பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 02, 2006

ராகுல்மகாஜன் கவலைக்கிடம், செயலாளர் உயிர் இழந்தார்

பிரமோத் மகாஜன் சமீபத்தில் தனது சொந்த தம்பியாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பிரமோத் மகாஜன் இழப்பிற்கு பிறகு ராகுல்மகாஜனுக்கு பாரதீய ஜனதாவில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிட்டு இருந்தனர்.

3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பாரதீய ஜனதா நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் டெல்லி வந்திருந்தார். அவருடன் நீண்ட கால குடும்ப நண்பரும், அவருடைய செயலாளருமான விவேக் மைத்ராவும் சென்றார். பின்னர் இருவரும் டெல்லியிலேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இருவரும் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வயிற்று வலியால் துடி துடித்தனர். உடனே அவர்களை டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வரும் வழியிலேயே மைத்ரா இறந்து விட்டார்.

ராகுல் மகாஜன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரு கின்றனர். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இரவு அவர்கள் இருவரும் ஒரே வகை உணவை சாப்பிட்டனர். அதில் விஷத் தன்மை இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த உணவு கெட்டு போய் விஷமாக மாறி இருந்ததாப அல்லது யாராவது விஷத்தை கலந்து சாப்பிட்டார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த உணவை எங்கு வைத்து சாப்பிட்டார்? என்ற விவரங்கள் எதையும் வெளியே தெரிவிக்கவில்லை.

ராகுல் மகாஜன் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. ராகுல் மகாஜன் மது அருந்தி உள்ளார். அதில் யாரோ விஷத்தை கலந்து இருக்கலாம் என்று சந்தே கிக்கப்படுகிறது.

டெல்லி வசந்தவிகார் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். ராகுல் மகாஜனின் மாமாவும், மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியுமான கோபிநாத் முண்டே மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்துள்ளனர்.

ராகுல் உடல்நிலை குறித்து டாக்டர்கள் எந்த தகவலையும் வெளியிட மறுத்து விட்டனர். உயிர் காக்கும் கருவிகள் துணையுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் நடந்த இடத்தில் வெள்ளை பவுடர் கண்டெடுக்க பட்டுள்ளதாக போலிஸ் தெரிவித்திருக்கிறது.

பிகு: நேற்றோடு பிரமோத் மகாஜன் இறந்து ஒரு மாதம் ஆகிறது.

NDTV, IBNLive செய்திகள்

2 Comments:

நாகை சிவா said...

வருத்தமான செய்தி.
அவர் நலம் பெற வேண்டுகிறேன்

Anonymous said...

மிக வேதனை; புரியாப் புதிர்!
யோகன் -பாரிஸ்