பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 01, 2006

குட்டி குட்டி ஜோக்ஸ்

* மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள். அங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, "உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்' என்றார். இந்த நபர் ஏன் என்று கேட்ட தற்கு, நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான் என்றார். அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.
மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார். இருவரும் ஏன் என்று கேட்டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார், "அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றார்' என்றார்.

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

மூன்று வயோதிகர்கள் தங்களது நினைவுத்திறனைபரிசோதித்துக் கொள்வதற்காக மருத்துவரிடம் சென்றனர். மருத்துவர் முதல் வயோதி கரிடம் மூன்றும் ஏழும் எவ்வளவு என்றார். அவர் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு 274 என்றார். மருத்துவர் அடுத்ததாக இரண்டாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்து விட்டு செவ்வாய்க்கிழமை என்று பதில் அளித்தார். மருத்துவர் மூன்றாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டபோது அவர் உடனே 24 என்று பதில் அளித்தார். மருத்துவர் சபாஷ் எப்படி சொன்னீர்கள் என்று கேட்க, அவர் 274லிருந்து செவ்வாய்க் கிழமையைகழித்துச் சொன் னேன் என்று பதில் சொன்னார்.


புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாண வர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

ஒரு ஊரில் முட்டாள் பணக் காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொ ழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய் வதற்கு தேவையான எண் ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.
வேலைக்காரனும் கடைவீதிக் குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டி ற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன் என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அத னால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக் காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார்


ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்


தமிழகத்தில் "தி டா வின்சி கோடு'' எனும் ஆங்கிலத் திரைப்படம் வெளியிடப்பட இருப்பது தொடர்பாக சிறுபான்மைச் சமுதாயத்தினரிடமிருந்து, குறிப்பாக கிறிஸ்தவ சமுதாயத்திடமிருந்து பல்வேறு முறையீடுகளும், புகார்களும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இந்த படம் திரையிடப்பட்டால் கிறிஸ்தவ சமுதாய மக்களின் உணர்வுகளையும், மதச்சிந்தனைகளையும் புண்படுத்தக்கூடும். மேலும் இந்த படம் திரையிடப்படுவதன் மூலம் தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்களும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

இவற்றை கருத்தில் கொண்டு சூழ்நிலைகளைக் கவனமாக பரிசீலனை செய்து 1952-ம் ஆண்டு (மத்திய சட்டம் 37, 1952-ம் ஆண்டு) திரைப்படங்கள் சட்டத்தின் 13-வது பிரிவின்படி நடவடிக்கைகள் எடுத்து மேற்படி திரைப்படம் திரையிடப்படுவதை நிறுத்தி வைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகர கமிஷனர் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவுரைகள் வழங்கியுள்ளது.

12 Comments:

பிரதீப் said...

ஜோக்கோட ஜோக்கா கடைசியா ஒண்ணையும் சேத்துட்டீங்களே...

பத்த வச்சிட்டீங்களே இட்லிவடை!!!

நன்மனம் said...

இ.வ.

ரிலாக்ஸ் ஜோக்கா படிச்சு ஒரு புன்னகைய வெச்சுக்கிட்டே கடைசி ஜோக்கயும் படிச்சேன்.

ரொம்ப குரும்புங்க, கடைசீல இருக்கறதையும் பாத்து சிரிக்க சொல்ரீங்க, சரி :-))

Anonymous said...

Last joke is super :D

Anonymous said...

கொஞ்சம் ஓவர் :-)

துபாய்வாசி said...

என்னாடா இது இட்லி இப்படி ஜோக்கெல்லாம் எழுதறாரேனு நினைச்சேன். கடைசி 'ஜோக்' பார்த்தப்பறம் தான் தெரியுது - சோழியன் குடுமி சும்மா ஆடலேன்னு! ஜமாய்ங்க!

Anonymous said...

Now TN Govt. banned the film "The Da Vinci Code", so what, the pirated CD and DVD is circling all over TN. How this secular govt will ban this?

=))

சீனு said...

//என்னாடா இது இட்லி இப்படி ஜோக்கெல்லாம் எழுதறாரேனு நினைச்சேன். கடைசி 'ஜோக்' பார்த்தப்பறம் தான் தெரியுது - சோழியன் குடுமி சும்மா ஆடலேன்னு! ஜமாய்ங்க! //

அதானே இட்லிவடை touch.

ஜயராமன் said...

ஆங்கிலத்தில் 'more loyal than king' என்று சொல்வோம் இல்லையா?

அதுபோலத்தான் இங்கும்.

