பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 31, 2006

தேமுதிகவிற்கு ஆபத்து !

மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் பொடா நாகராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் இன்று தேமுதிகவில் இணைந்தார்.

வைகோவோடு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாத சிறை வாசம் அனுபவித்தவர் நாகராஜன். சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியைக் கேட்டிருந்தார் நாகராஜன்.

ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. மாறாக மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வீர. இளவரசனுக்கு சீட் கிடைத்தது.

இதனால் அதிருப்தியில் இருந்த நாகராஜன் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை விட்டார்.

ஆனால் சில மணி நேரங்களில் தனது முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டார். என்றும் வைகோவுடன்தான் இருப்பேன் என்று கூறினார்.

இந் நிலையில், தனது தலைவரைப் போலவே இன்று இன்னொரு முடிவை எடுத்துள்ளார்.

இன்று தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராமுவசந்தன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து தேமுதிகவில் இணைந்தார்.

இதுகுறித்து பொடா நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: நான் மதிமுக ஆரம்பித்த காலத்தி லிருந்து அக்கட்சிக்காக பாடுபட்டு உள்ளேன். மாநில தணிக்கை குழு உறுப்பினராக பதவி வகித்தேன். 19 மாதங்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்த போது, என் அண்ணன், அம்மா ஆகியோர் உயிரிழந்தனர்.

என்னுடைய நூல் மில்லில் பருத்தி அரைக்கும் பின்னிங் பேக்டரில் தொழில் பாதித்தது. அதற்கெல்லாம் நான் முதலில் கவலைப்படவில்லை. ஆனால் கட்சிக்காக நான் உழைத்தேன். எனக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் மதிமுகவில் கொடுக்கப்படவில்லை.

கேள்வி: உரிய மரியாதை எந்த முறையில் கொடுக்கப்படவில்லை?
பதில்: அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருமங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் எனக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இது எனக்கு மன வருத்தத்தை அளித்தது. நான் ஏற்கனவே திருமங்கலம் நகர சபையில் இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியை தழுவியவன்.
இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்த்த திருமங்கலம் தொகுதி எனக்கு கிடைக்காதது எனக்கு ஏமாற்றம் அளித்தது. இதனால் மதிமுகவிலிருந்து விலக முடிவு செய்தேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் விஜயம் இருப்பதால் தேமுதிகவில் சேர முடிவெடுத்தேன். அவர் தேர்தல் நேரத்தில் பணியாற்றியதையும், அவருடைய தேர்தல் அறிக்கையும் எனக்கு பிடித்திருந்தது. அத்துடன், அவருக்கு பேரும், புகழும் அதிகமாக உள்ளது. அவருடைய கட்சியில் இணைவதில் நான் பெருமைப்படுகிறேன். அவருக்காக இன்று முதல் தேமுதிகவில் இணைந்து உண்மையாக உழைப்பேன் என்று கூறினார்.

6 Comments:

முத்து(தமிழினி) said...

கொள்கையும் இல்லை.ஒரு ம**ம் இல்லை.பொழைப்புக்கு சேர்ந்து உள்ளேன் என்று ஓப்பனாக சொல்கிறார்.

இட்லி நீங்க வைத்த தலைப்பு சூப்ப்ப்பர் வெல்டன்.

(துபாய்) ராஜா said...

//"தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் விஜயம் இருப்பதால் தேமுதிகவில் சேர முடிவெடுத்தேன்"//

1.ஆஹா!!!!!!!!!!!!!!!!!!!!அய்யன்'பெயரில்'கருணை'இருக்கிறது'அம்மா'பெயரில்'வெற்றி'இருக்கிறது.'அய்யா'பெயரில்'தன்மை'இருக்கிறது.
என வரிசையாக கிளம்பிவிடுவார்கள்
போலிருக்கிறதே!!!!!!!

2.வை.கோ.பெயரில் 'கோபம்' இருக்கிறது.என்று கூறினாரா??????.

(துபாய்)ராஜா.

Sivabalan said...

இட்லி வடை,

// இந் நிலையில், தனது தலைவரைப் போலவே இன்று இன்னொரு முடிவை எடுத்துள்ளார் //

கலக்கல் வரிகள்...

Idly Vadai said...

sivabalan அந்த வரிகள் thatstamil.com உதவி. அதனால் அந்த பாராட்டுக்கு அவர்களுக்கு போகவேண்டும். :-)

chandar said...

//அவருக்கு பேரும், புகழும் அதிகமாக உள்ளது.//
அற்புதமான காரணங்கள். சொலலாதது - பேரும் புகழும் போய்விட்டால் நானும் வேறு கட்சிக்குப் போய்விடுவேன். வரும்போதே மிரட்டல்...

அருண்மொழி said...

இதில் என்னங்க தவறு?

பிரபாகரனின் ஆதரவாளர் பிரபாகரனின் கட்சியில் சேர்வதுதானே சரியான செயல்.