல்ய்வடை அவருடைய பின்னூட்டதை பாருங்கள்..
//ஜெயக்குமார் - காங்கிரஸ் கொஞ்சம் அதிமுக பக்கம் போனாலே திமுகவிற்கு கொஞ்சம் பயம் வந்துவிடும்.
காங்கிரஸ் Mளாக்களிடம் கொஞ்சம் ஸோFTக நட்நதுக்கொள்ளும் படி அதிமுகவிற்கு அட்வைஸ் என்று கேள்வி.
// இங்கெ ஆDMK வை பற்றி என் பேசினார்? இதெல்லம் தவறு இல்லை...

சரி.. நீங்கள் கேட்ட கெள்விக்கு பதில் : இல்லை.. கருணாநிதி அப்பழுக்கு அற்றவர் என நான் என்னவில்லை..அவர் ஒரு தெர்ந்த அரசியல்வாதி...போதுமா?

சரி.. இப்பொது சொல்லுங்கள்..ஒத்துக் கொன்ட பின்(என் கருத்து மட்டும்தான் இது) அடுத்தது என்ன?

மனதின் ஓசை said...

//தேர்தலுக்கு முன்பே இது குறித்து பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது//
அதுதான் புரியர மாதிரி சொல்லிட்டாங்க இல்ல... அப்புரம் என்னங்க?

ஜயராமன் அவர்களே,
இதற்கு உங்கள் பதில் என்னவோ??

ஜயராமன் said...

மனதின் ஒசை அவர்களே,

எனக்கு மதிப்பு கொடுத்து பதில் தந்ததற்கு நன்றி

/////இது அரசியல் பதிவுகள்..அரசியலில் முழுக்க முழுக்க நல்லவர் என யாரும் இல்லை..அதனால் ஒருவர் செய்வதை ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாதது////


தாங்கள் சொல்வது சரி. அரசியல் என்பதே ஒப்பிட்டு (இரண்டு மட்டைகளில் எது அதிகம் அழுகாத மட்டை என்று...) தேர்வது தான்.

ஆனால், அவை ஒப்பிட்டு பார்க்கும் போது செய்யப்படுவன. ஒருவரின் லாப நஷ்டங்களை ஆராயும்போது அதை நேரிடையாக பதில் சொல்லாமல், இந்த இடத்தில் தேவையில்லாமல் ஜயலலிதாவை இழுப்பது கூடாது என்பது என் வாதம்.

ஜயலலிதா கூட்டணியை நடத்திய விதத்தை விமர்சித்த கலைஞர் இப்பொழுது அதை சப்பைகட்டு கட்டு 'தேர்ந்த அரசியல்வாதி' வேடம் போடுவானேன்!!

தனக்கு என்று வரும்போது நானும் சாதாரண சீப் பாலிடிஸ்யன்தான் என்றுதான் அவர் நிரூபிக்கிறார்.

இதில் 'காமராசர், எம்ஜியாருடன் தரமான அரசியல் நடத்திவிட்டு அம்மையாருடன் அரசியல் நடத்தவேண்டியிருக்கிறதே ' என்று அழுவானேன்.

மேலே வளர்த்துவானேன். தாங்களே ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். அவர் தகுடுத்த்தம் ஆசாமி என்று.

ஆனால் என்ன, 'தேர்ந்த அரசியல்வாதி' என்று அதற்கு ஞாயம் கற்பித்திருக்கிறீர்கள்.

தங்களுடன் எனக்கு தனிப்பட்ட ஒரு அபிப்ராய பேதமும் இல்லை.

////சரி.. இப்பொது சொல்லுங்கள்..ஒத்துக் கொன்ட பின்(என் கருத்து மட்டும்தான் இது) அடுத்தது என்ன? ////

என் கருத்தை எதற்கு கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில் ஜெயல்லிதாவை சம்பந்தமில்லாமல் நுழைத்தது நீங்கள். அதை கேட்டபோது சரி என்று ஒப்பியதும் நீங்கள்தான். விஷயம் தீர்ந்தது.