சென்ட்ரல் கவர்ண்மென்டில் கமிட்டியெல்லாம் வைப்பார்களாம். அமைச்சரே உட்கார்ந்து இந்த சினிமா பார்ப்பாராம். சிறுபான்மையினர் (அதாவது ஹோல்சேலில் வோட்...) மனசு வா....டாம இருக்குதான்னு? கடைசீல, பைசா பெறாம ஒரு இரண்டு கன்டிஷன் போட்டு படத்த ரிலீஸ் பண்ணுவாங்களாம்.

நம்ம தமிழின பகலவன் விடுவாரா. அரிக்குது.... ஒடனே விட்டாறு இன்னொரு படி மேலே. யாரோ பைசா பொறாத ரெண்டு பாதிரி அப்பீல் விட்டாராம். கண் கலங்கின செந்தமிழ் உடனே இப்படி ஒரு ஜி.ஓ. விட்டு தன் சிறுபான்மை அறுவடைக்கு பெறுபான்மையா துண்டு போட்டு இடம் புடிச்சாரு.

இதெல்லாம் அரசியல்ல ஜகஜமப்பா...

நம்ம ஜிட்டியில இருந்துகிட்டு இன்னாத்துக்கு வேற ஜோக்கெல்லாம்.

நன்றி

G.Ragavan said...

இதைப் பத்தி நான் ஒரு பதிவே போட்டிருக்கேன்.

தன்னை ஒரு மதநல்லிணக்கவாதியாக காட்டிக் கொண்டாகி விட்டது. இனி நிம்மதியாக தூக்கம் வரும்.

இதையே "நெற்றியில் என்ன ரத்தமா?" என்று கேட்ட பொழுது...அவருக்குத் தோன்றவில்லை.

அந்தப் படத்தின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று கூறவில்லை. ஆனால் அரசாங்கம் போடும் போலி மதச்சார்பின்மை வேடத்தைச் சாடுகிறேன்.

கலவரம் வருமா? சரி. அரசாங்கத்தால் கலவரத்தை அடக்க முடியாதா? இந்தப் படம் மற்ற மாநிலங்களில் ஓடிக்கொண்டு தானே இருக்கிறது. அங்கிருக்கிறவர்களை விட தமிழர்கள் கலவரக்காரர்களாகப் போய் விட்டோமா!

என்னவோ போங்க. திருட்டு டீவிடீ இப்பக் கெடைக்குது. ஆக...படம் பாக்கனும்னு நெனச்சவன் எல்லாம் பாத்திருவான். மத்தவனும் அதுல என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்கப் பாத்திருவான்.

அந்தப் படத்த சும்மா விட்டிருந்தா ஃபெயிலியராப் போயிருக்கும். அதப் போயி வீணா எதுத்து வளத்து....ம்ம்ம்.

அடுத்தவன் நம்மைப் பத்தி பேசாம இருக்கனும்னா அவன் வாயை அடைக்கனுங்குற தவறான அணுகுமுறை இப்ப எல்லா எடத்துலயும் இருக்கு. தமிழ்மணம், குஜராத் (ஃபணா) இப்ப தமிழ்நாடு.

இந்த விஷயத்தை Opus Dei எவ்வளவு அழகா அணுகுறாங்க தெரியுமா? இந்தப் புத்தகத்துல என்னல்லாம் தப்பிருக்குன்னு ஒரு புக்கு போட்டிருக்காங்க. அதுவும் நல்லாப் போகுது. இப்ப மக்கள் அதையும் படிப்பாங்க இல்லையா. எப்பேர்ப்பட்ட பாசிட்டிவ் அணுகுமுறை. இப்படியெல்லாம் செய்ய உணர்ச்சிய விட அறிவைப் பயன்படுத்தனும். ம்ம்ம்ம்...வாட்டர் படத்துக்கும் இப்பிடித்தான்...எப்பத்தான் மாறுமோ மக்கள் மனப்பாங்கு.

இலவசக்கொத்தனார் said...

நாட்டு நடப்பே ஜோக்கா இருக்கும் போது இட்லிவடையாரிடமிருந்து இப்படி ஒரு பதிவான்னு கொஞ்சம் கவனமாவே படிச்சேன். கடைசியில் புடிச்சீரே ஒரு புடி. சூப்பரப்பு.

bharat said...

ஏழோட எட்டா "இம்சை அரசன்" matter அயும் போட்டுற்கலாமே?

பொன்ஸ்~~Poorna said...

//அடுத்தவன் நம்மைப் பத்தி பேசாம இருக்கனும்னா அவன் வாயை அடைக்கனுங்குற தவறான அணுகுமுறை இப்ப எல்லா எடத்துலயும் இருக்கு. தமிழ்மணம், குஜராத் (ஃபணா) இப்ப தமிழ்நாடு.
//
நல்லா சொல்லி இருக்கீங்க ராகவன்..

இ.வ.. எல்லா ஜோக்குமே நல்லா இருந்தது.. :)