என் கருத்து இதுதான்.

ஜயா நேர்மையான திருடன். கூட்டணிகளுக்கு மரியாதை கிடையாது என்று அவர் நடத்தையிலேயே தெரியும். அதனால், யாரையும் 'எதிர்பார்க்க' விடமாட்டார்.

ஆனால், கருணாநிதியோ, சமயத்துக்கு ஏத்தாற் போல் பாட்டு பாடுவார். கூட்டணி என்று பேசிய இளங்கோவனை கூப்பிட்டு பப்ளிக்காக அவமானப்படுத்துவார்.

ஆட்சி அமைக்க சந்தேகம் என்கிறபோது 'கூட்டணிக்கு தயார்' என்று அறிக்கை விடுவார்.

ஆட்சி வரும்போல இருந்தால், 'கூட்டணி இல்லை என்று முன்னாலேயே சொல்லிவிட்டோம்' என்று குட்டிகரணம் அடிப்பார்.

ஆதலால், இவர் திருடர்களுக்கு எல்லாம் திருடர்.

நன்றி

மனதின் ஓசை said...

//கருணாநிதி தரம் கெட்டுவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தாங்கள் ஒப்புக் கொண்டதற்கு தங்களுக்கு நன்றி. ஏனென்றால், தரம் அதிகமிருந்தால் அல்லவா, கெட வாய்ப்பு வரும். :-)//
புழுதி வாரி தூற்ற ஆசைப்படும் உங்கள் தரம் இதில் தெரிகிறது.

//அவர் தரம் கெட்டுவிட்டது என்றால், நான் ஏன் என் தாயகத்தை விட்டு ஒட வேண்டும்? தரம்கெட்டவர்கள் அல்லவா விலக வேண்டும்!//
அவர் விலக மாட்டார். அவரை ஓட வைக்க கூடிய சக்தியும் உங்களிடம் இல்லை... வாக்கு மூலம் செய்வதாக இருந்தாலும் அது பெரும்பான்மையனவர் விருப்பப்படுவதுதான் நடக்கும்..இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?

அருண்மொழி said...

அம்பி,

//தங்களின் பதிலில் எரிச்சலும், தங்களின் இயலாமையும் தெரிகிறது.
தங்களின் சாதி வெறியும் தலைக்கேறி இருக்கிறது என்பது புரிகிறது.
ஆனால், அவை என்னை சிறிதும் பாதிக்கவில்லை.//

சாதி வெறி நேக்கு இல்லபா. அது உங்க சட்டைக்குள்ளே இருக்கு :)

கருணாநிதிதான் தமிழகத்தின் முதல்வர். ஆகவே எனக்கு எரிச்சலும் இயலாமையும் தேவையே இல்லை.
அது எல்லாம் அவர் முதல்வராக இருப்பதை ஏற்றுக்கொள்ளாத உங்களைப்போல் உள்ள மக்களுக்குதான் வரும்.

//கருணாநிதி தரம் கெட்டுவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தாங்கள் ஒப்புக் கொண்டதற்கு தங்களுக்கு நன்றி. ஏனென்றால், தரம் அதிகமிருந்தால் அல்லவா, கெட வாய்ப்பு வரும். :-)//

சரி அவருக்கு தரமேயில்லை. அதுக்கு என்ன ஆயிற்று?.

//ஆனால், அவரின் பகுத்தறிவு மஞ்சள் துண்டும், அவர் குடும்பத்தினரின் ரகசிய பூசைகளும் அவரை வாழ வைக்கும். //

என்னடா இது ஒன்னும் புரியலயே கருணாநிதி குடும்ப பூசை சுப்பிரமணி பூசைய விட Powerfullஆ

ஏன்னா அப்ப உதயநிதிய அடுத்த லோககுருவா Appoint பண்ணலாமா?

//எனக்கும் அப்போதுதான் பொழுது போகும். பாவம் கிழவர். இருந்துவிட்டு போகட்டுமே!//

ஆஹா உங்க ஒருத்தருக்காகவாவது கருணாநிதி பயன்படுகிறாரே. பேஷ் பேஷ்.

மனதின் ஓசை said...

//என் கருத்தை எதற்கு கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில் ஜெயல்லிதாவை சம்பந்தமில்லாமல் நுழைத்தது நீங்கள். அதை கேட்டபோது சரி என்று ஒப்பியதும் நீங்கள்தான். விஷயம் தீர்ந்தது.

என் கருத்து இதுதான்.

ஜயா நேர்மையான திருடன். கூட்டணிகளுக்கு மரியாதை கிடையாது என்று அவர் நடத்தையிலேயே தெரியும். அதனால், யாரையும் 'எதிர்பார்க்க' விடமாட்டார்.

ஆனால், கருணாநிதியோ, சமயத்துக்கு ஏத்தாற் போல் பாட்டு பாடுவார். கூட்டணி என்று பேசிய இளங்கோவனை கூப்பிட்டு பப்ளிக்காக அவமானப்படுத்துவார்.

ஆட்சி அமைக்க சந்தேகம் என்கிறபோது 'கூட்டணிக்கு தயார்' என்று அறிக்கை விடுவார்.

ஆட்சி வரும்போல இருந்தால், 'கூட்டணி இல்லை என்று முன்னாலேயே சொல்லிவிட்டோம்' என்று குட்டிகரணம் அடிப்பார்.

ஆதலால், இவர் திருடர்களுக்கு எல்லாம் திருடர்.//

என்னங்க..என் ஜயலலிதாவை இழுத்தாய் என உவமை எல்லாம் சொல்லி திட்டி விட்டு இப்ப நீங்களும் அதத்தானே செய்ரீங்க???

சரி, நாளை சந்திப்போம்.

ஜயராமன் said...

அருள்மொலி அவர்களே,

சம்பந்தமே இல்லாமல் அம்பி என்றும் யாகம் என்றும் சாதி காழ்ப்பு தனமாக விவாத்த்தை கீழ்த்தரமாக்க முயற்சித்தது நீங்கள். சாதிக்கலர் பூச முயன்று தோற்றது நீங்கள்.

இப்பொழுது பிறரின் சட்டைக்குள் சாதி இருப்பதாக நீங்கள் எந்த ஆதாரத்தை வைத்து சொல்லுகிறீர்கள்.

இந்த பதிவில் சாதி சாயம் பூச முயன்றது நீங்கள். என் எழுத்தில் இந்த பதிவில் சாதி விஷயமாக ஏதாவது சாடி எழுதியிருக்கிறேனா? சாதி பேசும் தங்களைப்போன்றவர்களை கண்டிக்கிறேன்.

சுப்பிரமணி அது இது என்று சம்பந்தமில்லாமல் பேசுவதும் தங்களின் காழ்ப்புணர்ச்சிக்கு அத்தாட்சி. அதற்கும் காங்கிரஸ் கூட்டாச்சிக்கும் என்ன சம்பந்தம். இட்லிவடையாரின் பதிப்பில் தாங்கள் வந்து சாதிச்சேறு இறைப்பது ஏன்!

தங்களிடம் இட்லிவடையாரின் கருத்துக்கு பதிலில்லை என்றால் சும்மா இருப்பதே சுகம்.

நான் யாரையும் தமிழ்நாட்டை விட்டு போகச்சொல்லவில்லை. சொன்னது நீங்கள். நான் 'நான் ஏன் போக வேண்டும்' என்று கேட்டேன். தரம்கெட்டவர்கள் போகவேண்டியதுதானே நியாயம். இதுவும் தங்கள் வாத்த்தை எடுத்து வைத்ததுதான்.

இந்த 'நாட்டை விட்டுப்போ' கூப்பாடெல்லாம் திமுகவின் டிரேட் மார்க் விதண்டாவாதம் என்று இந்த இடத்தில் சொல்லிக்கொள்ளலாம்.

இவை என்றுமே கழகத்திற்கு பலித்தது இல்லை. மலையாளி எம்ஜிஆர் போ என்று கத்திய திமுகவுக்கு ஏதாவது ஆதரவு கிடைத்ததா?

மனதின் ஓசை அவர்களே,

நான் கலைஞரையும், அம்மாவையும் கம்பேர் பண்ணினேன் என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன். ஆனால் அது தங்கள் கேள்விக்கு பதிலாய் வந்தது. சரி நான் ஒத்துக்கொண்டுவிட்டேன் இப்போ என்ன என்று தாங்கள் கேட்டதால் வந்தது.

மறுபடியும் சொல்லுகிறேன். கம்பேர் பண்ணி எழுதுவது அரசியலில் சகஜம். அவை வேண்டியதும்கூட. ஆனால், ஒருத்தர் ஏன் தப்பு செய்கிறார் என்று கேட்கும்போது அவள் மட்டும் செய்யலியா என்று பதில் சொல்வது சரியான விளக்கம் அல்ல. அவை குற்றத்தை ஒத்துக்கொள்வதற்கு ஒப்பாகும். அதைத்தான் செய்யாதீர்கள் என்று சுட்டிக்காட்டினேன்.

மற்றபடி பொதுவாக அம்மையாரையும், அய்யாமாரையும் அலசுவதில் எல்லோருக்கும் இன்ட்ரஸ்ட் தானே?

நன்றி

மனதின் ஓசை said...

ஜயராமன் அவர்களே,
நீங்கள் கூறிய கருத்துக்கள் முரன்பாடனவை..சரி.எனக்கு அது முக்கியம் அல்ல.....
இன்னும் இந்த கேள்விக்கு உங்கள் பதில் வரவில்லை என்பதை நினைவூட்டுகிறேன். நன்றி
////தேர்தலுக்கு முன்பே இது குறித்து பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது//
அதுதான் புரியர மாதிரி சொல்லிட்டாங்க இல்ல... அப்புரம் என்னங்க?

ஜயராமன் அவர்களே,
இதற்கு உங்கள் பதில் என்னவோ?? //

அருண்மொழி said...

ஐயோ பாவம்,

//சம்பந்தமே இல்லாமல் அம்பி என்றும் யாகம் என்றும் சாதி காழ்ப்பு தனமாக விவாத்த்தை கீழ்த்தரமாக்க முயற்சித்தது நீங்கள். சாதிக்கலர் பூச முயன்று தோற்றது நீங்கள்.//

அம்பி என்று அழைப்பது கீழ்த்தரமானதா? யாகமும் அப்படிதானா? அடப்பாவமே. இது தெரியாமல் என் நண்பர்கள் இந்த கீழ்த்தரமான வார்தைகளை அடிக்கடி உபயோக படுத்துகிறார்கள்.

//நான் யாரையும் தமிழ்நாட்டை விட்டு போகச்சொல்லவில்லை. சொன்னது நீங்கள். நான் 'நான் ஏன் போக வேண்டும்' என்று கேட்டேன். தரம்கெட்டவர்கள் போகவேண்டியதுதானே நியாயம். இதுவும் தங்கள் வாத்த்தை எடுத்து வைத்ததுதான்.//

ஆஹா இது புதுசா கீதே?. நான் கேட்டது "இப்ப என்ன செய்ய போகிறீர்கள்? தமிழ்நாட்டை விட்டு ஓட போறீங்களா?." உங்களின் இயலாமையும் எரிச்சலுமே அதை திரித்து பார்க்க வைத்திருக்கிறது.

இப்போது இருக்கும் பிரச்சனை இ.காங்கிரஸுக்கும் தி.மு.கவிற்கும். இதில் காமராஜரையும், ராஜீவ் கொலையையும் அது இது என சம்பந்தமில்லாமல் பேசுவது தங்களின் காழ்ப்புணர்ச்சிக்கு அத்தாட்சி.

PisaasWithPizzaz said...

Tamizhan arasiyal pesiye kettan.